ஸ்வாமி ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் (in English & Tamil) – 1 (Post .7640)

Written by S Nagarajan

Post No.7640

Date uploaded in London – 2 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றியவர் ஸ்வாமி ராமதீர்த்தர்.

ஏராளமான உவமைகளை அடுக்கடுக்காகச் சொல்வது அவர் வழக்கம். அறநெறி போதிக்கும் parables எனப்படும் குட்டிக்கதைகளை அவர் அடிக்கடி கூறுவதுண்டு. இந்தக் குட்டிக் கதைகள்  புரிந்து கொள்வதற்குச் சிரமமான பல பெரிய உண்மைகளை அனாயாசமாக விளக்கி விடும்.

உதாரணத்திற்கு ஒரு குட்டிக்கதையைப் பார்க்கலாம் :

ஆண்டி ஒருவர் தனது சணலால் ஆன கம்பளியை இழந்து விட்டார். ஆண்டியை சோதனை செய்வதற்காகவோ என்னவோ ஒரு கான்ஸ்டபிள் அதைத் திருடி விட்டார். போலீஸ் ஸ்டேஷன் அருகே தான் அந்த ஆண்டி வசித்து வந்தார். நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற அவர் அங்கு இருந்த தானேதாரிடம் (போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரி – பழைய கால பதவியின் பெயர் இது) புகார் அளித்தார்.

தானேதார் : எதை இழந்து விட்டீர்கள்?

ஆண்டி : என்னுடைய எல்லாமே போச்சு. முதலில் என் மெத்தை போச்சு.

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட படுக்கை

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட போர்வை

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட கோட்டு மற்றும் மேலங்கியும் போச்சு

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட தலகாணியும் போச்சு

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட தரை விரிப்பும் போச்சு

தானேதார் : வேற ஏதாவது உண்டா?

ஆண்டி : ஆமாம், உண்டு. என்னோட குடையும் போச்சு

தானேதார் : அவ்வளவு தானா, இன்னும் இருக்கா?

ஆண்டி : இருக்கு சார், என்னோட வேஷ்டி, அதுவும் போச்சு

தானேதார் : வேற ஏதாவது போச்சா, யோசனை பண்ணி சொல்லுங்க

ஆண்டி : அப்புறம்.. அப்புறம்.. அப்புறம்…

அருகில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் விழுந்து விழுந்து சிரித்தார். ஆண்டியை நோக்கி ஏளனமாக அப்புறம்..அப்புறம் . அப்புறம் என்று கேலி செய்தார் அவர். “உன்னோட குடிசை ஒரு பெரிய வணிக கோடவுனா என்ன, எல்லாம் போறதுக்கு” என்றார் அவர்.

பின்னர் ஆண்டியினுடைய மெத்தையை அவர் மேல் தூக்கி எறிந்த கான்ஸ்டபிள் தானேதாரை நோக்கி, “சார்! இது மட்டும் தான் அங்கே திருடு போனது” என்றார்.

ஆண்டி அந்த மெத்தையைத் தன்னுடையது தான் என்று அடையாளம் காட்டி அதைப் பெற்றுக் கொண்டார். போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நகர ஆரம்பித்தார்.

ஆனால் தானேதார் அவரை அரெஸ்ட் செய்தார் – பொய் புகார் அளித்த காரணத்திற்காக!

ஆண்டி புன்முறுவல் பூத்தார். தான் ஒரு பொய்யையும் சொல்லவில்லை என்றார்.

மெத்தையை தன் மேல் போட்டுக் கொண்டு இதோ என் மெத்தை என்றார். பின்னர் அதைத் தரையில் விரித்து அதன் மேல் உட்கார்ந்து, “இதோ எனது படுக்கை” என்றார்.

பிறகு அதைத் தன் தலை மேல் விரித்துக் காண்பித்து, “இதோ, எனது குடை” என்றார்.

இப்படி ஒவ்வொரு விளக்கமாக அவர் கொடுத்துக் கொண்டே போனார்.

பிரபஞ்சத்தை சிருஷ்டித்த பிரம்மத்தை உணர்ந்த ஒருவனுக்கு பிரம்மம் தான் எல்லாமே! அவனது உறவெல்லாம் பிரம்மம் தான். அவனை ஆள்வதும் பிரம்மமே; ஆளப்படுவதும் பிரம்மமே. அவனது நண்பர்களும் பிரம்மமே, எதிரிகளும் பிரம்மமே. அவனது தந்தை, தாய், சகோதரன், சகோதர் எல்லாமே பிரம்மமே. அவனுக்கு பிரம்மம் தான் ஆண்டியினுடைய மெத்தை!

ஸ்வாமி ராமதீர்த்தர் பிரம்மத்தை எப்படி விளக்கி விட்டார் பாருங்கள், ஒரு சின்னக் குட்டிக் கதையின் மூலமாக!

இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோருக்காக ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது :-

The Fakir’s Gudri

A fakir lost his gudri (rags stitched together to form a quilt). It was stolen by a constable (in order, probably, to test the fakir). The fakir lived near the police station. He went and made a report to the police.

The Thanedar asked him, “What have you lost?”

The fakir replied, “ My all. First a quilt.”

Thanedar : “What else?”

The fakir : “My bed.”

Thanedar : “What else?”

The fakir : “My sheet.”

Thanedar : “What else?”

The fakir : “My coat and angarkha.”

Thanedar : “What else?”

The fakir : “My pillow.”

Thanedar : “What else?”

The fakir : “My carpet.”

Thanedar : “Anything else?”

The fakir :  “yes, My umbrella.”

Thanedar : “Is that all?”

The fakir : “No sir, also my dhoti.”

Thanedar : “Just recollect if you have lost anything else?”

The fakir : “And.. and.. and..”

The constable who was standing by, laughed at his long list, and abusing the fakir, said “And.. and.. and… as of thy cottage is a merchant’s godown..” and throwing the gudri at him said to the Thanedar, “Sir, this is all that was stolen.”

The fakir identified the gudri as his; took and walked out of the police station. But the Thandedar had him arrested for making a false report. The fakir smiled and said that he had not told a lie. He covered himself with the gudri and said, “Here is my quilt.” Spreading it on the ground, he sat on it and said, “This is my bed.”. Protecting himself from the son with it, he said, “Look, here is my umbrella.”. And so on.

To him who has realized Brahma the support of the universe, Brahma is all in all, his relations are Brahma, his ruler and his ruled are Brahma, his friends and enemies are Brahma, his father, mother, brother, and sister are Brahma. To him Brahma is the fakir’s gudri.

*****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: