32 வகை தர்மங்கள் பட்டியல் (Post No.7683)

32 வகை தர்மங்கள் பட்டியல் (Post No.7683)

Written by London Swaminathan

Post No.7683

Date uploaded in London – 12 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

32 தர்மங்களின் பட்டியலை அறப்பளிச்சுர சதகத்தில்,   ஒரே பாடலில், அம்பலவாணக் கவிராயர்  அழகாகக் கொடுத்துள்ளார் . இதில் வியப்பான விஷயம் சிறைக் கைதிகளுக்கு உணவு கொடுப்பது, அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வது , மிருகங்களுக்கு தீவனம்  கொடுப்பது, கல்யாணம் செய்ய உதவுவது, பிள்ளைகளுக்கு கல்வி சாலைகள் அமைப்பது , மருந்து கொடுப்பது ஆகியன அனைத்தும் உள . இவை அனைத்தும் புராண , இதிகாசங்களில் உள்ள விஷயங்கள்.

இதிலுள்ள தண்ணீர் பந்தல் வைக்கும் விஷயம் பெரிய புராணத்தில் அப்பர் காலத்தில் இருந்ததை படிக்கலாம் . மணிமேகலை காவியத்தில் அவள் சிறைச் சாலை சேவை செய்ததையும் உணவு கொடுத்ததையும் காணலாம். அசோகர் கல்வெட்டு முதல் இன்று ராமகிருஷ்ண மிஷன் வரை இந்த சேவைகளைக் காண்பதால் இது வாய்ச் சொல் வீரமில்லை ; உண்மைக் கதை என்றும் தெரிகிறது tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

 தமிழ் நாட்டில் பல ஊர்ப்பெயர்களில் கூட ‘சத்திரம்’ என்ற சொல் இருப்பது அக்கால மன்னர்களின் தர்மத்துக்குச் சான்றாக நிற்கின்றன. மதுரை மங்கம்மாள் சத்திரத்திலும், அதற்கு அணித்தேயுள்ள மார்வாடி தர்மசத்திரத்திலும் நானே பலர் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன் ; கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறைச் சின்னம் திறக்கப்பட்ட போது ஆர் எஸ் எஸ் (R S S)  ஸ்தாபனம் மூலம் இதைச் செய்தோம் ; ஏதோ வெளிநாட்டினர் வந்து நமக்கு மருத்துவ மனை கட்டவும், காலேஜ் கட்டவும் சொல்லிக்கொடுத்தனர் என்பதெல்லாம் தவறு என்பதை சதகப் பாடலும் புராணங்களும் காட்டுகின்றன.

சமணர்கள் , மிருகங்கள், பறவைகளுக்கும் கூட இலவச மருத்துவ மனை வைத்ததை உலகில் வேறு எங்கும் காண முடியாது tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

32 வகை தர்மங்கள்

1. வழிப் போக்கர்கட்குச் சத்திரங்கள் (Choultries; free lodging and boarding) கட்டிவைப்பது.

2. கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகட்கு (Free Hostels for students or Food Distribution)  உணவு வசதி அளிப்பது.

3. அறுவகைச் சமயத்தார்க்கும் (food for Mendicants) உணவு கொடுப்பது.

4. பசுவுக்கு வைக்கோலும் (fodder for cows) புல்லும் வழங்குவது.

5. சிறைச் சாலையில்(Food for prisoners துன்புறுவோர்க்கு சோறளிப்பது tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

6. வீடு தேடி வரும் ஆதரவற்ற (Giving alms) ஏழைகட்குப் பிச்சை அளிப்பது.

7. தின்பண்டம் (Anna Dhanam) நல்கல்.

8. மகப்பேறு மருத்துவ (Setting up Maternity Homes) மனைகள் அமைத்தல்

9. தாய்மைப் பேறுபெற்ற (Helping pregnant women; pre-natal and post natal care) பெண்கட்கு உதவி செய்வது.

10. குளம் வெட்டுதல் (Excavating Tanks, Lakes for Irrigation)

11. அனாதைப் பிணங்களை (cremating dead bodies of orphans or the poor) அடக்கம் செய்வது.

12. சுண்ணாம்பு tamilandvedas.com, swamiindology.blogspot.com

 (giving lime for betel-nut chewers) அளிப்பது.

13. நோயாளிகட்கு மருந்துகள் (Free distribution of medicines; setting up of hospitals for men and animals) கொடுத்து உதவுவது.

14. துணிவெளுக்கும் (Providing laundry service) தொழிலாளர் சேவை செய்து கொடுத்தல்

15. நாவிதர் (providing barber shops) சேவை செய்து கொடுத்தல்

16. காது குத்தி (Piercing ear for both boys and girls; also provide them ear studs) காதோலை/தோடு கொடுத்து உதவுவது.

17. மறைமொழி , தர்ம சாத்திரம் (Setting up schools to teach them Vedic Hymns and Morals ) கற்பித்தல்; பிள்ளைகளுக்கு கல்வி சாலைகள் அமைப்பது

18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது tamilandvedas.com, swamiindology.blogspot.com (helping children to take oil bath).

19. ஆலயம் கட்டல் (Building Temples)

20. பிறர் துன்பம் தீர்ப்பது.(Helping the downtrodden and the bereaved)

21. தண்ணீர்ப் பந்தல் வைத்து உதவுவது.(Setting up sheds for water distribution)

22. மடம் கட்டிச் சமய அ றி வை வளர்ப்பது (Setting up Mutts for religious teachings).

23. அறைதல் = சாலைகளை அமைத்துக் கொடுப்பது அல்லது  தமுக்கு முதலியன (Communication facilities) மூலம் செய்தி வழங்குவது. 

24. சோலைகளை உண்டாக்கி வைப்பது (Creating gardens and parks for general public).

25. பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள தூண்களை நிறுவுவது (Constructing pillars and water holes for animals; they come there to relieve their itching).

26. விலங்கினங்கட்கு உணவளிப்பது (Giving food to animals and birds; both domestic and wild). tamilandvedas.com, swamiindology.blogspot.com

27. வெற்றிலை பாக்கு (distributing betel-nuts) கொடுத்து உதவுவது.

28. விலை கொடுத்து (saving lives) உயிரைக் காப்பாற்றுதல்.

29. கன்னிகாதானம் செய்து கொடுத்தல். திருமணமாகாத ஏழை களுக்குத் திருமணம் (Helping boys and girls to get married; Free Matrimonial Service) செய்து வைப்பது.

30. குழந்தைகட்குப் (Provision of Free Milk to Children) பால் வழங்குதல்.

31. கண்ணாடி (distributing mirrors for women to help with their look) வழங்குதல்.

32. விலைமாதர் (setting up brothels for the amorous so that common women are not disturbed) சேவை நல்குதல் tamilandvedas.com,

swamiindology.blogspot.com

My Old Articles –

மணிமேகலை சிறை சேவை

அப்பூதி அடிகள்  தண்ணீர்ப் பந்தல்

மணிமேகலை | Tamil and Vedas

tamilandvedas.com › tag › மணிமேகலை

மணிமேகலை என்பது கடல் வணிகரின் பாதுகாப்புத் தெய்வம் ஆகும். இந்த … சிறைச் சாலையில் சமூக சேவை செய்து கைதிகளைத் திருத்தி …



சல்லியன் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › சல்லியன்

23 Mar 2013 – பெரியபுராணத்தில் வரும் அப்பூதி அடிகள் கதையும் மஹாபாரதத்தில் வரும் சல்லியன் கதையும் நாம் அறிந்ததே. அப்பர் என்னும் …

Tags- 32 வகை, தர்மங்கள், பட்டியல்,

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: