3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – Part Two (Post No.7855)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7855

Date uploaded in London – 20 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ராமாயண , மஹாபாரதம்

ராமாயணத்தில் கபாடபுரம் என்ற இடை ச்சங்க கால நகரம் குறிப்பிடப்படுகிறது. மேலும் ராமன் இலங்கை வரை வந்துள்ளார். அங்கே ஒரு ஆட்சியும் நடந்து இருக்கிறது. ஆக இலங்கையில் ஆட்சி நடந்த போது தமிழ் நாட்டில் ஒரு அரசு இல்லாமலா போயிருக்கும்? ஆனால் ராவணன்- அகத்தியன் இசைப்போட்டி கதைகள் எல்லாம் பிற்கால எழுத்துக்களில்தான் உள்ளன. ஆகையால் இவைகளை வரலாறு என்று ஏற்பது இல்லை.

ராமர் வந்தது உண்மையே. கிஷ்கிந்தா என்னும் குகை நிறைந்த  கர்நாடகா ஹம்பி நகர குகைப் பகுதியில்  அரைகுறை (Semi Civilized) நாகரிக நிலையில் இருந்த வாலி, சுக்ரீவன், அனுமனை சந்தித்ததும் உண்மையே . அவர்கள் குரங்கு சின்னங்களை அணிந்ததால் பிற்காலத்தில் அவர்களைக் குரங்கு போல சித்தரித்து எழுதிவிட்டனர்.

மஹா பாரதத்தில் அர்ஜுனன் தென்னகம் வந்தது, சித்ராங்கதை என்னும் அல்லி ராணியை மணந்தது , பாண்டிய மன்னன் ஆட்சி ஆகிய குறிப்புகள் உள . இருந்தபோதிலும் இராமாயண மஹாபாரத்தக் குறிப்புகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லலாம். இந்துக்களுக்கு ஒரு குணம் உண்டு. வேத கால இலக்கியாயத்தில் மட்டும் கை வைக்கமாட்டார்கள் மற்ற எல்லா நூல்களையும் அப்டேட் UPDATE செய்துவிட்டனர் . ஆகையால் இவைகளையும் ஒதுக்கிவிடலாம். ஏனெனில் அவை குறிப்பிடும் காலங்கள் கி.மு. 3100 மற்றும் அதற்கு முன் நடந்தவை என்று காட்டுகின்றன . நமக்கு வரலாற்று, தொல்பொருள் ஆதாரம் இல்லை.

இதற்குப் பின்னர் தர்ம சாஸ்திரங்கள் வந்தன. மனு நீதி நூல் முதலியன தெற்கில் வாழ்ந்த திராவிடர்களைக் குறிப்பிடுகின்றன. வேத நூல் இயம்பும் சடங்குகளைப் பின்பற்றாத  50 பிள்ளைகளை விஷ்வாமித்திரர் தென்னக த்துக்கு நாடு கடத்தியதாகவும் அவர்களே திராவிடர், யவனர், சகரர், ஹுனர், சூத்திரர்கள் என்றும் பிற்கால நூல்கள் உரைக்கின்றன . அதாவது க்ஷத்ரிய நிலையில் இருந்து தாழ்ந்து சூத்திரர் ஆனவர்கள். விஸ்வமித்ரரோ க்ஷத்திரியனாகப் பிறந்து பிராமணன் ஆக மாறி ‘வசிஷ்டர்  வாயால் பிரம்மரிஷி’ பட்டம் பெற்றவர்.

ஆனால் தர்ம சாத்திரங்கள் அவ்வப்போது அப்டேட் UPDATE செய்யப்பட்டவை. 1950-ல் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தையே நாம் ஆண்டுதோறும் பார்லிமெண்ட் திருத்தங்கள் மூலம் அப்டேட் UPDATE (CONSTITUTIONAL AMENDMENTS) செய்கிறோம்.

கி.மு.700ல் தமிழர்கள் தலையில் பூ!

ஆயினும் கி.மு 700 என்று கணக்கிடப்படும் போதாயன தர்ம சூத்திரம் முதலியவற்றில் ‘தென்னிந்திய தட்சிணபதம்’ (Grand South Road) , ‘தலையில் பூச்சூடும்  வழக்கம்’ முதலியன வருவதால் அப்போது தென் இந்தியாவில் நாகரீகமுள்ள மக்கள் வாழ்ந்தது உறுதியாகிறது.

பாணினி சூத்திரம்

சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை – அஷ்டாத்யாயியை — எழுதிய பாணினி , மிளகு பற்றிக் குறிப்பிடுகிறார். கிரேக்க ஹெரோடோட்டஸ் போன்றோர் அரிசியைக் குறிப்பிடுகின்றனர். ஆக 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னகம் மிளகு அனுப்பியதை ஊகித்தறியலாம்  கோதாவரி வரை அஸ்மாக நாடு இருந்த குறிப்புகளும் உள . ஆனால் ராமர் போல கடற்கரை ஓரமாக நடந்து வந்தனரா அல்லது காடுகள் அடர்ந்த தண்டகாரண்யத்தையும் விந்திய மலையையும்கடந்து வந்தனரா ?

இதற்குப் புராணத்தில் விளக்கம் இருக்கிறது.

புராணங்கள் அனைத்திலும் மூன்று முக்கிய விஷயங்கள் அகத்தியரைப் பற்றி வருகின்றன.

1.வடக்கில் ஜனத்தொகை பெருகியது. (Population Explosion in North India) ஆகையால் சிவன் அவரைத் தெற்கே அனுப்பினார். அவர் 18 குடிகளை தன்னுடன் அழைத்து வந்ததாக பிற்காலத்தில் தமிழ் உரை ஆசிரியர்களும் எழுதினார்கள். உலகில் முதல் ஜனத்தொகைப் பிரச்சினை பற்றிய குறிப்பு இதுதான் .

2. அகத்தியர் விந்திய மலையை ‘கர்வபங்கம்’ செய்தார். நான் திரும்பிவரும் வரை தலை நிமிரக்கூடாதென்றார் . ஆனால் திரும்பி வரவே இல்லை. இதன் பொருள் முதல் முதலில் ஒழுங்கான சாலைப் பாதை அமைத்த என்ஜினீயர் (Engineer)  அகஸ்தியர். கர்வ பங்கம் என்பது மலையை மட்டம் தட்டுவது. பிற்காலத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்  டில் இந்த வழியாக மௌரியப் படைகள் சாலை அமைத்து தென்னகத்துக்கு வந்ததை மாமூலனாரும் சங்க இலக்கியப் பாடல்களில் பாடி இருக்கிறார்.

3.அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் என்று புராணங்கள் செப்பும். அதாவது முதல் முதலில் தமிழர்களைக் கடல் கடந்து அழைத்துச் சென்று தென் கிழக்காசிய நாடுகளில் இந்து நாகரீகத்தை நிலை நாட்டினார் என்பதை கடலைக் குடித்தார் என்று புராணங்கள் மொழியும்.

வடக்கில் இமய மலையைத் தகர்த்து கங் கை நதி நீரை உத்தரப் பிரதேசத்துக்குள் திருப்பிவிட்ட உலக மஹா என்ஜினீயர் பகிரதன் போனறவர் அகஸ்தியர் . அதே பாணியில் கேரளக் கடலில் விழுந்து வீணாகி வந்த காவிரி நதியை தமிழ் நாட்டுக்குள் திருப்பிவிட்டார். அடர்ந்த தண்டகாரண்ய காடுகளை சீர்படுத்தி விந்திய மலையை மட்டம்தட்டி சாலை அமைத்தது அகஸ்தியரை மஹா பெரிய (Great Civil Engineer) சிவில் என்ஜினியர் என்றும் ஸ்ரீ மாறன் என்ற பாண்டியனை வியட்நாமுக்கு அழைத்துச் சென்று முதல் இந்து ஆட்ச்சியை நிறுவியதால் சிறந்த ‘மரைன் எஞ்சினியர்’ (Great Marine Engineer)  என்றும் காட்டுகிறது.

அதுமட்டுமல்ல. அவர் பெரிய மொழியியல் (Great Linguist)  வித்தகர். ஆகையால் அவரை அழைத்து ‘தமிழ் மொழிக்கு புதிய இலக்கணம் செய்’ என்று சிவபெருமான் கட்டளையிட்டு தன் மகன் முருகனை அழைத்து ‘இவருக்குத் தமிழ் கற்பி’ என்றும் கட்டளையிட்டார். இதை பாரதியார் பாடல்வரை பல நுல்களிலும் காண்கிறோம் .

அகஸ்தியரின் காலம் என்ன?

அகஸ்தியர், குட முனி, கும்ப முனி, தமிழ் முனிவன் போன்றவற்றை கம்பராமாயணம் ஆகியவற்றில் காண்கிறோம். ஆயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்தில் அவர் வாழ்ந்த பொதிய மலையையும் இமய மலையையும் ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் புற நானுற்றுப் புலவர் பாடுவதால் அது அகஸ்தியர் பற்றியதே என்று கருதலாம். பிற்காலத்தில் நச்சினார்க்கினியர் முதலிய உரைகாரர்கள் அகத்தியன்– பாண்டியன் — இராவணன் ஆகியோரை தொடர்புபடுத்தி கதைகள் புனை ந்துள்ளனர் . இவைகளுக்கு வரலாற்று, தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கும் வரை நம்புதற்கில்லை.

ஆனால் பாண்டியர் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் அகஸ்தியரைக் குறிப்பிடுகின்றனர். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன்தான் (Second Century BCE) முதல் முதலில் பாண்டிய மன்னரையும் அகஸ்தியனையும் தொடர்புபடுத்தி சம்ஸ்கிருதத்தில் கவிபாடியுள்ளார்.

இப்பொழுது நாம் சங்கராச்சார்யார்கள், போப்பாண்டவர்கள் , தலாய் லாமாக்கள் என்று பரம்பரை பரம்பரையாக (Titles) அழைப்பது போல, அகஸ்திய கோத்திரத்தில் வந்த அத்தனை பெயரையும் அகஸ்தியர் என்றே எழுதினர் .

அப்படியானால் முதல் அகஸ்தியர் யார்? புறநானுற்றுப் பாடலில் கபிலர் இருங்கோவேள் என்னும் மன்னரைப் பாடுகையில் “உன்னைத் தெரியாதா, என்ன? நீ உன் வம்சத்தில் வந்த 49 ஆவது மன்னர் என்பதும் எனக்குத் தெரியும்” என்று பாடுகிறார். கபிலர் பாடியது 2000 ஆண்டுகளுக்கு முன்னர். ஒரு தலைமுறைக்கு 20 முதல் 25 ஆண்டு கொடுப்பது உலக வழக்கு. அதன்படி அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய முன்னோர் தமிழ் நாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியானால் கி.மு. ஆயிரத்தில் (1000 BCE) அகஸ்தியர் வந்தார். ஏனெனில் இப்பாட்டுக்கு உரை எழுதியோர் அகஸ்தியர் தலைமையில் 18 இன மக்கள், அதாவது 18 குடிகள் தமிழ் நாட்டுக்குள் (3000 ஆண்டுகளுக்கு முன்னர்) வந்தனர் என்கின்றனர்  . அதற்கு முன்னரும் மனிதர்கள் வாழ்ந்தது பழங்கற்கால, புதிய கற்கால கருவிகள் மூலம் (Palaeolithic, Neolithic Tools)  தெரிகிறது. நாம் பேசுவதெல்லாம் தமிழர் நாகரீகம் (Civilized Tamils) பற்றிப்பேசுவதாகும்.

மஹாவம்சமும் சங்க இலக்கியமும்

இலங்கை வரலாற்றை மஹாவம்சம் என்னும் பாலி மொழி நூல் பகரும். பிராமணர்களும் க்ஷத்ரியர்களும் பெரிய தவறு செய்தாலும் மரண தண்டனை கிடையாது. ஆனால் நாடு கடத்தி விடுவார்கள். வங்காளத்தில் துஷ்டத்தனம் செய்த விஜயனைக் கப்பலில் ஏற்றி நாடு கடத்தியபோது அவன் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் கரை இறங்கினான். அங்கு குவேனி என்ற நாக கன்னிகை அரசாண்டாள் . அவளை மணந்தால் அது க்ஷத்திரிய வம்சத்துக்கு ஒவ்வாது என்றும் அருகிலுள்ள பாண்டிய நாட்டில் பெண் எடுப்பதே நலம் என்றும் பிராமணர்கள் ஆலோசனை வழங்கினர் . உடனே மதுரை மாநகரில் தண்டோரா போட்டு “மன்னரை மணக்க பெண்கள் தேவை” என்று அறிவித்தனர். பாண்டிய மன்னன் தன் மகளையும் மந்திரிகள் தங்கள் பெண்களையும் அனுப்பி விஜயன் கோஷ்டியை மணந்து பெங்காலி- தமிழ் கலப்பு இனத்தை உருவாக்கியது இவர்களே சிங்களவர்கள். இது மஹா  வம்சம் சொல்லும் செய்தி. அதில் குறிப்பிடப்படும் ‘பாண்டியர் மதுரை’ கடலில் மூழ்கிய தென் மதுரையாக இருக்கவேண்டும் . ஆக 2600 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய ஆட்சி தென்னாட்டில் புகழுடன் விளங்கியது தெரிகின்றது

காளிதாசன் எழுத்துக்குப் பின்னர் வந்த மகாவம்ச எழுத்தைக் கண்டோம் (Mahavamsam ‘written’ later). இதற்கிடையில்  சந்திர குப்த மௌரியன் ஆட்சி காலத்தில்  இருந்த மெகஸ்தனீஸ் என்ற கிரேக்க தூதனும் மதுரையில் ‘பாண்டேயா’ என்ற மஹாராணி இருந்ததாக, ‘இண்டிகா’ என்னும் நூலில்  எழுதிவைத்துள்ளார். அது பாண்டிய ராணி மீனாட்சி அம்மனின் கதை என்பது அறிஞர் பெருமக்களின் துணிபு.

சங்க இலக்கியத்தில் ‘பெருஞ்சோறு’

இதற்குப்பின் எழுந்த சங்க இலக்கியத்தில் இமயமலை, கங்கை பற்றி சுமார் 20 குறிப்புகள் இருப்பதால் அவர்களுக்கு இமயம் முதல் குமரி வரை தெரிந்து இருந்ததை நாம் அறிந்து கொள்கிறோம். அங்கே சில கதைகள் பேசப்படுகின்றன . ஒரு சேர மன்னன் பாண்டவர் படைக்கும் , கவுரவர் படைக்கும் சோறு கொடுத்ததாக உரை கார்கள் எழுதியுள்ளனர். செய்யுளில் வரும் சொல் பெருஞ்சோறு’ என்பதாகும். தமிழர்கள் மகாபாரதம் நிகழ்ந்த கி.மு.3138 ஆம் ஆண்டு ஆட்சி செய்தற்கான சான்றுகள் இல்லை. மாபாரதப் போரே கி.மு.1500 என்று சொல்லும் அளவுக்குத்தான் தொல்பொருட்துறை சான்றுகள் கிடைக்கின்றன. ஆகவே பெருஞ்சோறு என்பது அவர் நினைவாக படைக்கப்படும் படையலாக இருக்க வேண்டும். இப்போதும்கூட சைவ நாயன்மார்கள் சிவபதம் எழுதிய குருபூஜை நாட்களில் தமிழர் கோவில்களும் மடங்களும் அன்னதானம் செய்வதைப் பார்க்கிறோம்

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 10, 000 ஆண்டு வீச்சில் இருந்தது என்பது  எகிப்திய சுமேரிய நாகரிகங்களை எல்லாம் சாப்பிட்டு ஏப்பம் விடுவதை போன்றதாகும் . அதற்குச் சான்று என்பது உலகில் எங்கும் கிடைக்காது. பாபிலோனிய சுமேரிய நாகரிகங்களில் கிடைத்த சொற்களும்  சம்ஸ்கிருத சொற்களே (கபி = குரங்கு , மரிச = மிளகு, துகி =சிகி =மயில் ; அகில்).

சங்க இலக்கியம் காட்டும் தெளிவான தொடர்பு இத்தாலியின் ரோம் (Roman Contacts) நகருடையதே

அசோகன் காரவேலன்

மௌரிய மன்னர் அசோகனின் 2300 ஆண்டுப் பழமையான பிராமி லிபி கல்வெட்டுக்களும் 2130 ஆண்டுப் பழமையான ஒரிஸ்ஸா மன்னன் — சமண மத ராஜா – காரவேலன் கல்வெட்டுகளும் மூவேந்தர் பற்றிக் குறிப்பிடுவதால் இவற்றையே முதல் தொல்பொருட்துறை (Earliest Historical, Archaeological) சான்று  என்று கற்றறிந்தோர் கொண்டாடுவர்.

இதற்கு சற்று முந்தைய சாணக்கியனின் — கௌடில்யரின் — அர்த்த சாஸ்திர பொருளாதார நூலும் ‘பாண்டிய  கவாடம்’  என்று முத்துக்களைக் குறிப்பிடுவதால் தென்பாண்டி முத்து மகத சாம்ராஜ்யம் வரை புகழ் பரப்பியதை அறிகிறோம்.

முடிவுரை

வேத கால இலக்கியம் கரை படாதது- பிறர் கைபடாதது – இடைச் செருகல் இல்லாதது – என்று அறிஞர் உலகம் போற்றுவதாலும், அகஸ்திய முனிவர் இருங்கோவேளுக்கு 49 தலை முறைக்கு முன்னர் தமிழ் நாட்டுக்கு வந்ததை உரைகார்கள் செப்புவதையும் கொண்டு  3000 ஆண்டுக்கு முன் தமிழர்கள் என்று புஸ்தகம் எழுத முடியும். பாணினி சொல்லும் மிளகும், ஹெரொடோரோட்டஸ் சொல்லும் அரிசியும். போதாயனர் சொல்லும் தமிழர்களின் தலைகளில் சூடும் பூவும், கௌடில்யர் சொல்லும் கபாட முத்தும் இதற்குத் துணையாக நிற்கும்.

ஒரு காலத்தில் சிந்து-சரஸ்வதி முத்திரைகளை எவரேனும் படித்தாலும் அது சம்ஸ்கிருத – தமிழின் மூல மொழியாக இருக்குமேயன்றி நாம் அறிந்த தமிழ், சம்ஸ்கிருதமாக இராது என்பதே நான் கண்ட உண்மை.

வாழ்க  தமிழ்.

tags – 3000 ஆண்டு, தமிழர்கள், part 2

–சுபம்—

Leave a comment

2 Comments

  1. ananthyadav51197

     /  April 20, 2020

    sir very informative .☺️ Thank You So much

  2. ananthyadav51197

     /  April 20, 2020

    அகத்தியர் அழைத்து வந்த 18 குடிகள் யாருன்னு விளக்குங்க சார்..

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: