உத்வேகமூட்டும் இயற்கை ஆர்வலர்கள்! (Post No7768)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7768

Date uploaded in London – – 1 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில் ஐந்தாவது உரை

(5-3-2020 அன்று ஒலிபரப்பானது)

உத்வேகமூட்டும் இயற்கை ஆர்வலர்கள்!

ச.நாகராஜன்

இயற்கைச் சூழலை மாசில்லாது பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி உலகெங்கும் மேம்பட இயற்கை ஆர்வலர்கள் உத்வேகமூட்டும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.

சாமானியனிலிருந்து ஹாலிவுட் பிரபலங்கள் வரை இதில் முனைப்புடன் ஈடுபடுவது வரவேற்கப்பட வேண்டிய செய்தியாகும்.

உலகின் பிரசித்தி பெற்ற நடிகரான லியனார்டோ டிகாப்ரியோ (Leonardo Dicaprio) 50 லட்சம் டாலர் தந்து அமேஸான் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை வலியுறுத்தியுள்ளார்.

அமேஸான் காடுகளில் இயற்கையாகவும் சிலசமயம் செயற்கையாகவும் ஏற்படும் தீ விபத்து பல்லுயிர் பெருக்கத்திற்குப் பெரும் ஊறு விளைவித்திருக்கிறது.

இதே போல இம்பாலின் மேற்கே உள்ள காடுகள் அழிந்து வரும் நிலையைக் கண்ட 45 வயதான மொய்ரங்தெம் லொய்யா (Moirangghem Loiya)   மருலாங்கோல் மலைத் தொடர் பகுதிகளில் (Maru Longol hill range) தனது இளம் பருவத்தில் குழந்தையாக இருக்கும் போது அடிக்கடி செல்வது வழக்கம்.

தனது கல்லூரிப்படிப்பை முடித்த நிலையில் 2000ஆம் ஆண்டில் அங்கு சென்ற போது அந்தப் பகுதி முற்றிலுமாக எரிக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு திடுக்குற்றார்; வேதனை கொண்டார். உடனே அந்தப் பகுதியில் இழந்த பசுமையை மீட்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மரங்களை நட ஆரம்பித்தார். கடந்த 19 வருடங்களாக இடைவிடாது அவர் நட்டு வந்த மரங்கள் 300 ஏக்கர் காட்டை உருவாக்கி இழந்த பசுமையை மீட்டிருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்பின் 51-A (g) பிரிவானது ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இயற்கையைப் பாதுகாப்பதை கடமையாகக் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்துவதோடு விலங்குகளின் மீது இரக்கத்துடன் நடந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்கிறது.

லொய்யாவின் தன்னலமற்ற பணியால் உள்ளூர் மக்களும் உற்சாகத்துடன் அவருடன் இணைந்து இயற்கைப் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசும் லொய்யாவின் பணியை வரவேற்று ஊக்குவிக்கிறது.

250 வகையான தாவரங்கள் அங்கு வளர்கின்றன; இவற்றில் 25 வகையான மூங்கில் இருப்பது ஒரு சிறப்பு அம்சமாக இலங்குகிறது. அத்துடன் ஏராளமான பாம்பு வகைகளும், விலங்கினங்களும் பறவைகளும் இப்பகுதியில் பயமின்றி வாழ்ந்து வருகின்றன.

பெருந்திரளான மக்கள் இந்த இயற்கைப் பசுமையைப் பார்த்துப் பரவசப்பட்டு தம் தம் அளவில் இயற்கைப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். இதே போல நமது பகுதியில் உத்வேகமூட்டும் முன்மாதிரியாக நாம் திகழ்வோம் என ஒவ்வொருவரும் முன் வந்தால் பசுமை இந்தியா அமையும், இல்லையா?!

Script by S.Nagarajan (ச.நாகராஜன்)


tags – மொய்ரங்தெம் லொய்யா, இயற்கை ஆர்வலர், சுற்றுப்புறச்சூழல், விழிப்புணர்வு

Leave a comment

2 Comments

  1. இந்தப் பதிவிற்கு மிகவும் நன்றி. லொய்யாவைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்படுவதில்லை. நமது பத்திரிகைகளும் இத்தகைய சாதனையாளர்களைப் பற்றி அதிகம் அ அடிக்கடி எழுதுவதில்லை.

    மேலை நாடுகளில் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் இயற்கை அழிப்பு செயல்களை படித்த வர்கத்தினர் புரிந்துகொண்டு விட்டனர். அங்கும் அரசியல் வாதிகள் இயற்கைக்கு எதிரான செயல்களில்தான் ஈடுபடுகின்றனர். இதற்கு இன்றைய சிறந்த உதாரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆனால் மக்களிடம் விழிப்புணர்ச்சி இருப்பதால் அவருக்கு ஓரளவு லகான் போட்டே வைத்திருக்கிறார்கள். அங்குள்ள பிரபலங்களும் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் இயற்கைக்கு ஆதரவாகவே நடந்துகொள்கிறார்கள். காடுகள் இயற்கைச் சூழ்நிலைகள் பாதுகாப்பு, விலங்குகளின் நலன், இயற்கை (ரசாயனக் கலப்பில்லாத ) விவசாயம், விளைபொருள்கள் என பலவிதத்திலும் உண்மையான ஈடுபாடுகொண்டிருக்கிறார்கள்.

    இந்தியாவில் இதற்கு நேர்மாறான நிலைதான் இருக்கிறது. அரசியல் வாதிகள் முழு மூடர்களாக இருக்கிறார்கள். அல்லது அயோக்யர்களாக இருக்கிறார்கள். காடுகளின் வழியாக சாலை, ரயில் தடம் அமைப்பது, ஏரிகளை ஆக்ரமித்து குடியிருப்பு அமைப்பது, மலையைத் தகர்ப்பது, சாலைவிரிவுபடுத்தல் என்ற பெயரில் லக்ஷக்கான மரங்களை வெட்டுவது போன்ற ‘வளர்ச்சி’ செயல்களில் முமுமூச்சாக ஈடுபடுகிறாகள். இப்போது மஹாராஷ்டிர அரசு மும்பை ஆரோகாலனியில் இருக்கும் இயற்கைக் காடுகளை அழிக்க மும்முரமாக இருக்கிறது. மேலை கடற்கரைச் சாலை என்று ஒரு திட்டம்- மலை காடு எல்லாம் அழியும். கர்னாடகா அரசியல் வாதிகள் இங்கு காடுகளைச் சுரண்ட கேரளா பகுதியிலிருந்து கன்ட்ராக்டர்களை ஊக்குவிக்கிறார்கள்.
    இந்த நிலையில் மோடி அரசு 100 விமான நிலையங்களை அமைக்கப்போகிறதாம். ஒரு நிலையத்திற்கு 500 முதல் 1000 ஏக்கர்வரை நிலம் தேவைப்படும், ஆக, எத்தனை ஆயிரம், லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் அபேஸ் ஆகும்! ஹைவே, ஆறு-எட்டு வழிச்சாலை என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்கள் சொல்லிமாளாது. பெங்களூரில் இருந்த பாதி மரங்கள் காலி. கிருஷ்ணகிரி- புதுச்சேரி 4வழி ஹைவே என்ற பெயரில் இங்கிருந்த 19,000 மரங்கள் ( முக்காலும் 100 வருஷத்திற்கு மேற்பட்ட பெரிய புளிய மரங்கள்) வெட்டப்பட்டன. [ இது அதிகார பூர்வமான எண். உண்மையில் எவ்வளவு மரங்கள் மறைந்தனவோ, யாருக்குத் தெரியும்?] பொதுவாகவே டோல் ரோடு என்ற பெயரில் நடந்த கூத்தில் அங்கங்கிருந்த லட்சக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுவிட்டன. அந்த இடத்தில் பதிலுக்கு பெரிய, பயனுள்ள மரம் எதுவும் நடப்படவில்லை.

    70களில் சிப்கோ மூலம் சுந்தர்லால் பஹுகுணா ஹிமாலயப் பிரதேச காடுகளின் முக்கியத்துவம் பற்றி நாடே அறியும் வகையில் ஒரு இயக்கம் நடத்தினார். டேஹ்ரி அணை கூடாது எனப் போராடினார். இறுதியில் அரசியல்வாதிகள்- கன்ட்ராக்டர்கள்- ஊழல் லாபிகள் கூட்டணியே வென்றது.
    லொய்யா-எத்தனை லொய்யாக்கள் மெய்யாலும் நமக்குத்தேவை!

  2. Santhanam Nagarajan

     /  April 1, 2020

    thanks for your additional information. A powerful indpendent board is necessary to safeguard the environment. The politicians won’t worry about the long term benefits.
    awareness is essential.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: