நமது மொபைல் போன்களுக்காக சூரியனை நோக்கி மேலும் ஒரு விண்கலம் (Post 7589)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7589

Date uploaded in London – 18 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

லண்டனுக்கு பக்கத்தில் உள்ளது ஸ்டிவனேஜ் (Stevenage)  என்னும் சின்ன நகரம்.  இதில் கட்டப்பட்ட ஒரு விண்கலம் பிப்ரவரி 9, 2020ல் சூரியனை நோக்கி புறப்பட்டுவிட்டது. இதன் பயண காலம் பத்து ஆண்டுகள். லண்டனுக்கு அருகில் வடிவமைப்பட்டாலும்  கேப் கெனவரால் (Cape Canaveral, Florida, USA) தளத்திலிருந்து இதை அமெரிக்கா ஏவியது. சூரியனிலிருந்து புறப்படும் காந்த அலைகள் மின்சாரக் கருவிகளையும் , மொபைல் போன் முதலியவற்றையும்  பாதிக்கிறது. இது குறித்து மேலும் தகவல் சேர்ப்பது இதன் முக்கிய குறிக்கோள். இது என்ன என்ன சாதிக்கப்போகிறது என்ற திட்டங்களைக் கேளுங்கள்.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அமெரிக்காவில் ப்ளோரிடா மாநிலத்திலுள்ள கனவரால் முனையிலிருந்து பிரம்மாண்டமான அட்லாஸ் (Atlas)  ராக்கெட் இதைச் சுமந்து சென்றது. இந்த விண்கலத்துக்கு சோலார் ஆர்பிட்டர் (Solar Orbiter)  — அதாவது சூரியன் சுற்றி அல்லது ‘சூரிய வலன்’ என்று பெயர். ஊரைச் சுற்றித் திரியும் சோம்பேறிகளை ஊர் சுற்றி என்கிறோம்; அது போல சூரியனைச் சுற்றும் கத்தை ‘சூரிய சுற்றி’ என்பதே பொருத்தம். இதன் எடை 1-8 டன்  இதில் ஐரோப்பிய நாடுகளின் ஆராய்சசிக் கருவிகளும் இருக்கின்றன. சூரியனை நெருங்க இரண்டு ஆண்டுகள் பிடிக்கும்.

எந்த ஒரு பொருளும் சூரியனுக்கு அருகில் போக முடியாது. அதற்கு முன்னரே எரிந்து சாம்பலாகிவிடும் . இது மிகவும் அருகில் போகாமல், எட்ட நின்று உளவு பார்க்கும். ஆனால் புதன் கிரகத்துக்கும் முன்னால்  போய் சுற்றும். இதுவரை நமக்குத் தெரிந்தசூரியனுக்கு அருகிலுள்ள கிரகம் புதன் (Mercury) .

ஐரோப்பிய விண்வெளி அமைப்பு பிரிட்டன் உள்பட பல நாடுகள் கொடுத்த நிதியில் ஆராயச்சித் திட்டங்களை வகுத்தது. இதன்படி சூரியனில் வீசும் காந்தப் புயல்களை இது வேவு பார்க்கும் நல்ல புகைப்படங்களை நமக்கு அனுப்பும். சூரியனுக்கு 2..6 கோடி மைல் அருகில் செல்லும். அப்போது அதி பயங்கர அனல் வீசும். 500 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கும் (Titanium) பூச்சு இந்த விண்கலம் மீது சந்தனம் போல தடவப்பட்டுள்ளது.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சூரியனில் திடீர் திடீரென்று வீசும் மின் காந்தப் புயல்கள் (magnetic Storms) நம்முடைய மொபைல் போன்களையும், எலெக்ட்ரானிக் சாதனங்களையும், விண்ணில் வல ம் வரும்  விண் கங்களையும் பாதிக்கிறது.  பூமியை ச் சுற்றியுள்ள காந்த மண்டலத்தையும் விஞ்சும் பெரும் காந்தப் புயல் சூரியனிலிருந்து பீறிட்டெழுவதுண்டு என்று பிரிட்டிஷ் விண்வெளி அமைப்பின் தலைவர் டாக்டர் கிறிஸ் லீ கூ றினார்.

ஏற்கனவே நாஸா (NASA) எனப்படும் அமெரிக்க விண்வெளி ஸ்தாபனம் பார்க்கர் சோலார் ஆராய்ச்சிக்கலத்தை சூரியனுக்கு அனுப்பி இருக்கிறது. அது புறப்பட்டு 18 மாதங்கள்  ஆகிவிட்டன.

புதிய சோலார் ஆர்பிட்டர் கலத்துக்கு ஆன செலவு

130 கோடி ஸ்டெர்லிங் பவுன்கள். பத்து ஆண்டுக்குப் பின்னர்  இதிலுள்ள எரிபொருள் தீர்ந்துபோய் இது ‘புஸ் வாணம்’  ஆகி, புதன் கிரகத்துக்கும் வெள்ளி கிரகத்துக்கும் இடையே  சுற்றிவரும் .

உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்பது தமிழ்ப் பழமொழி. இனிமேல் சூரியனுக்கும் இரண்டு விண்கலங்களில் இருந்து  இருமுனைத் தாக்குதல் நடைபெறும். இனி அது ரஹஸ்யங்களை மறைக்க முடியாது

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புதிய ராக்கெட் விண்ணில் பாய்வதைக் காண்பதற்காக 1000 விஞ்ஞானிகள் , எஞ்சினியர்கள் குழுமி இருந்தனர். நாலு நிமிடங்களுக்கு வானம் ஜெகஜ்ஜோதியாக இருந்தது. பின்னர் பிரம்மாண்டமான அட்லஸ், தனது முதுகின்மேல் உட்கார்ந்து இருந்த சோலார் ஆர்பிட்டரை அதற்குரிய பாதையில் விட்டுவிட்டு பூமியில் வந்து விழுந்தது.

புதிய செய்திகளை  பத்தாண்டு  வரை எதிர்பார்க்கலாம்.

–Subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: