புத்தர் சொன்ன உணவுகள். மருந்துகள் (Post No.7625)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7625

Date uploaded in London – 27 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

புத்த மதத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்று அனுமதித்தவுடன் உணவு, உடை, நடத்தை (நடை உடை பாவனை) முதலிய பல விஷயங்களில் கேள்விகள் எழுந்தன. புத்தர் உயிருடன் இருக்கும் வரை அவரே பதில் கொடுத்ததாக பிற்கால நூல்கள் காட்டுகின்றன. அவர் இறந்தவுடன் ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற நிலை ஏற்பட்டவுடன் மூன்று முறை மஹா நாடு கூட்டி புதிய, புதிய விதிகளை இயற்றினர் . யார் புத்த பிட்சு? என்பதை ஒரு அறிஞர் குழு முடிவு செய்தது . மஹா நாட்டு பந்தல் வாசலில் அமர்ந்து கேள்வி கேட்டனர் . சரியான பதில்  சொன்னவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பிற்காலத்தில் எழுந்த புத்த மத நூல்களில் அந்த விதிகள் தொகுக்கப்பட்டன. அவைகளில் உள்ள உணவு, மருந்து விஷயங்கள் பற்றிய சுவையான செய்திகள் இதோ ….

விநயபீடகா நூல்களில் இருந்து இவை தொகுக்கப்பட்டன. இதைத் தொகுத்தவர் நாளந்தா மஹாவிஹார பேராசிரியர் சி. எஸ். உபாசிக் ஆவார்; அது பாலி மொழியில் உள்ளது.

அகடயூஸ

பாசிப்பருப்பை பாதி கொதிக்கவைத்த கஞ்சி. இதை புத்த பிட்சுக்களுக்கு மருந்தாகக் கொடுப்பதை புத்தர் அனுமதித்தார்

அந்தோ பக்கம் , அந்தோ உ த்தம் / பிண்டம்

பவுத்த விஹாரத்துக்குள் சமைக்கப்பட்ட உணவை பிட்சுக்கள் சாப்பிடக்கூடாது .

வெளியில் பிச்சை எடுத்தே சாப்பிட வேண்டும். விஹாரத்துக்குள் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் பயன்படுத்துவது தவறு.

அம்ப பாண

மாம்பழச்சாறு சாப்பிடலாம். புத்தர் அனுமதித்த எட்டு வகைப் பழச் சாறுகளில் இதுவும் ஒன்று. இது ‘யாம காலிக’. அதாவது பகலிலும் இரவிலும் சாப்பிடலாம் .

பல காதநீய, பல பாஜக , பல பேஷஜ

எல்லா வகைப் பழங்களையும் சாப்பிட புத்தர் அனுமதித்தார் .

பாலி மொழி நூல்கள் குறிப்பிட்ட கறிகாய் ,பழங்களில் பலா , மா , தேங்காய் , புளி ,கத்தரிக்காய் முதலியன உள்ளன .

‘பல பாஜக’ என்பவர் சங்கத்துக்கு பழங்களை விநியோகிப்பவர் .

‘பல பேஷஜ’ என்பன மருந்துச் சரக்குகள் — பிப்பலி,  விளங்க , மரிச ஹரிதிக, விபிடக , ஆமலக, கொத்தபல(அதாவது மிளகு, கடுக்காய், திப்பிலி, நெல்லிக்காய் முதலியன)

பழம்’ தமிழ்ச்  சொல்லா?

2700 ஆண்டுகளுக்கு முன்னர், இப்போதுள்ள பாகிஸ்தானில் பிறந்த, உலக மகா இலக்கண மேதை பாணினி , பலம் /பழம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார் . ஆனால் வேதத்தில் ‘பிப்பல’ என்ற சொல்லே உளது. இது ‘ஆப்பிள்’ (Pippala = Berries= Apple) போன்ற சொற்களைத் தோற்றுவித்தது . இதுவே பல /பழ ஆயிற்றா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். பாலி மொழி நூல்களில் “பல” (பழம்) மலிந்து கிடக்கிறது.

புத்தர் அனுமதித்த எட்டு வகை பல/பழ  ரசங்கள்

மாம்பழ ரசம், நாவல் பழரசம் , காட்டு வாழைப்பழ ரசம், வாழைப் பழரசம், திராட்சைப் பழரசம், ‘மது ரசம் /இலுப்பைப் பழம்’ , ‘சாலூக பாண / அல்லிப் பூ வேரின் சாறு’ , ‘பாருசக/ பலசாக /தடச்சி’- க்ரிவியா ஏஸியாடிகா Grewia asiatica

கோ ரஸா

புத்தர் அறிவித்ததாக பவுத்த நூல்கள் செப்புவதாவது-

பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைச் சாப்பிட நான் உங்ககளை அனுமதிக்கிறேன்- பால், தயிர், மோர், நெய் , வெண்ணெய்.

இப்போது வெளிநாட்டில் பரவி வரும் (Vegan) வேகன் கொள்கை பழங்கால இந்தியாவில் கிடையாது. வெளிநாட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மாமிசம் , மருந்து ஊசி ஆகியன கொடுப்பதால் பலருக்கும் ‘லாக்டோஸ்’ (Lactose) (பாலில் உள்ள ஒரு பொருள்) ஒவ்வாமை வந்து விட்டது. ஆகையால் பால் பொருட்கள் எதையும் உபயோகிக்கக்கூடாது என்ற வேகன் VEGAN கொளகை பரவி வருகிறது. பழங்கால ரிஷிகள் பாலையும் தேனையும் கலந்த உணவையே சாப்பிட்டனர். ஒரு நாடு வளம் பொருந்தியது என்று சொல்ல, அந்த நாட்டில் “பாலும் தேனும் ஆறாக ஓடிற்று” என்ற சொற்றோடர் சம்ஸ்கிருத நூல்களிலும் பைபிளிலும் பயன்படுத்தப்பட்டது .

மண் சோறு சாப்பிடு (கரதின்னகாபாதோ)

ஏதேனும் ஒரு வீட்டில் பிச்சை  கேட்டபோது அந்த வீட்டுப் பெண்மணி , புத்த பிட்சுவை மயக்குவதற்காக ஏதேனும் மாய மருந்துகளை , வசிய விஷயங்களைக் கலந்ததாகத் தெரிந்துவிட்டால் , அந்த மாய, வசியத்தை முறிக்க, கலப்பையில் ஒட்டியிருக்கும் ‘சேறு/ சகதி’யைக் கரை த்துக் குடிக்க வேண்டும் . இதன் பெயர் ‘சீதா லோலி’. சீதா தேவி இப்படிக்கு கலப்பையில் உழுகலனில்  பிறந்ததால் அவளுக்கு ஜனக மாமன்னன் ‘சீதா’ என்று பெயரிட்டான் . ஒரு பூமியை யாகத்துக்காக  செம்மைப் படுத்துகையில் மன்னன் வந்து ‘தங்க ஏர்’ கொண்டு அந்த இடத்தை  உழுதல் பழங்கால வழக்கம் .

இந்து மஹா அதிசயம்

உலகில் இந்துக்களைப்  போல இயற்கை நண்பர்கள் எவருமிலர் . ஸீதாவுக்கு ‘கலப்பை/ஸீதா’ என்று பெயரிட்டது போல பறவைகளால் வளர்க்கப்பட்ட சகுந்தலைக்கு பறவைப் பெண் (Shakuntala= Bird) என்று பெயரிடப்பட்டது. இதுபோல புராண இதிஹாசங்களிலும் , வேத ரிஷிகளின் பெயர்களிலும் 50 பெயர்கள் பறவைகள், மிருகங்களின் பெயர்கள் ஆகும் .

அரசமரம் – பிப்பலதான்

ஆந்தை – கௌசிகன்

ஆமை – காஸ்யபன்

காகம் – பரத்வாஜன்

வேணு – மூங்கில்

இப்படி ஐம்பது பெயர்கள் கிடைக்கின்றன.

இந்துக்கள் இயற்கையில் இன்பம் அனுபவித்தார்கள். காகத்துக்கும் ஆந்தைக்கும் மனிதர்களை போல மதிப்பு தந்தார்கள் .

இந்தப் பெயர்கள் பற்றிய எனது ஆராய்சசியைத் தனியே வரைவேன். தமிழிலும் ஆந்தை (பிசிர் ஆந்தை) காகம் (காக்கை பாடினியார் ) முதலியன உண்டு. தமிழ், சம்ஸ்கிருத பெயர் பட்டியலை பின்னர் தருகிறேன்.

சங்க இலக்கியத்தில், குப்தர்கள் கல்வெட்டுக்களில்  20க்கும் மேலான நாகர் (பாம்பு) பெயர்கள் இருக்கின்றன.

Xxx

குருடு , ஊமை ,செவிடு

குருடர்கள், செவிடர்கள், ஊமைகளை புத்த பிட்சுக்களாக ‘சன்யாசம்’ கொடுக்கக்கூடாது. அந்த மாதிரி நடந்தால் அதில் பங்கேற்போரும் தவறு செய்தவர்களே.

இணைந்த கை விரல் உடையோர், ஆறு விரல்கள் உடையோரையும் பிட்சுக்களாக்கக்கூடாது. நொண்டி, முடவன்,குள்ளன் ஆகியோரும் பிட்சுக்களாகத் தடை விதித்தார் புத்தர். பிராமணர்கள் பவுத்தர்களாக மதம் மாறியபோது அவருடைய முகம் பிரகாசத்தால் ஒளிவிட்டது.

பாலி மொழி அகராதியையும் புத்தமத அகராதியையும் ஆராய்ந்தால் ஆரிய – திராவிட மொழிக் கொள்கைளைத் தவிடு பொடியாக்கலாம் . தமிழும் சம்ஸ்கிருதமும் மிகவும் நெருக்கமானவை, ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை  என்பதை நிரூபிக்கலாம். உலகிலுள்ள பழங்கால மொழிகளில் தமிழும் சம்ஸ்கிதமும் விரவிக் கிடப்பதைக் காட்டி இங்கிருந்தே நாகரீகம் பரவியது என்பதையும் காட்டலாம். திராவிடர்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள், ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்ற வெள்ளைக்காரன் கொள்கைக்கு முடிவு கட்டலாம் .

Xxx

புத்தர், பெண்களுக்கு எதிரானவர் என்பதை இந்தியாவின் ராஷ்டிரபதியாக இருந்த , உலகப் புகழ்பெற்ற தத்துவ வித்தகர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவரது தம்மபத மொழிபெயர்ப்பில் எடுத்துக் காட்டுகளுடன் தந்தார். (முன்னரே இதுபற்றி எழுதிவிட்டேன்) பிரதம சிஷ்யன் ஆனந்தன் கெஞ்சிக் கூத்தாடவே ‘தொலைந்து போ, பெண்களையும் புத்த பிட்சுணிகளாக்கு !’ ஆனால் ஒன்றைக்  குறித்துக் கொள் ; எனது மதம் எக்காலம் வரை இந்தப் பூவுலகில் இருக்கும் என்று கணக்கிட்டேனோ அதில் பாதி காலத்தில் என் மதம் போய்விடும்’ என்றார் .

இன்றும் புத்த மத நூல்ளில் ஆண்களுக்கு ஒரு நீதி , பெண்களுக்கு ஒரு நீதி என்றே விதிகள் உள .

ஒரே ஒரு எடுத்துக் காட்டைக் காண்போம் .

ஆராம (தோட்டம் ,பூங்கா)

புராதன இந்தியாவில் மக்கள் இன்பத்துடன் வாழ்ந்தனர். நகரெங்கும் பூங்காக்களும் தோட்டங்களும் ஆயிரக்கணக்கில் இருந்தன. பீஹார் மாநிலத்தில் வைசாலி நகரில் 7000க்கும் அதிகமான தோட்டங்கள் (ஆராம) தோப்புகள், நந்தவனங்கள், பூங்காக்கள் இருந்தன. இவைகளுக்கு புத்த பிட்சுணிக்கள் போகக்கூடாது என்று புத்தர் தடை விதித்தார்.

புத்தர் சொன்ன எல்லாம், பிற்காலத்தில் மூன்று மஹாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையில் ‘‘த்ரி பீடகம்’ (மூன்று பெட்டிகள்) என்ற புஸ்தகங்களாக வெளியிடப்பட்டன. புத்தர் உலவியது முழுதும் இன்றைய இந்தியாவின் பீஹார் , உத்தர பிரதேச மாநிலங்களாகும் . பீஹார் என்ற பெயரே (புத்த) ”விஹார” என்ற சொல்லில் இருந்து வந்ததே !

Reference

kd.6.34.21 Then the Lord on this occasion, having given reasoned talk, addressed the monks, saying: “I allow you, monks, five products of the cow: milk, curds, butter-milk, butter, ghee. There are, monks, wilderness roads with little water, with little food; it is not easy to go along them without provisions for the journey. I allow you, monks, to look about for provisions for a journey: husked rice for him who has need of husked rice; kidney-beans for him who has need of kidney-beans; beans for him who has need of beans; salt for him who has need of salt; Vin.1.245 sugar for him who has need of sugar; oil for him who has need of oil; ghee for him who has need of ghee. 

—subham —

Leave a comment

Leave a comment