சாஸ்திர ஞானம் இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வா? (Post No.7829)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7829

Date uploaded in London – – 15 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சாஸ்திர ஞானம் இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வா? அது சரி, தலையெழுத்து….?

ச.நாகராஜன்

‘கிம்’ என்று தொடங்கும் சுபாஷிதங்கள் சம்ஸ்கிருதத்தில் ஏராளம் உள்ளன. இந்த வார்த்தையில் தொடங்கி, சாஸ்திரங்களைப் படித்து அறிவை அடையாதவன் வாழ்வும் ஒரு வாழ்வா என்று கேட்கும் சுபாஷிதங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

ஆனால் என்ன படித்து என்ன பிரயோஜனம், தலையில் எழுதிய எழுத்து சரியாக அல்லவா இருக்க வேண்டும் என்று ஒருவர் கூறுகிறார், அதுவும் சரிதான்.

படிக்காதவன் மதிக்கப்படுகிறான். சாஸ்திரம் அறிந்தவன் மதிக்கப்படுவதில்லை. ஏன்? தலையெழுத்து தானே?!

சுபாஷிதங்களைப் பார்ப்போம்.

கிம் குலேன ந சேத் ப்ராஞோ வித்யாஹீனாத் பசுர்வர: |

ப்ரஸஸ்யதே வித்யா லோகே ஸ்வயம் ப்ராஞோ நர: க்வசித் ||

நல்ல குலத்தில் பிறந்து கல்வியறிவு (வித்யா) இல்லாவிடில் என்ன பிரயோஜனம்? அறிவில்லாதவனை விட ஒரு விலங்கே உயர்ந்தது. அறிவு இந்த உலகத்தில் புகழப்படுகிறது. (அறிவில்லாமல்) ஸ்வயமாகவே நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதனை எங்கு காண முடியும்?

Of what avail is noble birth if there is no knowledge? An animal is better than an ignorant man. Knowledge is praised in this world. Where can one find a man who is intelligent on his own (but bereft of knowledge).  (Translation bu S. Bhaskaran Nair)

*

கிம் குலேன விசாலேன கிம் ரூபேன பவிஷ்யதி |

நானாசாஸ்த்ர குணான்வித: குரூபேண ஹி ஷோபதே ||

நல்ல குலத்தில் பிறந்து என்ன? நல்ல அழகு இருந்தால் தான் என்ன? எல்லா சாஸ்திரங்களிளும் தேர்ச்சி பெற்றவன் அழகற்றவானாக இருந்தாலும் கூட பிரகாசிக்கிறான்.

Of what avail is noble birth? Of what avail is handsomeness? A wise (man) well versed in the different sastra-s shines, indeed, even if he is plain in appearance.

(Translation by S. Bhaskaran Nair)

*

கிம் குலேன விசாலேன குணவான் பூஜ்யதே நர: |

தனுவம்சவிசுத்தோபி  நிர்குண: கிம் கரிஷ்யதி ||

இந்த சுபாஷிதத்தில் வரும் குண என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.

குண என்றால் நல்ல குணங்கள் என்று ஒரு பொருள்;  குண என்ற சொல் வில்லின் நாணையும் குறிக்கும்.

நல்ல குலத்தில் பிறந்து என்ன? நல்ல குணங்களை உடையவனே பூஜிக்கப்படுகிறான். நல்ல மூங்கிலில் வில் செய்யப்பட்டாலும் கூட, நாண் பூட்டப்படாவிட்டால் என்ன பயன்?

Of what avail is noble birth? Only the man with good qualities (guna-s) is honoured. What can a bow, though made out of high quality bamboo do, if it is not fitted with the bow-string (guna).    (Translation by K.V. Sarma)

*

கிம் குலேன விசாலேன வித்யாஹீனஸ்ய தேஹின: |

அகுலோனோபி சாஸ்த்ரஞோ தைவதைரைபி பூஜ்யதே ||

வித்யா ஹீனனாக இருக்கும் ஒருவன் நல்ல குலத்தில் பிறந்து என்ன பிரயோஜனம்? நல்ல குலத்தில் பிறக்காவிட்டாலும் கூட வித்யா வல்லவனாக இருந்தால் அவனை தேவதைகளும் பூஜிக்கும்.

Of what avail is high birth to a man who is destitute of  knowledge? One well read in the sastra-s though not of noble birth, is revered even by the gods.

*

சாஸ்திர ஞானம் உள்ளவனை – வித்யா எனப்படும் கல்வியறிவில் தேர்ந்தவனை – உலகம் எப்படிப் பாராட்டும் என்று மேலே உள்ள சுபாஷிதங்கள் விளக்குகின்றன. ஆனால் இப்படி நல்ல சாஸ்திர ஞானமுள்ள பண்டிதர்கள் பிரகாசிக்காமல் இருப்பதையும் அன்றாட வாழ்வில் பார்க்கத்தானே செய்கிறோம். அவர்கள் தலையெழுத்தும் சரியாக இருக்க வேண்டும் இல்லையா? இதை வலியுறுத்துகிறது இந்த சுபாஷிதம்:

கிம் சாஸ்த்ரைர்பஹுதாப்யஸ்தை: கிம் சாதுர்யேன கிம் தியா |

கிம் சௌர்யேணாநிவார்யேண லலாடே சேன்ன லிக்யதே ||

பல்வேறு சாஸ்திரங்களை தொடர்ந்து படித்து என்ன பயன்? நல்ல சாதுர்யம், அறிவு எல்லாம் இருந்தும் என்ன பயன்? ஒப்பற்ற வீரம் இருந்தும் என்ன பயன்? நெற்றியில் (தலையெழுத்தில்) வெற்றி எழுதப்படாவிடில் இவை அனைத்தும் இருந்தும் என்ன பயன் – ஒரு பயனுமில்லை!

What for is one’s constant study of the various discipline of knowledge and what use are one’s dexterity, intelligence and unimpeded valor, if success is not inscribed on one’s forehead (by destiny).    (Translation by S. Bhaskaran Nair)

tags — சுபாஷிதங்கள் ,சாஸ்திர ஞானம், வாழ்வு, ‘கிம்’,

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: