ஹிந்தி படப் பாடல்கள் – 21, நான்கு பாடல்கள்-(2) (Post No.7898)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7898

Date uploaded in London – – 29 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 21 – ஒரு கரு, ஒரு கவி, நான்கு பாடல்கள்-(2)

R.Nanjappa

ஒரு கரு, ஒரு கவி, நான்கு பாடல்கள்!

(மூன்று மற்றும் நான்காம் பாடல்களை இங்கு பார்ப்போம்)

“சோகத்திலிருந்து ஸ்லோகம் பிறந்ததுஎன்பார்கள். வால்மீகி ராமாயணம் எழுதத் தூண்டுகோலாயிருந்தது அவர் கண்ட ஒரு துயர நிகழ்ச்சி. அதற்குக் காரணமான வேடனை வையத் துவங்கினார்கவிதையாக மலர்ந்தது. அதே ரீதியில் இதிஹாசம் முழுவதும் பாடி முடித்தார்.

காவியம் என்று அவ்வளவு நீண்டு பாடாவிட்டாலும், நம் திரைக் கவிஞர்கள் சோகத்திலிருந்து தத்துவத்திற்குத் தாவுகிறார்கள். ஏமாற்றத்தை  இரண்டு கவிதைகளில் விவரித்த ஸாஹிர், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறார்.

3. மனமே, மயக்கத்தை விடு!

Song: Man re tu kaahe na

Film: Chitralekha 1964

Music: Roshan

Singer: Mohammad Rafi

मन रे तू काहे ना धीर धरे
निर्मोही मोह ना जाने जिनका मोह करे
मन रे तू काहे ना धीर धरे  

மன் ரே தூ காஹே  நா தீர் தரே 

நிர்மோஹீ மோஹ ஜானே ஜின்கா மோஹ் கரே

மன்ரே தூ காஹே நா தீர் தரே 

மனமே, நீ ஏன் அமைதியாக, தைரியத்துடன் இருக்கக்கூடாது?

நீ யாரிடம் அன்பு வைத்தாயோ அவள்  மனதில் அன்பில்லாதவள்

அன்பைப் பற்றி அறியமாட்டாள்.

நீ ஏன் அமைதியாக இருக்கக் கூடாது?

इस जीवन की चढ़ती ढलती 
धुप को किस ने बांधा
रंग पे किस ने पहरे डाले
रूप को किस ने बांधा
काहे ये जत्न करे
मन रे तू काहे ना धीर धरे  

இஸ் ஜீவன் கீ சட்தீ  டல்தீ

தூப் கோ கிஸ் நே பாந்தா

ரங்க் பே கிஸ்  நே பஹரே டாலே

ரூப் கோ கிஸ்  நேபாந்தா

காஹே யே  ஜத்ன் கரே

மன் ரே….

நம் வாழ்க்கையில் (இந்த உலகில்) படரும்  சூரிய ஒளி

அதை எவராவது கட்டிப்போட்டிருக்கின்றனரா?

வண்ணத்தை எவராவது கட்டுப்படுத்தினரா?

அழகை எவராவது கட்டி வைத்தனரா?

ஏன் இந்த வீண் முயற்சியில் ஈடுபடுகிறாய்?

அமைதியாக இருக்க இயலாதா?

उतना ही उपकार समझ कोई
जितना साथ निभा दे
जनम मरण का मेल है सपना
ये सपना बिसरा दे
कोई ना संग मरे  

உத்னா ஹீ உபகார் ஸமஜ் கோயீ

ஜித்னா ஸாத் நிபா  தே

ஜனம் மரண் கா மேல் ஹை ஸப்னா

யே ஸப்னா பிஸ்ரா தே

கோயீ நா ஸங்க் மரே

மன் ரே தூ காஹே தீர் தரே

உன்னுடன் யார் எத்தனை காலம் இருக்கின்றனரோ– 

அதையே அவர்கள் உனக்குச் செய்த உபகாரம் என்று நினைத்துக்கொள்.

பிறப்பிலும் மரணத்திலும் உடன் இருப்பது என்பது கனவுதான்.

அந்தக் கனவை விட்டுவிடு.

மரணத்தில் உன்னுடன் யார் வருவார்கள்?

மனமே, அமைதியாக இரு.

இங்கே கவிஞர் தத்துவவாதியாக மாறுகிறார்! உலகில் மனித உறவுகள் ஒரே சீராக என்றும் இருப்பதில்லை, நிலைத்திருப்பதும் இல்லை. பிறப்பு, இறப்புஇரண்டிலும் மனிதன் தனித்தே இருக்கிறான். இடையில் வரும் உறவுகள் எத்தனை காலம் நிலைக்கும் எனச் சொல்லமுடியாது. “உயிர்த் தோழன்என்று சொல்கிறோம். உயிர் பிரியும் போது அவனும் கூட வருவானா?

அப்பர் சொல்கிறார்:


எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்      எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா

நிற்பர்

இதையே நம் கவிஞர் சினிமா பாஷையில் சொல்கிறார். ‘உத்னா ஹீ உபகார் ஸ்மஜ் கோயீ ஜித்னா ஸாத்  நிபாதே‘- என்ன அருமையான வரி! நினைவில் வைக்கத் தக்கது.

இந்தப் பாடல் யமன் ராகத்தில் அமைந்த மிகச்சிறந்த பாடல்.ரோஷனின் அருமையான இசை.

சரி, மனம் அமைதியாகிவிட்டது. தைரியம் வந்து விட்டது. அடுத்து என்ன ஆகும்? கடந்த காலத்தை நன்கு சிந்தித்து, எதிர்காலத்திற்கான புதிய வழியை வகுக்கவேண்டும். இதை அடுத்துச் சொல்கிறார்  ஸாஹீர்.

4. புதிய தொடக்கம்

Song: Chalo ek baar phir se

Film:  Gumrah 1963

Music: Ravi

Singer: Mahendra Kapoor

चलो एक बार फिर से, अजनबी बन जाये हम दोनों

சலோ ஏக் பார் ஃபிர்ஸே, அஜ்னபீ ப்ன் ஜாயே ஹம் தோனோ(ன்)

வா, நாம் இருவரும் மீண்டும் அறிமுகமற்றவர்களாக ஆகி விடுவோம்!

ना मैं तुम से कोई उम्मीद रखू दिलनवाज़ी की न तुम मेरी तरफ देखो, ग़लत अंदाज़ नज़रों से न मेरे दिल की धड़कन लड़खड़ाये मेरी बातों में ना जाहीर हो तुम्हारी कश्मकश का राज़ नज़रों से

நா மை தும் ஸே கோயீ உம்மீத் ரக்கூ(ன்) தில்னவாஃஜீ கீ

தும் மேரீ தரஃப் தேகோ, கலத் அந்தாஃஜ் நஃஜ்ரோ(ன்) ஸே

மேரே தில் கீ தட்கன் லட்கடாயே மேரீ பாதோ(ன்) மே

நா ஜாஹீர் ஹோ தும்ஹாரீ ்மக கா ராஃஜ் நஃஜ்ரோ(ன்) ஸே

நான் உன்னிடம் எந்த விதமான சலுகையையும் எதிர்பார்க்கவில்லை

நீயும் என்னிடம் தவறான பார்வையை வைக்காதே!

நான் பேசும்போது என் மனது படபடக்காது!

நீயும் உன் மனதில் இருப்பதை பார்வையால் வெளிப்படுத்த வேண்டாம்!

तुम्हें भी कोई उलझन रोकती है पेशकदमी से मुझे भी लोग कहते हैं की ये जलवे पराये हैं मेरे हमराह भी रुसवाईयाँ हैं मेरे माज़ी की तुम्हारे साथ अभी गुज़री हुई रातों के साये हैं

தும்ஹே பீ கோயீ உல்ஜன் ரோக்தீ ஹை பேஷ்கத்மீ ஸே

முஜே பீ லோக் கஹதே ஹை கீ யே ஜல்வே பராயே ஹை

மேரே ஹம்ராஹ் பீ ருஸுவாயியா(ன்) ஹை மரே மாஃஜீ கீ

தும்ஹாரே ஸாத் அபீ குஜ்ரீ ஹுயீ ராதோ(ன்) கே ஸாயே ஹை

உனக்கும் சில கஷ்டங்கள்உன்னால் மேல்செல்ல முடியவில்லை!

நானும் மாறிவிட்டேன் என்று சொல்கிறார்கள்.

கடந்த காலத்தின் அவமானங்கள் என்னில் மறைந்திருக்கின்றன.

கடந்த காலத்தின் நிழல்கள் உன்னிடமும் படிந்திருக்கின்றன!

तारूफ रोग हो जाये, तो उसको भूलना बेहतर ताल्लूक बोझ बन जाये तो उसको तोड़ना अच्छा वो अफ़साना जिसे अंजाम तक लाना हो मुमकिन उसे एक खूबसूरत मोड़ दे कर छोड़ना अच्छा

தாரூஃப் ரோக் ஹோ ஜாயே , தோ உஸ்கோ பூல்னா பேஹ்தர்

தால்லூக் போஜ் பன் ஜாயே தோ உஸ்கோ தோட்னா அச்சா

வோ அஃப்ஸானா ஜிஸே அஞ்சாம் தக் லானா ஹோ மும்கின்

உஸே ஏக் கூப்ஸூரத் மோட் தே கர் சோட்னா அச்சா

ஒருவரின் அறிமுகம் நோயாக மாறிவிட்டால், அதை மறந்து விடுவதே நல்லது!

ஒரு தொடர்பு சுமையாக மாறிவிட்டால், அதை முறித்து விடுவதே நல்லது!

எந்த உறவை முழுமையான இலக்கு நோக்கிக் கொண்டுசெல்ல இயலவில்லையோ

அதற்கு ஒரு நல்ல திருப்பம் தந்து, அத்துடன் விட்டுவிடுவதே நல்லது!

Oh, what fantastic poetry, music and singing!

இந்தக் கவிதையின் அழகையும் ஆழத்தையும் ஒரு கவிஞன் தான் சொல்ல முடியும்.

மிகச் சங்கடமான விஷயங்களை மிக நளினமாகச் சொல்லியிருக்கிறார். நாகரீகமாகச் சொல்லியிருக்கிறார். எவர் மனதையும் நோக வைக்க வில்லை. கடந்த காலத்தை இகழவில்லை. நல்ல எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறார்.

இதில் முதல் மூன்று பத்திகள் கதை சம்பந்தப்பட்டவை. நான்காவது பத்தியில் அபாரமான கருத்துக்களைச் சொல்கிறார். ஒரு உறவு, தொடர்பு சரியான வழியில் போகவில்லை எனில் அதை நல்ல முறையில் விட்டுவிடுவதே நல்லது என்கிறார்.

இந்தப் பாடல் கடினமான கருத்துக்களைச் சொல்வது. இதற்கு அமைந்த மெட்டும் கடினமானது. இசைஞர் ரவி, எழுதிய பாட்டிற்கு மெட்டமைப்பதில் வல்லவர். பாட்டில்லாமல் இந்த மெட்டு அமைந்திருக்குமா என்பது சந்தேகமே.

பாடிய மஹேந்த்ர கபூரோ, அசத்தி இருக்கிறார்.

1957ல் மர்ஃபி ரேடியோ கம்பெனியும் மெட்ரோ நிறுவனமும் சேர்ந்து புதுப் பாடகர்களைத் தேர்ந்தெடுக்க போட்டி வைத்தார்கள். தேர்வு செய்ய அமர்ந்தவர்கள் அனில் பிஸ்வாஸ்,, நௌஷத், சி.ராம்சந்த்ரா, மதன் மோஹன் ஆகிய பெரிய தலைகள்! அப்போட்டியில் முதலில் வந்தார் மஹேந்த்ர கபூர். ஆனால் அவருக்கு வாய்ப்புக்கள் அதிகம் வரவில்லை. அவரை அதிகம் பாடவைத்தவர்களில் ரவி முக்கியமானவர். கபூர் பாடிய இந்தப் பாடல் அவருக்குக் கிரீடம் போன்றது.

சினிமாவைப் பாருங்கள்! அது ஒரு மாயா ஜால உலகம். இருப்பது கதை, எடுப்பது படம்! பாத்திரங்கள், நடப்புக்கள் எல்லாமே போலி! ஆனாலும் சில பாடல்கள், இசை மனதில் பதிகிறது. படம் போகிறது, நல்ல இசை நிலைத்து நிற்கிறது. திரையில் ஓடுவது ஒரு துன்பக் காட்சியே என்றாலும் அந்த இசையை ரசிக்கிறோம்! இப்படி நல்ல இசை நம்மோடு ஒன்றிவிடுகிறது!

பண்டைய கிரீஸ் Greece நாட்டில் துன்பவியல் நாடகங்கள் Tragedies திருவிழா போலவே அரசின் செலவில் நடத்தப்பட்டன! ஒவ்வொரு குடிமகனும் இதில் கலந்துகொள்வது சமூக, குடியுரிமைக் கடமையாகக் Social and civic duty கருதப்பட்டது. இது ஏன்?

துன்பவியல் நாடகங்களின் கதா பாத்திரங்கள் ராஜ குடும்பத்தினர், பிரபுக்கள், தேவதைகள் ஆகியோர். இவர்கள் படும் பாட்டைக் கண்டால் எல்லோருக்கும் மனதில் ஒருவித உயர்ந்த மன நிலை உருவாகும். “, இந்தப் பெரிய இடத்து ஆசாமிகளுக்கே இந்தக் கதி என்றால், விதி இவர்களையும் விட்டு வைக்கவில்லை என்றால் நம் போன்றவர்களுக்கு என்ன ஆகும்என்று ஒவ்வொருவருக்கும் எண்ணம் உதிக்கும். இது நற் சிந்தனைகளுக்கும் நல்ல நடத்தைக்கும் வழிவகுக்கும். இந்த மாற்றத்தை Catharsis கதார்ஸிஸ் என்றனர். இன்று அத்தகைய நாடகங்கள் நடப்பதில்லை. ஆனால் இத்தகைய கவிதைகள் நம்மை சிந்திக்கவே வைக்கின்றன.

And the night shall be filled with music,
And the cares that infest the day
Shall fold their tents like the Arabs
And as silently steal away.

~Henry Wadsworth Longfellow, The Day Is Done

இன்று சினிமா என்று இருக்கும் குட்டையில் இத்தகைய கவிதையையோ, இசையையோ எதிர்பார்க்க முடியுமா?

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: