
Post No.7850
Date uploaded in London – 19 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நுறு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் கனகசபைப்பிள்ளை ஒரு புகழ் பெற்ற ஆங்கில நூலை எழுதினார். அதன் தலைப்பு 1800 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் The Tamils 1800 Years Ago. முதல் முதலில் ஆங்கிலத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செயத பெருமை கனகசபைப்பிள்ளையைச் சாரும். இதைவிட அருமையான கட்டுரைகள், நூல்கள் அதற்கு முன்னரே தமிழில் உண்டு. ஆங்கிலத்திலும் கட்டுரைகள் உண்டு; ஆயினும் உருப்படியான ஒரு புஸ்தகத்தில் கொண்டு வந்த பெருமை இவருடையதே. இவர் சென்னையில் பிறந்தாலும் இலங்கை வம்சாவளியில் வந்தவர் என்பதால் அவர்களும் இவர்தம் பெருமையை விதந்தோதி மகிழவர்.

திராவிடர்கள் மத்தியதரைக் கடல் பேர்வழிகள் ; வந்தேறு குடிகள் என்று கால்டுவெல்கள் (Caldwell) கதைத்த காலத்தில் இவர் தமிழர்கள் மங்கோலியாவிலிருந்து வந்த குடியேறிகள் ; மண்ணின் மைந்தர் அல்ல என்று புஸ்தகத்தில் எழுதினார். இதனால் சில புருவங்கள் உயர்ந்தன . ஒட்டு மொத்தத்தில் புஸ்தகம் தமிழன் பெருமையை முரசு கொட்டியது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை .
இப்பொழுது நமக்கு கிடைக்கும் சான்றுகளைக் கொண்டு “3000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள்” என்று புஸ்தகம் எழுத முடியும்.
சான்றுகளை ஒவ்வொன்றாகக் காண்போம் .
இந்தியாவில் மனித வாடை
ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் 40, 000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறத் துவங்கினர் என்று முன்னர் கருதினர். ஆ னால் இந்தியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன இதைவிட அதிசய விஷயம் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள மத்திய பிரதேசத்தில் பிம்பேட்கா (Bhimbeta Caves) குகைகளில் 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே பழங்குடி மக்கள் வாழ்ந்து வண்ண ஓவியங்கள் வரைந்ததும் விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்களில் இருக்கின்றன. தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகிலுள்ள அச் சிரப்பாக்கம் முதிய இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மன்னர் மக்கள் வாழ்ந்த தடயங்களும் கிடைத்துள்ளன. அதாவது இமயம் முதல் குமரி வரை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வசித்துள்ளனர் . ஆனால் இவையனைத்தும் நாகரிகம் அடைவதற்கு முன்னுள்ள நிலை.
தென்னாடு / தமிழ் நாடு எப்போது நாகரீகம் எய்தியது?
ரிக் வேதம் :- 1.Rig Veda 10-61-8 and 1-179-6
ரிக் வேதம் பழமையான நூல் ; ஜாகோபியும் பாலககங்காதர திலகரும் ரிக் வேதம். 6000 முதல் 8000 ஆண்டு பழமையானது என்பர் ; மாக்ஸ் முல்லர் 3500 ஆண்டு பழமையானது என்பர் . இதில் இரண்டு இடங்களில் தென் பகுதி பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஓரிடத்தில் ‘தக்ஷிண பாத’ என்பது விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள தென்பகுதியைக் குறிக்கும் என்பர் சிலர். இன்னொரு இடத்தில் அகஸ்திய மகரிஷியை அவருடைய மனைவி லோபாமுத்திரை புகழ்ந்து கவி பாடி இருக்கிறார். அதில் அவரை ‘இரு வகுப்பினரின் நண்பர்’ என்று பாடுகிறார் . இந்த இரு வகுப்பினர் தமிழர்களும் வடக்கத்தியரும் என்று ஜம்புநாத அய்யர் மொழிபெயர்த்தார். ஆனால் வேதத்தை மொழிபெயர்த்த அனைவரும் இதை ஏற்கவில்லை அவர்கள் வெவ்வேறு அர்த்தம் கற்பிக்கிறார்கள். மேலும் இவ்விரு கவிதைகளும் அதி பயங்கர செக்ஸ் கவிதை என்பதால் Griffith க்ரிப்பித் மொழிபெயர்க்காமல் பிற்சேர்க்கைக்குத் தள்ளிவிட்டார் கவிதைகளை. அதுமட்டுமல்ல ‘செக்சி’ (Sexy) பகுதிகளை லத்தின் மொழியில் மட்டும் கொடுத்துவிட்டார். சுருக்கமாக்ச் சொன்னால் இரண்டும் நமக்குப் பயன்படாது.

தமிழர் நாகரீகம் எப்போது துவங்கியது ?
மூன்று வகையான தமிழ் கிறுக்கர்கள் , வெறியர்கள் உளர் ; அவர்கள் அதிகம் படித்தறியாத தமிழ் ஆர்வலர்கள் ; அவர்களுடைய மூன்று வாதங்கள்:-
1. ‘கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளொடு முன் தோன்றிய முத்த குடி’ – என்று ஆடுவர், பாடுவார்கள். இது உயர்வு நவிற்சி அணி; இதை அறியாத பாமரர் இதை அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் (literal meaning) கொள்வர். அதாவது நாஸா (NASA) வெளியிடும் செவ்வாய், புதன் கிரக பரப்பைப் பார்த்தால் பிரம்மா ண்டமான பாறைகளைப் பார்க்கலாம். பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் அப்படித்தான் பூமியும் இருந்தது. பின்னர் கோடிக்கணக்கான ஆண்டுகளில் பெய்த மழை , அடித்த வெப்பத்தில் அவை சிறிதாக உடைந்தன; மணற்பரப்பும் உருவானது. தமிழர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாக நம்பும் ஜீவன்களும் நமது நிலப்பரப்பில் இப்போதும் உள .

2.இரண்டாவது அணி சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீகம் தமிழர் நாகரீகம் என்று நம்பி எதைச் சொன்னாலும் சிந்து சமவெளி நாகரீக போர்வைக்குள் மறைந்து கொண்டு கதைப்பார்கள். இவர்களை அப்பா அடிக்க வரும்போது அம்மாவின் புடவைக்குள் ஒளிந்து கொள்ளும் சின்னக் குழந்தைகளுக்கு ஒப்பிடலாம். சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட 4000++++ முத்திரைக்ளுக்கு ஐம்பதுக்கும் மேலான வியாக்கியானங்கள் உண்டு. இன்றுவரை அதை எவரும் படிக்க முடியவில்லை. இது பற்றி கதைப்போர் எவரும் ஐராவதம் மஹாதேவன், அஸ்கோ பர்போலா, சர்மா முதலிய பெருமக்கள் 100 பேர் எழுதிய புஸ்தகங்களைப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம். சிந்து என்ற சொல்லே சங்க இலக்கியத்தின் 30,000 வரிகளில் இல்லை என்பது இந்த மண்டூகங்களுக்குத் தெரியாது. 20 முறை கங்கை நதியையும் இமயமலையையும் புகழ்ந்து பாடிய சங்க புலவர்களுக்கு சிந்து நதி தெரியாது!! அது மட்டுமல்ல பிற்காலத்தில் சிந்து என்பதையும் கொடி , துணி என்ற பொருளில்தான் பயன்படுத்தினர்.
(தொல்காப்பியம் 3-363-1; சிலப்பதிகாரம் 16-138)

1960-களில் பின்லாந்து, சோவியத் மொழியியல் அறிஞர்கள் நடத்திய ஆய்வில் திராவிட மொழி அமைப்பு இந்த முத்திரைகளின் மொழியில் இருப்பதாகக் கூறினர் . உடனே திராவிடர்களும் மார்கசியங்களும் ஆகாசத்துக்கும் பூமிக்கும் குரங்குகள் போல தாவிக் குதித்தன . அதற்கு முன்னும் பின்னும் வேறு 50 விளக்கங்களும் இருக்கின்றன. அண்மையில் அமெரிக்க அறிஞர்கள் “டேய் , மண்டுகளா ! இது மொழியே இல்லை, வெற்று வரைபடங்கள்” என்று சொன்னவுடன் திராவிடர்களும் மார்கசியங்களும் பொங்கி எழுந்தன; காரசாரமாக எதிர்த்துப் பேசின. ஆனால் அந்தப் பரிதாப கேசுகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு இந்த தடவை கை நழுவிப்போனது. இது அமெரிக்க அறிஞர் குலாத்தில் இருந்து வந்ததால் ‘ஆரிய சூழ்ச்சி’, ‘பார்ப்பன சதி’ என்று கொக்கரிக்க முடியவில்லை இன்னும் சில அரைவேக்காடுகள் “பார்த்தியா? ஊர்ப்பெயர்களை” என்று எல்லாவற்றின் ஸ்பெல்லிங் Spellingsகுகளையும் தவறாக எழுதிக்காட்டி குதூகலிக்கின்றன. உலகில் 30 பெர்லின்கள் உண்டு; அமெரிக்காவில் சேலம், மதராஸ் என்ற நகரங்கள் உண்டு; உலகில் பத்து மதுரைகள் இருக்கின்றன. இவைகளையெல்லாம் வைத்து இது அதுவேதான் ; அது இதுவேதான் என்று சொல்லுவது போன்றது இது.
அப்படியானால் உண்மைதான் என்ன ?

அது எனக்குத் தெரிந்தால் இவ்வளவு நேரம் நோபல்பரிசு வாங்கியிருப்பேன் . இதை முதலில் உலகிற்கு வெளிப்படுத்திய அயோக்கிய வெள்ளைக்காரர்கள் இதற்கு ஆரம்பத்திலேயே ஆரிய – திராவிடம் பூசி ஆராய்ச்சியை மழுங்கடித்து விட்டனர். அந்த ஆரிய- திராவிட வாதம் அப்போதே 100 ஆண்டுப் பழமையான வாதம். இதை எல்லாம் மறந்து விட்டு ஒருவர் ஆராய்ந்தால் உண்மை வெளிப்படலாம். முதலில் இது பற்றிய 100 விளக்கங்களைப் படித்தால் வாய் வி ட்டுச் சிரிக்கலாம். ஹீராஸ் பாதிரியார் படித்த/ அடித்த ‘ஜோக்’ முதல் சோவியத்- பின்னிஷ் ‘ஜோக்’ வரை படித்து மகிழலாம். அதி வேக, பிரம்மாண்ட சூப்பர் கம்பியூட்டர்களில் இந்த முத்திரைகளைக் கொடுத்தும் விடை காண முடியவில்லை. ஆக, இன்று வரை சிந்து ஒரு புரியாத புதிரே ! இதை யாராவது படித்து தமிழ் எழுத்து, தமிழுக்கு தொடர்புடைய எழுத்து என்று நிரூ பித்தால் முதலில் மகிழ்வது நான்தான்.
அஸ்கோ பார்போலா (Asko Parpola) லண்டன் பல்கலைக் கழகத்தில் பேசி முடித்தவுடன், “என்ன உங்கள் அருமையான புஸ்தகத்தில்(Deciphering the Indus Script) , நமது காலத்தில் இதை எவராவது படித்தறிய முடியும் என்பது சந்தேகமே என்று முடித்துவிட்டிர்களே ; அதற்குப் பின்னர் ஏதேனும் புதிய செய்தி உண்டா?” என்று வினவினேன். ‘இல்லை’ என்று முடித்துவிட்டார். ஆனால் எல்லோரும் அவ்வப்போது ஆராய்சசிக்கட்டுரைகளை எழுதிக் குவிக்கின்றனர். அதில் தவறில்லை. எல்லோரும் லாட்டரி டிக்கெட் வாங்குகிறோம்; யாருக்கோ ஒருவருக்குப் பரிசு கிடைக்கிறதல்லவா! யார் கண்டார்? 1973 முதல் ஆராயும் எனக்கே பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

மூன்றாவது போலி கோஷ்டி – குமரிக்கண்ட – லெமூரியா கோஷ்டி.
3.கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கண்டங்கள் ஒட்டி இருந்தன. பின்னர் அவை தாமரை மலர்வது போல (Continental Drift) விரிந்து பரவின. இதை பங்கேயா(Pangaea) என்று கிரேக்க மொழியில் அழைப்பர். அது உண்மையில் பங்கஜ (Pankaja = Lotus + Pangea) என்ற சொல்லாகும் தமிழில் கூட பங்கய என்றுதான் எழுதுகிறோம். அந்தக் காலத்தில் ஒட்டியிருந்த ஒரு நிலப்பரப்பு குமரிக் கண்டம். அப்போது மனித இனம் தோன்றியதா என்பதே சந்தேகம் .
ஆனால் பஃறுளி ஆறு, குமரிக்கோடு ஆகியன கடலில் மூழ்கியது உண்மையே. சிலப்பதிகாரமும் இறை யனார் அகப்பொருள் உரையும் கூறியதில் உண்மை உளது. அவை எல்லாம் இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் (BCE) நிகழ்ந்தவையாக இருக்கலாம். அங்கு தமிழினம் தோன்றியது நல்ல கற்பனையே. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஒரு பெரிய சுனாமி (Tsunami) ஏற்பட்டதை பூகர்ப்ப வியலாளரும் (Geologists) உறுதிப்படுத்துகின்றனர் .
இரண்டாம் தமிழ் சங்க கவிதை என்று சேர்க்கப்பட்ட பாடல்களும் மொழி நடையில் மாற்றம் இல்லாததால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளி இருக்க முடியாது. ஆகையால் களவியல் உரை சொல்லும் 10,000 ஆண்டுக்கு கணக்கு என்பது நம்புதற்கில்லை. அதை எழுதியவர் சங்கேத மொழியில் (Coded language) எழுதியள்ளனர். இவை எல்லாம் பாண்டிய நாட்டின் பழமையை இற்றைக்கு 2500 ஆண்டுக்கு முன் தள்ளும். அவ்வளவுதான்.(500 BCE)
இந்த மூன்று கற்பனைகளையும் ஒதுக்கிவிட்டு ராமாயண மஹாபாரதக் கூற்றுகளைக் காண்போம்.
TAGS — 3000 ஆண்டு, தமிழர்கள், PART 1

To be continued ………………………
ananthyadav51197
/ April 20, 2020Very Nice sir👌