MARTHANDA VARMA STORY மார்த்தாண்ட வர்மாவின் சாகஸம்!(Post No.7686)

MARTHANDA VARMA – WIKIPEDIA PICTURE

Written by S NAGARAJAN

Post No.7686

Date uploaded in London – 13 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

MARTHANDA VARMA  STORY டச்சுக்காரர்களைத் துரத்தி அடித்த மார்த்தாண்ட வர்மாவின் சாகஸம்!

ச.நாகராஜன்

உங்களுக்குக் கேரளாவின் சரித்திரத்தில் இந்தப் பகுதி பற்றித் தெரியுமா?

[28/09/19, 12:47]  ஜகதீஷ் மதன் : மார்த்தாண்ட வர்மா பற்றி பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும்!

உலக சரித்திரத்திலேயே, உலகின் மதிப்பு வாய்ந்த, ஆகப்பெரும் நிறுவனத்தை இந்தியாவில் ஒரு மலையாளி தரை மட்டமாக்கிய கதை தெரியுமா?

விஓசி எனப்படும் Vereenigde Oost-Indische Compagnie – டச்சு ஈஸ்ட் இந்தியா கம்பெனி, மிகுந்த நிதி வளத்தை உடைய, வணிக, இராணுவ, கடற்படை உள்ளிட்ட அனைத்து சக்தியும் கொண்ட ஒரு நிறுவனமாகத் திகழ்ந்தது.

1602ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் பதினேழாம் நூற்றாண்டு முழுவதும் மிளகு உள்ளிட்ட மசாலாப் பொருள்கள் விற்பதில் ஏகபோகமாக முதலிடத்தை வகித்து வந்தது. உண்மையில் இது தான் உலகின் முதல் மல்டி நேஷனல் கம்பெனி எனலாம்.

இன்றைய நாளில் வியாபாரம் அமோகமாக நடத்திக் காண்பிக்கும், நாம் வியக்கும், கூகிள் அல்லது ஆப்பிள் நிறுவனம் போல அன்றைய நாளில் அது திகழ்ந்தது. தொடர்ந்து 200 வருட காலம் சராசரியாக 18 சதவிகித டிவிடெண்டை – லாப பங்கைத் – தந்து வந்தது.

இன்றைய பணவீக்கத்தை சற்று சரிசெய்து மதிப்பிட்டுப் பார்த்தால் அது இன்றைய மதிப்பில் 7 டிரில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்டிருந்தது. உலகின் நிறுவனங்களில் மிகவும் அதிக மதிப்பு மிக்க ஒன்றாகத் திகழ்ந்தது.

டச்சுக்காரகள் தங்கள் செல்வத்தை இந்தியாவிலிருந்தே பெற்று வந்தனர். 18ஆம நூற்றாண்டில் டச் பொருளாதாரமும் அரசியல் அதிகாரமும் தென்னிந்தியாவில் கொடி கட்டிப் பறந்தது. டச்சுக்காரர்கள் போர்த்துக்கீசியரை அடித்துத் துரத்தினர். காளிகட்டில் இருந்த வலிமை வாய்ந்த ஜமோரின்கள் தோற்கடிக்கப்பட்டனர். வலிமை வாய்ந்த கொச்சி நாடே ட்ச்சு சின்னமான விஓசியைக் கொண்டு அடிமை நாடாக ஆகியிருந்தது.

இப்படிப்பட்ட டச்சு ஈஸ்ட் இந்தியா கம்பெனி இன்று கேரளத்தில் இல்லாததற்குக் காரணம் கேரளத்தில் உதித்த மகத்தான ஒரு இந்தியன்.

டச்சு ஆதிக்கம் வீழ்ந்ததற்கான காரணம் டச்சு கவர்னரான குஸ்டாப் வில்ஹெம் வான் இம்ஹாஃப் 1739இல் செய்த ஒரு மகத்தான தவறு தான்.

திருவாங்கூரை ஆண்ட மார்த்தாண்டவர்மருக்கும் கவர்னர் இம்ஹாஃபிற்கும் இடையே கொச்சியில் டச்சுக்காரர்கள் பங்கு பற்றி நடந்த பேச்சு வார்த்தையின் போது, கவர்னர் மார்த்தாண்டவர்மரை பயமுறுத்தும் தொனியில் டச்சுப் படைகள் திருவாங்கூர் மீது படையெடுத்து அதைப் பொடிப் பொடியாக்கி விடும் என்றார்.

இதற்கு உடனடியாக மார்த்தாண்ட வர்மர், “ மரியாதைக்குரிய ஐயா, அப்படியென்றால் நான் ஹாலந்து மீது படையெடுப்பேன்” என்று அதிரடி பதில் கொடுத்தார்.

இந்த பதிலால் மிகுந்த எரிச்சலைடைந்த கவர்னர் அங்கிருந்து வெளியேறினார்; இந்த உள்ளூர் அரசனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்று உறுதி பூண்டார்.

உடனடியாக, ஒரு பெரும் டச்சுப் படை கொளச்சலுக்கு விரைந்து வந்தது. அதைத் தலைமை தாங்கி நடத்தியவர் காப்டன் யூஸ்டாஸியஸ் டி லனாய் என்பவர். சீக்கிரமாக ஒரு அதிரடித் தாக்குதலை நடத்தி திருவாங்கூரின் தலைநகரான பத்மநாபபுரத்தைக் கைப்பற்றி விடலாம் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது.

1741ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி இரு படைகளும் கொளச்சல் போர்க்களத்தில் சந்தித்தன.

சிறிது நேரத்திலேயே டச்சுப் படை பயங்கரமான அடி வாங்கியது. அதனுடைய படை வீரர்களில் பெரும்பாலானோர் ஓடிப் போனார்கள். அவர்களுடய படைத்தலவர் லனாயும் அவரது துணைத்தலைவரும் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

மார்த்தாண்ட வர்மர் டச்சுக்காரர்களை ஒரு உடன்படிக்கைக்கு வரச் செய்தார். அதன்படி இந்தியாவில் மலபார் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான டச்சுக் கோட்டைகளை அவர் எடுத்துக் கொண்டார். இதனால் மசாலா பொருள் வர்த்தகத்தில் ஏகபோகமாக இருந்த டச்சின் ஆதிக்கம் ஒரு முடிவுக்கு வந்தது.

இதை விட பெரிய அதிசயம் என்னவெனில் மார்த்தாண்ட வர்மர் லனாயை தனது படையில் சேரச் செய்ததோடு அவரை ஒரு பயிற்சியாளராகவும் ஆக்கினார். தனது திருவாங்கூர் படையை அதி நவீனமாக்க அவரைப் பயன்படுத்தினார். அந்தப் படை தான் பின்னால் சுதந்திர இந்தியாவில் மதராஸ் ரெஜிமெண்ட் என்ற பெயரைப் பெற்றது. டச்சின் கருமிளகு வணிகத்தின் ஏகபோகம் திருவாங்கூர் மாகாணத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது; திருவாங்கூரில் செல்வம் கொழித்தது.

உங்களுக்கு ஆச்சரியமூட்டும் செய்தி ஒன்று உண்டு! மார்த்தாண்ட வர்மர் விஷ்ணு ஆலயமான பத்மநாபஸ்வாமி கோவிலை புனருத்தாரணம் செய்ததோடு வாழ்நாள் முழுவதும் வழக்கமாக காணிக்கையைச் செலுத்தி வந்தார்.

சமீப காலத்தில், சீலிடப்பட்ட 8 அறைகளில்  5 அறைகள் அதிகாரிகளால் திறக்கப்பட்ட போது அதில் இறைவனுக்கான நகைகளும், தங்கமும் பொக்கிஷமாகக் கிடைத்தன. அதன் மதிப்பு மட்டும் அமெரிக்க டாலரில் 220 கோடி டாலருக்கும் சற்று அதிகம் என்று மதிப்பிடப்பட்டது.

உலகில் பிரார்த்தனை செய்யும் ஸ்தலங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டால் அதில் அதிக செல்வ வளம் வாய்ந்த பணக்கார திருத்தலமாக இது இருப்பது தெரிய வந்தது. மீதி இருக்கும் அறைகளையும் திறந்தால் இங்குள்ள பொக்கிஷத்தின் மதிப்பு டிரில்லியன் டாலரையும் தாண்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியரான மார்த்தாண்ட வர்மர் இப்படிப்பட்ட அற்புதமான வரலாற்றை உலக சரித்திரத்தில் கொண்டிருக்கும் போது, இந்திய வரலாற்றாசிரியர்கள் அவரது சாதனைகளை முக்கியமானதாகக் கருதவில்லை என்பதோடு அதை பள்ளிப்பாடப் புத்தகங்களில் இடம் பெறக் கூடச் செய்யவில்லை என்பது, ஐயோ, எவ்வளவு வருத்தமூட்டும் ஒரு விஷயம்!

நன்றி : – கல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் இதழான ட்ரூத் இதழுக்கு நமது நன்றியை இங்கு பதிவு செய்கிறோம்.

Thanks :  Truth Weekly Vol 87 Issue 29 dated 15-11-2019

***

MARTHANDA VARMA

இதன் ஆங்கில மூலம் இதோ:-

While Marthanda Varma, an Indian, had his life moment in world history– the Indian Historians didn’t think of his achievements as important enough to even deserve a mention in our school textbook

How Marthand Varma vanquished the Dutch : 

Did you know this part of the history of Kerala? 

[28/09/19, 12:47] Jagdish Madan Col: Marthanda Varma must be taught in schools. 

It happened when the biggest and the most valuable company in the history of the world was brought down (among other things) by a Malayali from India. 

There was a moment in history when the Vereenigde Oost-Indische Compagnie (VOC) or simply the Dutch East India Company was the most well funded and powerful business, military and naval force in the world. 

Established in 1602, it had a virtual monopoly of the global spice trade for most of the 17th century and was the first truly multinational corporation in history. 

It had a great run and was the Apple or Google of its day– only more successful, profitable– paying on average, an 18% dividend for almost 200 years. 

Adjusted to inflation, it had the market capitalisation of over 7 Trillion Dollars (in today’s money)– making it perhaps the most valuable company in the history of companies.

The Dutch made most of their money from India– by the early 18th century, the Dutch economic and political power in southern India was at its peak. The Dutch had thrown the Portuguese out, defeated the Mighty Zamorins of Calicut and even turned the powerful kingdom of Kochi into a Vassal State where the crown even bore the Dutch emblem of VOC. 

The Dutch East India Company is dead today  – in large parts, thanks to this Indian from  Kerala.

Among the many mistakes that ultimately lead to their downfall, perhaps the biggest was committed by Dutch Governor Gustaaf Willem Van Imhoff in 1739.

During the ensuing negotiations between Governor Imhoff and Marthanda Varma, the ruler of Travancore, regarding the Dutch interests in Kochi, when Governor Imhoff threatened Marthanda Varma, that his forces will rake Travancore down to dust. 

In his reply– Varma quipped : With all due respect to you sir, then I will invade Holland. 

Obviously miffed, the Governor of the Mighty Dutch empire walked off from the meeting, determined to teach this local king of a small Indian kingdom a lesson

Soon, a large contingent of Dutch artillery forces landed in Colachel, led by Captain Eustachius De Lannoy. Their intention was to make a quick dash and capture the capital of Travancore– Padmanabhapuram. 

On the 10th of August, 1741, both Armies met in the now famous Battle of Colachel.

Within no time, the Dutch faced a crushing and decisive defeat– most of their soldiers fled and their commander, Eustace De Lannoy was captured along with his deputy.

Marthanda Varma made the Dutch sign a peace treaty, taking over most of the Dutch forts in the Malabar region of India and bringing to an end, the Dutch monopoly in the Spice Trade with India. 

What’s more, Marthanda Varma even made Eustachius De Lannoy join his forces as a trainer and used him to modernise the Army of Travancore– which later became the Madras Regiment of Independent India. 

The Dutch Black Pepper trade monopoly was taken over by the State of Travancore– which made them rich. 

In case you wonder how rich– Marthanda Varma re-consecrated an old Temple of Lord Padmanabhaswamy (Lord Vishnu) and regularly donated to it in his lifetime. 

Recently, 5 of the 8 sealed chamber vaults of this temple were opened by the authorities – which yielded a smallish treasure in Gold and Jewels, estimated to be worth a little over USD 22 Billion (making it the richest institution and place of worship in the world). Experts believe that the remaining sealed vaults hold treasures worth a Trillion dollars. 

While Marthanda Varma, an Indian, had his life moment in world history– the Indian Historians didn’t think of his achievements as important enough to even deserve a mention in our school textbooks. 

*****************

Thanks :  Truth Weekly Vol 87 Issue 29 dated 15-11-2019

 TAGS –  டச்சுக்காரர்,மார்த்தாண்ட வர்மா, MARTHANDA VARMA, Dutch

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: