ஹிந்தி படப் பாடல்கள் – 17 – ஓ! காதலா, வேண்டாம்!! (Post No.7879)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7879

Date uploaded in London – – 25 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 17 – ஓ! காதலா, வேண்டாம்!!

R.Nanjappa

ஓ  காதலா, வேண்டாம்!

காதல் என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு அலர்ஜி! பலர் முகத்தைச் சுளிப்பார்கள் .

ஏன் இப்படி?

இந்தச் சொல் ஒரு குறிப்பிட்ட பொருளிலேயே வழக்கில் வந்து விட்டதுகதாசிரியர்களும் சினிமாகாரர்களும் இதற்கு ஒரு உருவம் கொடுத்து, ஒரு சாயம் பூசிவிட்டார்கள்.

காதல் என்றால் அன்பு என்றுதான் பொருள்நாம் பெரியவர்களிடம் காட்டும் அன்பு மரியாதை, குழந்தைகளிட்ம் காட்டும் அன்பு, வாஞ்சை, பிரியம். வேண்டியவர்களிடம் காட்டுவது நட்பு. எல்லோரிடமும் பொதுவில் காரணமில்லாமல்  காட்டுவது அருள், கருணை. கடவுளிடம் காட்டுவது பக்தி. எல்லாமே ‘காதல்தான். அண்டைவீட்டுக் காரருடன் சண்டையில்லாமல் இருப்பதும் அன்பு தான்.

கண்ணே உந்தன் கழலிணையில்

காதல் பெருக்கே தருவாயே” 

என்று அருணாசலனிடம் வேண்டினார் ஸ்ரீ ரமணர்

ஆனால் கதை எழுதுபவர்களும், சினிமா எடுப்பவர்களும் அகராதியைக் குறுக்கிவிட்டார்கள். ஆண்பெண் உறவை மட்டும் இதில் அடக்கிவிட்டார்கள். அதுவும் ஒரு நிலையில் தான்கணவன் மனைவி உறவை காதல் என்று சொல்வதில்லை.

மேலும் இவர்கள் காதல் என்று சொல்லும் இடங்களிலும் காட்டும் காட்சிகளிலும் ஒரு நெறிமுறை இல்லை, வரம்பு இல்லை. யார் யாருடன் ஓடிப்போனாலும் காதல் தான்! ‘கண்டவுடன் காதலேஎன்று பாடுவார்கள்! It is a free for all! 

நம் தமிழிலக்கியத்தில் இப்படி இல்லை . தொல்காப்பியமும் திருக்குறளும் காதலுக்கு இலக்கணம் வகுக்கின்றன. காமத்துப்பால் தொடக்கத்தில் முன்னுரை தந்த பரிமேலழகர் எழுதுகிறார்:

பிணி, மூப்பு,இறப்புக்கள் இன்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய், உருவும், திருவும் பருவமும், குலனும் அன்பும் முதலியவற்றால் தம்முள் ஒப்புமை உடையராய தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவும் அன்றித் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது” 

இங்கேபால் வகைஎன்றதுநல்லூழின் திறம்“.(தொல். களவு.2)  ஒப்புமைக்கு 10 லட்சணங்கள் தருகிறார் தொல்காப்பியர்.

இதற்கு உரை எழுதிய பரிப்பெருமாள், “மறையவர் தேஎத்து மன்றல் எட்டனுள்இது காந்தருவ வகை மணத்தைச் சேரும் என்று எழுதினார்

இதற்கெல்லாம்  போஜராஜன் , வாத்ஸ்யாயனர் ஆகியோர்  நூல்களையே ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆக, பாரதப் பண்பாடு ஒன்றே!

 நமது வரலாற்றில் இதற்கெல்லாம் எத்தனை எடுத்துக் காட்டுக்கள் இருக்கின்றன? இதிஹாசத்தில் துஷ்யந்தன்சகுந்தலை, புராணத்தில் முருகன்வள்ளிஇப்படி அபூர்வமாகத்தான் இருக்கிறதே  தவிர தடுக்கி விழுந்தால் காதல் என்று வரவில்லை!

ஆனால் நமது பத்திரிகைகளுக்கும், கதை எழுதுபவர்களுக்கும் சினிமாகாரர்களுக்கும் இதிலெல்லாம் அக்கறை இல்லை. மேலும் தமிழ்  நாட்டில் இவர்களுக்கெல்லாம் வேறு உள்நோக்கம்  Hidden Agenda  இருக்கிறது.. அதனால் காதல் என்ற பெயரில் எதைஎதையோ எழுதுகிறார்கள், சித்தரிக்கிறார்கள். இந்த நிலையில் சில பெரியவர்கள் முகம் சுளிப்பதில் ஆச்சரியமில்லை

But we need not confine ourselves to these distortions. We take Love as a serious subject, ordained by divine providence, not a frivolous preoccupation . It has many facets and manifestations. Man-woman love is one, just one out of the many. And that too mostly reigns in marriage.

இதையே வள்ளுவர் இல்லறம் எனச் சிறப்பித்தார். காமத்துப் பாலிலும், களவியலுக்கு 70 குறள்கள் தந்த வள்ளுவர், கற்பியலுக்கு 150  குறள்கள் தந்திருக்கிறார்.. What a sense of proportion!

எனவே, நாம் காதல் என்றல் காத தூரம் ஓடவேண்டாம்!

மேலும் சில டூயட்களை ரசிப்போம்!

லௌட் கயா கம்கா ஃஜமானா!

लौट गया गम का ज़माना
लौट गया गम का ज़माना
आई ख़ुशी लहराती
लौट गया गम का ज़माना  

லௌட் கயா கம் கா ஃஜமானா ஆயீ குஷீ லஹராதீ

லௌட் கயா கம் கா ஃஜமானா ஆயீ குஷீ லஹராதீ

சோகத்தின் ஆதிக்கம் ஓடிவிட்டதுமகிழ்ச்சி அலையாய் வருகிறது!

சோகத்தின் ஆட்சி ஓடிவிட்டதுமகிழ்ச்சி அலை எழுந்துவிட்டது!

दूर गगन में देखो चमके
ाषाओ के तारे ाषाओ के तारे
झिलमिल प्यारे प्यारे
बदली में छुपकर टारो के साग
चड़ा करे ईशारे चड़ा करे इशारे
किसकी लगन में आज पवन है 

बागो में इठलाती  

தூர் ககன் மே தேகோ சம்கே ஆஷாவோ(ன்) கே தாரே,

ஆஷாவொ(ன்) கே தாரே

ஃஜில்மில் ப்யாரே ப்யாரே

பத்லீ மே சுப்கர் தாரே(ன்) கே சங்க்

சந்தா கரே இஷாரே, சந்தா கரே இஷாரே

கிஸ்கீ லகன்மே ஆஜ் பவன் ஹை பாகோ மே இத்லாதீ

அங்கே தூர வானத்தில் பார்

நம்பிக்கையின் தாரகை ஓளிர்கிறது, நம்பிக்கையின்  தாரகை ஒளிர்கிறது!

ஆஹா, எவ்வளவு அழகாக மின்னுகிறது!

தாரகைகளுடன் சந்திரனும் சேர்ந்துகொண்டது!

மேகத்தில் மறைந்து ஏதோ சமிக்ஞை செய்கிறது! சமிக்ஞை அனுப்புகிறது!

இன்று யாருடைய  திருமணத்திற்காக

சோலையில் காற்று இப்படித் தென்றலாக வீசுகிறது!


लौट गया गम का ज़माना
आई ख़ुशी लहराती
लौट गया गम का ज़माना

லௌட்கயா கம் கா ஃஜமானா, ஆயீ குஷீ லஹராதீ

துக்கத்தின் ஆதிக்கம் ஓடிவிட்டது, மகிழ்ச்சி அலை வந்துவிட்டது!

रात नयी हर बात नयी है
नया नया है ज़माना
कैसा समा सुहाना
कैसा समा सुहाना
गाये चाँदनिया धीरे धीरे
प्रीत भरा अफ़साना
प्रीत भरा अफ़साना
आज मेरे छोटे से मन में
आशा है मुसकाती  

ராத் நயீ ஹர் பாத் நயீ ஹை நயா நயா ஹை ஃஜமானா

கைஸா ஸமா சுஹானாகைஸா ஸமா ஸுஹானா

காயே சந்தனியா தீரே தீரே

ப்ரீத்  பரா அஃப்ஸானா, ப்ரீத் பரா அஃப்ஸானா

ஆஜ் மேரே சோடே ஸே மன் மே ஆஷா ஹை முஸ்காதீ

இரவு புதிது, அதில் ஒவ்வொரு விஷயமும் புதிது!

இந்த உலகமும் புதிது புதிதாகவே இருக்கிறது!!

ஆஹா, என்ன இனிய நேரம், என்ன இனிய நேரம்!

நிலவும் மெல்ல மெல்ல பாடத்தொடங்கி விட்டது!

ஆம், அன்பு நிறைந்த கதை இசைக்கத் தொடங்கிவிட்டது!

இந்த என் குட்டி மனதில் இன்று  நம்பிக்கை புன்னகைக்கிறது!

लौट गया गम का ज़माना
आई ख़ुशी लहराती
लौट गया गम का ज़माना.  

லௌட் கய கம் கா ஃஜமானா  ஆயீ குஷீ லஹராதீ

சோக நாட்கள் ஓடிவிட்டன, மகிழ்ச்சி அலை எழுந்துவிட்டது!

Song: Laut gaya gham ka zamana  Film.Naya Admi 1956 Lyricist: Rajinder Krishan

Music: Vishvanathan-Ramamurthi  Singers: Hemant Kumar  & Lata Mangeshkar

Oh, what an extraordinary melody, what beautiful yet simple lyrics!

Note how the lyrics and the tune blend, how the voices blend! Here too. some passages are rendered by both singers with different pitches, at the same time!

குரல்களில் என்ன குழைவு, நெளிவு, கமகம்!

இந்த ஹிந்திப் படம் என்.டி ராமராவ், அஞ்சலி தேவி , ராம சர்மா ஆகியோர் நடித்தது, இதுசந்தோஷம்என்ற தெலுங்குப் படத்தின் டப்பிங் என்று தோன்றுகிறது. இசையமைப்புமதன் மோஹன்என்று  போட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பாடல்தீயெனி ஈனாடி ரயிஎன்ற தெலுங்குப் பாடலின் மெட்டில் இருக்கிறது. அதனால் இது மதன் மோஹன் இசையல்ல.

இந்தப் பாட்டின் ஆர்கெஸ்ட்ரேஷன்  பிரமாதம். தெலுங்கில் எப்படியோ தெரியவில்லை.

இது ராம சர்மாஅஞ்சலி தேவி மீது படமாக்கப் பட்டிருக்கிறது..

1960களில் இப்பாட்டை ரேடியோ சிலோனில் கேட்டிருக்கிறேன். வார்த்தைகள் புரியாது, எந்தப் படம் என்றும் தெரியாது! மெட்டு மிகவும் பிடிக்கும்.

Lilting song.

யே சபா உன்ஸே கஹ்  ஃஜரா

ae sabaa unse keh zaraa
kyun hamen beqaraar kar diyaa
ae sabaa unse kah zaraa
kyun hamen beqaraar kar diyaa

தென்றலே, நீ அவளிடம் சொல்: ஏன் என் மனதை கட்டிழக்கச் செய்துவிட்டாய்?


dil hamaara  jaan se pyaaraa
jaao ji tum pe ye nisaar kar diyaa aa
dil hamaara  jaan se pyaaraa
jaao ji tum pe ye nishaar kar diyaa

நீயும் தான் என்ன, என் மனதை உன் வசம் செய்து விட்டாய் !


ae sabaa unse kah jaraa
kyun hamen beqaraar kar diyaa

zindagi tum nahin to zindagi nahin

வாழ்க்கைநீ இல்லாமல் இந்த வாழ்க்கையே இல்லை
chandni tum nahin to chandni nahin

வாழ்க்கைநீ இல்லாமல் இந்த வாழ்க்கையே இல்லை


zindagi tum nahin to zindagi nahin
chandni tum nahin to chandni nahin

வாழ்க்கைநீ இல்லாமல் இந்த வாழ்க்கையே இல்லை

நீ இல்லாமல்  இந்த நிலவொளியும் நிலவொளியாக இல்லை!


sab nazaare  ye pukaare
tumne hi bahaar ko bahaar kar diyaa

நீ தான் இந்த சந்தத்தை வஸந்தாமாகச் செய்தாய்

எல்லாக் காட்சிகளும் இதைத்தான் சொல்கின்றன!


ae sabaa
unse kah zaraa
kyun hamen beqaraar kar diyaa

keh zaraa sanam  hamko tumse pyaar hai

அன்பே, உன்னிடம் தான் எனக்கு அன்பு என்று சொல்

keh diyaa sanam hamko tumse pyaar hai

அன்பே, சொல்லிவிட்டேன்உன்னிடம்தான் எனக்கு அன்பு

keh zaraa sanam  dil se dil nisaar hai

அன்பே, மனதுடன் மனம் இணைந்து ஆனந்தம் என்று சொல்

keh diyaa sanam   dil se dil nisaar hai

அன்பே சொல்லிவிட்டேன்: மனதுடன் மனம் சேர்ந்து ஆனந்தமே!

paas aa ke  muskaraa ke
tumne dil par nazar kaa waar kar diya

அருகில் வந்து, புன்சிரிப்புடன் உன் கண்களை இதயத்தில் பதித்து விட்டாயே!


ae sabaa unse keh zaraa
kyun hamen beqaraar kar diyaa
dil hamaara jaan se pyaara
jaao ji
tum pe ye nikhar kar diyaa
ae sabaa unse keh zaraa
kyun hamen beqaraar kar diyaa
ae sabaa

Song: Ay saba unse heh zara  Film: Alibaba Aur 40 Chor 1954 Lyricist; Raja Mehdi Ali Khan

Muaic: S.N.Tripathi, Chitragupta  Singers: Mohammad Rafi & Asha Bhonsle

என்ன இனிய பாடல்! சில சொற்களையே புரட்டிப் போட்டு ஒரு எளிய பாடல் எழுதிவிட்டார் கவி

இது தமிழ் நாட்டில் பிரபலமான மெட்டு. தமிழ் அலிபாபா & 40 திருடர்களில் 1955 இந்த மெட்டில் வந்த பாட்டுமாசிலா உண்மைக் காதலே‘. மருதகாசி எழுதி .எம் ராஜாவும் பானுமதியும் பாடியது.

தமிழ்ப் படத்தில் எல்லா பாடல்களும் ஹிந்தியின் அடிச்சான் காபியே. படம் டைடிலில் இசையமைப்பாளர் பேர் எதுவும் போடவில்லை. ஆர்கெஸ்ட்ரா: எஸ்.தக்ஷிணாமூர்த்தி என்று போட்டார்கள்! ஆனால் அதைக்கூட சரியாகச் செய்யவில்லை. ஹிந்திப் பாட்டின் ஆர்கெஸ்ட்ராவைக் கவனியுங்கள்இந்த இனிமை தமிழில் இல்லையே!

இதற்கு இசையமைத்தது யார் என்பதில் சந்தேகம்  நிலவுகிறது. எஸ்.என் திரிபாடி-சித்ரகுப்தா இருவர் பெயரும் சொல்லப்படுகிறது. சித்ரகுப்தா திரிபாடிக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்தவர்-பின்னர் தனியே இயங்கினார். திரிபாடி நல்ல இசைஞர்.  இங்கும் சில வரிகளில் இருவரையும் இழைந்து பாடவைத்திருக்கிறார்.

Same melody in different pitches  simultaneously!

அரிய பாட்டின் எளிமை, இனிமைஉள்ளத்தைக் குளிர்விப்பது.

Evergreen melody.

மில் தேஹி (ங்)கே தில் ஹுவா தீவானா

मिलते ही आँखें दिल हुआ दीवाना किसीका
अफ़साना मेरा बन गया, अफ़साना किसीका

மில்தே ஹீ ஆங்கே தில் ஹுவா தீவானா கிஸீகா

அஃப்ஸானா மேரா பன் கயா  அஃப்ஸானா கிஸீ கா

கண்கள் கலந்ததும்  மனம் யாருக்கோ பைத்தியமாகிவிட்டது

யாருடைய சரித்திரமோ என்னுடைய கதையாகிவிட்டது!

पूछो ना मोहब्बत का असर, हाय पूछो  हाय ना पूछो

दम भर में कोई हो गया, परवाना किसीका
अफ़साना मेरा बन गया, अफ़साना किसीका
मिलते ही आँखें दिल हुआ दीवाना किसीका  

பூசோ முஹப்பத் கா அஸர் ஹாயே பூசோ, ஹாயே பூசோ

தம் பர் மே கோயீ ஹோகயா பர்வானா கிஸீ கா

அஃப்ஸானா மேரா பன் கயா , ஃப்ஸானா கிஸீ கா

மில்தே ஹீ (ங்) கே தில் ஹுவா தீவான கிஸீ கா

காதலின் தாக்கம் என்ன? அதை மட்டும் கேட்காதே, கேட்காதே

வாழ் நாளுக்கும் யாரோ  யாருக்கோ அடிமையாகிவிட்டார்கள்

(விட்டிற்பூச்சி போலாகிவிட்டார்கள்)

வேறொருவர் கதை என் கதையாகி விட்டது

हंसते ही ना जायें कहीं, आँखों में आँसू आँखों में आँसू
भरते ही छलक जाये ना, पैमाना किसीका
अफ़साना मेरा बन गया, अफ़साना किसीका
मिलते ही आँखें दिल हुआ दीवाना किसीका

ஹன்ஸ்தே ஹீ நா ஜாயே கஹீ ஆங்கோ மே ஆன்ஸூ,

ஆங்கோ மே ஆன்ஸூ

பர் தேஹீ சலக் ஜாயே நா, பைமானா கிஸீ கா

அஃப்ஸானா மேரா பன் கயா அஃப்ஸானா கிஸீ கா

மில்தே ஹீ ஆங்கே..…..

சிரித்துச் சிரித்தே கண்களில் கண்ணீர் வந்துவிடப் போகிறது, ஜாக்கிரதை!

ஊற்றிக்கொண்டிருக்கும்போதே பாத்திரத்திலிருந்து சிந்திவிடப் போகிறது, ஜாக்கிரதை!

யார் கதையோ என் கதை ஆகிவிட்டது…….

Song: Milte hi aankhen      Film: Babul 1950 Lyrics: Shakeel Badayuni

Music : Naushad  Singers: Talat Mahmood & Shamshad Begum

இது நௌஷத்தின் பாடல்களில் மிகவும் பிரபலமானது. தமிழ் நாட்டிலும் இந்த மெட்டு 50களில் பிரசித்தமாக இருந்ததுபராசக்தி படத்தில் வரும்  “பொருளே இல்லார்க்கு தொல்லையா புது வாழ்வே இல்லையாஎன்ற பாட்டு இந்த மெட்டில் அமைந்ததே!

இது பியானோ வாத்தியத்தை இசைத்தபடியே பாடும் பாட்டு. இப்படிப் பாடுவது இயலாது. ஆனாலும் இத்தகைய பியானோ பாட்டுக்கள் முன்பு அதிகம் வந்தன. அவற்றில் பல பிரசித்தமாயின. சினிமா தானே, எல்லாம் செல்லும்! Sab chalta hai!

ஷகீல் பதாயுனி சிறந்த உருது கவிஞர். வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்வது சிரமம். கருத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும்பைமானா, சலக் ஜாய் ஆகியவை அத்தகையவை. ஒரு நிலையை மனதில் கொண்டு எழுதுகிறார். பின்னர் கதை அப்படிப் போகிறதோ என்னவோ! ஆனால் பொதுவானே கருத்தே பொருத்தமாக இருக்கிறது.

தலத் முஹம்மது குரலும் ஷம்ஷாத் பேகம் குரலும் முற்றிலும்  வித்தியாசமானவை. தலத் குரல். very soft and mellifluous. ஷம்ஷாத் குரல்  high pitched and somewhat shrill இருக்கும்.  இரண்டும் சேர்ந்து இங்கே ஜாலம் செய்கின்றன. சொக்கிப் போகிறோம்.. இதிலும் இருவர் குரலும்  சில இடங்களில் சேர்ந்தே ஒலிக்கிறது

இந்தப் பாடல் முதலில் ஹேமந்த் குமார்உமாதேவி குரலில் பதிவாக்கப்பட்டது. ஆனால் ஹீரோ திலிப் குமார் விரும்பியபடி தலத்  குரலில் மீண்டும் பதிவுசெஉதனர். முதல் பதிவு வெளியாகவில்லை. இப்படி எவ்வளவோ நடந்திருக்கிறது. ஹேமத் குமார் குரலில் நம்மால் இப்போது கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

One of our most  iconic  songs.

இப்பொழுதும் லட்சக் கணக்கானவர்கள் விரும்பிக் கேட்கின்றனர். இசையின் பொற்காலம் என்று சும்மாவா சொன்னார்கள்!

******

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: