வீணைக்குள் கத்தியை மறைத்து வைத்து படுகொலை (Post No.7803)

tamilandvedas.com, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7803

Date uploaded in London – 9 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

11 அதிசய வரலாற்று நிகழ்ச்சிகள்

பாண பட்டன் என்ற சம்ஸ்கிருதப் புலவன் மாமன்னன் ஹர்ஷவர்தனன் பற்றி ஒரு புஸ்தகம் எழுதினான். அதன் பெயர் ஹர்ஷ சரிதம். அதில் மன்னருக்கு ஆறுதல் கூறும் முகத்தான் பல வினோத மரணங்களையும் இந்தியாவில் நடந்த அரசியல் படுகொலைகளையும் பட்டியல் போட்டுக் காட்டுகிறார் புலவர்.

நம் கண்களுக்கு முன்னாலேயே இரண்டு அரசியல் படுகொலைகள் இந்தியாவில் நடந்தன. பிரதம மந்திரி இந்திராகாந்தியை, ‘வேலியே பயிரை மேய்ந்தது’ என்ற கதையாக அவருடைய மெய்க்காவலர்களே — இரண்டு சீக்கியர்கள்- சுட்டுக் கொன்றனர்.

விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் பயங்கரவாதி இந்திராவின் மகனை –ராஜிவ் காந்தியை — வெடிகுண்டு வைத்துச் சிதறடித்தாள்.

பெரிய புராணத்திலும் பல வன்முறைச் சம்பவங்களைப் படிக்கிறோம். முத்தநாதன் என்பவன் ‘மனத்தினுள் கருப்பு வைத்து’, விபூதிப் பைக்குள் வாளை வைத்து ,மன்னர் பெருமானை குத்திக் கொன்றான்.

வேதகாலத்தில் வேனன் என்ற மன்னன் அட்டூழியம் செய்தான். மக்களும் ரிஷிகளும் அவனை அடித்துக் கொன்றனர். அவர் பெயரோடு சுமுகன் முதலிய துஷ்ட மன்னர் பெயர்களையும் மநு நீதி நூல்  பட்டியல் இடுகிறது. ஆனால் சுமேரியாவில் மட்டும்தான் அந்த சுமுகன் பெயர் இருக்கிறது! tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜேம்ஸ் பாண்ட் (007 James Bond) படங்களில் பாண்ட் – ஜக் கொல்ல வில்லன்கள் பல முறைகளைக் கையாளுவதையும் பாண்ட் அவர்களை லாவகமாகக் கொல்லுவதையும் பார்க்கிறோம் . சங்க இலக்கியத்தில் மல்லர் கள் , குறு நில மன்னர்கள் மல்யுத்தத்தில் எதிரியின் உடலைக்  கை வேறு, கால் வேறாகப்  பிய்த்தெறிந்த பாடல்களைப்  படிக்கிறோம்

இது போல பல சம்பவங்களை பாணபட்டன் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருக்கிறார். இதோ அந்தப் பட்டியல் :–

1.“மன்னனே ! கவனக் குறைவால் நடந்த அழிவுகள் பற்றி உனக்கு அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றனவே. பத்மாவதியில் நாக வம்ச மன்னர் நாகசேனன் அழிந்ததை சாரிகா பறவை சொன்னதை நீ அறியாயோ.

2.ஸ்ரவஸ்த்தி நகரில் ச்ருதவர்மன் என்ற மன்னரின் ரகசியத்தை ஒரு கிளி கேட்டதால்  அவன் அழிந்தான்; தெரியாதா ?

(இதை நிரூபிக்கும் ஒரு விஷயம் பிரிட்டனிலும் நடந்தது. கள்ளக்காதலி பெயரைக் கிளி கத்திக் கத்திச் சொன்னதால் கணவனை மனைவி கையும் களவுமாகப் பிடித்த செய்தி வந்தது. அதை நான் இந்த பிளாக்கில் கட்டுரையாகத் தந்துள்ளேன்.)

3.மிருத்திகவாதியில் ஒரு அதிகாரி தூ க்கத்தில் உளறியதால் ஸ்வர்ண சூடன் இறந்தானே ; மறந்துவிட்டாயா? tamilandvedas.com, swamiindology.blogspot.com

4.ஒரு யவன ராஜா எப்படி அழிந்தார்? அவர் படித்த கடிதம் கிரீடத்திலுள்ள ரத்தினத்தில் பிரதி பலிக்க, சாமரம் வீசியவள்  அவனை அழிக்கவில்லையா ?

(இதை நாம் ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் காண்கிறோம். கண்ணாடியில் பிரதிபலிக்கும் உருவத்தைப் பார்த்து பாண்ட் அல்லது வில்லன் மின்னல் வேகத்தில் செயல்படுவதை பார்க்கிறோம்.)

5.நள்ளிரவில் பேராசை பிடித்த மதுரா மன்னன் பிருஹத் ரதன் புதையல் எடுக்க குழி பறித்தான். அப்போது விதுரதனின் படைகள் அவன் தலையைச்  சீவின .

6.வத்சபதி என்ற மன்னன் யானைக் காட்டில் (Elephant Forest) உல்லாசப் பயணம் போனான் . அப்போது எதிரி மன்னன் மஹாசேனன் எப்படி அவனைக் கைப்பற்றினான்? யானை போன்ற ஒரு பொம்மையின் வயிற்றிலிருந்து குதித்த வீரர்கள் அவனைக் கைது செய்தார்களே !

(இது மிகவும் புகழ் பெற்ற உத்தி. ஹோமரின் காவியத்தில் வரும் ட்ரோஜன் ஹார்ஸ் TROJAN HORSE பற்றி இலக்கியம் படித்த அனைவரும் அறிவர். ஒரு பொம்மைக் குதிரையின் அடியிலிருந்து சிப்பாய்கள் குதித்த வரலாறு அது. சம்ஸ்கிருத நாடகங்களிலும் இந்த உத்தி கையாளப்படுகிறது. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வீரர்கள் செடி கொடிகளை மேலே போட்டுக்கொண்டு (camouflage)  காட்டு மரங்கள் போல நின்று தாக்குவதை படிக்கிறோம். tamilandvedas.com, swamiindology.blogspot.com

7.அக்கினிமித்ரனின் மகனான சுமித்ரனுக்கு நாடகம் என்றால் உயிர். அவன் அடிக்கடி நாடகத்துக்கு வருவதை அறிந்த எதிரிகள் நாடக நடிகர் வேட ததில் வந்து அவன் தலையை சோளக்கருது வெட்டுவது போல வெட்டவில்லையா?

8.அஸ்மாக நாட்டு மன்னன் ஒரு இசைப்பிரியன்.எதிரிகள் இசைவாணர்கள் போல வந்து வீணை வாசிப்பது போல வாசிக்கையில் வீணைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரபனைக் குத்திக் கொன்றார்களே.

9.மௌர்ய மன்னன் பிருஹத்ரதனை புஷ்ய மித்ரன் எப்படிக் கொன்றான்? ராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது அவனைத் தாக்கிக் கொன்றனனே

10.காக வர்ணன் என்ற மன்னன் மாய மந்திர , இந்திர ஜாலத்தில் நம்பிக்கை உடையவன். அவனுக்கு வேடிக்கை காட்டுவதாகச் சொல்லி, ஒரு யவனர் அவனை விமான பொம்மையில் வைத்துப் பறந்து சென்றானே. பின்னர் அவன் முடிவே தெரியவில்லையே!

11.பட்டப்பகலில் நகரத்தின் நடுத்தெருவில்  சிசுநாகன் மகனை வெட்டிக் கொல்ல வில்லையா ?

இப்படிப் பட்டியல் போட்டு மன்னரை அறிவுறுத்துவது போல ஒரு காட்சி . tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதில் யவனர் பற்றிச்  சொல்லப்படும் விஷயங்கள் உண்மையில் நடந்தவை என்பதை வேறு குறிப்புகளில் இருந்தும் அறிய முடிகிறது. ஆதி சங்கரர் கூட தன்னுடைய பாஷ்யங்களில் இரண்டு யவனர் சம்பவங்களை எடுத்துக் காட்டுகிறார்.

சிசுபாலனை கிருஷ்ண பரமாத்மா பட்டப் பகலில் அஸெம்பிளியில் எல்லோர் முன்னிலையிலும் வெட்டிக் கொன்றார். இது போல கம்சன் , சாணுரன் ஆகியோரும் அழிந்தனர்.

நமது காலத்திலேயே விமானங்களும் கப்பல்களும் பயணிகளுடன் மாயமாய் மறைகின்றன. வெளி உலகவாசிகள் கடத்துகின்றனர், அல்லது இன்ஷ்யூரன்ஸ் பணம் பெற இப்படிச் செய்கின்றனர், அல்லது அதிலுள்ள ரகசியம் அறிந்த சிலரைத் தீர்த்துக் கட்டுவதற்காக எல்லாப் பயணிகளையும் கூண்டோடு  கைலாசத்துக்கு அனுப்புகின்றனர் என்று பல தியரிக்கள் Theories உண்டு.

xxx

வரலாற்றுப் படுகொலைகள்

அமெரிக்காவில் பல ஜனாதிபதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இது போல 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலும் நடந்தது; மன்னர்களை வெட்டிக்கொன்றனர் tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுங்க வம்சத்தின் கடைசி மன்னன் தேவபூதி ஒழுக்கமற்றவன்; திறமையற்றவன்; இதனால் அவனது அமைச்சர் வாசுதேவன் ஒரு திட்டம் போட்டார். ஒரு அடிமைப் பெண்ணை மஹாராணி போல உடை அணிவிவித்து  படுக்கை அறையிலேயே மன்னரைக் கொன்றார். இதையடுத்து வாசுதேவன் தன்னை மன்னர் என்று பிரகடனம் செய்தார் . இது நட தந்தது 2100 ஆண்டுகளுக்கு முன்பு. வாசுதேவன் (72 BCE) கண்வ வம்ச ஆட்சியைத் துவக்கினார்.

மௌர்ய வாசத்தின் கடைசி மன்னனும் திறமையற்றவன். அவன் படைகளைப் பார்வையிட வந்தபோது அவனைப் படைத்த தலைவனான  புஷ்ய மித்ர சுங்கன் (187 BCE ) வெட்டிக் கொன்றார். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் இது நடந்தது. அதிலிருந்து சுங்க வம்ச ஆட்சி துவங்கியது.

அரசியல் என்பது படுகொலைகள், மர்மங்கள் நிறைந்த துறை!

இவைகளில் சொல்லப்பட்ட யவனர் சம்பந்தமான சில சம்பவங்களை வேறு சில நூல்களும் குறிப்பிடுவதால் ஏனைய சம்பவங்களும் உண்மையாக இருக்கக்கூடும். ஆகையால் இவை பற்றி மேலும் ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் வெளிப்படும்.  1400 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நூலில் இருப்பதால் எல்லாம் மிகவும் பழைய சம்பவங்கள் என்பதும் புலப்படும்.

Tags — ஹர்ஷ சரிதம், பாண பட்டன், படுகொலை,  வீணை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: