
WRITTEN BY R. NANJAPPA
Post No.7883
Date uploaded in London – – 26 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 18 – ரசிகர்கள்!
R.Nanjappa
ரசிகர்கள்
இசையின் தரம் ரசிகர்களின் தரத்தையும் பொறுத்து அமைகிறது. நல்ல ரசிகர்கள் முன்வரிசையில் அமர்ந்தால் வித்வான்களுக்கு உற்சாகம் பிறக்கிறது–பொறுப்பும் ஏறுகிறது!
ரசிகர்கள் இல்லாமல் இசை –எந்தக் கலையுமே– எப்படி வளரும்?
50களில் நம் ரசிகர்கள் அபாரமானவர்களாக இருந்தார்கள். பல படங்கள் இசைக்காகவே ஓடின. [படங்கள் பல்டி அடித்தபோது, நல்ல இசையும் முடங்கிப்போன நிகழ்ச்சிகளும் உண்டு.]
பைஜு பாவ்ரா படம் 1953ல் வெளியானபோது, ராஷ்டிரபதிக்காக இது தனியாகத் திரையிடப்பட்டது. இதன் பாடல்களை ரசித்த ராஷ்டிரபதி பாபு ராஜேந்த்ர பிரசாத் “மன் தட் பத் ஹரி” என்ற மால்கோஷ் ராகப் பாடலைக் கேட்டு உருகி அழுது விட்டார்! அன்று மேலிடத்திலும் (அரசியல், அதிகார வர்கத்திலும்) அத்தகைய ரசிகர்கள்!
இன்றும் இசையைக் கேட்கிறார்கள், ஆடுகிறார்கள். ஆனால் இசைக்கு இப்படி உருகும் இத்தகைய ரசிகர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களா?
இத்தகைய இசையும் இப்போது இல்லையே என்பதும் உண்மைதான்.
பத்திரிகைகளின் பங்கு
தரமான இசை மக்களிடையே பரவ பொறுப்புள்ள பத்திரிகைகளும் , விஷயமறிந்த எழுத்தாளர்களும் அவசியம். சில விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. 1950களில் “குமுதம்” பத்திரிகையில் நல்ல விமர்சனங்கள் வரும். ஒரு இதழில் ஒரு படத்தின் விமர்சனத்தில் ” சத்து உன்டு–இனிமை இல்லை” என்று எழுதியது. (படத்தின் பெயர் நினைவில்லை–தஞ்சை ராமையாதாஸ் எடுத்த படம் என்று நினைவு.) அடுத்த வாரமே ஜெமினியின் ‘வஞ்சிக்கோட்டை வாலிபனுக்கு எழுதிய விமர்சனத்தில் ” வாலிபன் விஷயத்தில் இது தலைகீழ்ப் பாடம்” என்று எழுதியது ( அதாவது, இனிமை உண்டு சத்து இல்லை!)
வி.சாந்தாரம் எடுத்த “ஸ்த்ரீ” படத்திற்கு விமர்சனம் எழுதுகையில், அவரே இந்தக் கதையை முன்பே எடுத்திருக்கிறார் (இது சகுந்தலை கதை) என்று சொல்லி, ” அதே புராதனக் கொட்டாவி–ஆனால் உயர்ந்த வண்ணம் தீட்டிய கொட்டாவி” என்று எழுதியது! ‘பத்தினித் தெய்வம்‘ படத்தின் விமர்சனத்தில், “ஒவ்வோரிடத்தில் இசையில் பசையும் உண்டு” என்று எழுதியது! 60 ஆண்டுகள் ஆகியும் இவை மறக்கவில்லை! நல்ல விஷயங்கள் மக்களிடையே பரவ நல்ல பத்திரிகைகளும் இருக்கவேண்டும். நல்ல ரசிகர்களை உருவாக்க, ரசிகத்தன்மை வளர, ரசிகரின் தரம் உயர நல்ல பத்திரிகைகள், விமர்சகர்கள் அவசியம்.
இன்று இசை என்ற பெயரில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. புதிய படத்தின் சி.டி வெளியிட பெரிய விழாவே நடக்கிறது. ஆனால் அடுத்த மாதமே அந்த இசை காணாமல் போய்விடுகிறது.
“டிப்பு டாப்பு டகல் டூப்பு டமாரம்
கலிகாலம் நம்ம கிரகசாரம்– ”
என்று தஞ்சை ராமையதாஸ் மிஸ்ஸியம்மாவில் ஒரு பாட்டில் எழுதினார். அதுதான் நடக்கிறது.
ஆனாலும் பொற்காலப் பாடல்களுக்கு மவுசு குறையவில்லை. இன்று ஒவ்வொரு பெரிய நகரத்திலும் அதற்கென பல கிளப்புகள் தோன்றிவிட்டன. நாளாக ஆக தங்கத்தின் மதிப்பு உயரும் தானே!
இதோ, மேலும் சில “தங்க காலப் ” பாடல்கள்!

தியா ஜிஸ்னே—தில் !
Falling in Love- beware!
diya jisne dil, diya jisne dil
lut gaya wo bechara, lut gaya wo bechara
diya jisne chhora dil, diya jisne wo beta dil
lut gaya wo bechara, lut gaya wo bechara
jiya kon jise nichi najaro ne mara
lut gaya wo bechara, lut gaya wo bechara
diya jisne dil, diya jisne dil
lut gaya wo bechara, lut gaya wo bechara
தியா ஜிஸ் நே தில் லுட் கயா ஓ பிசாரா, லுட் கயா ஓ பிசாரா
nahi bhulti, wo ada kya ada thi
nahi bhulti, wo ada kya ada thi
lipatna tumhara, jhijkana tumhara
lipatna tumhara, jhijkana tumhara
lut gaya wo bechara, lut gaya wo bechara
kiya kya jise, nichi najaron ne mara
kiya kya jise, nichi najaron ne mara
lut gaya wo bechara, lut gaya wo bechara
நஹீ பூல்தீ, ஓ அதா க்யா அதாதீ
mera ashiya phunk, dala gulo ne
mera ashiya phunk, dala gulo ne
baharo akar mera ghar ujada
baharo akar mera ghar ujada
lut gaya wo bechara, lut gaya o bechara
jiya kon jise nichi najaro ne mara
jiya kon jise nichi najaro ne mara
lut gaya wo bechara, lut gaya o bechara
maje lut le char din chandani hai
maje lut le char din chandani hai
jawani ko dekho budhapa pukara
jawani ko dekho budhapa pukara
lut gaya wo bechara, beta lut gaya wo Bechara
மேரா ஆஷியா(ன்) பூ(ன்)க் டாலா குலோ நே
Song: Diya jisne dil Film: Bhanwra 1944 Lyrics: Kidar Sharma
Music: Khemchand Prakash Singer: K.l.Saigal , Amirbai Karnataki
என்ன கந்தர்வ கானம்!
இது 1944ல் வந்த படம்– திரை இசையின் “இடைக்காலம்” என்று சொல்லலாம். குரல் வளம், இசை நுணுக்கம்– இரண்டுதான் இப்பாட்டின் ஜீவன். எளிய பின்னணி இசை. டெக்னிகல் உத்திகள் எதுவும் இல்லை!
பாட்டு சாதாரணக் காதல் பாட்டு பெண்ணை வருணிக்கிறார். காதலில் விழுந்தால் அதோகதிதான் என்கிறார்.
It is said we always “fall ” in love!
பொருள் வேண்டாம், பாட்டின் இசையைக் காது கொடுத்துக் கேட்போம்!
கே.எல் சைகல் நம் திரை இசைப்பாடகர்களில் நிரந்தரமாக முதல் இடத்தை வகிப்பவர். முன்னோடியாக இருந்தவர். ரஃபி, கீஷோர், முகேஷ் என் பின் வந்த ஒவ்வொரு பாடகரும் இவரைப் போல் பாட வேண்டுமென ஆசைப்பட்டவர்களே, இவரால் கவரப்பட்டு திரை இசைக்கு வந்தவர்களே! 1944ல் வந்த பாட்டு– 75 வருஷங்கள் கழித்து இன்றைக்கும் லட்சக் கணக்கான ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது! [யூடியூபில் ஏதோ சதி நடந்திருக்கிறது– இந்தப் பாட்டின் அசல் வடிவத்தை இன்று காணவில்லை!]
சைகல் பாட்டு ஒன்று ரேடியோ சிலோனில் தினமும் காலை 7.57க்கு ஒலிபரப்பாகிறது.
இசையமைத்த கேம்சந்த் பிரகாஷ் பழைய ஜாம்பவான்களில் ஒருவர். ‘மஹல்‘ படத்திற்கு இவர் அமைத்து, லதா பாடிய “ஆயேகா ஆனேவாலா” என்ற பாட்டு சாகாவரம் பெற்ற ஹிந்திப் பாட்டுக்களில் ஒன்று.
பாட்டெழுதிய கிதார் ஷர்மா பெரிய தயாரிப் பாளராகவும் இயக்குனராகவும் இருந்தவர்.
அர்த்தத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தப் பாட்டைக் கேளுங்கள். சங்கீதம் உலக மொழி என்று ஏன் சொல்கிறார்கள் என்பது புரியும்!
நைன் ஸோ நைன் நாஹி மிலாவோ
नैन सो नैन नाही मिलाओ – 2
देखत सूरत आवत लाज, सैय्यां
प्यार से प्यार आके सजाओ – 2
मधुर मिलन गावत आज, गुइयां
नैन सो नैन …
நைன் ஸோ நைன் நாஹி மிலாவோ
தேகத் ஸூரத் ஆவத் லாஜ், சையா(ன்)
ப்யார் ஸே ப்யார் ஆகே ஸஜாவோ
மதுர் மிலன் காவத் ஆஜ், குய்யா(ன்)
நைன் ஸே நைன்…….
அன்பே, என் கண்ணுடன் நேருக்கு நேர் பார்க்காதே!
உன் முகத்தைப் பார்த்து நாணமாகிறது!
அன்பே, வா; காதல் காதலுடன் இணையட்டும்
இதை நாம் இன்று பாடுவோம்!
आ …
खींचो कमान मारो जी बाण
रुत है जवान ओ मेरे प्राण
– रुक क्यों गये?
तुमने चोरी कर ली कमान
कैसे मारूं प्रीत का बाण, गुइयां
नैन सो नैन …
கீஞ்சோ கமான் மாரோஜீ பாண்
ருத் ஹை ஜவான் ஓ மோரே ப்ராண்
ருக் க்ய்யூ(ன்) கயே?
தும்னே சொரீ கர்லீ கமான்
கைஸே மாரூ(ன்) ப்ரீத் கா பாண். குய்யா(ன்)
நைன் ஸே நைன்……
மாரனின் பாணத்தை எடுத்து வீசு!
என் உயிரே, காலம் இளமையாக இருக்கிறது!
ஏன் நிறுத்தி விட்டாய்?
அந்த பாணத்தை நீ திருடி விட்டாயே!
பின் எப்படி அன்பின் பாணத்தை விடுவது!
रिम झिम रिम् झिम गाये झरनों की धार
दिल को लुभाये कोयल पुकार
– नहीं!
– तो फिर?
झरनों की धारों में तेरा संगीत
गाये कोयल तेरा ही गीत, गुइयाँ
नैन सो नैन …
ரிம் ஜிம் ரிம்ஜிம் காயே ஜரனோ கீ தார்
தில் கோ லுபாயே கோயல் புகார்
நஹீ(ன்)
தோ ஃபிர்?
ஜரனோ(ன்) கீ தாரோ மே தேரா ஸங்கீத்
காயே கோயல் தேரா ஹீ கீத், குய்யா(ன்)
நைன் ஸோ நைன்
இதோ, இந்த நீர் ஊற்றுக்கள் ஜலஜலவென சப்திக்கின்றன!
குயில்களின் கீதம் மனதைக் கொள்ளைகொண்டு போகிறது!
அந்த ஊற்றுக்களில் ஒலிப்பது உன் கீதமே!
இந்தக் குயில்களும் உன் இசையையே பாடுகின்றன!
नीले गगन पे झूमेंगे आज
बादल का प्यार देखेंगे आज
बादल नैय्या है बिजली पतवार
हम–तुम चल दें दुनिया के पार, सैय्यां …
नैन सो नैन …
நீலே ககன் மே ஜூமேங்கே ஆஜ்
பாதல் கா ப்யார் தேகேங்கே ஆஜ்
பாதல் நையா ஹை பிஜ்லீ பத்வார்
ஹம்–தும் சல் தே(ன்) துனியாகே பார், ஸையா(ன்)
நைன் ஸோ நைன்
நீல வானத்தில் இன்று சுற்றித் திரிவோம் வா!
மேகங்களின் காதலையும் பார்த்துவிடுவோம், வா!
மேகங்களின் படகில், மின்னலைத் துடுப்பாகக்கொண்டு
இந்த உலகத்தைக் கடந்து போய்விடுவோம் வா!
Song: Nain so nain Film: jhanak jhanak Payal Baje 1955 Lyricist : Hasrat Jaipuri

Music: Vasant Desai Singers: Hemant Kumar & Lata Mangeshkar.
எத்தனை அருமையான கவிதை! தூய சிருங்கார ரசத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட வரிகள்! எழுதியவர் சிறந்த உருதுக் கவி (ஷயர்) எனப் புகழ் பெற்ற ஹஸ்ரத் ஜய்புரி. ஆனால் இந்தப் பாட்டில் உருதுச் சொல்லே இல்லை! எல்லாம் உ.பியின் வட்டார வழக்கில் அமைந்த சொற்கள்! நம் மொழிகளில் தான் எத்தனை வளமை!
ஹேமந்த் குமார், லதா குரல்கள் எவ்வளவு இயல்பாக, இனிமையாக இணைகின்றன! இது நமது டூயட் இசையின் முக்கிய வலு. இரண்டு குரல்கள் சேர்வது 1+ 1= 2 என்ற கணக்கில் வராது!. 1+!= புதிய உலகம்!ஹேமந்த் குமார் குரல் இந்த ராகத்திற்கு, இந்த மெட்டிற்கு மிகப் பொருந்தியிருக்கிறது!
இந்த இசையுடன் கோபி கிருஷ்ணா–சந்த்யா “கதக்” நாட்டியமும் அபாரம்! இது போல் இந்தியப் படங்களில் அமையவில்லை!
[இங்கு நீர் ஊற்றுக்கள் என்பது கிருஷ்ணராஜஸாகரில் அமைக்கப்பட்டிருந்த fountains. இது அங்கு படமாக்கப்பட்டது.]
இசைஞர் வஸந்த் தேசாய் நமது பாரம்பரிய இசையில் பிடிப்புள்ளவர். எளிமையாக சாது போல் வாழ்ந்தவர். “தோ ஆங்கே பாரஹ் ஹாத்” என்ற படத்தில் இவர் அமைத்த ‘ஏ மாலிக் தேரே பந்தே ஹம்” என்ற பிரார்த்தனைப் பாட்டு மிகப் பிரபலமானது–பாகிஸ்தானிலும் பாடப்பட்டது!
எம்.எஸ். 1966ல் ஐ.நா சபையில் பாடிய “மைத்ரீம் பஜத” என்ற சம்ஸ்கிருதப் பாடலுக்கு இசையமைத்தவர் வஸந்த் தேசாய் தான்! இதற்காகக் கொடுக்கப்பட்ட செக்கை அவர் பயன்படுத்தவே இல்லை! ஃபிரேம் போட்டு மாட்டிவிட்டார்! [இந்த மைத்ரீம் பஜத பாடலை எழுதியவர் டாக்டர்.வி.ராகவன்– காஞ்சிப் பெரியவர் அதை அங்கீகரித்தார்–எழுதவில்லை.]
இந்த ஜனக் ஜனக் பாயல் பாஜே படத்தின் முழு இசையும் நமது திரை இசை வரலாற்றில் ஒரு மைல் கல்.
இந்தப் பாட்டு மால்குஞ்சி माल्गुन्जि என்ற ராகத்தில் அமைந்திருக்கிறது
இதோ, இன்னொரு டூயட் !
தில் கீ நஜர் ஸே,
दिल की नज़र से, नज़रों की दिल से
ये बात क्या है, ये राज़ क्या है
कोई हमें बता दे
தில் கீ ந ஃஜர் ஸே, நஃஜ்ரோ(ன்) கீ தில் ஸே,
ஏ பாத் க்யா ஹை, ஏ ராஃஜ் க்யாஹை
கோயீ ஹமே பதா தே
கண்ணிலிருந்து மனதிற்கு– மனதிலிருந்து கண்ணிற்கு–
இது என்ன விஷயம், இது என்ன ரகசியம்
எவராவது சொல்வார்களா?
सीने से उठकर, होठों पे आया
ये गीता कैसा, ये राज़ क्या है
कोई हमें बता दे
दिल की नज़र से…
ஸீனே சே உட்கர் ஹோடோ(ன்) பே ஆயா
யே கீத் கைஸா, யே ராஃஜ் கயா ஹை
கோயீ ஹமே பதாதே
மனதிலிருந்து எழுந்து, உதடுகளுக்கு வந்தது
இது எத்தகைய கீதம், இது என்ன ரகசியம்?
எவராவது சொல்வார்களா?
क्यों बेखबर, यूँ खिंची सी चली जा रही मैं
ये कौन से बन्धनों में बंधी जा रही मैं
कुछ खो रहा है, कुछ मिल रहा है
ये बात क्या है, ये राज़ क्या है
कोई हमें बता दे
दिल की नज़र से…
க்யோ(ன்) பேகபர்,யூ(ன்) கீஞ்சீ ஸீ சலீ ஜா ரஹீ(ன்) ) மை
யே கௌன் ஸே பந்தனோ மே பந்தீ ஜா ரஹீ மை
குச் கோ ரஹா ஹை, குச் மில் ரஹா ஹை
யே பாத் க்யா ஹை, யே ராஃஜ் கயாஹை
கோயீ ஹமே பதா தே
என்னை அறியாமலேயே நான் ஏன் இப்படி இழுத்துச் செல்லப் படுகிறேன்?
என்ன எந்தப் புதிய பிணைப்பு பந்தப்படுத்துகிறது– தெரியவில்லையே!
எதையோ இழக்கிறேன், எதையோ அடைகிறேன்!
இது என்ன விஷயம், இது என்ன ரகசியம்
எவராவது சொல்வார்களா?
हम खो चले, चाँद है या कोई जादूगर है
या मदभरी, ये तुम्हारी नज़र का असर है
सब कुछ हमारा, अब है तुम्हारा
ये बात क्या है, ये राज़ क्या है
कोई हमें बता दे
दिल की नज़र से…
ஹம் கோ சலே சாந்த் ஹை யா கோயீ ஜாதுகர் ஹை
யா மத் பரீ யே துமாரீ நஃஜர் கா அஸர் ஹை எ
ஸப் குச் ஹம்ஹாரா, அப் ஹை தும்ஹாரா
யே பாத் க்யா ஹை, யே ராஃஜ் க்யா ஹை
கோயீ ஹமே பதாதே
இது என்ன, சந்திரனா அல்லது ஏதோ மாயாஜாலக்காரனா–
நான் என்னை முற்றிலும் இழந்துவிட்டேன்
அல்லது இது போதை நிறைந்த உன் கண்களின் பார்வையின் விளைவா?
என்னுடையதெல்லாம் இப்பொழுது உன்னுடையதாகிவிட்டதே!
இது என்ன விஷயம், இது என்ன ரகசியம்,
எவராவது சொல்வார்களா?
आकाश में, हो रहें हैं ये कैसे इशारे
क्या, देखकर, आज हैं इतने खुश चाँद–तारे
क्यों तुम पराये, दिल में समाये
ये बात क्या है, ये राज़ क्या है
कोई हमें बता दे
दिल की नज़र से…
ஆகாஷ் மே ஹோ ரஹே ஹை யே கைஸே இஷாரே
கயா தேக் கர் ஆஜ் ஹை இத்னே குஷ் சாந்த் தாரே
க்யோ(ன்) தும் பராயே, தில் மே ஸமாயே
யே பாத் க்யா ஹை, யே ராஃஜ் க்யா ஹை
கோயீ ஹமே பதா தே
இது என்ன, வானத்தில் ஏதேதோ சமிக்ஞைகள் வருகின்றனவே!
எதைக் கண்டு சந்திரனும் தாரகைகளும் இன்று இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன!
நீ ஏன் ஒரு புதியவனின் மனதில் இடம் பிடித்துவிட்டாய்
இது என்ன விஷயம் இது என்ன ரகசியம்
எவராவது சொல்வார்களா?

Song: Dil ki nazar se Film: Anadi 1959 Lyricist:Shailendra
Music: Shankar Jaikishan Singers: Mukesh & Lata Mangeshkar
அருமையான பாட்டு, ஷைலேந்த்ராவின் நல்ல கவிதை. ‘தில் கீ நஃஜர் ஸே, நஃஜ்ரோ(ன்) கீ தில்ஸே‘ என்ற வரியே பொருள் பொதிந்த ஒன்று–பல வகையில் பொருள் சொல்லலாம். மனதின் பார்வை_- intuitive sight, or the sight of intuition or intimacy என்று இப்படி எத்தனையோ சொல்லலாம். ” ஜானே ந நஃஜர், ஃபஹ்சானே ஜிகர்” என்று “ஆஹ்” படத்தில் 1953 எழுதினார். “கண் காணாததும் மனம் கண்டுவிடும்” என்று இதைத் தமிழில் தந்தார் கம்பதாசன்! இங்கு ஒப்பிட்டுப் பாருங்கள்!
சங்கர் ஜெய்கிஷனின் அபார இசை.
முகேஷ்–லதாவின் அருமைக் குரல்கள்! 1+! மாஜிக் இங்கும் பார்க்கலாம்!
ரிஷீகேஷ் முகர்ஜீ படமாதலால் நல்ல விதத்தில் (விரச மில்லாமல்) படமாக்கப்பட்டிருக்கிறது!

tags – –ஹிந்தி படப் பாடல்கள் – 18 , ரசிகர்கள்