ஹிந்தி படப் பாடல்கள் – 15 – ராகமும் மெட்டும்! (Post No.7869)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7869

Date uploaded in London – – 23 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 15 – ராகமும் மெட்டும்!

R. Nanjappa

ராகமும் மெட்டும்

திரை இசையின் தோற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் இசையமைப்பாளர்களும்  (இவர்களைஇசைஞர்கள்எனச் சொல்லலாமா?] பாடலாசிரியர்களான கவிஞர்களும் இணைவதுதான் அடிப்படை. இசை கடல்போல் பரந்து  இருக்கிறதுஇடத்திற்குத் தகுந்தமாதிரி மெட்டமைப்பது சுலபமல்ல. ஒரு ராகத்தை அப்படியே எடுத்தாண்டால் எடுக்காது! அதற்கு இசைஞன் தேவையில்லை. ராகத்தின் ஒரு பகுதியை  வைத்துசில ஸ்வரங்களை வைத்துகற்பனையுடன் மெட்டு வருவதுதான் அருமை! ஆங்கிலக் கவி  ராபர்ட் ப்ரௌனிங்க் சொல்கிறார்:

And I know not if, save in this, such gift be allowed to man,

That out of three sounds he frame, not a fourth sound, but a star.

Consider it well: each tone of our scale in itself is nought;

It is everywhere in the world- loud, soft, and all is said.

Give it to me to use! I mix it with two in my thought:

And there! Ye have heard and seen: consider and bow the head!

[Robert Browning: ABT VOGLER ]

அனேகர்  “பாட்டுஎன்று ஏதோ எழுதிவிடலாம்சொற்களை அடுக்கிவிடலாம். அதைக் கவிதையாக எழுதுவது சுலபமல்ல. உதாரணம் சொன்னால் கோபம் வரலாம். இந்த தமிழ்ப் பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்:

ஓங்காரமாய் விளங்கும் நாதம் அந்த 

ரீங்காரமே இன்ப கீதம்

ஆங்கார உள்ளமே அமைதியும் பெறுமே

நீங்காத துயர் மாறி நிம்மதி தருமே

ஓங்காரம்ரீங்காரம்ஆங்காரம்ஒலியின் ஜாலம், சரி

ஓங்காரம் ரீங்காரமாகுமா? ரீங்காரம் கீதமாகுமா? ஒருவருக்கு கோபமோ, வருத்தமோ, கவலையோ இருக்கும் போது இசையை ரசிக்க முடியுமா? கொரோனா நோய் உள்ள வீட்டில் இந்தப் பாடல் ரசிக்குமா?

இது நல்ல சினிமா பாட்டே தவிர, கவிதையாகுமா?

நல்ல இசைஞனும் கவிஞனும் சேருவது  சிறந்த பாடல் வருவதற்கு வழி வகுக்கிறது.

மெட்டாபாடலா? எது முதல்?

இசைஞர்கள்கவிஞர்கள் தொடர்பான முக்கிய விஷயம்மெட்டா, பாடலா, எது முதலில் வருவது என்பது பற்றியது.

சில இசை டைரக்டர்கள் முதலில் மெட்டமைப்பார்கள்டடடா, டட்டடா, என்றெல்லாம் ஏதோ சொற்களைப் போட்டு மெட்டு இருக்கும் . அதற்குப் பாட்டு எழுதவேண்டும்/ ஸ்ரீ420 படதில் வரும்ராமையா வஸ்தாவய்யாஎன்ற பாட்டு இப்படி உருவானதுதான்! மியூசிக் இயக்குனர் ஷங்கர் (ஜெய்கிஷன்ஹைதராபாத்தில் இருந்தவர், தெலுங்கு தெரியும். அதனால் மெட்டமைக்கும்போது இந்த தெலுங்கு வார்த்தைகளைப் போட்டார்! அது தயாரிப்பாளருக்குப் பிடித்துப் போகவே , அதைத் தொடர்ந்தே ஷைலேந்த்ரா மீதிப் பாடலை எழுதி முடித்தார். இந்தப் பாட்டு இந்தியா முழுதும் ஹிட் ஆனது மெட்டுக்குப் பாட்டு என்ற உத்தியை தீவிரமாகப் பின்பற்றியவர்கள் எஸ்.டி பர்மன், ஷங்கர் ஜய்கிஷன்.

ஆனால் சில கவிஞர்களும், கவிதையில் பிடிப்புள்ள இசைஞர்களும் இதை ஒப்புக்கொள்வதில்லை. இது கவியின் சுதந்திரக் கற்பனையை குறுக்குவதாகும் என்பது அவர்கள் கருத்து. பொதுவாக ஒரு சிறந்த கவி  பாடல் எழுதும்போது அதனுள் ஒரு rhyme, metre பொதிந்திருக்கும். [பாரதியார் பாடல்களுக்கு அவரே ராகம் குறித்திருக்கிறார்இது தமிழ் இலக்கிய மரபும் கூட. ஒவ்வொரு வகைப் பாடலும் உரிய ராகத்தில் பாடப்படவேண்டும். இதை டாக்டர் .வே.சா அவர்கள் தன் சரித்திரத்தில் எழுதியிருக்கிறார். அதன்படி தான் மெட்டு அமைய வேண்டும். அதனால் சில இசை டைரக்டர்கள் முதலில் பாடலைப்  பெற்று அதற்குத் தக்க இசைஅமைப்பார்கள். சி.ராம்சந்த்ரா, ரவி போன்றவர்கள் இதற்கு உதாரணம்.

எது சிறந்தது? இருவகையிலும்  சிறந்த பாடல்கள் உருவாகி மக்களிடையே பிரபலமாகியிருக்கின்றன. ஆனால் எழுதிய பாட்டுக்கு மெட்டமைப்பது சற்றுக் கடினம்அதிக திறமை தேவை. “சலோ இக் பார் ஃபிர்ஸே” [ படம்: கும்ராஹ்] போன்ற சிறந்த பாடல், கவிதை முதலில்  எழுதப்படாமல் வந்திருக்க முடியாது

இந்த விதத்தில் ஒரு இசைஞருக்கு ஒரு கவி  ஏற்புடையதாகி ஒரு “டீம்” உருவாகிறது-அதற்கு ஒரு “கெமிஸ்ட்ரி” தோன்றி வளர்கிறது. மிகப் பல பிரபலமான பாடல்கள் இதன் விளைவுதான்!

காதல் டூயட் !

இந்திய திரை இசையில், காதல் பாடல் என்றால் , முதலில் கவனத்திற்கு வருவது, டூயட் பாடல்கள்தான்! இது இந்திய சினிமா உலகிற்கு அளித்த மிகப்பெரிய கொடை! இதை ஹாலிவுட்டிலோ வேறு எங்குமோ காணமுடியாது!

நிஜ வாழ்க்கையில் இப்படி சேர்ந்து பாடுகிறார்களா? சேர்ந்து பாடுவதை விடுங்கள். எவ்வளவு பேர் தனியாகப் பாடுகிறார்கள்? சினிமா ஒரு மாயாஜால உலகம் அதில் இசை ஒரு சிறப்பு அம்சம். இருவர் சேர்ந்து பாடுவது  இன்னும் விசேஷம்!

 நூற்றுக் கணக்கில் நல்ல டூயட் பாடல்கள் இருக்கின்றன. தேர்ந்தெடுப்பது  சிரமம். பாடகருக்கு ஒன்றாகப் பார்க்கலாம். இங்கும் கவிதையின் தரத்துக்கே முதலிடம் கொடுப்போம்.

ஹம் ஆப் கீ (ன்)கோ மே

हम आपकी आँखों में, इस दिल को बसा दें तो
हम मूँद के पलकों को, इस दिल को सज़ा दें तो

ஹம் ஆப்கீ (ன்)கோ மே இஸ் தில் கோ பஸா தே(ன்) தோ?

ஹம் மூந்த் கே பல்கோ(ன்) கோ இஸ் தில் கோ ஸஜா தே(ன்) தோ?

 நான்  உன் கண்களில் , இந்த என் இதயத்தை நிறப்பி விட்டால்?

நான் கண்களை  மூடி, இந்த இதயத்தைச் சிறைப்படுத்தி விட்டால்?

इन ज़ुल्फ़ों में गूँधेंगे हम फूल मुहब्बत के
ज़ुल्फ़ों को झटक कर हम ये फूल गिरा दें तो
हम आपकी आँखों में

இன் ஃஜுல்ஃபோ(ன்) மே கூந்தேங்கே ஹம் ஃபூல் மொஹப்பத் கே

ஃஜுல்ஃபோ (ன்) கோ ஜடக் கர் ஹம் யே ஃபூல் கிரா தே(ன்) தோ?

உன் அழகிய கூந்தலில் நான் காதல் என்னும் மலரை  நெய்வேனே!

நான் கூந்தலை அவிழ்த்து அந்த மலரைக் கீழே தள்ளிவிட்டால்?

हम आपको ख्वाबों में ला, ला के सतायेंगे
हम आपकी आँखों से नींदें ही उड़ा दें तो
हम आपकी आँखों में

ஹம் ஆப் கோ க்வாபோ(ன்) மே லா லாகே ஸதாயேங்கே

ஹம் ஆப்கீ (ன்)கோ  ஸே நீந்தே ஹீ உடா தே(ன்தோ?

 நான் உன்னை என் கனவில் அடிக்கடி வரவழைத்து  சதாய்ப்பேனே!

நான் உன் கண்களிலிருந்து தூக்கத்தையே துரத்தி விட்டால்?

हम आपके कदमों पर गिर जायेंगे ग़श खाकर
इस पर भी हम अपने आंचल की हवा दें तो
हम आपकी आँखों में…  

ஹம் ஆப்கே கத்மோ(ன்பர் கிர் ஜாயேங்கே கஸ் காகர்

இஸ் பர் பீ ஹம் அப்னே ஆஞ்சல் கீ ஹவா தே(ன்) தோ?

ஹம் ஆப் கீ (ன்)கோ மே…..

 நான்   துக்கத்துடன் உன் காலடியில் விழுந்து விடுவேனே!

அப்பொழுதும் நான் தயவு வைக்கா விட்டால்?

ஹம் ஆப் கீ (ன்) கோ மே இச் தில் கோ பஸா தே(ன்) தோ

Song: Hum aap ki aankhon mein  Film: Pyaasa 1957 Lyricist: Sahir Ludhianvi

Music: S.D.Burman  Singers: Mohammad Rafi & Geeta Dutt

என்ன கற்பனை பாருங்கள்குறும்புத் தனமான பதில்கள் ( ஆனால் கதையில் இதுதான் நடக்கிறது, அதை வைத்துத்தான் இப்படி எழுதினாரோ?) இது கீதா தத்தின் குரலில் நன்கு பிரதிபலிக்கிறது!

ஆஞ்சல் கீ ஹவா என்றால் முந்தானையின் காற்று என்று நேரடிப் பொருள். It is a folk expression, indicating a sense of favour.

Note the excellent piano notes and the beautiful violin in this song. Other worldly stuff. யார் இசைத்தார்களோ தெரியவில்லை.

The voices of Rafi  and Geeta Dutt blend so well! Real romantic song.

மன் தீரே தீரே  காயே ரே

man dheere dheere gaaye re

man dheere dheere gaaye re

maaloom nahin kyun

maaloom nahin kyun

bin gaaye rahaa na jaaye re

bin gaaye rahaa na jaaye re

maaloom nahin kyun maaloom nahin kyun 

மனது மெல்ல மெல்ல பாடத்தொடங்கி விட்டது!

 பாடத் தொடங்கி விட்டது

ஏன் என்று புரியவில்லை!

பாடாமல் இருக்க முடியவில்லை

ஏன் என்று தெரியவில்லை!

ik baat zubaan par aaye re

maaloom nahin kyun

maaloom nahin kyun

kahte huye dil sharmaaye re

maaloom nahin kyun

maaloom nahin kyun

man dheere dheere gaaye re

ஒரு விஷயம் நாக்கில் வந்துவிட்டது, ஏன் என்று தெரியவில்லையே!

சொல்வதற்கே வெட்கமாகிறதே, ஏன் என்று தெரியவில்லையே!

palkon mein chhupaa kar gori laayi hai

milan ki dori ab saath hai

jeewan bhar kaa lo thaam lo

bainyaa mori sab dekh nazar lalchaaye re

sab dekh nazar lalchaaye re

maaloom nahin kyun maaloom nahin kyun

man dheere dheere gaaye re  

பிரியாத வாழ்க்கை என்னும் இழையை இவள் கண்களில் மூடி மறைத்துக் கொண்டுவந்து விட்டாள்!

இனி என்ன, ஆயுள் முழுதும் சேர்ந்து வாழ்வோம், இதோ, என் கையைப் பிடி!

எல்லாம் கண்டு கண்களில் ஆனந்தம்!

ஏன் என்றே புரியவில்லை!

aashaaon ne li angdaayi tan man mein

baji shehnaayi dil doob gayaa masti mein

ik lahar khushi ki aayi dil haath se nikalaa jaaye re

maaloom nahin kyun maaloom nahin kyun

man dheere dheere gaaye re

maaloom nahin kyun maaloom nahin kyun

man dheere dheere gaaye re…  

நம்பிக்கை தளர்ச்சியைப் போக்கிவிட்டது!

 உடலிலும் மனதிலும் ஷெஹ்னாய் இசைக்கத் தொடங்கி விட்டது!

மனம் ஆனந்தத்தில் அமிழ்ந்து விட்டது!

சந்தோஷத்தின் அலை எழுந்து விட்டது!

மனம் கட்டுப்பாட்டை இழந்து வருகிறது, கட்டுப்பாட்டை இழந்து வருகிறது!

மனம் மெதுவாகப் பாடத்தொடங்கி விட்டது!

ஏன் என்று புரியவில்லை, ஏன் என்று தெரியவில்லையே!

Song: Man dheere dheere gaye re  Film: Malik 1958 Lyrics: Shakeel Badayuni

Music: Ghulam Mohammad Singers: Talat Mahmood  & Suraiya.

எத்தனை இனிய மெட்டு, எவ்வளாவு இனிய பாடல்!

Such a lilting melody.

Notice the sheer voice quality, without any electronic gimmicks!

Suraiya was a singing star. Talat aspired to be one, but all the films he acted in flopped. In the process, he lost his market as a singer too.

Ghulam Mohammad was a good composer, whom people remember today for the music of Pakeezah , which was released after his demise. Shakeel Badyuni was a good Urdu poet. This song is a sheer beauty. Delightfully romantic.

ஸா(ன்)வ்லே ஸலோனி ஆயே தின்

 साँवले सलोने आये दिन बहार के
झूमते नज़ारे झूमे रंग उगार के
 
नदी किनारे
 
कोई पुकारे
 
आया ज़माना गाओ गीत प्यार के …  

சா(ன்)வ்லே ஸலோனி ஆயே தின் பஹார் கே

ஜூம்தே நஃஜாரே  ஜூமே ரங்க் உகார் கே

நதீ கினாரே

கோயி புகாரே

ஆயா ஜமானா காவோ கீத் ப்யார் கே 

வஸந்தத்தின் ரம்யமான நாட்கள் வந்துவிட்டன

வண்ணமயமான காட்சிகள் கண்முன் எழுகின்றன

நதியின் கரையில்யாரோ அழைக்கிறார்கள்

இன்ப நாட்கள் வந்து விட்டன  அன்பு கீதங்கள் இசைப்பீர்!

 झूउम के पवन देखो चली चली
प्यार के नशे में खिली कली कली
 
फूलों के दर से ये भँवरा पुकारे
आये दीवाने तेरे इंतज़ार के …  

ஜூம் கே பவன் தேகோ சலீ சலீ

ப்யர் கே நஷே மே கிலி கலீ  கலீ

பூலொ(ன்) கே தர் ஸே யே பவ்ரா புகாரே

ஆயே தீவானே தேரே இன்த்ஃஜார் கே

காற்று எப்படி அழகாக வீசுகிறது பார்!

அன்பின் போதையில் பூக்கள் எப்படி மலர்ந்து ஆடுகின்றன!

பூக்களின் இடையிலிருந்து கொடி கூவி அழைக்கிறது

அன்புப் பைத்தியங்களே, வந்தீர்களா, உங்களுக்காகவே  காத்திருக்கிறேன்!

 डोलती घटा के संग डोले जिया
बाग में पपीहा बोले पिया पिया
 
ऋत रंगीली कहे करके इशारे
छेड़ो फ़साने दिलबेक़रार के …  

டோல்தீ கடா கே ஸங்க் டோலே ஜியா

பாக் மே பபீஹா போலே பியா பியா

ருத் ரங்கீலி கஹே கர்கே இஷாரே

சோடோ ஃபஸானா தில்பேகரார் கே

உருண்டு ஓடும் மேகங்களுடன் மனமும் அசைந்தாடுகிறது!

சோலையில் குயில்கள் கூவுகின்றன!

ரம்யமான இந்தப் பருவம் சமிக்ஞை செய்து சொல்கிறது– 

தயக்கத்தை விடுமனம் மகிழ்ச்சியில் பொங்கட்டும்!

Song: Sanwale saloni aye  Filk: Ek Hi Rasta 1956 Lyricist: Majrooh Sultanpuri

Music: Hemant Kumar  Singers: Hemant Kumar & Lata Mangeshkar

What a nice song! Breezy, with nice mouth-organ interludes. I have heard that the mouth organ was played by either Milon Gupta or R.D.Burman

Classically romantic, with all the right associations of Nature- the breeze, the clouds, the garden, river bank, the hint of colours, koel bird, flowers and creepers! The poet reads a message in these forms of nature. Nice poetry.

This is the only bright song in this movie. People had high expectations of Hemant Kumar after his huge success with Nagin the previous year. But Christmas does not come every day. I saw this film in December, 1957. I remember an incident. When we got up to leave after the show and as the lights were switched on, someone shouted in the hall: “ஏமாந்த குமார்” .He was meaning Hemant Kumar, the music director!

But this is a delightful melody, lilting and we feel like singing along!

Incidentally, this song was shot in the Aarey Milk Colony in Bombay. This is under threat now, as the Maharashtra govt wants to build Metro shed there, and for some housing , cutting down thousands of trees. 

tags– ஹிந்தி படப் பாடல்கள் – 15 ,  ராகம் , மெட்டு

Leave a comment

2 Comments

  1. தமிழ் இந்துவில் மொழி பிரிக்காத உணர்வு என்ற தலைப்பில் சுமார் 300 பதிவுகள் தொடர்ந்து நானகு வருடமாக ஒரு இந்திப்பாடல் அதன் வரிக்கு வரி மொழி பெயர்ப்பு அதனுடன் உணர்வில் இணையும் தமிழ்ப்பாடல் ஈன் நான் எழுதியுள்ளேன் தமிழ் இந்துவில் வெள்ளீ தோறும் வரும் இந்து டாக்கீஸ் என்ற பகுதியில் அதை காணலாம் பின்னர் தமிழ் இந்து அதில் சுமார் 60 பாடலகளை தெரிவு செய்து அதே பெயரில் ஒரு புத்தகமாக வெளீயிட்டுளார் விரைவில் அதன் மென் படிவை அனுப்ப முயற்சிகிறேன்
    வாசன்

  2. Santhanam Nagarajan

     /  April 24, 2020

    அருமை! வாசன், அனுப்புங்கள்! நன்றி

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: