ஹிந்தி படப் பாடல்கள் – 4 – காலம் என்னும் புதிர்! (Post No.7816)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7816

Date uploaded in London – – 12 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 4 – காலம் என்னும் புதிர்!

R . Nanjappa

காலம் என்னும் புதிர்!

“ஆதி அந்தமில்லாத காலவெள்ளம்“-இது கற்றறிந்த  நம்மவர்களுக்கு நன்கு அத்துபடியான ஒரு சொற்றொடர். ஆம், கல்கியின் அமர நாவல்பொன்னியின் செல்வன்” இப்படித்தானே ஆரம்பமாகிறது! இதைப் படிக்காத ‘படித்தவர்கள்‘  இருப்பார்களா?

ஆனாலும் காலத்தின் இயல்பை எவரும் சரியாக உணர்வதில்லை. அதுவும் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வந்தாலும் வந்தார், அவர் Relativity கொள்கையைக் கொண்டுவந்து, விஞ்ஞான உலகத்தையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டார். காலத்தைப் பற்றி அவர் சொன்ன கருத்தை  விஞ்ஞானிகளாலேயே  எளிதில் விளக்க முடியவில்லை!

மெய்ஞ்ஞானிகள் மிகுந்த  நம் நாட்டில் காலத்தைப் பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை!   நாம் காலத்தின் பிடியில் இருக்கிறோம், அதை நாம் வெற்றி கொள்ளலாம் என்பது மெய்ஞானிகளின் துணிபு.

காலம் சுழல்கிறதுஇதை காலச் சக்கரம் என்கிறோம்.பகவான் போல் இதுவும் அனாதிதொடக்கமும் முடிவும் அற்றது. இதன் இயல்பை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.ஆனால் இதை ‘வெல்லஎன்ன செய்ய வேண்டும் என்று ஞானிகள் சொல்கிறார்கள்.

காலம் க்ஷணம் க்ஷணமாகக் கழிகிறது. நாம் மணி, நிமிஷம், நாள் என்றெல்லாம் கணக்குப் போடுகிறோம். ஆனால் போன க்ஷணம் திரும்பி வருவதில்லை! நாராயணீயத்தில் பட்டத்திரி ஒரு அருமையான ஸ்லோகம் செய்திருக்கிறார்:

குரூரமான காலச்சக்கரம்

 दुर्वारं द्वादशारं त्रिशतपरिमिलत्षष्टिपर्वाभिवीतं
सम्भ्राम्यत् क्रूरवेगं क्षणमनु जगदाच्छिद्य सन्धावमानम् 
चक्रं ते कालरूपं व्यथयतु  तु मां त्वत्पदैकावलम्बं
विष्णो कारुण्यसिन्धो पवनपुरपते पाहि सर्वामयौघात् ११

துர்வாரம் த்வாதஸாரம் த்ரிஸத பரிமிலத் ஷஷ்டி பர்வாபிவீதம்

ஸம்ப்ராம்யத் க்ரூர வேகம் க்ஷணமனு ஜகதாச்சித்ய  ஸந்தாவமானம்

சக்ரம்தே கால ரூபம் வ்யதயது நதுமாம் தவத்பதாகாவலம்பம்

விஷ்ணோ காருண்ய ஸிந்தோ  பவனபுரபதே பாஹி ஸர்வாமயௌகாத். 98.11

விஷ்ணுவான ஹே குருவாயூரப்பா! தங்களுடைய காலச் சக்கரம் எவராலும் தடுத்து நிறுத்த முடியாதது. பன்னிரண்டு மாதங்களாகிய பன்னிரண்டு ஆரக்கால்கள் கொண்டது. முன்னூற்றறுபது நாட்களாகிய முனைகளைக் கொண்டது. நிறுத்த இயலாத தீவிர வேகத்துடன் சுழல்வது. ஒவ்வொரு க்ஷணத்திலும் உலகை வலியப் பிடித்து இழுத்துக்கொண்டு விரைந்து ஓடுவது. அப்படிப்பட்ட காலச்சக்கரம் தங்கள் திருவடிகளையே பற்றிக்கொண்டிருக்குமென்னைத் துன்புறுத்தாமல் இருக்கட்டும். கருணைக் கடலே! அனைத்து நோயகளிலிருந்தும் என்னைக் காத்தருள வேண்டுகிறேன்.

விஞ்ஞானிகளைவிட நம் ஞானபக்தர்கள் எப்படிக் காலத்தை  எளிதாக, மனதில் பதியும்படி வருணிக்கிறார்கள் பாருங்கள்! மாதம், வருடம், யுகம் என்றெல்லாம் கணக்குப் போட்டாலும் காலத்தின் அடிப்படை க்ஷணம் தான்! இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

கிழமைகள், வாரங்கள், மாதங்கள், ருதுக்கள், அயனங்கள் என்று எல்லாம் சுழன்றுவருகின்றன. ஆனால் போனது எதுவும் திரும்பி வருவதில்லை! எல்லாம் புதிதுபுதிதுதான்! இதை ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் பாடுகிறார்:

 दिनयामिन्यौ सायं प्रातः

शिशिरवसन्तौ पुनरायातः
कालः क्रीडति गच्छत्यायु
स्तदपि मुञ्चत्याशावायुः  

தினயாமின்யௌ சாயம் ப்ராத:

ஸிஸிர வஸன்தௌ புனர் ஆயாத:

கால:க்ரீடதி கச்சத் ஆயு:

ததனபி முஞ்சத் ஆஸாவாயு:

பகல் இரவு, மாலைகாலை, குளிர்காலம் வசந்த காலம்இப்படி திரும்ப வந்துகொண்டே இருக்கின்றன. [ஆனால், நடப்பது என்ன?] காலம் விளையாடுகிறதுநமது ஆயுள் குறைந்துகொண்டே வருகிறது. [ இதைப் புரிந்துகொள்வதில்லை] அதனால், ஆசையின் பிடியிலிருந்து விடுபடுவதில்லை

காலத்தின் இந்த இயல்பைப் புரிந்துகொண்ட நம் பெரியோர்கள் அதன் விளைவாக யாக்கை நிலையாது, இளமை நிலையாது, செல்வம் நிலையாது  என்று வற்புறுத்திச் சொன்னார்கள். இதெல்லாம் இருக்கும்போதே நாம் உய்வுக்கு வழிதேடவேண்டும் என்றார்கள். இதையும் சங்கரர் சொன்னார்:

मा कुरु धनजनयौवनगर्वं
हरति निमेषात्कालः सर्वम्  

மாகுரு தன ஜன யௌவன கர்வம்

ஹர்தி நிமேஷாத் கால: ஸர்வம்.

 அப்பனேஉன் செல்வம், உன் ஆள் பலம், இளமை இவற்றை நினைத்து கர்வமடையாதே. காலம் இவை யனைத்தையும் ஒரு நொடியில் அழித்துவிடும்.

இக்கருத்துக்கள் ஏதோ உயர் மட்டத்தோடு நின்றுவிடவில்லை. நமது பக்தர்களூம் சாதுக்களும் ஊர் ஊராகச் சென்று இக்கருத்துக்களை மக்களிடையே பரப்பினர். பொழுது போக்கு அம்சமே நிறைந்த சினிமாவிலும் இக்கருத்துக்களை  நம் கவிகள்  பாடியிருக்கின்றனர்.

1953ல் வந்த AAH  என்ற படத்திற்கு சைலேந்த்ரா எழுதிய ஒரு பாடலின் முதல் இரு அடிகள்:

छोटी सी ये ज़िन्दगानी रे

चार  दिन  की  ज़वानी  तेरी,

சோடீஸி யே ஃஜிந்தகானீ  ரே

சார் தின் கீ ஜவானீ தேரீ

இந்தப்படம் தமிழில் டப் செய்யப்பட்டுஅவன்என்ற பெயரில் வந்தது. இந்தவரிகளை அருமைக் கவிஞர் கம்பதாசன் இப்படி எழுதினார்:

மின்னல் போலாகுமிந்த வாழ்க்கையே 

வானவில் போலுமே இளமை

இதில் ஒரு சுவாரஸ்மான விஷயம் இருக்கிறது. மின்னல் போல என்ற கருத்து எங்கிருந்து வந்திருக்கும்?

நம் அருணகிரி நாதர் இதே வார்தையைச் சொல்கிறார்:

அல்லின் நேருமின் அதுதானும் அல்லதாகிய உடல் மாயை“. 

நம் உடல் இரவில் தோன்றும் மின்னைலைப் போல் அழியக்கூடியது என்கிறார்நம் திரைக் கவிஞர் இந்த உவமையைப் பிடித்துக்கொள்கிறார். இப்படித்தான் நம் நாட்டில் சினிமா மூலமாகவும் சீரிய கருத்துக்கள் மக்களைச் சென்றடைகின்றன! இந்திய மரபு நிலைக்கிறது.

 Song: Chhotisi ye zindagani Film: AAH 1953

Lyricist: Shailendra Music: Shankar Jaikishan Singer: Mukesh

தமிழில் படம்: அவன் . பாடல்: கம்பதாசன் பாடகர்: ஏ.எம்.ராஜா

அடிமேல் அடிவைத்துக் கழியும் வாழ்க்கை!

1954ல் வந்த BOOT POLISH படத்தில் ஸரஸ்வதி குமார்தீபக்கீழ்வரும் பாடலை எழுதினார்:

raat gayi phir din aata hai
issi tarah aate jaate hi
ye saara jeewan jaata hai
itna bada safar duniya ka
ik rota ik muskaata hai
ik rota ik muskaata hai
ha aa aa aa aa
kadam kadam rakhta hi raahi
kitni door chala jaata hai
ek ek tinke tinke se ae ae
ek ek tinke tinke se ae
panchhi ka ghar ban jaata hai
 

ராத் கயீ ஃபிர் தின் ஆதாஹை

இஸீ தரஹ் ஆதேஜாதே ஹீ

யே ஸாரா ஜீவன் ஜாதாஹை

இத்னா படா ஸாஃபர் துனியா கா

இக் ரோதா இக் முஸ்காதாஹை

கதம் கதம் ரக்தாஹீ ராஹீ

கித்னீ தூர் சலா ஜாதா ஹை!

ஏக் ஏக் டின்கே டின்கே ஸே

பஞ்சீ கா கர் பன் ஜாதா ஹை

இரவு கழிந்து, பின்  பகல் வருகிறது

இப்படி வருவதும் போவதுமாகவே

வாழ்க்கை முழுவதும் கழிந்துவிடுகிறது!

இந்த நீண்ட வாழ்க்கைப் பயணத்தில்

ஒருவன் அழுகிறான், ஒருவன் முறுவலிக்கிறான்

ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்தே

அப்பஎவ்வளவு தூரம் சென்றுவிடுகிறான்!

ஒவ்வொரு சிறு குச்சியைப் பொறுக்கித்தானே

பறவையின் கூடு கட்டிமுடிந்து வீடுகிறது!

Song: Raat gayi  Film: BOOT POLISH  1954 Lyrics: Saraswati Kumar Deepak

MUsic: Shankar Jakikishan  Singers: Manna Dey & Asha Bhonsle

 இதே கருத்தை இதற்கு 20 ஆண்டுகளுக்குப் பின் வந்த ஒரு படத்திலும் ஒரு பாட்டில் காணலாம்.

ज़िंदगी के सफ़र में गुज़र जाते हैं जो मकाम
वो फिर नहीं आते, वो फिर नहीं आते  

ஃஜிந்தகீ கே ஸஃபர் மே குஜர் ஜாதே ஹை(ன்) ஜோ மகாம்

வோ ஃபிர் நஹீ ஆதே, ஃபிர் நஹீ ஆதே

வாழ்க்கைப் பயணத்தில் எந்த இடத்தைக் கடந்து போகிறோமோ

அது திரும்பி வருவதில்லை, திரும்பி வருவதில்லை!

सुबह आती है, शाम जाती है
सुबह आती है, शाम जाती है यूँही
वक़्त चलता ही रहता है रुकता नहीं
एक पल में ये आगे निकल जाता है
आदमी ठीक से देख पाता नहीं
और परदे पे मंज़र बदल जाता है
एक बार चले जाते हैं जो दिनरात सुबहशाम
वो फिर नहीं आते, वो फिर नहीं आते
ज़िन्दगी के सफ़र में  

ஸுபஹ் ஆதீஹை ஷாம் ஜாதீ ஹை,

வக்த் சல்தாஹீ ரஹதாஹை ருக்தா நஹீ

ஏக் பல் மே ஆகே நிகல் ஜாதா ஹை

ஆத்மீ டீக் ஸே தேக் பாதா நஹீ

ஔர் பர்தே மே மஞ்ஃஜர் பதல் ஜாதா ஹை

ஏக் பார்  சலே ஜாதே ஹை வோ தின்ராத், சுபஹ்ஷாம்

வோ ஃபிர் நஹீ ஆதே, வோ ஃபிர் நஹீ ஆதே

ஃஜிந்தகீ கே ஸஃபர் மே……..

காலை வருகிறது, மாலை மறைந்து போகிறது

காலம் சென்றுகொண்டே இருக்கிறதுநிற்பதில்லை!

ஒரு க்ஷணத்தில் இது நகர்ந்து மேலே போய்விடுகிறது!

மனிதன் இதைச் சரரியாகக் காண்பதில்லை (புரிந்துகொள்வதில்லை)

மேலும் திரையில் காட்சி மாறிவிடுகிறது!

ஒரு முறை கழிந்து போன  அந்த பகல்இரவு, காலையும் மாலையும்

அவை திரும்பி வருவதில்லை, அவை திரும்பி வருவதில்லை!

வாழ்க்கையில் நாம் ஒருமுறை கடந்து விட்ட  இடங்கள் திரும்பி வருவதில்லை!

Song: Zindagi ke safar mein Film: Aap KI Kasam 1974 Lyricist: Anand Bakshi

Music: R.D.Burman Singer: KIshore Kumar. Fantastic song.

****

 ( இந்த விஷயத்தை மேலும் பார்ப்போம்)

ஹிந்தி படப் பாடல்கள் – 4 , காலம்,  BOOT POLISH, AAH

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: