ஹிந்தி படப் பாடல்கள் – 13 – லதா மங்கேஷ்கரின் ஆட்சி! (Post Mo.7859)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7859

Date uploaded in London – – 21 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 13 – பெண் பாடகிகள் – லதா மங்கேஷ்கரின் ஆட்சி!

R. Nanjappa

கலையும் கலைஞனும்

கலை பற்றி பேசினால் கலைஞனைப் பற்றியும் பேசவேண்டி வருகிறது. கலைக்கு உருவம் கொடுப்பது கலைஞன் தானே!

உலகப் புகழ்பெற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ ஒரு நாள் ரோம் நகரின் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். ஒரு வீடு இடிக்கப்பட்டுக் கிடந்தது. அதனிடையே ஒரு பெரிய பளிங்குக் கல்லும் கிடந்தது. அதைச் சற்றுக் கவனித்த ஏஞ்சலோ, அதில் ஒரு அழகிய சிற்பம் வடித்தார். கண்டவர்கள் வியந்தனர். ஆஹா, உடைந்து கிடந்த கல்லில் இததனை அழகிய சிற்பமா என வியந்தார் ஒருவர். ‘அன்பரே! சிற்பம் அதில் புதைந்து கிடந்தது. அந்தக் கல்லிலிருந்து வேண்டாத பகுதிகளை அகற்றியது மட்டும் தான் என் வேலைஎன்றார் ஏஞ்சலோ. சிற்பம் சிற்பியின் மனதில் தான் உதிக்கிறது! Art lives in and through the artiist!

மலையே உன் நிலையை நீ பாராய்; கலைஞன் கை உளியாலே, கற்பனைத் திறத்தாலே”  என்று ஒரு பாட்டுவணங்காமுடி படத்தில் வரும்தஞ்சை ராமையா தாஸ் எழுதியது. கற்பனைத் திறத்தாலே கல் கலையாகிறது!

Stone is Prakruti-nature; sculpture is Samskruti-art and culture! The transformation is due to the artist!

புலவர்கள் பெண்களை வர்ணிக்கும் போதுசிற்பி செதுக்காத பொற்சிலையேஎன்பார்கள்! இப்படி எழுதினார் கே.பி.காமாக்ஷி என்ற கவி. இப்பாட்டை .எம். ராஜா தன் மதுரக் குரலில் பாடினார், ‘எதிர்பாராததுஎன்ற படத்தில்.

நம் இசையமைப்பாளர்களும் சிற்பிகள் தான்! ராகம் என்பது பெரிய பர்வதம் போன்றது. அதில் வேண்டிய சில பகுதிகளை மட்டும் வைத்து பாட்டின் மெட்டை உருவாக்குகிறார்கள்! கற்பனைத் திறத்திற்கேற்ப வெவ்வேறு மெட்டுகள்! கற்பனை இன்றி கையில் என்ன உளி இருந்தென்ன பயன்

கல்கி‘. ‘தேவன்பேனா பிடித்தால் இலக்கியம் பிறக்கிறது; கோபுலு, சில்பி பென்சில் எடுத்தால்  கார்டூன், சித்திரம் ஆகிறது. நம்மால் கிறுக்கத்தானே இயலும்! கலைஞன் இன்றிக் கலை வாழுமா?

பாடகரின் குரல் வளம் இயற்கை தந்தது. சங்கீதத்தை முறையாகக் கற்போர் குரல் மேலும் பண்படுகிறது. ஒவ்வொருவர் குரலுக்கும் ஒரு தனித் தன்மை உண்டுபலம், பலவீனம் உண்டு. இதை உணர்ந்து குரலுக்கேற்றபடி மெட்டமைத்து பாடச் செய்வது இசையமைப்பாளார்தான். இந்த வகையிலும் இவர் சிற்பிதான். பாட்டு பிரபலமானால் பாடகனைப் புகழ்கின்றனர். இது அவ்வளவு சரியல்ல!

எல்லா இசையமைப்பாளர்களும் எல்லா பாடகர்களையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. முஹம்மத் ரஃபியின் குரலில் இனிமை உண்டு, கம்பீரம் உண்டு; ஆனால் இதைச் சரியாக வெளிப்படுத்தியவர்கள் எத்தனைபேர்? நௌஷத், நய்யார், பர்மன்ஜெய்தேவ் போன்ற சிலர்தான்.

இதில் எஸ்.டி.பர்மன் எப்படி உழைத்தார் என்று  அனில் பிஸ்வாஸ் சொல்லியிருக்கிறார். ரஃபி பஞ்சாபிகுரல் கனமாக இருக்கும். பர்மன் பெங்காலிஅதுவும் நாட்டுப்புற இசையிலும் சாஸ்திரீய இசையிலும் நாட்டம் உள்ளவர். இவர் பாணிக்கு ரஃபியின் குரல் ஏற்றதல்ல என்று கருதினார். குருதத் ப்யாஸா படம் எடுத்தபோது, ரஃபியின் குரல் அவருக்கு  பின்னணீக் குரலாக ஏற்கெனவே  நன்குஅறிமுகமாகியிருந்தது. அதனால் ப்யாஸாவிலும் ரஃபி குரலிலேயே பாட்டு இருக்கவேண்டும் என்று சொன்னார். இதற்காக பர்மன் தினமும் ரஃபியை வரவழைத்து அவருக்கு குரல் பயிற்சி கொடுத்தாராம். ப்யாஸா படத்தில் ரஃபியின் பாட்டுக்கள் அமோகமாக இருந்தன ஆனால் பின்னிருந்த பர்மனின்  உழைப்பு  எத்தனை பேருக்குத் தெரியும் ? பாடகர்களை ஒரேயடியாகப் புகழ்வது தவறு.

இதே பர்மனுக்கு தலத் முகம்மது குரல் அவ்வளவாகப் பிடிக்காது! ‘சுஜாதா’ படத்தில் ஒரு பாட்டை தலத் பாடவேண்டும் என டைரக்டர்  பிமல் ராய் சொல்லிவிட்டார். பாட்டு பதிவாவதற்குமுன்  ரிகார்டு அறையில் பர்மன் தலத்திடம்” நீ தயவு செய்து என் பாட்டைக் கெடுத்துவிடாதே –

Please don’t spoil my song’என்று சொன்னாராம்! தலத் கோபத்தை அடக்கிக்கொண்டு பாடினார். “ஜல்தே ஹை ஜிஸ்கேலியேஎன்ற அந்தப் பாட்டு சூபர் ஹிட் ஆனதுஇதில் பெருமை முழுதும் தலத் குரலுக்கே! இந்தப் பாட்டை வேறு எவர் குரலிலும் நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலவில்லை!   இங்கு பர்மன் இடறினார்ஆம்,

Even Homer nods!

பாடகிகள்லதா மங்கேஷ்கர்.

 பாடகிகள் என்று வந்தால், 35 ஆண்டுகளுக்குமேல் லதா மங்கேஷ்கரின் ஆட்சிதான். ஷம்ஷாத் பேகம், கீதா தத், ஆஷா போன்ஸ்லே, மீனா கபூர், கமல் பாரோட், சுமன் கல்யாண்புர் என்று பலர் இருந்தாலும் லதாவின்கையே ஓங்கியிருந்தது. லதா வேறு யாரையும் வர, வளர விடவில்லை! இது வெறும் வதந்தியல்ல. உதாரணத்திற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன்.

1955ல் உரன் கடோலா என்ற படம் வந்தது. நௌஷத்தின் ஹிட் இசை கொண்டது. இது தமிழில்வான ரதம்என்ற பெயரில் டப் செய்யப்பட்டது ஹிந்தியில் லதா பாடிய பாடல்களைத் தமிழில் பாட பாலஸரஸ்வதி தேவி என்ற பாடகி தேர்வுசெய்யப் பட்டார். [ குரல் மிக இனிமையானதுதேன் போல் இருக்கும்: “கலையாத ஆசைக் கனவே எந்தன் கருத்தை விட்டகலா நினைவேஎன்றராஜராஜன்படத்துப் பாடல் இவர் பாடியது. சிலருக்கு நினைவிருக்கலாம். “நீல வண்ணக் கண்ணா வாடாபாட்டையும் இவர்தான் பாடினார்.] நௌஷத் இவரை பம்பாய்க்கு அழைத்து ரிஹர்ஸல் எல்லாம் முடித்து ஒரு பாடலையும் பதிவுசெய்துவிட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்ட லதா , தமிழ் பாட்டுக்களையும் தானே பாடவேண்டுமென்றுஅடம்பிடித்தார். நௌஷத் பின்வாங்கினார். பாலஸரஸ்வதிக்கு கல்தாதான்! தமிழ் பாட்டுக்களும் லதா குரலிலேயே பதிவாயின. ( ரஃபி பாட்டுக்களைத் தமிழில் பாடியவர், டி..மோதி. அருமையாகப் பாடியிருக்கிறார்.)

இன்னொரு சம்பவம். 1962 சீன ஆக்ரமிப்புக்குப்பின், தேச பக்திப் பாடல் ஒன்றை கவி பிரதீப் எழுதினார். “மேரே வதன் கே லோகோஎன்ற இந்தப் பாட்டிற்கு சி.ராம்சந்த்ரா இசையமைத்தார். ஆஷா போன்ஸ்லேயுடன் சேர்ந்து லதா பாடுவதாக ஏற்பாடு. டெல்லியில் பிரதமர் நேரு முன்னிலையில் பாடவேண்டும். ரிஹர்சல் எல்லாம் முடிந்துஎல்லோரும் டெல்லி போக விமான டிக்கெட்டும் வாங்கியாயிற்று. கடைசி நிமிஷத்தில், லதா, இதைத் தானே பாடவேண்டுமென்று கவி பிரதீப்பைக்  கட்டாயப் படுத்தினார். பிரதீப் ராம்சந்த்ராவை நெருக்கவேண்டியதாயிற்று. இதில் முக்கிய விஷயம் , அந்த நாட்களில் ராம் சந்த்ராவுக்கும் லதாவுக்குமிடையே பேச்சுவார்த்தை கூட இல்லை! இறுதியில் லதாவே பாடினார்!

லதா கையாண்ட இன்னொரு முறை, எந்த  இசையமைப்பாளரானாலும் , ஹீரோயின் பாட்டுக்கள், முக்கிய பாடல்கள், நல்ல மெட்டுக்கள் ஆகியவை லதாவுக்கே வரவேண்டும்! அதனால்தான் ஹிந்திப் படங்களின் பிரபல சோலோ பாடல்கள் பெரும்பாலும் லதா குரலிலேயே இருக்கின்றன! மற்றவர்களுக்கு டூயட்கோரஸ், கிளப் பாடல்கள்  போன்றவைதான். லதாவின் இந்தப் போக்கை நான்லதாகிரிஎன்று கருதுவேன்.  [குண்டாகிரி, தாதாகிரி போன்றவை  நம் ஊர் கட்டைபஞ்சாயத்து போன்ற முறைகளைக் குறிக்கும் சொற்கள்.] லதா இல்லாமல்  திரை இசை இல்லை என்ற நிலை உருவாகியதுலதாவைமஹாராணிஎன்றே மறைவில் பேசிக்கொள்வர்! லதா இல்லாமல் இறுதிவரை  இசை அமைத்தவர் .பி.நய்யார் ஒருவர்தான்

காதல் பாட்டு-பாடகிகள்

இதை எல்லாம் ஏன் இங்கே சொல்லவேண்டியதாயிற்றுபாடகிகள் பாடிய காதல் பாட்டுக்கள் என்று தேடினால் பிறர் பாடிய பாட்டு ஒன்று கூடத் தேறாது! டூயட் கிடைக்கும், தனிப் பாடல் கிடைக்காது!

கோரே கோரே !

गोरे गोरे बांके छोरे कभी मेरी गली आया करो
गोरी गोरी बांकी चोरी चाहे रोज़ बुलाया करो

கோரே கோரே   பா(ன்)கே சோரே

கபீ மேரி கலீ ஆயா கரோ

கோரீ கோரீ பா(ன்)கீ  சோரீ

சாஹே ரோஜ் புலாயா கரோ

அழகிய யுவனே, அழகிய யுவனே

எப்பொழுதுதாவது எங்கள் இடத்திற்கு வருவதுதானே?

அழகிய பெண்ணே, அழகிய பெண்ணே,

வேண்டுமென்றால் தினமும் அழைப்பது தானே!


रोज़ रोज़ मुलाकात अच्छी नहीं

प्यार में ऐसी बात अच्छी नहीं
थोड़ा थोड़ा मिलना थोड़ी सी जुदाई
सदा चांदनी रात अच्छी नहीं
छोडो छोडो जिया तोड़ो
किसी और को जलाया करो
गोरी गोरी बांकी चोरी

ரோஜ் ரோஜ் முலாகாத் அச்சீ நஹீ

ப்யார் மே ஐஸீ பாத் அச்சீ நஹீ

தோடா டோடா மில்னா தோடீ ஸி ஜுதாயி

சதா சாந்த்னீ  ராத் அச்சீ நஹீ

சோடோ சோடோ ஜியா தோடோ

கிஸீ ஔர் கோ ஜலாயா கரோ

கோரீ கோரீ……….

தினம் தினம் கூடிப் பேசுவது நல்லதல்லவே!

காதலில் இந்தப் போக்கு நல்லதல்லவே!

சிறிது சிறிது பேச்சுசிறிது  சிறிது பிரிவு– (இதுதான் சரி)

தினமும் பௌர்ணமி சரிவராதே

இந்தப் பேச்செல்லாம்  சொல்லி மனதில் வெறுப்பேற்றாதே

வேறு யாரிடமாவது வைத்துக்கொள்

அழகிய பெண்ணே, அழகிய பெண்ணே…..

छोटी सी बात पर ये लड़ाई
प्यार की दुहाई है प्यार की दुहाई
अँखियो में अंखिया दाल के तो देखो
चेहरे पे गुस्सा है दिल में सफ़ाई
घडी घडी बड़ी बड़ी

अच्छी बाते ना बनाया करो
गोरी गोरी बांकी चोरी
चाहे रोज़ बुलाया करो
गोर गोर बांके छोरे


சோடீ ஸி பாத் பர் லடாயீ

ப்யார் கீ துஹாயீ ஹை ப்யார்கீ துஹாயீ

(ன்)கியோ மே (ன்)கியா டால் கே தோ தேகோ

சேஹ்ரே பே குஸ்ஸா ஔர் தி மே சஃபாயீ

கடீ கடீ படி படீ

அச்சீ பாத் பனாயா கரோ

கோரீ கோரீ மா(ன்)கீ சோரி

சாஹே ரோஜ் புலாயா கரோ

சின்னச் சின்ன விஷயத்திற்கு இப்படிச் சண்டையா?

இல்லை, இது காதலின் போக்குதான்!

கண்களோடு கண்களைப் பொருத்திப் பார்!

முகத்தில் கோபம் பொய், மனதில் எதுவுமில்லை  என்று தெரியும்!

ஏன் இப்படி ஏதோ உளறுகிறாய்?

ஏதோ காரணம் சொல்லித்  திரியாதே!

அழகிய பெண்ணே, அழகிய பெண்ணே ..

Song: Gore Gore Film: Samadhi 1950  Lyricist: Rajinder Krishan..

Music: C.Ramchandra  Singers: Ameerbai Karnataki, Lata Mangeshkar

இது கல்லூரி மாணவிகள் இரு பிரிவாகப்  பிரிந்து நடத்தும் ஒரு நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்பட்ட பாடல். இது காதல் பாடலா? இது காதலின் இயல்பைச் சித்தரிக்கும் பாடல்!

இங்கே ஒரு ரகசியத்தைச் சொல்கிறார் கவி. சிறிது பிரிவே காதலுக்குச் சுவை கூட்டுவது. இதை  விரஹம் என்பர். அதே போல் சிறுசிறு சச்சரவுகள். இதைத் திருவள்ளூவர் சொல்கிறார்:

ஊடலின் தோன்றும் சிறுதுளி நல்லளி

வாடினும் பாடு பெறும்                 1322

ஊடுதல் காமத்திற் கின்பம்; அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.                 1330

நம் இலக்கிய மரபு எப்படிக் கவிகளால்  தொடரப்படுகிறது, பாருங்கள்!

There is a universal quality in poetry, which itself is universal language!

This tune is based on an American song ‘Chico Chico from Puerto Rico”, by Edmundo  Ross.. This was a smash hit. It was C.Ramchandra who introduced Western beat in our cine music. The two ladies sing in contrasting styles! Amirbai was a popular singer before Lata, but lost market after Lata’s coming. Here she sings for the male group, while Lata sings for the heroine! Rajinder Krishan’s lyric is superb.

 தமிழில் இந்த மெட்டு  “ஐயா சாமீ, ஆவோஜீ சாமீஎன்ற பாட்டாக வந்தது

.

जाने क्या तूने कही
जाने क्या मैंने सुनी
बात कुछ बन ही गई

ஜானே க்யா தூ நே கஹீ

ஜானே க்யா மைனே ஸுனீ

பாத் குச் பன் ஹீ கயீ..

நீ என்ன  சொன்னாயோ?

நான் என்ன கேட்டேனோ

ஏதோ விஷயம் நடந்திருக்கிறது!

सनसनाहट सी हुई, थरथराहट सी हुई
जाग उठे ख़्वाब कई, बात कुछ बन ही गई
जाने क्या तूने कही

ஸன்ஸனாஹட் ஸீ ஹுயீ,

தர்தராஹட் ஸீ ஹுயீ

ஜாக் உடே க்வாப் கயீ,பாத் குச் பன் ஹீ கயீ

ஜானே க்யா

ஏதோ விவரம் விளங்காத பேச்சு,,

ஏதோ உடலில் ஒரு அசைவு

ஏதோ கனவு விழித்துக்கொண்டது

ஏதோ விஷயம் நடந்திருக்கிறது

नैन झुकझुक के उठे, पाँव रुकरुक के उठे
गयी चाल नई, बात कुछ बन ही गई
जाने क्या तूने कही..

 நைன் ஜுக் ஜுக் கே உடே,

பா(ன்)வ் ருக் ருக் கே உடே

ஆகயீ சால் நயீ,

பத் குச் பன் ஹீ கயீ

ஜானே க்யா….

பார்வை மெல்லமெல்ல மேலெழுந்தது

கால்கள் தடுமாறி நடந்தன

புதிய நடை பிறந்தது

ஏதோ விஷயம் நடந்திருக்கிறது

ज़ुल्फ़ शाने पे मुड़ी, एक खुशबू सी उड़ी
खुल गए राज़ कई, बात कुछ बन ही गई
जाने क्या तूने कही… 

ஜுல்ஃப் ானே பே முடீ,

ஏக் குஷ்பூ ஸீ உடீ

குல் கயே ராஜ் கயீ,

பாத் குச் பன் ஹீ கயீ

ஜானே க்யா தூனே கஹீ….

கூந்தல் அவிழ்ந்து தோளில் புரண்டது

மெல்லிய மணம் கமழ்ந்தது

ஏதோ ரகசியம் வெளிவந்தது

ஏதோ விஷயம் நடந்திருக்கிறது!

நீ சொன்னது என்னவோ, நான் கேட்டது என்னவொ!

Song: Jane kya tune kahi  Film: Pyaasa 1957 Lyricist: Sahir Ludhianvi

Music: S.D.Burman  Singer: Geeta Dutt

இந்தப் பாட்டு அசல் கவிதை. ஒரு கவிதான் மொழிபெயர்க்க முடியும். காதல் வசப்பட்ட  மன நிலையை குறிப்பால் உணர்த்தும் வரிகள்.

இதை சினிமாவுக்காக ஸாஹிர் எழுதவில்லை. ப்யாஸா படம் ஒரு கவிஞன் வாழ்க்கை பற்றியது. இதை எடுப்பது என்று முடிவானவுடன்  தான் ஏற்கெனவே எழுதிவைத்திருந்த பல கவிதைகளை குரு தத்திடம் கொடுத்து வேண்டியதை எடுத்துக்கொள்ளச் சொன்னார். ஒரு வரி, இரண்டு வரி எனப் பல கவிதைகளை குருதத் எடுத்துக்கொண்டார். அப்படி எடுத்தது இந்தக் கவிதை. ஆனால் இதை கதாநாயகி மீது படமாக்கவில்லை! அதனால் தான் சில பாடல்களைத் தனித்துப் படிப்பது சிறந்தது!

இதற்கு பர்மனின் இசை அபாரம்! பல புதிய உத்திகளைக் கையாண்டார்ரிகார்டிஸ்ட் முகுல் போஸ் உதவியுடன்! சைனா மணி Bells  பயன்பாடு புதுமையானது!

இது கீதா தத் பாடிய மிகப் புகழ்பெற்ற பாடல். அவரின் குரலில் ஒரு கவர்ச்சி இருக்கும். பல காரணங்களினால் இவர் அதிகம் பாடவில்லை. லதாவின் ஆதிக்கத்தினால் நாயகிகளுக்குப் பாடும் வலுவான பாடல்கள் இவருக்குக் கிடைக்கவில்லை.

இந்தப் பாடலின் மெட்டு வங்காள மொழியில் பர்மன் பாடிய தனிப்பாடல் ஒன்றின் மீது அமைந்தது.

Mono dilo na bandhu  என்ற அந்தப் பாடலும் ஹிட் ஆனதே!

ஸுமன் கல்யாண்பூர் குரல் ஏறத்தாழ லதாகுரல் போன்றே இருக்கும். ஆஷா  குரல் தனிப்பட்டதுஇவர்களுக்கும் தனிப்பட்ட காதல் பாட்டுக்கள் அதிகம் இல்லை.

இனி, நாம் லதாவின் பாடல்களைப் பார்க்கலாம்.

tags — லதா மங்கேஷ்கர், ஹிந்தி படப் பாடல்கள் – 13

****

Leave a comment

1 Comment

  1. Kuppuswamy Kunchithapadam

     /  April 21, 2020

    I do not Hindi but like to hear the songs of Latha and the blog has been presented very well by Mr.R. Nanjappa and all the best
    kkswamy

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: