சந்தோஷத்தை தரும் எட்டு விஷயங்கள் (Post No.7695)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7695

Date uploaded in London – – 15 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

புண்ணியம், விஷயங்கள், சந்தோஷம்

சுபாஷித செல்வம்

புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் 13 நல்ல விஷயங்களும் சந்தோஷத்தை தரும் எட்டு விஷயங்களும்!

ச.நாகராஜன்

சந்தோஷத்தை தரும் எட்டு விஷயங்கள்!

தானம் க்ஷமா த்ருதி: ப்ரக்ஞா சந்தோஷோ  வாக்நிஷ்டூரா |

ஹ்ரீரஹிம்ஸாவ்யஸநிதா ஸ்நானம் சேதி சுகாவஹா: ||

தானம், பொறுமை, உறுதி, நுண்ணறிவு, சந்தோஷம், இனிய வார்த்தை, குழப்பமின்மை, காயமின்மை, ஸ்நானம் ஆகிய இந்த எட்டும் சந்தோஷத்தைத் தருபவை.

Gift, patience, fortitude, intelligence, happiness, soft words, no embarrassment, abstinence from injury and bath produce pleasure. (Translation by Dr N.P.Unni)

*

புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் 13 நல்ல விஷயங்கள்!

மானுஷ்யம் வரவம்சஜன்ம விபவோ தீர்காயுராரோக்யதா

சன்மித்ரம் சசுதா சதி ப்ரியதமா பக்திஸ்ச நாராயணே |

வித்வத்வம் சஜனத்வமிந்த்ரியஜய: சத்பாத்ரதானே ரதி:

தே புண்யேன பினா த்ரயோதஷ குணா: சம்சாரீணாம் துர்லபா: ||

மனிதப் பிறவி, நல்ல குடும்பத்தில் பிறப்பு, திறமை, தீர்க்காயுள், ஆரோக்யம், நல்ல நண்பன், பிரியமான மனைவி, நல்ல குழந்தைகள், நாராயணன் மீது பக்தி, வித்வத்வம் (பண்டித அறிவு), பிரபுத்வம், இந்திரிய ஜயம், தேவையுள்ள, நல்லோருக்கு தானம் அளித்தல் இந்த பதிமூன்று அரிதான நல்லவையும்  சம்சாரிகளில் புண்யம் செய்தோருக்கும் மட்டுமே கிடைக்கும்.

Those thirteen merits are rare among the people in their worldly life unless they posses exceptional luck; and these are (enumerated as)

Humanity, noble birth, ability, longevity, health, good friend, wife of nobility, worthy children, devotion to God Narayana, learning, nobility, control of sense organs and tendency of giving donation to worthy people. (Translation by Dr N.P.Unni)

*

நிபுணராக ஐந்து தேவைகள்!

தேஷாடனம் பண்டிதமித்ரதா ச வாராங்கனாராஜசபாப்ரவேஷ: |

சாஸ்த்ராணி சைவாத்ர விலோகிதானி சாதுர்யமூலானி பவந்தி பஞ்ச ||

நிபுணராகத் திகழ இந்த ஐந்தும் தேவை:  பல இடங்களுக்கும் செல்லல், பண்டிதரின் நட்பு, அரசவையில் உள்ளோரிடம் தொடர்பு, அரசர்கள் உள்ள சபையில் பிரவேசம்,  சாஸ்திரங்களில் தேர்ச்சி

Five things requires one’s expertise viz., visiting of places, keeping friendship with the learned, the engagement with the courtesan, the entrance to the assembly of kings and deliberations in scientific matters. (Translation by Dr N.P.Unni)

*

சித்திகள் உருவாகும் விதங்கள்!

ஜன்மோஷதி மந்த்ர தப: சமாதிஜா: சித்தய: |

பிறப்பு, மூலிகைகள், மந்த்ரம், தவம், சமாதி ஆகிய இந்த ஐந்தின் மூலமாக சித்திகள் சித்திக்கும்.

Siddhi – Supernatural power arises out of

Janma – Birth, Aushadhi – Herbs, Mantra – Mantra, Tapah – Penance, Samadhi – Absorption.

*

அரசனின் அரண்மனையில் இடைவிடாது ஒலிக்கும் ஐந்து ஒலிகள்!

பஞ்ச சப்தா ந ஜீர்யந்தே கட்வாங்கஸ்ய நிவேஷனே |

ஸ்வாத்யாயகோஷோ ஜ்யாகோஷோ பிபதாஸ்நீத காதத ||

ஒரு அரசனின் அரண்மனையில் இடைவிடாது ஒலிக்கும் ஐந்து ஒலிகளாவன :  வேத கோஷம், வில் நாணிலிருந்து எழும் சப்தம், குடி, துய்த்து அனுபவி, சாப்பிடு ஆகிய வார்த்தைகள்!

tags– புண்ணியம், விஷயங்கள், சந்தோஷம்

*****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: