சங்க இலக்கியத்தில் தருமபுத்திரன் யார்? பெரிய புதிர் ! ( Post No.7790 )

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7790

Date uploaded in London – 56April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் 18 சங்க நூல்களில் மிகவும் முக்கியமானது புறநானூறு . 400 பாடல்களும் தமிழர் என்சைக்ளோபீடியா ஆகும். இதில் நிறைய புலவர்களின் பெயர்கள் வால்மீகி , பிரம்மா, தாமோதரன், நாகன், பேரிசாத்தன், கபிலர், பரணர், கௌதமன், விஷ்ணுதாசன், உத்திரா , சித்திரன், மஹாதேவன்/ பெருந்தேவன், தீர்க்க தத்தன். நெடுந்தத்தன், நாகராஜன் என்று சம்ஸ்கிருதப் பெயர்கள். மற்ற 17 நூல்களுக்குப் போனால் இதைவிட அதிகம், நிற்க. tamilandvedas.com, swamiindology.blogspot.com

புறனானூற்றுப் பாடல்களில் 366 ஆவது  பாடல் இது.

பாடியவர் கோதமனார் . கௌதமன் என்ற சம்ஸ்கிருதப் பெயரின் தமிழ் வடிவம் .

பாடப்பட்டவர் – தருமபுத்திரன் ; இது சம்ஸ்கிருதப் பெயர் என்பதைச் சொல்ல தேவை இல்லை.

யார் இந்த தரும புத்திரன் ?

மஹா பாரதத்தில் தர்மத்தின் சின்னமாக விளங்கியவர் யுதிஷ்டிரன். தமிழர்கள் பெரும்பாலும் தர்மர், தருமபுத்திரன் என்ற பெயரையே பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பயன்படுத்துவர்.

இவர் அவர்தானா?  , அவர் இவர்தானா ?

‘ஆமாம் இவர்  அவரே தான்!’ என்கின்றனர் உரைகாரர்கள். இந்தப் பாட்டில் வேறு சில சுவையான விஷயங்களும் வருகின்றன.

கௌதம சித்தார்த்த புத்தருக்கு தர்மராஜன் என்ற பெயர் உண்டு.

எனினும் புலவர்,  தருமபுத்திரனை tamilandvedas.com, swamiindology.blogspot.com

“அறவோன் மகனே, மறவோர் செம்மால்” என்று அழைக்கிறார்.

அறவோன் மகன் = தரும புத்திரன்

சம்ஸ்கிருதப் பெயரின் அழகான தமிழ் மொழிபெயர்ப்பு.

பாடலின் கடைசி வரியில் வரும் சம்ஸ்கிருத சொல் ‘மாயம்’. இது பாடல் 363-லும் வருகிறது

கடைசி வரி – “மடங்கல் உண்மை மாயமோ அன்றே”.

இதோ பாட்டின் முழுப்பொருள்-

பெரிய முரசங்களை அடித்து ஆணைகள் பிறப்பித்த அரசர்கள் கூட புகழ் உடம்பை விட்டு விட்டு  இறந்து போயினர் .ஆகையால் தரும புத்திரனே! வீரர்களுக்குத் தலைவனே! நான் சொல்லுவதைக் கேட்பாயாக.

உன் வலிமையை மற்றவர் அறியாமல் வாழ் (அதாவது எளியோர் இடத்தில் வேண்டுமென்றே உன் பலத்தைக் காட்டாதே) .

பிறர் கூறியவற்றின் உட்கருத்தை அறிந்து செயல்படு. (அதாவது மன்னர் என்ற பயத்தால் சிலர் open ஓபன் ஆக பேசாமல் ஹின்ட் Hint மட்டுமே தருவார்கள். உட்கருத்தை அறிக).

பகல் நேரம் முழுதும் மக்களுக்குத் தேவையானதைக் கொடு .

இரவு தூங்கப் போவதற்கு முன்னர் அறிஞர் கருத்துக்களைக் கேட்டுவிட்டு மறு நாள் பற்றி ஒரு Plan பிளான்./ திட்டம் போடு.

காலையில் எழுந்தவுடன் orders ஆர்ட்டர்கள் போடு.

(இது அர்த்த சாஸ்திரத்தில் மன்னர்களுக்கு சாணக்கியன் கொடுத்த அறிவுரை). tamilandvedas.com, swamiindology.blogspot.com

காலை முழுதும் நிலத்தை உழுத எருது வந்து, களைப்பு நீங்க வைக்கோலை சாப்பிடுவது போல நீயும் சாப்பிட்டுவிட்டு  சிவந்த கண்களை உடைய மகளிர் தரும் ஒயின் (wine) கொஞசம் குடி .

சாப்பிடுவோருக்கு, சூட்டுக்கோலில் பார்பிக்யூ (Barbecue)  செய்து அந்த இறைச்சியைக்  கொடு ; நீயும் சாப்பிடு ;

புழுக்களை சாப்பிடுவோருக்கு அவைகளையும் சமைத்து இலைகளில் தா.

(இவை தெய்வங்களுக்கு வெட்டிக் கொடுக்கும் ஆட்டு இறைச்சி போன்றது என்ற உவமையையும் கௌதமன் பயன்படுத்துகிறார்).

நீயும் பலி ஆடுகளை போல சாவது உறுதி; பொய்யல்ல.

இந்தக் கடைசி Point பாயிண்ட்- ஐ அவர் சொல்கையில் விவரமாக வருணிக்கிறார்.  ஆற்றங்கரையில் உள்ள சோலைகளில் மணல் பரப்பிய வெறியாட்டக்   களங்கள் உள்ளன. அதைப் பார். இனிமேல் நிற்க இடமே இல்லை என்ற அளவுக்கு பலி ஆடுகள் நிற்கின்றன. அவைகள் கள பலி ஆவது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீ இறக்கப் போவதும்”. (பாடலையும் இணைத்துள்ளேன்; காண்க)

என் கருத்து

இந்த தரும புத்திரன் கேரள மன்னன் ஒருவனாக இருக்கலாம் என்று அவ்வை துரைசாமி உரை கூறும். அசோகர் கல்வெட்டில் கேரள புத்திரர் என்று சேர மன்னர்கள் குறிப்பிடப்படுவதால் அவர் இப்படி ஊகிக்கிறார் . புறநானுற்றின் இரண்டாம் பாடலில் பாண்டவர்க்கும் கௌரவர்களுக்கும் சேர மன்னர்கள் உணவு அளித்ததாக குறிப்பு வருகிறது.  அது சேரமான் பெருஞ்சோற்று’ உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் (மிஸ்டர் நாகராஜன்) பாடியது. ‘ய’ வும் ‘ஜ’ வும் இடம் மாறும் என்பதை உலக மொழிகளில் காணலாம் ஜீஸஸ் – ஏசு , ஜூட – யூத , ஜாமம் – யாமம், ராய – ராஜ ) J= Y ஆனால் இதிலுள்ள பெருஞ்சோறு என்பது ஆண்டுதோறும் பாரதப் போரில் இறந்தவர் நினைவாகப் போடப்படும் அன்னதானம்- வைக்கத் து அஷ்டமி அன்று போடப்படுவது போல ஒன்று என்று நான் ஏற்கனவே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். ஆட்டுக்கால் பொங்கலன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைப்பதை இன்றும் காண்கிறோம். அது போல ஊர் தோறும் சாஸ்தா ப்ரிதி நடத்தி அன்னதானம் செய்வதை இன்றும் கேரளத்தில் பார்க்கிறோம். இது மலையாள தேசத்தில் உள்ள வழக்கம் . ஆக பெருஞ்சோறு என்பது ஞாபகார்த்த சாப்பாடு . அது போல இங்கும் தரும புத்திரன் என்பது பாரதப் போர் ‘யுதிஷ்டிரன்’ ஆக இருக்க முடியாது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

க்ஷத்ரியர்கள் மாமிச உணவு உண்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அசோகன் கூட இனி அரண்மனை மடப்பள்ளியில் வெட்டப்படும் மிருகங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று சொன்னானே தவிர நான்  இனிமேல் ‘வெஜிட்டேரியன்’ என்று சொல்ல வில்லை . இங்கு புழு உணவு, ஆட்டுக்கிடாய் பார்பிக்யூ (சுட்டுக் கோலில் வாட்டும் மாமிசத் துண்டு) ஆகியன வருகிறது. பெண்கள் கலசங்களில் ஏந்திவரும் wine ஒயின்/கள் பற்றி வருகிறது. இந்தக் காட்சிகள் மஹா பாரதத்தில் இல்லை. ஆக இது local லோக்கல் தருமபுத்திரனே  அன்றி ஒரிஜினல் தரும புத்திரன்/ யுதிஷ்டிரன் அல்ல என்பது என் கருத்து..

பாடலில் அருமையான மேற்கோள்கள் உள . அவையாவன :-

“அரவு (snake) எறி  உருமின் (thunder)  உரறுபு  சிலைப்ப” = இடிகேட்ட நாகம் போல

xxx

“அறவோன் மகனே! மறவோர் செம்மால்!”

xxx

“நின் ஊற்றம் (strength) பிறர் அறியாது

பிறர் கூறிய மொழி தெரியா”

xxx

ஞாயிற்று எல்லை (day time) ஆள்வினைக்கு உதவி இரவின் எல்லை (night time ) வருவது நாடி , உரை (pass orders)

xxx

“மடங்கல் (folding/death)  உண்மை மாயமோ (not an illusion but reality) அன்றே / பாடல் 363-லும் உளது

இறைச்சி (Meat/barbecue) உணவு பற்றிய குறிப்புகள் பழைய உரைகாரர் சொல்வது ஆகும்

Tags – தருமபுத்திரன், புறனானூறு, பாடல் 366, கோதமனார்

Xxxxx subhamxxxx

Leave a comment

1 Comment

  1. இங்கு “புழு உணவு” என்பது சுவையான முக்கிய தகவல். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் புழுக்களை உணவாக உண்டார் என்பது அவரைப்பற்றிய முக்கியமான 10 உண்மைகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: