ONE MINUTE WISDOM ஞானம் பெறக் குட்டிக் கதைகள்! (Post .7682)


Written by S NAGARAJAN

Post No.7682

Date uploaded in London – 12 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

Tony de Mello அவர்கள் தொகுத்துள்ள ONE MINUTE WISDOM என்ற நூல் பல அழகிய குட்டிக் கதைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றையும் படிக்க ஒரு நிமிடம் தான் தேவை. தடதடவென்று அனைத்தையும் படித்து விடாமல் நின்று நிதானித்து அவ்வப்பொழுது ஒவ்வொன்றாகப் படிப்பதோடு படிப்பதை மனதில் நிறுத்தி சற்று சிந்தனை செய்து பாருங்கள் என்பது அவரது அறிவுரை.

அவருக்கு நமது நன்றியை உளமாரச் செலுத்தி விட்டு எடுத்துக்காட்டிற்காக ஒரு ஐந்து கதைகளை இங்கே பார்ப்போம்: (ஆங்கில மூலம் அவருடையது; தமிழாக்கம் என்னுடையது)

மதக் கொள்கை

கவர்னர் தனது பிஸியான ஷெட்யூலில் சிறிது நேரத்தை ஒதுக்கி குருவைக் காண வந்தார்.

அவர் குருவைப் பார்த்துச் சொன்னார்:

“குருவே! ராஜாங்க விஷயங்கள் ஏராளம் உள்ளன. அனைத்தையும் கவனிக்க வேண்டும். நேரமே இல்லை. தயவுசெய்து மதக் கொள்கையை ஓரிரு நிமிடங்களில் என்னைப் போன்ற பிஸியான ஆளுக்குச் சொல்லி விட முடியுமா?”

“மஹாராஜா! ஏன் முடியாது? ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறேன்.”

“ஆஹா! அற்புதம்!! அப்படிப்பட்ட ஒரே வார்த்தை என்ன? சீக்கிரம் சொல்லுங்கள்!”

“மௌனம்!”

“மௌனமா? அதை எப்படி அடைவது?”

“தியானம்”

“தியானம் என்றால் என்ன?”

“மௌனம்!”

குரு மௌனத்தில் ஆழ்ந்தார்!

RELIGION

The Governor on his travels stepped in to pay homage to the Master.

“Affairs of State leave me no time for lengthy dissertations,” he said. “Could you put the essence of religion into a paragraph or two for a busy man like me?”

“I shall put it into a single word for the benefit of Your Highness.” “Incredible! What is that unusual word?”


“Silence.”


“And what is the way to Silence?”

“Meditation.”


“And what, may I ask, is meditation?”

 “Silence.”

விழித்திரு

“நான் ஞானம் பெற வழியுண்டா?

“ஏன் இல்லை? சூரியன் உதயமாவதைப் போல ஞானமும் சீக்கிரமே உதயமாகச் செய்து விடலாமே!”

“அப்படியா?பின்னர் நீங்கள் ஏன் பல்வேறு பயிற்சிகளைச் சொல்லித் தருகிறீர்கள்?

“ஏனென்றால் சூரியன் உதயமாகும் போது நீ தூங்கி விடாமல் இருப்பதற்காக!”

VIGILANCE

“Is there anything I can do to make myself Enlightened?”

“As little as you can do to make the sun rise in the morning.”

“Then of what use are the spiritual exercises you prescribe?”

 “To make sure you are not asleep when the sun begins to rise.”

மாயை

“அகண்ட பிரம்மத்தை நான் எப்படி அறியலாம்?

“பிரம்மம் இப்போதே உள்ளது. நிகழ்காலத்திற்கு வா!

நான் நிகழ்காலத்தில் தானே இருக்கிறேன்!

“இல்லை!

“ஏன், இல்லை?

“ஏனெனில் நீ இறந்த காலத்தை இன்னும் மறக்கவில்லை!

“நான் ஏன் இறந்த காலத்தை மறக்க வேண்டும். இறந்த காலத்தில் இருப்பது அனைத்துமே மோசம் என்று சொல்லி விட முடியாதே!

இறந்த காலத்தில் இருப்பது மோசம் என்று கருதி அதை நான் விட்டு விடச் சொல்லவில்லை. அது இறந்தது என்பதால் அதை விட்டு விடச் சொன்னேன்!

ILLUSION

“How shall I attain Eternal Life?”


“Eternal Life is now. Come into the present.”


“But I am in the present now, am I not?”


“No.”


“Why not?”


“Because you haven’t dropped your past.”


“Why should I drop my past? Not all of it is bad.”


“The past is to be dropped not because it is bad but because it is dead.”

பேச்சு

பரபரப்புடன் ஓடி வந்த சிஷ்யன் சந்தையில் தான் கேட்ட விஷயத்தைக் குருவிடம் உடனே சொல்லி விடத் துடிதுடித்தான்.

அவனது பரபரப்பைக் கண்ட குரு அவனைத் தன்னிடம் அழைத்தார்.

“ஒரு நிமிடம் பொறு. நீ சொல்ல வரும் விஷயம் உண்மை என்று நிச்சயம் தெரியுமா?

“தெரியாது, குருவே!”

“நீ சொல்ல வருவது உபயோகமான விஷயம் தானா?”

“இல்லை, குருவே!”

“அது விசித்திரமானதா?”

“இல்லை,குருவே!”

“பின் அதை எதற்காக எல்லோரும் கேட்க வேண்டும்?”

சீடன் அமைதி அடைந்தான்.

SPEECH

The disciple couldn’t wait to tell the Master the rumour he had heard in the marketplace.

“Wait a minute,” said the Master, “What you plan to-tell us is it true?”

“I don’t think it is.”


“Is it useful?”


“No. it isn’t.”

“Is it funny?”


“No.”


“Then why should we be hearing it?”

குரு ஏன்?

“உனக்கு ஏன் ஒரு குரு வேண்டும்? – ஆசிரமத்திற்கு வந்தவர் அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவரிடம் கேட்டார்.

“தண்ணீரைச் சுட வைக்க வேண்டுமென்றால் அதற்கும்  தீக்கும் நடுவே ஒரு பாத்திரம் அவசியம் வேண்டும் இல்லையா? என்று வந்தது பதில்!

MEDIATION

“Why do you need a Master?” asked a visitor of one of the disciples.

“If water must be heated it needs a vessel as an intermediary between the fire and itself,” was the answer.

***

tags – one minute ,wisdom,ஞானம், குட்டிக் கதைகள், 

இது போன்ற பல குட்டிக் கதைகளைக் கொண்டுள்ள புத்தகம் One Minute Wisdom. புத்தகத்தை வாங்கலாம்; இணையதளத்திலும் படித்து மகிழலாம்.

t

Leave a comment

Leave a comment