ஹிந்தி படப் பாடல்கள் – 9 – ஆஹா, வந்தது முதல் தேதி! (Post No.7839)

WRITTEN BY R.NANJAPPA                         

Post No.7839

Date uploaded in London – – 17 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 9 – ஆஹா, வந்தது முதல் தேதி!

R.Nanjappa

இது 2020 ஆகிய நல்லாண்டு. ஒரு 70 வருஷம் பின்னோக்கிப் போவோமா? அப்போது முக்காலும் நடுத்தர வர்க்கத்தினர்தான்- மாத வருமானம் அதிகமில்லை. சொத்து சுகம் பலருக்கும் இல்லை. வங்கிகள் அதிகம் இல்லை, பலருக்கும் அதில் கணக்கில்லை. ஏடிஎம் இல்லை, கிரெடிட் கார்டு இல்லை! மாத வருமானத்தை நம்பியே  வண்டி ஓடவேண்டும். இது பெரும்பாலும் பெண்களின் பொறுப்பு- அல்லது  சுமை! அல்லது சமர்த்து!  இந்த நிலையில் மாதம் முதல் தேதி  வந்தால் கொண்டாட்டம்தான்!  எல்லோரும் ஒரு நாள் சுல்தான் தான்! விவசாயிக்கு பருவ மழைபோல , முதல் தேதிக்கு அவ்வளவு  முக்கியத்துவம். எத்தனை தான் சாதாரண வேலையாக இருக்கட்டுமே, குறைந்த வருமானமாக இருக்கட்டுமே, இன்று வீடு முழுதும் மகிழ்ச்சி வெள்ளம்தான். அப்படிப்பட்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் என்ன நடக்கும்?  கவிஞர் பார்க்கிறார்-பாடுகிறார்.   ஆஹா, வந்தது முதல் தேதி!  

Din hai suhana aaj pehli tarikh hai Din hai suhana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh haiஇன்று இனிய நாள்- இன்று முதல் தேதி உலகமே மகிழ்ச்சியில் திளைக்கிறது-இன்று முதல் தேதி முதல் தேதி-ஆம், இன்று முதல் தேதி !  

Biwi boli ghar zara jaldi se aana Jaldi se aana Sham ko piya ji hume cinema dikhana Hume cinema dikhana Karo na bahana ha bahana bahana Karo na bahana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai  

மனைவி சொல்லிவிட்டாள்- ‘என்ன, இன்று சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்- என்ன, தெரிகிறதா, சீக்கிரம் வந்துவிடவேண்டும்! மாலையில் சினிமாவுக்குக் கூட்டிப் போகவேண்டும்- சினிமா பார்க்கவேண்டும் ! சால்ஜாப்பு- கீல்ஜாப்பெல்லாம் எதுவும் செல்லாது- இன்று முதல் தேதி- சால்ஜாப்பு நடக்காது இன்று முதல் தேதி- உலகமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது !  

Kisne pukara ruk gaya babu Lalaji ki jaan aaj aaya hai kabu Aaya hai kabu Ho paisa zara lana Ho paisa zara lana lana lana Ho paisa zara lana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai   


அதோ, யார் கூப்பிட்டது? ஏன் பாபு நின்று விட்டார்? ஓ, கடைக்காரர்- அவர் குரல்தான் ஆணையிட்டது ! அவரிடமிருந்து ஆணை வந்துவிட்டது ! ஓ, பைசா கொண்டு வா, கொண்டு வா! பைசா  கொண்டு வா ! உலகம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது இன்று முதல் தேதி !   [அப்பொழுதெல்லாம் மளிகைக் கடையில் மாசக் கணக்கு வைத்திருப்பார்கள்.]  

Bada bekar hai kismat ki maar hai Sab din ek hai roz aitbaar hai Mujhe na sunana ha sunana sunana Mujhe na sunana aaj pahli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh haiஇது என்ன பெரிய கஷ்டம்! விதி ஒரு போடு போட்டுவிட்டதே! இன்று முதல் தேதி போல் இல்லையே- எல்லா நாளும் ஒன்று தானோ? தினமும் நம்பிக்கையில் தான் ஓடவேண்டுமா? இன்று முதல் தேதி- என்னிடம் ஒன்றும் சொல்லாதே! இன்று முதல் தேதி- உலகமே மகிழ்ச்சியாக இருக்கிறது !  

Daftar ke samne aae mehman hai Bade hi sharif hai purane meharaban hai Bade hi sharif hai purane meharban hai Are jeb ko bachana bachana bachana Jeb ko bachana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai

ஆஃபீஸ் வாசலில் இது என்ன- விருந்தாளிகள் வந்துவிட்டார்களே!
நல்லவர்கள், பெரிய மனதுள்ளவர்கள் ! ஓ, அப்பனே, உன் பாக்கெட்டை பத்திரமாகப் பார்த்துக்கொள் இன்று முதல் தேதி- உன் பாக்கெட்டை பத்திரமாகப் பார்த்துக்கொள்!

[ விருந்தாளிகள் பிக்பாக்கெட்டுகள்]
  Dil bekarar hai soye nahi raat se Sethaji ko gham hai ki paiso chalo hath se Are lutega khazana khazana khazana Lutega khazana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai  Pehli tarikh aji pehli tarikh hai  

சேத்ஜீக்கு வருத்தம்- மனது கெட்டுவிட்டது இரவெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை இன்று பணப்பெட்டி காலியாகிவிடுமே, காலியாகுமே ! இன்று முதல் தேதி – பணம் பட்டுவாடா ஆகுமே இன்று முதல் தேதி- உலகமே மகிழ்ந்திருக்கிறது!  


Aye cinema walo aao aao khel mazedar hai Ho khel mazedar hai ji khel mazedar hai Aagha hai bhagwan hai kishore kumar hai Nimmi geeta bali hai ashok kumar hai Naragis raaj kapur hai dilip kumar hai Gito ka toofan hai nach ki bahar hai Nach ki bahar hai Panch aane ka das aana Are wapas nahi jana jana jana Wapas nahi jana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai


ஆ, சினிமாவுக்கு வந்தீர்களா, வாரும் வாரும் நல்ல மனதுக்கினிய படம் ஓடுகிறது! ஓ, இனிய படம் இனிய படம் ஆகா உண்டு, பக்வான் உண்டு, கிஷோர் குமாரும் உண்டு  நிம்மி, கீதா பாலி, அஷோக்குமார்-எல்லோரும் உண்டு நர்கீஸ் ராஜ்கபூருடன் திலீப் குமாரும் உண்டு பாட்டுக்களின் புயல், நாட்டியத்தின் வசந்தம்! நாட்டியங்களின் வசந்தம்! ஐந்தணா டிக்கட் சும்மா பத்தணாதான்! அரே, திரும்பிப் போகாதீர்கள்- வெறும் பத்தணா தான்! இன்று முதல் தேதி- திரும்பிப் போகாதீர்கள் உலகமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது!!

Mil jul ke bachcho ne bapu ko     Ghera bapu ko ghera Kehte hai sare ki bapu hai Mera baapu hai mera Khilone zara lana Khilone zara lana aaj pehli tarikh hai Khush hai zamana pehli tarikh

குழந்தைகள் அப்பாவைச் சூழ்ந்து கட்டிக்கொண்டு விட்டன ! எல்லோரும் கூடிச் சொல்கிறார்கள்; ‘அப்பா, உன்னைப்போல் உண்டா !’ அப்பா, மாலையில் விளையாட்டு பொம்மை வாங்கிவா ! இன்று முதல் தேதி, விளையாட்டு சாமான் வாங்கிவா ! உலகமே மகிழ்ச்சியாக இருக்கிறது! இன்று முதல் தேதி !

Song: Din hai suhana Film: Pehli Tarikh 1954 Lyricist: Qamar Jalalabadi Music: Sudhir Phadke Singer: Kishore Kumar.

