அகஸ்தியர் பற்றி தென் கிழக்காசிய நாடுகளில் கல்வெட்டுகள் (Post No.7846)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7846

Date uploaded in London – 18 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அய்யாசாமி கல்யாணராமன் எழுதிய ஆர்யதரங்கிணி என்ற ஆங்கில நூலின் இரண்டாவது பாகத்தில் தமிழ் முனிவன் அகஸ்தியர் பற்றிய அதிசயச் செய்திகள் உள்ளன. நம்மில் பெரும்பாலோர் அறிந்திராத செய்திகள் அவை.

சிராத்த மந்திரத்தில் அகஸ்தியர் :-

உயிர் நீத்த முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் பிராமணர்கள் சிராத்தம் அளிப்பர். இதில் கடவுளர் 12 பேருடன் இரண்டு மனிதர்களுக்கும் சேர்த்து 14 பேருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவது வழக்கம். அவ்விருவர் காஷ்யப ரிஷி, அகஸ்திய ரிஷி . அதாவது இறைவனுக்கு சமமாகப் போற்றப்படுவர் இராண்டே மனிதர்கள். அதிலும் ஒரு சிறப்புள்ளது என்கிறார் அய்யாசாமி கல்யாணராமன்.

காஷ்யப ரிஷி ,காஷ்மீர் மாநிலத்துக்குப் பெயர் கொடுத்த ரிஷி. அகஸ்திய ரிஷி தென்  தமிழ் நாட்டின் பொதிய மலைக்குப் பெயர் ஈ ந்தவர் ; இமயம் முதல் குமாரி வரை ஒரே நிலப்பரப்பு பாரத நாடு என்பதையும் இது காட்டுகிறது.

இதுதான் அந்த மந்திரம்-

ஈசான விஷ்ணு கமலாசன கார்த்திகேய

வன்னித்ரயார்க்க  ராஜனிஸ கணேஸ்வரானாம்

கிரௌஞ்சமரேந்த்ர  கலசோத்பவ

காஸ்யபனாம் பாதம் நமாமி

சிவன், விஷ்ணு, பிரம்மா, கார்த்திகேயன், மூன்று அக்நிக்கள், சூர்யன், சந்திரன், கணேஸ்வர, கிரௌஞ்ச, இந்திர , அகஸ்திய காஸ்யபர் ஆகியோரின் பாதங்களை நான் வணங்குகிறேன் — என்பது மந்திரத்தின் பொருள் .

கலச உத்பவ = கும்ப முனி = அகஸ்தியர்

இந்திய இலக்கியத்தில் அகஸ்தியர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கோணங்களில் தோன்றுகிறார். ரிக்வேதத்தில் ஒரு துதியில் மனைவி லோபாமுத்ராவின் வேண்டுகோளின்படி இல்லறக் கடமைகளை நிறைவேற்றியதைக் காண்கிறோம்.  ராமாயணத்தில் ராமனுக்கு வீரமும் வெற்றியும் தரும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசித்து ‘வெற்றி நமதே’ என்று உறுதியளிப்பதைக் காண்கிறோம். மஹாபாரதத்தில் அவர்க்கு  ஒரு புதிய பணி  தரப்படுகிறது. பெருங்குடி மக்களை தென்னகத்துக்கு அழைத்துச் சென்று பூ பாரத்தை சீர்செய்வதைப் பார்க்கிறோம் .

புராணங்களில் அவரது சாதனைகள் – கடல் நீரைக் குடித்தார்; விந்திய மலையின் கர்வத்தை பங்கம் செய்தார். வாதாபி இல்வலன் என்ற கொடிய  அரக்கர்களின்  கொட்டத்தை ஒடுக்கினார் . இது பாதாமி ஆர்யபுரத்தில் /ஐஹோல் ஆண்ட இரண்டு அசுரர் ஆட்சியை வீழ்த்திய வரலாற்று நிகழ்ச்சிகளாக இருக்கலாம் .பின்னர் வந்த புராணங்கள் இவர் நட்சத்திரமாக தென் வானத்தில் ஜொலிப்பதாய்க் குறிப்பிடுகின்றன. ரோமானியர்களும் இதை ‘கனோபஸ்’  CANOPUS என்று அழைத்தனர். அதற்கும் கூட

கலசத்தில் உதித்தவர் என்றே பொருள்.

தென்னிந்தியாவில் இவருக்கு கோவில்கள் உள . இவருடன் தொடர்புகொண்ட கோவில்களும் அதிகமுள .

‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்று அவை காட்டும். மகத்தான சக்தி, துணிவு, கனிவு , பரந்த நோக்கம் உள்ளவராக அவரை சித்தரிக்கின்றனர். ரிக்வேதத்தில் அவரை ‘இருவகுப்பினாருக்கும் நண்பர்’ என்று ஒரு மந்திரம் கூறுகிறது. அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சகாயம் செய்தவர். தென்னிந்தியாவில் இவர் தர்மத்தைப் பரப்பினார்.

இவருடைய சேவை அலைகடலுக்கு அப்பாலும் சென்றது. அகஸ்தியர்தான்  கடலோடிகளின் தெய்வம். ‘அகஸ்த்யோதயே  ஜலானி ப்ரசிதந்தி’ — என்று சம்ஸ்க்ருதத்தில் ஒரு பழமொழி உண்டு. அகஸ்திய நட்சத்திரம் உதயமாகிவிட்டால் கடல் நீர் சா ந்தமாகிவிடும் என்பது இதன் பொருள்.

தென் கிழக்காசிய நாடுகளில் இவரைப் போற்றும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

இந்தோனேஷியாவிலுள்ள மத்திய ஜாவா தீவில்  ஒரு கல்வெட்டில்,

விஹிதே கலசஜ நாம்நா

பத்ரலோகஹ்வயே  விபுதகேஹே

தஸ்யத புத்ர பௌத்ர :

பவந்து லப்தே சதபத ஜீவ:

பொருள்

பத்ரலோகம் என்ற பெயரில் இங்கே எழுந்தருளியுள்ள கும்ப  முனியானவர் புத்ர பவுத்திர சந்ததியினரின் ஆசை அபிலாஷைகள் நிறைவேற அருள்வாராகுக

இன்னொரு கல்வெட்டில் காணப்படும் வாசகம் –

சக ஆண்டு 682, மார்கழி மாதம் வெள்ளிக்கிழமை, கிருஷணபக்ஷ அஷ்டமி , கும்பலக்கினம் கூடிய சுப தினத்தில் , அதி மேதாவியான நமது மன்னர், வேத பண்டிதர், சாது சன்யாசிகளின்  உதவியுடன் , செவ்வனே பணியாற்றும் சிற்ப சாஸ்திர வல்லுநர்கள் உதவியுடன் கலச முனிவரின் சிலையைப் பிரதிஷ்டை செய்தார்.

கிழக்கு ஜாவாவில் கி.பி.760 கல்வெட்டு சொல்லும் …

தானியமும் , நெல்லும், தங்கச்  சுரங்கங்களு ம்  நிறைந்த தீவு யவத் தீவு – ஜாவா- இங்கு அற்புதமான தெய்வீக சம்பு — சிவன் – கோவில் கொண்டுள்ளார் .குஞ்சரகுஞ்ச என்ற வளமான தேசத்தின் வம்சத்தில் வந்தவர் இதை உருவாக்கினார்

அகஸ்த்யரின் சிலைகள் குள்ளமாகவும், சடைமுடியாலான மகுடத்துடனும் தொந்தியுடனும் படைக்கப்பட்டுள்ளன. கைகளில் கமண்டலம், மணி/ ஜப மாலை, த் ரிதண்டம்  என்னும் குச்சி உளது. இது போல இலங்கையிலும் இருக்கிறது

கல்யாண ராமன் கொடுத்த ஒரு அடிக்குறிப்பில்– அகஸ்தியர் ஒரு கம்போடிய மன்னரின் மகளை  திருமணம் செய்த

செய்தியைக் கம்போடிய கல்வெட்டு கூறுகிறது. இதை நாலாவது  அத்தியாயத்தில் காண்க என்று எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் அகஸ்தியர் பெருமை மிகு இடத்தைப் பெறுகிறார்  அகத்தியம்  என்ற இலக்கண நூலைப்  படைத்தவர் அவர். ஆனால் இப்போது அந்த நூல் கிடைக்கவில்லை.

இவரது மாணரான தொல்காப்பியர் பா ணினியைப் போல  சூத்திரங்கள் வடிவில் ஒரு நூலைப்  படைத்தார். அவரது இயற்பெயர் த்ருண பிந்து . அவர் அகஸ்தியரின் சீடர்  என்ற பெயரில் ஜாவானிய கல்வெட்டுகளிலும் காணப்படுகிறார். தொல்காப்பியர் கி.மு மூன்றாம் அல்லது நாலாம் நூற்றாண்டில் வா ழ்ந்தார்  என்று இதுகாறும் கருதப்பட்டு வந்தது இப்போது அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது —

இவ்வாறு அவர் தனது ஆங்கிலப் புஸ்தகத்தில் எழுதியுள்ளார். இது வெளியான வருடம் 1970.

SOURCE – ARYATARANGINI, IN TWO VOLUMES, A.KALYANARAMAN, ASIA PUBLISHING HOUSE, LONDON, 1970.

tags – அகஸ்தியர் , கல்வெட்டுகள், , த்ருண பிந்து, சிராத்தம்

–SUBHAM —

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: