
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7629
Date uploaded in London – 28 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான். அவனுடைய தந்தையை மரியாதைக் குறைவாக நடத்துவதில் அவனுக்குப் பேரானந்தம். அவன் தந்தையோ மஹா கிழடு . பொக்கை வாய். ஒன்றும் அறியாத அப்பாவி. அவருக்கு தினமும் உடைந்த பானை ஓட்டில் கஞ்சி வார்த்தான் அந்தக் கிராதகன் . இதையெல்லாம் பேரன் பார்த்துக் கொண்டே இருந்தான் . அவன் பள்ளி செல்லும் வயதுடைய மாணவன். பள்ளியில் வாத்தியாரும் ‘மாதா , பிதா , குரு தெய்வம்’ என்று சொல்லிக் கொடுத்ததை நெட்டுரு போட்டவன். அவனுடைய தந்தை தன் தாத்தாவை நடத்தும் முறை பிடிக்கவில்லை. ஆனால் முரட்டு அப்பாவிடம் சொன்னால் முதுகில் ‘டின் கட்டி’ விடுவார் என்பது தெரியும். அவன் மஹா புத்திசாலி. அவனுக்கு ஒரு நல்ல ‘ஐடியா’ (Idea) கிடைத்தது.
முரட்டு அப்பா வெளியே போனபோது கஞ்சி வார்க்கும் உடைந்த பானை ஓட்டை ஒளித்து வைத்தான் .
முரட்டு அப்பன் திரும்பி வந்தவுடன் அந்தக் கிழவனுக்கு கஞ்சி கொடுப்பதற்காக பானை ஓட்டைத் தே டினான் ; கிடைக்கவில்லை. ஆத்திரம் பொங்கியது. கம்பை எடுத்தான்; கிழட்டுத் தந்தையின் முதுகில் ஒரு போடு போட்டான் .
ஏ கிழவா! பானை ஓட்டில் கஞ்சி குடிக்கப் பிடிக்காததால் அதை ஒளித்துவைத்தாயா ? எங்கே யாவது தூக்கிப் போட்டாயா ? என்று தடியை ஓங்கினான். tamilandvedas.com, swamiindology.blogspot.com
அவனது மகன் ஓடி வந்தான் ; “அப்பா தாத்தாவை அடிக்காதே ; நான்தான் அதை பத்திரமாக எடுத்து வைத்து இருக்கிறேன்” என்றான் .
“ஏன்டா ! மடையா? அதை எதற்கடா தொட்டாய்? துஷ்டா!” என்றான்.
“அப்பா, அது உடைந்து ஓடாய்ப் போய்க் கிடக்கிறது. உனக்கு வயதாகும் போது கஞ்சி வார்ப்பதற்காக நான்தான் பத்திர படுத்தி வைத்தேன்” என்றான்.
பையன் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றிச் சொன்ன விஷயம் அவன் நெஞ்சில் பாய்ந்த வேலாகத் தைத்தது.
பின்னர் புதிய வெள்ளிக் கிண்ணம் (Silver Bowl) வாங்கி வந்து கிழவனுக்கு நல்ல அமுது ஊட்டினான். tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx

சமணர் கோவிலில் விவசாயி அழுதது ஏன்?
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டான். அப்போது ஒரு கிராமத்தான் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தான்.ஒரு முறை வானம் பொய்த்தது; பூமி வறண்டது ; பயிர்கள் பொய்த்தன. ஆயினும் வரி வசூல் செய்பவன் , அந்த கிராமத்துக்கு வந்து எல்லோரையும் விரட்டி, மிரட்டி, உருட்டி வரியை வாங்கிச் சுருட்டி கொண்டு சென்றான். கொடுக்காவிடில் வெள்ளைக்கார துரை துப்பாக்கியோடு வருவார் என்றும் அதட்டினான். அந்த அப்பாவி விவசாயியும் தன்னிடமிருந்து மாடு, வீடு , காடு , துணி மணிகள் எல்லாவற்றையும் விற்று வரி கட்டினான். அப்படியும் கொஞ்சம பாக்கி இருந்தது. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு நாள் வெள்ளைக்கார கலெக்டரே குதிரையில் வரி வசூல் செய்ய வருவதை பார்த்தான். இனிமேல் இருந்தால் தன்னைப் பிடித்து அடித்து உதைப்பார்கள் என்று பயந்து ஒற்றைக் கோவணத்தோடு தலை தெறிக்க ஓடினான் .
ரொம்ப தூரம் போனவுடன் இளைப்பாறுவதற்காக ஒரு பாழடைந்த கோவிலுக்குள் நுழைந்தான் . அது ஒரு ஜைன மத கோவில் . எல்லா சமணர் சிலைகளும் ஆடையின்றி நிர்வாண கோ லத்தில் இருக்கும் ; ஏனெனில் சமண மத தீர்த்தங்கரர் என்னும் புனிதர்கள் ஜிதேந்திரியர்கள். ஐந்து புலன்களையும் வென்ற மாவீரர்கள்.அது இந்த அப்பாவி விவசாயிக்குத் தெரியாது. அவனோ ஞான சூன்யம்.
நிர்வாண சிலையைக் கண்டான்; ஐயோ நான் வீட்டு வாசலை எல்லாம் விற்றபின்னர் எனக்கு இந்தக் கோவணம்தான் மிஞ்சியது. உனக்கு எவ்வளப்பா வரி பாக்கி? இப்படிக் கோவணம் கூட இல்லாமல் ஊருக்கு வெளியே வந்து அம்மணமாக நிற்கிறாயே ! என்று சிலையைக் கட்டிக்கொண்டு ‘கோ’ வென்று கதறி அழுதான் .
Tags –பானை ஓடு , கோவணம் , நிர்வாண , சிலை, சமணர்
Xxxxsubham xxxx