மஹரிஷி ஜாபாலி! -Part 1(Post No.7838)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7838

Date uploaded in London – – 17 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி ஜாபாலி பற்றிய மூன்று கட்டுரைகளில் இது முதல் கட்டுரை!

மஹரிஷி ஜாபாலி! -1

ச.நாகராஜன்

ஜாபாலி என்ற பெயரில் நான்கு மஹரிஷிகள் இருப்பதை புராண, இதிஹாஸங்களில் காண்கிறோம்.

நாம் இங்கு ராமாயண காலத்து மஹரிஷியான ஜாபாலி குறித்து மட்டும் பார்ப்போம்.

தசரதரின் அரசவையில் எட்டு ரிஷிகள் இருந்ததாக வால்மீகி ராமாயணம் பால காண்டம் 48ஆம் ஸர்கத்தில் காண்கிறோம். சுயக்ஞர், வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், வசிஷ்டர் போன்றோர் தசரதரின் அரண்மனையில் வசித்து வந்து அவருக்கு ஆலோசனைகள் கூறி வந்தனர்.

பரதன் ராமரை மீண்டும அயோத்திக்கு வருமாறு வேண்டிக் கொள்ள ஆரண்யம் சென்ற போது ஜாபாலியும் பரதனுடன் கூட வே சென்றார்.

அங்கு அவர் ராமரிடம் மீண்டும் அயோத்தி வருவதற்காகப் பல காரணங்களைக் கூறினார். இவையனைத்தும் ராமருக்கும் கோபத்தை உண்டு பண்ணின. ஒரு மஹரிஷியிடம் ராமர் கோபம் கொண்டது இந்த ஒரு தடவை தான் என்பதைப் பார்த்து வியக்க முடிகிறது.

ஏன் ராமர் கோபம் கொண்டார் எனில் ஜாபாலி ராமரிடம் கொண்ட அளவு கடந்த அன்பால் நாத்திக வாதம் பேச ஆரம்பித்தார்.

அதையெல்லாம் செவி மடுத்த ராமர் அஸத்தியத்தைப் பேசும் அவரது ஒரு வார்த்தையைக் கூடத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.

அது மட்டுமல்ல,

“விஷமபுத்தியைக் கொண்ட உம்மை எனது தந்தையார்  தமது சேவையில் சேர்த்துக் கொண்டார் என குற்றம் சாட்டுகிறேன். இப்படிப்பட்ட தவறுதலான வழிகாட்டும் புத்தியால் உண்மையை விட்டு விலகும் நாஸ்திகத்தில் நீர் வீழ்ந்து விட்டீர்” என்று கடுமையான வார்த்தைகளையும் ராமர் கூறுகிறார்.

“நிந்தாம்யஹம் கர்ம பிது: கர்தும் த

த்யஸ்த்வாமாஹ்ரிநாத்ய விஷமஸ்த புத்திம்

புத்தயாநயைர்ஏவம் வித்யயா சரந்தம்

சுநாஸ்தீகம் தர்மர்பயாதபேதம் ||

निन्दाम्यहं कर्म पितुः कृतं त |
द्यस्त्वामगृह्णाद्विषमस्थबुद्धिम् |
बुद्ध्यानयैवंविधया चरन्तं |
सुनास्तिकं धर्मपथादपेतम् || २-१०९-३३

33. aham = I; nindaami = accuse; tat = that; karma = act; kR^itam = done; pituH = by my father; tvam aagR^ihNaat = in taking you into his service; yaH = you; viSamastha buddhim = with your misleading intelligence; charantam = moving; evam vidhayaa = with this type; buddhyaa = of intelligence; sunaastikam = a firm atheist; apetam = fallen; dharma pathaat = from the true path.

“I accuse the act done by my father in taking you into his service, you with your misleading intelligence, a firm atheist fallen from the true path.”

இப்படி ராமரைக் கோபமுறை வைத்த அவர் பேசிய நாத்திக வாதம் என்ன என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

ஜாபாலி பற்றி மஹாபாரதம், அநுசாஸன பர்வத்தில் நான்காம் அத்தியாயத்தில் 55வது ஸ்லோகத்தில் ,”அவர் விஸ்வாமித்திரரின் புதல்வர்களில் ஒருவர்” என குறிப்பிடுகிறது.

ஆனால் அவர் வசிஷ்டரிடம் சிஷ்யராக இருந்து பாடம் கேட்டார். (வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் இடையே உள்ள போட்டி, பகையை நினைத்தால் இது சற்று ஆச்சரியமாகத் தான் இருக்கும்!)

வியாஸர் வேதத்தை நான்காக வகுத்து அதர்வண வேதத்தை சுமந்துவுக்குக் கற்பித்தார். சுமந்து தனது சிஷ்யர் கபந்தருக்குக் கற்பிக்க, அவர் அதை இரண்டு பகுதிகளாக்கி  தமது இரண்டு சிஷ்யர்களான தேவதர்ஸருக்கும் பத்யருக்கும் கற்பித்தார்.

தேவதர்ஸர் தனது சிஷ்யர்களான மகதர், ப்ரஹ்மபாலி, சௌத்காயனி ஆகியோருக்கு இதைக் கற்பிக்க பத்யர் தமது பங்கிற்கு தான் கற்றதை ஜாபாலி, குமுதர், சௌனகர் ஆகிய மூவருக்குக் கற்பித்தார்.

ஆக ஜாபாலி அதர்வண வேதத்தில் நிபுணர் என்பது தெரியவருகிறது. இந்தத் தகவல்களை விஷ்ணுபுராணம் மூன்றாம் அம்சத்தில் தெரிவிக்கிறது.

வால்மீகி ராமாயணத்தில் பட்டாபிஷேக ஸர்க்கத்தில் (யுத்த காண்டம் 131வது ஸர்க்கம், 60ஆம் ஸ்லோகம்) ராமரின் பட்டாபிஷேகத்தின் போது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆசி கூறிய ரிஷிகள் எண்மர். வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஸ்யபர், காத்யாயனர், சுயக்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய இந்த எண்மரில் ஜாபாலியும் ஒருவர். இவர் ராமரின் மீது கொண்ட பேரன்பாலேயே அவர் அயோத்திக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆசையினாலேயே நாத்திகவாதத்தை முன் வைத்தார் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜாபாலி வாதம் இன்றைய நாஸ்திகர்களுக்கு பெரிதும் பிடித்த வாதம்.

அதை அடுத்துக் காண்போம்.

** தொடரும்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: