நல்லவர்கள் யார்? அம்பலவாணர் தரும் பட்டியல் (Post. 7620)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7620

Date uploaded in London – 26 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அம்பலவாணக் கவிராயர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, கொல்லிமலையில் இருக்கும் சிவபெருமானைத் துதித்து பாடிய அறப்பளிச்சுர சதகத்தில் இரண்டு பாடல்களில், நல்லவர்கள் யார்? உத்தமர்கள் யார்? தியாகி யார்? என்று நீண்ட பட்டியலைத் தருகிறார். இதோ அவர் சொல்லும் சுவையான விஷயங்கள்—

செய்நன்றி மறவாதவர்கள், ஒருவர் செய்த தீமையை மறந்து, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற ‘பாலிசி’யைப் பின்பற்றுவோர் உத்தமர்கள்.  tamilandvedas.com, swamiindology.blogspot.com

பணமே கொடுத்தாலும் மாற்றானின் மனைவியின் மீது ஆசை வைக்காதவனும், பிறர் பொருளைக் கீழே கண்டு எடுத்தாலும் அதன் உரிமையாளரைத் தேடிக்கண்டு பிடித்து கொடுப்பவரும்,  கோவிலுக்கும் அறப்பணிகளுக்கும், பிராமணர்களுக்கும் கல்வெட்டுக்களில், உயில்களில் எழுதி வைத்த தர்மத்தைக் காப்பவர்களும்  உத்தமர்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com

எவ்வளவு பணம் கொடுத்தாலும் வழக்கில் பொய் பேசாமல், நடுவு நிலைமை தவறாறாதவர்களும் , அதாவது கோடிக்கணாக்காக பணத்தை அள்ளிவீசினாலும் பணத்துக்காக பொய்ச் சாட்சி, பொய்த் தீர்ப்பு சொல்லாதவர்களும்  உயிரே போகும் நிலைமை வந்தாலும் கனவிலும் கூட பொய் மட்டும் சொல்ல மாட்டேன் என்போரும் சத் புருஷர்கள்/ நல்லவர்கள் என்று உலகமே போற்றும்.

அடைக்கலம் நாடி வந்தவர்களைக் காப்போரும் , என்ன நேரிட்டாலும், என்ன கஷ்டம் வந்தாலும், மனம் கலங் காதவர்களும் மகா தீரர்கள் ஆவர். tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு விஷயத்தை ஆரம்பித்தபின்னர் அதன்படியே, சொன்ன சொல் தவறாமல் நடப்பவனே மகாராஜா என்று உலகோரால் போற்றப்படுவான். அதாவது முதலில் சொன்னதைச் செய்யாமல் தப்பிக்க சாக்குப்போக்கு தேடாமல் சத்தியத்தைக் கடைபிடிப்பவனை ‘ராஜா’வே என்று உலகம் பாராட்டும்.

பிறர் பேச்சைக் கேட்டு தவறு செய்யாதவர்கள் மேரு மலை போன்று உயர்ந்தோர் ஆவர் . குன்றிலிட்ட விளக்கு போல பிரகாசிப்பர்.

தன்னை அடுத்து வாழ்பவர்கள் , தனக்குத் தெரிந்தவர்கள் ஆகியோர் கஷ்டப்படுகையில் வலியச் சென்று உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுபவன் தியாகி ஆவான் .

ஒவ்வொருவருடைய தகுதி, தரம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு அவர்களுக்குரிய மரியாதை செய்பவன் எல்லோருக்கும் நண்பன் ஆவான். tamilandvedas.com, swamiindology.blogspot.com

திரிசூல தாரி , சதுர கிரி வாசா , உன்னை அனுதினமும் மனதில் நினைந்து வாழ்த்துகிறேன்.

–subham-

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: