பிராணிகளும் தவம் செய்து சொர்க்கத்துக்குப் போகின்றன-மனு (Post No.7822)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7822

Date uploaded in London – 13 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மநு நீதி நூல் – பகுதி 50

பிராணிகளும் தவம் செய்து சொர்க்கத்துக்குப் போகின்றன-மனு (Post No.7822)

மநு நீதி நூலின் 11ஆவது அத்தியாயத்தின் கடைசி பகுதியைக் காண்போம். இது போக, இன்னும் ஒரே ஒரு அத்தியாயம் பாக்கி இருக்கிறது. அந்த 12 ஆவது அத்தியாயத்தைப் பின்னர் காண்போம். இதோ 11 ஆவது அத்தியாயத்தின் முக்கிய விஷயங்கள் – in bullet points –புல்லட் பாயிண்டுகளில் —

  1. பிராணிகளும் தவம் செய்து (11-241) அல்லது நியம நிஷ்டைகளைக் கடைபிடித்து சொர்க்கத்துக்குப் போகின்றன என்ற செய்தியை மநு இங்கே தெரிவிக்கிறார். இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டில், பல கோவில்கள் பறவைகள், மிருகங்களுடன் தொடர்புடையவை. அங்கே அவற்றுக்கான சிலைகளும் வாகனங்களும் உள்ளன.
  2. 2.பிராமணர்களும் மற்றவர்களும் பாவங்களைக் கழுவ, ஐந்து வழிகள் உள ; அவையாவன
  3. 1.முதல் வழி / பிரயச்சித்தம்— பகிரங்கமாக அவற்றைச் சபையில் ஒப்புக்கொள்ள வேண்டும். மீண்டும் அவற்றைச் செய்யக்கூடாது ; கிறிஸ்தவர்களும் பாவ மன்னிப்பு விஷயத்தை நம்மிடம் கற்றுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு மறைவான கூண்டுக்குள் ஒளிந்து (Confession Box) கொண்டு பாதிரியார் காதில் மட்டும் கிசுகிசுப்பர். அவர் பணத்தை வாங்கிக் கொண்டு  போய்விட்டு வா என்பார் . ஆனால் இந்துக்கள் அதை ஓபன் (open) ஆக ஒப்புக்கொண்டு வாழ்நாள் முழுதும் அவமானத்தில் ஒதுங்கி வாழ்வர்
  4. 2.காயத்ரி மூலமும் (11-195, 11-226) , ரிக்வேத மந்திரங்கள் மூலமும் (11-250 to 11-260) பிராயச்சித்தம் செய்வது. இதற்கான  நீண்ட மந்திர பட்டியல் உள்ளது. கீழே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன் . பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) , ஓம் உச்சரித்தல், ஹோமங்கள் ஆகியனவும் சடங்குகளில் அடக்கம் — இது தவிர வேறு சில சடங்குகளையும் கொடுத்துள்ளார். அவை இப்போது பின்பற்றப்படுவதில்லை . பல பிராமணர்களுக்கு உரைகாரர்கள் எழுதியதை படித்தல்தான் அவை என்ன என்பதே தெரியும்; புரியும்
  5. 3. உண்ணாவிரதம் — இதுதான் எல்லோரும் எளிதில் பின்பற்றக்கூடியது. இதிலும் கூட எத்தனை நாள் எத்தனை கவளம் உண்ணலாம் என்றெல்லாம் மநு  பகிர்கிறார். ஒரே நாளில் ஆறுமுறை குளிக்க வேண்டும் என்று கூட சொல்கிறார் .
  • 4.தக்ஷிணை – வேறு வழியே தெரியாதவர்கள் தான தருமங்கள், தக்ஷிணை  கொடுத்து பாவங்களில் இருந்து தப்பிக்கலாம். பணக்காரர்கள் இதை எளிதில் செய்ய முடியும். ஆகையால் இதை கடைசியில் வைக்கிறார் மநு.
  • 5.செய்த பாவச் செயலுக்காக வருந்துதல்; இப்படி வருந்துவோர், கட்டாயம் இரண்டாவது முறை பாவம் செய்ய மாட்டார்கள் என்பது கருத்து
  • பசுவின் மூத்திரம், சாணம், பால் , நெய் ,தயிர் ஆகிய  ஐந்தும் அடங்கிய பஞ்ச கவ்யத்தை இந்துக்கள் மிகச் சிறிய அளவில்  புனித சடங்குகளுக்கு முன்னர் சாப்பிட்டு சுத்தம் அடைவர். இதையும் மநு குறிப்பிடுகிறார்.
  • 11-266 ஸ்லோகத்துடன் பதினோராவது அத்யாயம் நிறைவடைகிறது .

ரிக் வேத மந்திர பட்டியல்:–

RV.1-97, 7-80, 10-85, 8-95-7, 10-88, 10-126, 10-119, 10-90, 1-24-14, 7-89-5, 9-58, 6-74-1, 4-2-4, 1-106-7, 6-51-8, 10-190. Sloka 11-263 refers to Upansihads.

Tags — மநு நீதி நூல் – பகுதி 50, பிராணிகள், பிராயச்சித்தம் , ஐந்து வழிகள் , பாவ மன்னிப்பு ,

SUBHAM

Leave a comment

1 Comment

  1. விலங்குகளும் ஸ்வர்கம் செல்லலாம் என்பது பழைய செய்தி மட்டும் இல்லை. விலங்குகளுக்கு கர்மம் இல்லை. அதனால் இந்த ஜன்மம் கழிந்ததும் அவை விலங்குகளாகப் பிறக்கா. வேறு மேல் பிறவிதான்!.
    பகவான் ரமணர் விலங்குகளையும் மனிதன் போலவே தான் , அவன், அவள் என்று அழைப்பாரே தவிற, அது என்று சொல்லமாட்டார். சொர்கம் என்ன, அவர் கையால் மோக்ஷமடைந்த விலங்குகாளும் உண்டு, இவற்றில் முக்கிய மானது லக்ஷ்மீ என்ற பசு. இதன் கடைசி நாளில், கோசாலைக்குச் சென்று அதனுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு, அதை தொட்டுத் தடவிக்கொடுத்துவிட்டு வந்தார். அவர் தாயாருக்கோ காலை முதல் இரவு வரை பக்கத்திலேயே அமர்ந்து தன் கைகளை அவர் தலையிலும் மார்பிலும் வைத்திருந்தார்! ‘லக்ஷ்மீக்கு என்ன கர்மம் இருந்தது? என்று சொன்னார். லக்ஷ்மி சமாதியடைந்ததும் அதன் மீது ஒரு வெண்பா எழுதினார்:
    சருவதாரிப் பேர்கொள் சம்வச்சரத்து
    வருமானி யைந்துசனா வாரம்-மருவுமுற்
    பக்கத் துவாதசி விசாகம் பசுவாமி
    லக்குமிவி முக்த நாளாம்.
    “விமுக்த நாள்” என்று எழுதினார். அன்பர் தேவராஜ முதலியார் இது உபசார வழக்காகச் சொன்னது தானே எனக் கேட்டார். அதற்கு பகவான், ‘அல்ல, அது நிஜமாகவே முக்தி அடைந்தது’ என்று சொன்னார்!

Leave a comment