
Written by LONDON SWAMINATHAN
Post No.7661
Date uploaded in London – 7 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
நம்ம ஊர் திராவிடங்களுக்கு பக்தர்கள் கொடுத்த, கொடுக்கும் சூடான பதில்கள் எல்லோரும் அறிந்ததே.
“அவருடைய நாவில் சரஸ்வதி தேவி தவழ்கிறாள்” என்று உபன்யாசகர் சொன்னார் .
ஒரு திராவிடன் கேட்டான்- ஐயா! அவர் நாவில் சரஸ்வதி தேவி வசித்தால் , சிறுநீர் கழிக்க எங்கே போவாள்? என்று கேட்டான்.
உபன்யாசகர் சொன்னார்- “அப்போது மட்டும் உன்னுடைய நாக்கிற்குள் வந்து விடுவாள் என்று !”
இதே மாதிரி “அதோ இருக்காண்டா , பூ ணுல்காரன் ! என்று ஒரு திராவிடம்” கத்திய ‘ஜோக்’கை முன்னரே எழுதிவிட்டேன்.
இதே போல சீனாக்காரனிடம் ஒரு வெள்ளைக்காரன் நமட்டு விஷமம் செய்தா ன் ; அவன் கொடுத்த சூடான பதில் இதோ—
ஒரு வெள்ளைக்கார அதிகாரியிடம் வேலை பார்த்த சீன ஊழியர் ,
“ஐயா ! நாளை ஒரு நாள் விடுமுறை வேண்டும். நெருங்கிய சொந்தக்காரர் இறந்துவிட்டார் ;இறுதிச் சடங்கிற்குப் போகவேண்டும்” என்று சொன்னார் .
அதிகாரியும் “சரியப்பா , போய் வா” என்று அனுமதி கொடுத்துட்டு …….
“உங்கள் சீன வழக்கப்படி நீயும் கல்லறையில் உணவு படைப்பாயோ ?” என்று விஷமத்த தொனியில் வினவினார்.
சீனாக்காரனுக்கு என்னவோ போல் இருந்தது .
“ஆமாம் ஐயா , கட்டாயம் உணவு படைப்பேன்” என்று விடையிறுத்தான் .
அந்த அதிகாரிக்கு விஷமம் அதிகரித்தது.
“செத்துப்போனவர் எப்போது அதைச் சாப்பிடுவார் ?” என்று நமட்டுச் சிரிப்புடன் வினவினார் .
அவன் பதில் வில்லில் இருந்து பாய்ந்த அம்பு போல வந்தது. அம்பு போலவே வெள்ளைக்காரன் நெஞ்சில் பாய்ந்தது —
“ஐயா, போன வாரம் நீங்கள் உங்கள் நெருங்கிய உறவினர் மரணத்துக்குப் போய்விட்டு கல்லறையில் மலர்கள் வைத்துவிட்டு வந்தீர்கள் அல்லவா ? செத்துப்போன உங்கள் உறவினர் அந்த மலர்களின் மணத்தை முகர வரும் நாளன்று எங்கள் உறவினரும் கல்லறையில் இருந்து வந்து படைத்த உணவை அருந்திவிடுவார்” என்றார் .

வெள்ளைக்காரனுக்கு சுரீர் என்றது.
இதைத்தான் தமிழில்’ நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்’ என்றும் புகல்வர் பழமொழி அறிந்தோர்!
tags – சீனாக்காரன் , சூடான பதில்
XXX SUBHAM XXXX