வள்ளி கொண்டான் மயில் ஏறிக் கொண்டான் – ஏன்? (Post No7587)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7587

Date uploaded in London – 18 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

வள்ளி கொண்டான் மயில் ஏறிக் கொண்டான் – ஏன்?

ச.நாகராஜன்

பள்ளிகொண்டான் என்று ஒரு பெரும் வள்ளல் இருந்தார். புலவர்களைப் பெரிதும் மதிப்பவர்; பரிசுகளை அள்ளிக் கொடுப்பவர்.

இவரைப் பாடாமல் இருக்க முடியுமா?

நையாண்டிப் புலவர் இவரைப் பற்றிப் பாடிய இரு பாடல்களைப் பார்ப்போம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 :

சிவபிரான் சூரியனையும் சந்திரனையும் தினமும் பூமியைச் சுற்றிச் சுற்றிக் காவல் காக்கச் செய்து விட்டாராம். ஏன்?

செங்கை வரிச்சிலை தங்கம தைச்சம்பு தீவுதன்னில்

எங்குவைத் தாலும் பள்ளிகொண் டான்றமிழ்க் கீவனென்றே

திங்க ளிரவி தினஞ்சுற்றிக் காக்கத் திரை சுருட்டும்

கங்கைக்கு முத்தரத் தேயொளித் தானுமை காதலனே

உமைகாதலன் – உமாதேவிக்குப் பிரியமான சிவபிரான்

செங்கை – தனது சிவந்த கையில் ஏந்துதற்கு உரிய

வரிசிலை – கட்டமைத்த வில்லானது tamilandvedas.com, swamiindology.blogspot.com

தங்கம் – தங்கமாயிருக்கிறது என்று

அதை – அந்த வில்லை

சம்புத்தீவு தன்னில் – ஜம்புத் தீபத்தில்

எங்கு வைத்தாலும் – எந்த இடத்தில் வைத்தாலும் கூட

அ – அந்த

பள்ளிகொண்டான் – பள்ளிகொண்டான் (என்னும் பிரபு)

தமிழ்க்கு – தமிழ்ப் பாடல்களுக்கு

ஈவன் என்றே – பரிசாகத் தந்து விடுவான் என்றே

திங்கள் இரவி – சந்திர சூரியரை

தினம் – நாள் தோறும்

சுற்றிக் காக்க – வலம் வந்து காக்கும்படி செய்ததோடு

திரை சுருட்டும் – அலைகள் சுருட்டப்படுகின்ற

கங்கைக்கும் உத்தரத்தே – கங்கை நதிக்கு வடபுறத்தில்

ஒளித்தான் – அந்தச் சிலையை ஒளித்து வைத்தான்

பள்ளி கொண்டான் தமிழ்ப் பாடல்களுக்குப் பரிசு அளிக்க வேண்டும் என்று விரும்புபவன். சிவபிரானின் சிலையோ தங்கமாகும் அதாவது மேருமலை தங்கம் போல் ஒளிர்வதால் அதைப் புலவர் தங்கம் என்கிறார். திரிபுர சங்கார காலத்தில் இறைவனுக்கு மேருமலை வில்லாக அமைந்தது. ஆகவே அது செங்கை வரிச்சிலைத் தங்கம் எனப்படுகிறது. அந்த வில்லைக் காக்க நினைத்த சிவபிரான் அதை கங்கைக்கு வடபுறத்தில் ஒளித்து வைதததோடு சூரிய சந்திரரை தினமும் சுற்றிச் சுற்றி வந்து அதைக் காவல் காக்குமாறு பணித்தார்.

பள்ளிகொண்டான் நையாண்டிப்புலவருக்கு பரிசளிக்காமல் விடுவாரா என்ன? tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதே பள்ளிகொண்டானைப் பற்றி நையாண்டிப்புலவர் பாடிய இன்னொரு பாடல் இது :-

வள்ளிகொண் டான்மயி லேறிக்கொண் டான்மதி போலுமலை

வெள்ளிகொண் டான்விடை யேறிகொண் டான்விண் ணவர்க்கமுதம்

துள்ளிகொண் டான்புள்ளி லேறிக்கொண் டான்சுப சோபனஞ்சேர்

பள்ளிகொண் டான்புகழே றிக்கொண் டானென்று பார்க்கவென்றே tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுப சோபகம் சேர் – சுப சோபகம் பொருந்திய

பள்ளிகொண்டான் – பள்ளிகொண்டான் என்ற வள்ளல்

புகழ் ஏறிக் கொண்டான் என்று – புகழ் மீது ஏறிக் கொண்டான் என்று

பார்க்க என்றே – அதனைப் பார்க்க வேண்டும் என்றே

வள்ளிகொண்டான் – வள்ளியை மணம்புரிந்து கொண்ட முருகப்பிரான்

மயில் ஏறிக் கொண்டான் – மயில் மீது ஏறிக் கொண்டான்

மதி போலும் வெள்ளிமலை கொண்டான் – சந்திரன் போன்ற வெள்ளி மலையாகிய கைலாயத்தை தனது இருப்பிடமாகக் கொண்ட சிவபிரான்

விடை ஏறிக்கொண்டான் – ரிஷபத்தின் மீது ஏறிக் கொண்டான்

விண்ணவர்க்கு – தேவர்களின் பொருட்டு

அமுதம் துள்ளிக் கொண்டான் – அமுதத்தைத் துளித்தவனாகிய திருமால் tamilandvedas.com, swamiindology.blogspot.com

புள்ளில் ஏறிக் கொண்டான் – கருடன் மீது ஏறிக் கொண்டான்.

அருமையான பாடல்களை அள்ளிக் கொண்டோம் என்று மகிழலாம் இல்லையா, நாமும்!

***

Tags பள்ளி கொண்டான், நையாண்டிப்புலவர், மயில் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: