
WRITTEN BY S NAGARAJAN
Post No.7615
Date uploaded in London – – 25 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கொங்குமண்டல சதகம் பாடல் 19
பேரூர் நந்தியின் முகம் வெட்டப்பட்டு பின் மீண்டும் வளர்ந்தது ஏன்?
ச.நாகராஜன்
கோயமுத்தூரை அடுத்துள்ள பேரூர் பழைய காலத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள ஆறை நாடு என்று அழைக்கப்பட்டது.
சுந்தர மூர்த்தி நாயனார் ஊர் ஊராகச் சென்று சிவனை வழிபட்டு வரும் நாளில் ஒரு நாள் பேரூர் சென்றார்.
அப்போது அங்கு எழுந்தருளியுள்ள பட்டீசுரர் பள்ள வேடம் கொண்டு வயலுக்குச் செல்வாராயினர். செல்லும் போது நந்தியிடம் , “நான் எங்கு செல்கிறேன் என்பதை யாருக்கும் தெரிவிக்காதே” என்று கட்டளையிட்டு விட்டுச் சென்றார்
tamilandvedas.com, swamiindology.blogspot.com.
சுந்தரர் அங்கு வந்து இறைவனைக் காணாத நிலையில் நந்தியிடம் எம்பெருமான் எங்கே என்று கேட்டார்.
நந்திக்குத் தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. சிவபிரான் தான் செல்லும் இடத்தை யாருக்கும் சொல்லக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் சிவனடியாரோ சிவன் இருக்கும் இடத்தைக் கேட்கிறார். சிவனடியாரிடம் பொய் சொல்லக் கூடாது, அதுவும் தவறு தான்.
ஆகவே கண் ஜாடையால் சுவாமி சென்ற இடத்தைக் காட்டினார்.
விஷயத்தைப் புரிந்து கொண்ட சுந்தரர் நேராக வயலுக்குச் சென்று சிவ தரிசனம் பெற்றார்.
சுந்தரருடன் கரை ஏறிய பட்டிப் பெருமான் ஆலயத்திற்குச் சென்றார். கோபம் கொண்ட அவர், அங்கு மண்வெட்டி கொண்டு இடபதேவர் முகத்தை வெட்டினார்.tamilandvedas.com, swamiindology.blogspot.com
நந்திகேசுரர் சிவபெருமானை வணங்கி அருள் வேண்டி இறைஞ்ச அவர் முகம் மீண்டும் பழையபடி வளர்ந்தது.
இந்த வரலாற்றை கொங்கு மண்டல சதகம் 19ஆம் பாடலில் விளக்குகிறது இப்படி:-
நறைவயல் வாய்ச்சுந் தரர்க்கொளித் தாரதை நந்திசொலப்
பிறைமுடி மேனியர் பட்டீச் சுரர்பெரு மண்வெட்டியாற்
குறைபட வெட்டி விழுமுக நந்திசெய் கொள்கையினால்
மறுமுக மீண்டு வளர்ந்தது வுங்கொங்கு மண்டலமே
பொருள் : சுந்தரமூர்த்தி நாயனார் வருவதைத் தெரிந்து கொண்ட பட்டீச்சுரப் பெருமான் (பள்ள வடிவாக) வயலில் ஒளிந்திருந்ததை நந்திகேசுரர் (கண் ஜாடையால்) காட்ட, கோபம் கொண்ட சிவபிரான் திருக்கையி ற் கொண்ட மண்வெட்டியால் நந்தி முகத்தை வெட்ட, அந்த முகம் மீண்டும் வளர்ந்த பேருர் கொங்குமண்டலத்தைச் சேர்ந்ததேயாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்த வரலாற்றைப் பேரூர்ப் புராணம் இப்படி விவரிக்கிறது:-
பண்ணையி லேரிற் பூட்டிப் பகட்டொடு முழாது வைத்தால்
நண்ணிய தொண்டர்க் குண்மை நவிற்றுறா திருப்பை கொல்லென்
றண்ணல்வெள் விடையைச் சீறி யானனஞ் சரிந்து வீழ
மண்ணகல் கருவி தன்னால் வள்ளலார் துணித்திட் டாரால் (பேரூர்ப் புராணம்) tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுந்தரர் வரலாற்றிலும் இந்தச் சம்பவம் இடம் பெறுகிறது.
****
nparamasivam1951
/ February 25, 2020பேரூர் சென்றும் இதை அறியாது இருந்து விட்டேன்.
அரிய தகவலுக்கு நன்றி
Santhanam Nagarajan
/ February 25, 2020thanks