
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7588
Date uploaded in London – 18 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
பரி பாடல் என்னும் நூல், சங்க இலக்கியத்தி ல் எட் டுத் தொகையில் ஒரு நூல் ஆகும் . அதில் நாலாவது பாடல் கடுவன் இளவெயினனார் பாடியது. அவர் திருமாலைப் புகழ்கையில் சொல்கிறார் tamilandvedas.com, swamiindology.blogspot.com
—
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள
நின் குளிர்ச்சியும் தண்மையும் சாயலும் திங்கள் உள
நின் கரத்தலும் வண்மையும் மாரி உள
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள
பொருள்
உன்னுடைய வெம்மையும் ஒளியும் சூரியனிடத்தில் உளது;
உன்னுடைய குளிர்ச்சியும் மென்மையும் சந்திரனிடத்தில் உளது;
உன்னுடைய அருட் பெருக்கும் கொடையும் மேகத்திடம் உளது
உன்னுடைய பாதுகாப்பும் பொறுமையும் நிலத்தின்பால் உளது;
உன்னுடைய நறுமணமும் ஒளியும் காயாம் பூவிடத்தில் உளது
உன்னுடைய தோற்றமும் விரிவும் கடலில் உளது
உன்னுடைய உருவமும் ஒலியும் வானில் உளது
உன்னுடைய பிறப்பும் மறைவும் காற்றில் உளது
ஆகையால் இவை அனைத்தும் உன்னிடத்திலிருந்து பிரிந்து
உன்னைத் தழுவியே உள்ளன என்று திருமாலை (விஷ்ணுவை)ப் போற்றுகிறார் . அதாவது எல்லாம் ‘இறைவன் படைப்பு, எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான்’ என்ற மாபெரும் தத்துவம் , வேதத்தில் உள்ளதை போல இந்தப் பாடலிலும் காணப்படுகிறது
இவ்வாறு இயற்கைச் சக்திகளின் உருவத்தில் இறைவனைக் காண்பதை உலகின் மிகப்பழைய சமய நூலான ரிக் வேதத்தில் தான் முதன்முதலில் காண்கிறோம். ஏனைய சுமேரிய, எகிப்திய கிரேக்க நாகரீகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கை பற்றிய குறிப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆயினும் வேதத்தில் கோர்வையாக இதே வரிசையில் கடவுளைப் போற்றுவதை ரிக் வேதத்தின் 8-29 பாடலில் வருவதை நேற்று இங்கே கொடுத்தேன் tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடல்
சங்க இலக்கியத்தில் இல்லாத, திருக்குறளில் இல்லாத, ஒரு புதுமையை சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். பரிபாடலைப் பாடிய கடுவன் இளவெயினனார் போலவே, இளங்கோ அடிகளும் ரிக் வேதத்தைப் பின்பற்றுகிறார். ரிக் வேதம் 8-29 பாடலைப் போல சந்திரனை முதலில் வாழ்த்துகிறார்.. ரிக் வேதம் 8-29ல் இந்திரன்/மழை , மித்ரன்/சூரியன், வருணன்/கடல் நீர் ஆகியனவும் போற்றப்படுகின்றன. இளங்கோ அதை அப்படியே, கொஞ்சம் வரிசை மாற்றிப், பாடுகிறார். அவ்வளவுதான். வேதங்களையும், பிராமணர்களையும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இளங்கோ அடிகள், வானளாவப் புகழ்வதையும் பார்க்கிறோம். (சிலப்பதிகாரம் பிராமண காவியமா? என்ற எனது ஆராய்ச் சிக் கட்டுரையை இதே பிளாக்கில் படியுங்கள்; முழு விவரமும் தந்துள்ளேன் )
மங்கல வாழ்த்துப் பாடல் tamilandvedas.com, swamiindology.blogspot.com
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெங்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்த லான்
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்
மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்
பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும்!
வீங்குநீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்
சிலப்பதிகாரத்தில் சந்திரன், சூரியன், இந்திரன் (மழை ), ஊர் (நிலம்/பூமாதேவி) என்ற வரிசையில் போற்றுதல் வருகிறது
ஆக மொத்தத்தில் இப்படி இயற்கைச் சக்திகளை போற்றும் வழக்கம் ரிக் வேதத்தில் துவங்கி, கிட்டத்தட்ட அதே வரிசையில், சிலம்பு வரை வருகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே வேத மரபு என்பது தெளிவாகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
கீழ்கண்ட பத்து கடவுளர் அல்லது ரிஷிக்கள் ரிக் வேதம் 8-29ல் வருகிறது.
1.சோமன்/சந்திரன் 2.அக்நி (தீ), 3.துவஷ்டா , 4.இந்திரன், 5.ருத்ரன் 6. பூஷன் , 7.விஷ்ணு , 8.அஸ்வினி தேவர்கள், சூரியை என்னும் பெண், 9. மித்திரன், வருணன், 10.அத்ரி ரிஷி குடும்பத்தினர்.
மேலே குறிப்பிட்ட மூன்று நூல்களிலும் திங்கள்/சோமன் , ஞாயிறு/மித்திரன், மழை /இந்திரன் என்பன பொதுவாக உள்ளதைக் காணலாம்.. tamilandvedas.com, swamiindology.blogspot.com
சங்க இலக்கியத்திலும் மநு நீதி நூலிலும் அரசர்களின் ஆற்றலை விளக்கும்போதும் இதே வருணனையைக் காணலாம்..
Tags – பரிபாடல், ரிக்வேத, வரிகள், சிலப்பதிகாரம்,
–subham–