எத்தனை இயற்கையான நிலையை விவரிக்கிறது இப்பாடல்! இது போலெல்லாம் நாம் சிறுவயதில் பார்த்து, அனுபவித்தது தானே! இத்தகைய குடும்பங்களும் மகிழ்ச்சிச் சூழல்களும் இருக்கத்தானே செய்கின்றன! முள்ளுடன் ரோஜாவும் தானே இருக்கிறது!   

Despite the Muslim sounding Urdu name. Qamar Jalalabadi was a Punjabi HIndu. LIke most Punjabis of pre-partition days, he learnt Urdu. His name was Om Prakash Bhandari. Qamar means moon, and Jalalabad was his hometown.

ICONIC என்ற சொல்லை இன்று தாராளமாக பயன்படுத்துகிறார்கள். இந்தப் பாடல் உண்மையிலேயே ICONIC. இந்தப் படம் வந்தது முதல் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று காலை 7.30 மணிக்கு ரேடியோ சிலோனில் இது ஒலிபரப்பாகும். நீண்ட பாட்டானதால் ஓரிரு பத்திகளே ஒலிபரப்பாகும். ஜனவரி முதல்தேதியன்று முழுப்பாடலும் ஒலிபரப்பாகும். எங்கள் கல்லூரி நாட்களில் முதல்தேதியன்று இதைக் கேட்பது எங்களுக்கு ஒரு சாங்கியம், ஒரு ரக்ஷை மாதிரி! ! எல்லா வேலையும் விட்டு ரேடியோ பெட்டி அருகில் உடகார்ந்துவிடுவோம். கரன்ட் இருக்க வேண்டுமே என்று வேண்டாத தெய்வமில்லை ! இன்றுவரை இப்பாடல் முதல் தேதியன்று ரேடியோ சிலோனில் ஒலிபரப்பாகிறது!!

உலகில் வேறு எங்காவது இப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுதானே உண்மையில் ICONIC!     சுமார் 35 வருஷங்களுக்குமுன் ஒரு முதல் தேதியன்று இப்பாடலில் முதல் இரண்டு-மூன்று வரியுடன் ஒலிபரப்பு நின்றுவிட்டது.. எங்களுக்கெல்லாம் பகீர் !. பின் , இந்த ரெகார்டு பழுதடைந்ததாகவும், மேற்கொண்டு ஒலிபரப்பமுடியவில்லை என்றும் அனௌன்ஸர் வருத்தத்தோடு சொன்னார். மேலும் நேயர்கள் யாரிடமாவது இந்த ரெகார்டு இருந்தால் அவர்களுக்கு அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டார்! இப்படியெல்லாம் இருந்ததால் தானே ரேடியோ சிலோனுக்கு அவ்வளவு ஆதரவு கிடைத்தது! இதை எழுதிய கமர், இசை அமைத்த ஸுதிர் ஃபட்கே., பாடிய கிஷோர், இதில் பெயர் வரும் நடிக நடிகையர்கள்- என எல்லோருமே அமரத்வம் வெற்று விட்டார்கள்!   சிலர் ஒரே ஒரு விஷயத்திற்காக புகழ் பெறுகிறார்கள்.அமெரிக்காவில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் எழுத்தாளர்கள் குழுமியிருந்தனர். பலர் பல புத்தகம் எழுதியவர்கள். ஒரு பெண்மணி அமைதியாக அமர்ந்திருந்தார். பக்கத்திலிருந்தவர் பேச்சுக்கொடுத்தார்.எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டார். அம்மையார், ‘ஒன்றுதான்” என்று சொன்னார். கேட்டவர் முகத்தில் ஏளனப் புன்னகை மலர்ந்தது. ‘புத்தகம் பெயர் என்னவோ’ எனக் கேட்க “GONE WITH THE WIND’ எனப் பதில் வந்தது, கேட்டவருக்கு வாயடைத்தது. இந்த ஒரு புத்தகத்தால் உலகப் புகழ் பெற்றவர் அந்த அம்மையார் Margaret Mitchell. அதே போல To Kill A Mocking Bird (1960) என்ற ஒரு புத்தகத்திற்காகப் புகழ் பெற்றவர் Harper Lee. இது படமாக வந்த போது 1962அதில் நடித்து அகாடமி அவார்டு வாங்கினார் Gregory Peck. சுதீர் ஃபட்கேவுக்கும் கமர் ஜலாலாபாதிக்கும் இந்த ஒரு பாடல் போதும்! முதல் தேதி என்று தமிழிலும் ஒரு படம் வந்தது. 1955. அதில் ‘முதல் தேதி-இன்று முதல் தேதி’ என ஒரு பாட்டு இருந்ததாக நினைவு. விவரம் தெரியவில்லை. தமிழ்ப்படம் ‘இரும்புத்திரையில்’ காசு பற்றாக்குறை பற்றி ஒரு பாட்டு வரும். “கையிலே வாங்கினேன் பையிலே போடலே   காசு போன இடம் தெரியலே” என்று நினைவு. எஸ்.சி. க்ருஷ்ணன் தங்கவேலுவுக்காகப் பாடியது. இது அன்றைய கீழ் நடுத்தரக் குடும்பத்திற்கு வருமானம் போதவில்லை என்பதைச் சொல்ல வந்தது. இந்தப் பாட்டிற்கு நடிக்க தங்கவேலுவுக்கு இஷ்டமில்லை. இந்தப் பாட்டில் “அறம் விழுந்தது”, இதைச் சேர்க்கவேண்டாம் என்று தங்கவேலு சொல்லிப் பார்த்தார். தயாரிப்பாளர்கள் – ஜெமினி ஸ்டுடியோ கேட்கவில்லை. பின்னர் படிப்படியாக ஜெமினி வீழ்ச்சி யடைந்தது என்று தங்கவேலுவுக்கு வேண்டியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.கிராம இந்தியா-காந்தீய இந்தியா
இந்தியா 7 லட்சம் கிராமங்கள் கொண்ட நாடு என்பதில் காந்திஜிக்குப் பெருமை அதிகம்.
எளிமை, கள்ளம்-கபடமில்லாத தன்மை கொண்ட மக்கள், யார் வந்தாலும் உபசரிக்கும் பண்பு, ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் நிலை, வறுமையிலும் ஒரு நிறைவு, தன்னம்பிக்கை. கம்பீரம்-இத்தகைய பண்புகளை நாம் கிராமப்புறங்களில் பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஒரு கவிஞர்.
தேவதைகளின் இடம்
ஒரு நகர்ப்புற இளைஞன் கிராமத்திற்கு வருகிறான். அங்கு காணும் காட்சிகளை விவரிக்கிறான்.  

फरिश्तों की नगरी में मैं आ गया हूँ, मैं
आ गया हूँ
फरिश्तों की नगरी में
ये रानाइयाँ देख चकरा गया हूँ मैं
आ गया हूँ मैं
आ गया हूँ…ஃபரிஷ்தோ(ன்) கீ நகரீ மே மை ஆ கயா ஹூ (ன்) மை
ஆகயா ஹூ(ன்) ஃபரிஷ்தோ(ன்) கி நகரீ மே  …ஆ கயா ஹூ((ன்) யே ரானாயியா(ன்) தேக் சக்ரா கயா ஹூ(ன்) மை ஆ கயா ஹூ(ன்) மை …ஆகயா ஹூ(ன்)     நான் இங்கே தேவதைகளின்   இடத்திற்கு வந்துவிட்டேன் ஆம், தேவதைகளின் இடத்திற்கு வந்திருக்கிறேன் ! இந்த அழகைக் கண்டு மதி மயங்கி விட்டேன் இங்கே வந்துவிட்டேன்

यहाँ बसने वाले, बड़े ही निराले
बड़े सीधे सादे, बड़े भोले भाले
पति-पत्नी मेहनत से करते है खेती
तो दादा को पोती, सहारा है देती
यहाँ शीरी फरहाद कंधा मिलाकर
है ले आते झीलों से नदिया बहाकर
ये चांदी की नदिया, बहे जा रही है
कुछ अपनी जुबां में, कहे जा रही है
फरिश्तों की नगरी में…     யஹா(ன்) பஸ்னே வாலே, படே ஹீ  நிராலே படே ஸீதே ஸாதே,  படே போலே பாலே   பதீ-பத்னீ மேஹனத் ஸே கர்தே ஹை கேதீ தோ தாதா கோ போதீ ஸஹாரா ஹை தேதீ யஹா(ன்) ஷீரி ஃபர்ஹாத் கன்தா மிலாகர் ஹை லே ஆதே ஜீலோ(ன்) ஸே நதியா பஹாகர் யே சாந்தீ கீ நதியா, பஹே ஜா ரஹீ ஹை குச் அப்னீ ஜுபா(ன்) ஸே , கஹ ஜா ரஹீ ஹை ஃபரிஷ்தோ (ன்) கீ நகரீ……     இங்கே வசிப்பவர்கள்  தனித்தன்மை கொண்டவர்கள் கள்ளம்-கபடம் இல்லாதவர்கள், எளியவர்கள் (பார்) புருஷன்-பெண்ஜாதி சேர்ந்து வயலில் உழைக்கிறார்கள் (கூடவே)  தாத்தாவுக்குப் பேத்தி உதவி செய்கிறாள் ! இங்கே ஷிரின்-ஃபர் ஹாத் சேர்ந்து  மலைக்கு அப்பாலிருந்து நதியை இங்கே  அழைத்துவந்து பெருகச் செய்கிறார்கள் தெள்ளிய வெள்ளிபோல்  நீருடன் இங்கே நதி பாய்கிறது! தன்னுடைய மொழியில் அது ஏதோ சொல்லிச் செல்கிறது! நான் தேவதைகளின் இடத்திற்கு வந்திருக்கிறேன்!

  कन्हैया चला, ढोर बन में चराने
तो राधा चली, साथ बसी बजाने
बजी बांसुरी, नीर आँखों से छलका
मुझे हो गया है, नशा हल्का हल्का
परिंदे मेरे साथ गाने लगे हैं
इशारों से बादल बुलाने लगे हैं
हँसी देख कर मुस्कुराने लगे हैं
कदम अब मेरे डगमगाने लगे हैं
फरिश्तों की नगरी में…
 


கன்ஹையா  சலா, தோர் பன் மே சரானே தோ ராதா சலீ, ஸாத்பன்ஸீ பஜானே பஜீ பான்ஸுரி நீர் , ஆங்கோ ஸே சல்கா முஜே ஹோ கயா ஹை நஷா ஹல்கா ஹல்கா பரிந்தே மேரே ஸாத்  கானே லகே ஹை இஷாரோ ஸே பாதல் புலானே லகே ஹை ஹ(ன்) ஸீ தேக் கர் முஸ்குரானே லகே ஹை கதம் அப் மேரே ஜக்மகானே லகே ஹை ஃபரிஷ்தோ(ன்) கீ நகரீ…..   பார், மாடுகள் மேய்க்க கண்ணன் வனம் செல்கிறான் ராதா சும்மா இருப்பாளா, அவளும் செல்கிறாள் குழல் ஊத! அந்த குழலின் வாசிப்பில், கண்ணில் நீர் பெருகுகிறது!  எனக்குச் சிறிது சிறிதாக போதை ஏறுகிறது ! பறவைகள் என்னுடன் சேர்ந்து பாடத்தொடங்கிவிட்டன! மேகமும் சமிக்ஞை செய்து என்னை அழைக்கிறது! என் சிரிப்பைக் கண்டு புன்முறுவல் பூக்கிறது! என்னுடைய நடை இப்பொழுது தடுமாறத் தொடங்கிவிட்டது! ஆம், நான் தேவதைகளின் இடத்திற்கு வந்திருக்கிறேன் !
अरे वाह लगा है, यहाँ कोई मेला
तो फिर इस तरह मैं, फिरूँ क्यों अकेला
मैं झूले पे बैठूँगा, चूसूँगा गन्ना
किसी का तो हूँ मैं भी हरियाला बन्ना
ओ भैया जी लो ये, दुअन्नी संभालो
चलो मामा उतरो, मुझे बैठने दो
फरिश्तों की नगरी में…
 
அரே வாஹ் லகா ஹை, யஹா(ன்) கோயீ மேலா தோ ஃபிர் இஸ் தரஃப் மை, ஃபிரூ(ன்) க்யோ(ன்) அகேலா மை ஜூலே பே பைடூங்கா, சூஸூங்கா கன்னா கிஸீ கா தோ ஹூ(ன்)  மை பீ ஹரியாலா பன்னா ஓ பையா ஜீ லோ யே, துவன்னீ ஸ்ம்பாலோ, சலோ மாமா உத்ரோ, முஜே பைட்னே தோ  ஃபரிஷ்தோ(ன்) கீ நகரீ…..     அடடே, இங்கே ஏதோ திருவிழா போல் தெரிகிறதே ! பின் நான் ஏன் இப்படி  தனியாகச் சுற்றவேண்டும்? நான் ராட்டினத்தில் உட்காருவேன், கரும்பு கடித்துத் தின்பேன்! எனக்கும் யாரோ இருக்கிறார்கள், நான் ஏன் ஆதரவற்றவன் போல் இருக்கவேண்டும்? அண்ணா, இந்தா, இந்த இரண்டணாவைப் பிடி! மாமா, இடத்தைக் காலி செய், நான் உட்காரவேண்டும்! ஆம், நான் தேவதைகள் வசிக்கும் இடத்திற்கு வந்திருக்கிறேன்!   { இங்கே நம் ஆள் ராட்டினத்தில் உட்காருகிறான்]   

यहाँ बसने वाले, बड़े ही निराले
बड़े प्यारे-प्यारे, बड़े भोले भाले
मुझे डर है हो जाए दिल की न छुट्टी
लो मैं इनको भूला, चलो इनसे कुट्टी
ये ठण्डे पसीने जो आने लगे हैं
कदम इस तरह डगमगाने लगे हैं

फरिश्तों की नगरी में.  


யஹா(ன்) பஸ்னே வாலே, படே ஹீ நிராலே படே ப்யாரே ப்யாரே,, படே போலே பாலே முஜே டர் ஹை ஹோ ஜாயே தில் கீ ந சுட்டீ யே டண்டே பஸீனே ஜோ ஆனே லகே ஹை கதம் இஸ்  தரஹ் ஜகமகானே லகே ஹை ஃபரிஷ்தோ கீ நகரீ……     இங்கே வசிப்பவர்கள் தனியானவர்கள் தான்! பிரியமானவர்கள்,  கள்ளம் கபடில்லாதவர்கள் மனதை இங்கேயே இழந்துவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது! குளிர்ந்த வியர்வை வரத்தொடங்கிவிட்டது ! கால்கள் இப்படி தடுமாறத்   தொடங்கிவிட்டன! நான் தேவதைகள் வசிக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன்!   

Song: Farishton ki nagari  Film: Hamari Yaad Aayegi 1961 Lyrics: Kidar Sharma Music; Snehal Bhatkar  Singer: Mukesh ( one version; Mubarak Begum) Beautiful song, excellent rendering by Mukesh. Kidar Sharma was a producer, director, lyricist- a doyen of the industry. Snehal Bhatkar was a sensitive composer, but did not promote or market himself into prominence.  This song was picturised on a novice, so did not get the prominence it deserved.  

மறையும் கிராமங்கள்   எத்தனை அருமையான பாடல்! கிராமப்புறக் காட்சிகளை அப்படியே விவரிக்கிறது. 70/75 வயதான நம்மில் பலர் இத்தகைய இடங்களிலிருந்து வந்தவர்கள் தாமே! இத்தகைய காட்சிகளை தினமும் கண்டவர்கள் தாமே! ஷிரீன் -ஃபர் ஹாத் என்பவர்கள் லைலா-மஜ்னு போன்ற காதல் ஜோடி-வட இந்தியாவில்  பிரபலமாக இருப்பது. இங்கு நம் ஹீ ரோவுக்கு ஒவ்வொரு கிரமப்புற ஜோடியும் ஷ்ரீன்-ஃபர் ஹாத் ஆகத் தெரிகிறது. அதேபோல் இங்கிருக்கும் மாடுமேய்க்கும் இளைஞர்கள்  க்ருஷ்ணன்-ராதா போல் தெரிகின்றனர்.   நம் கிராமப்புறங்களில் இத்தகைய காதல் ஜோடிகள் இல்லாமல் இல்லை. இதெல்லாம் மிகைப்படுத்திச் சொல்லப்பட்டதோ? இத்தகைய இடங்களிலிருந்து வந்தவர்கள் (அடியேன் உட்பட) அப்படி நினைக்கவில்லை. இதெல்லாம்  நாம் கண்ட காட்சிகள்.     இன்று  இத்தகைய கிராமங்கள் இல்லை, ஒவ்வொரு நகரமும் விரிந்து, பல கிராமங்களை விழுங்கி வருகின்றன. பெங்களூரில் சில பகுதிகள் கிராமப்புறங்களாக இருந்து  Bangalore Rural  என்று ஒரு ஜில்லாவே இருந்தது. இன்று இங்கு கிராமமே இல்லை என்று அரசு சொல்கிறது! இந்தியா முழுவதும் இதே நிலைதான். டிவி, செல்ஃபோன் வந்தபிறகு  நகரத்திற்கும்-கிராமத்திற்கும் இடையேயான வித்தியாசம் அளவிலேயே தவிர வகையில் இல்லை. Difference of degree, not of kind!  இருந்தாலும் நல்லவர்கள் எங்கும் இருக்கிறார்கள். நாடு முழுவதும் கெட்டுப்போகவில்லை. சென்ற கட்டுரையில் கண்டபடி எல்லாம்

மோசமாகிவிடவில்லை. நல்ல இடங்கள், நிகழ்ச்சிகள் இருக்கின்றன, நல்லவர்கள் இருக்கிறார்கள். கவிஞர்களின் பார்வை வெவ்வேறாக இருப்பதால்  காட்சியும் மாறுபடுகிறது.    ஆங்கிலக் கவிஞர் தாமஸ் க்ரே  இத்தகைய ஒரு கிராமத்தை விவரிக்கிறார்:  Elegy Written in a Country Churchyard BY THOMAS GRAY 1751   The curfew tolls the knell of parting day,          
The lowing herd wind slowly o’er the lea,
The plowman homeward plods his weary way,    
      And leaves the world to darkness and to me.
  Now fades the glimm’ring landscape on the sight,         
 And all the air a solemn stillness holds, Save where the beetle wheels his droning flight,        
  And drowsy tinklings lull the distant folds;  
Beneath those rugged elms, that yew-tree’s shade,          
Where heaves the turf in many a mould’ring heap, Each in his narrow cell for ever laid,          
The rude forefathers of the hamlet sleep.  
The breezy call of incense-breathing Morn,        
  The swallow twitt’ring from the straw-built shed,
The cock’s shrill clarion, or the echoing horn,        
  No more shall rouse them from their lowly bed.  
Full many a gem of purest ray serene,        
  The dark unfathom’d caves of ocean bear:

Full many a flow’r is born to blush unseen,         
 And waste its sweetness on the desert air.

  ஆம், நம்மில் பலர் இத்தகைய இடங்களிலிருந்து தான் வருகிறோம் . நம் குலத்துப் பெரியவர்கள் அங்குதான் வளர்ந்து, வாழ்ந்து இன்னமும் ஆத்ம சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  

  Yes, that is where “forefathers of the hamlet sleep”.  That India is also true, not only the one described by Sahir Ludhianvi. Some poets do not want to see the real India, its ticking soul!                                         

 
—xxxxx—
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: