குங்குமப் பூ பாபா கதை (Post No.7573)

WRITTEN BY London Swaminathan

Post No.7573

Date uploaded in London – 14 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

குங்குமப் பூவே கொஞ்சசும் புறாவே — என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இங்கே போஸ்ட் செய்திருந்தேன். அதற்குப் பின்னர் தினமணி கதிரில் 2-8-1992ல் வாசகர் கடிதப் பகுதியில் சென்னை தி.வி.கிருஷ்ணசாமி எழுதிய ஒரு கடிதம் கண்டேன். அதில் அவர் கூறுவதாவது-

“12-7-1992 தினமணி கதிரில் குங்குமப் பூ பற்றி இல்லந்தோறும் இயற்கை மருந்து பகுதியில் டாக்டர் கே. வெங்கடேசன் சிறப்பித்து எழுதியிருந்தது பாராட்டத் தக்கது. இதை பற்றி மேலும் சில தகவல்கள் :-

குங்குமப் பூவின் தாயகம் தென் ஐரோப்பா . இந்தியாவிலேயே ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில்தான் இது அதிகம் விளைகின்றது.பழங்காலத்தில் ஸ்ரீநகர் அருகில் பாம்பூரில் ஷேக் பாபா என்ற துறவிக்கு கண் நோய் ஏற்பட்டது; அவர் பல மூலிகைகளைப் பயன்படுத்தியும் குணமடையாமல் வருந்தினார்.

ஒருநாள் இறைவன் அவர் கனவில் தோன்றி , குங்குப் பூவின் நிறம், அமைப்பு, இருக்குமிடம் இவற்றைக் கூறியதோடு குங்குமப் பூவை, மை  போல அரைத்து கண் மீது பூசும்படி கூறியதும் , பாபாவும் அதன்படியே செய்ய, கண் நோய் வியக்கத்தக்க வகை யில் சீக்கிரமே மறைந்து, பூரண குணம் ஏற்பட்டது  . அங்கு வாழும் மக்கள் இந்த அற்புதத்தைக் கண்டு வியந்து குங்குமப் பூவை தெய்வ மூலிகையாக கருதினர். பாபாவின் அருள் கட்டளைக்கிணங்க அந்த செடியை பெருமளவில் வளர்த்தார்கள் .பாபா சமாதி அடைந்ததும் குங்குமப்பூ தோட்டத்துக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்தார்கள்.

ஒவ்வொரு வருஷமும் பாம்பூர் வாசிகள் பாபா சமாதியடைந்த தினத்தில்  சமாதி இருக்கும் இடத்திற்குச்  சென்று  வழிபடுவார்கள்; அன்றய தினம் சைவ உணவையே ஆகாரமாகக் கொள்வார்கள். குங்குமப் பூவை உலகறியச்  செய்த பெருமை பாபாவையே சாரும் .

ஸ்பெயின் நாட்டில் விழாக்காலங்களில் அரிசியோடு குங்குமப் பூவை சேர்த்து சமைப்பதை கௌரவமாகக் கருதுகிறார்கள் .

ஈரம்  படாதபடி குங்குமப் பூவை வைத்திருந்தால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம்.

குங்குமப் பூவை வியாபாரிகள் தங்கத்திற்குச்  சமமாகக் கருதுகிறார்கள் . ஒரு கிலோ நல்ல தரமான குங்குமப் பூ விலை ரூ.20,000 வரை மதிப்பிடப் படுகிறது (12-7-1192)”.

Xxxx

MY OLD ARTICLE

குங்குமப் பூவே கொஞ்சும் …

tamilandvedas.com › 2019/10/14 › குங்கு…

  1.  

14 Oct 2019 – குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே….. (Post No.7094). Written by London Swaminathan swami_48@yahoo.com. Date: 14 OCTOBER 2019. British Summer Time uploaded in London – 7-45 am

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: