27 நட்சத்திரங்களில், எது முதல் நட்சத்திரம்?- Part 1 (Post No.7899)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7899

Date uploaded in London – 29 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

(Arudra, Mrgasirsha stars in Orion Constellation)

சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தில் முதல் இலக்கண புஸ்தகம் எழுதப்பட்டது. அதை எழுதியவர் பாணினி. இப்படியும் ஒருவர் சுருக்கமாக எழுத முடியுமா என்று உலகமே வியக்கும் வண்ணம் சுருக்கி வரைந்தார். பாரதியார் பாட்டிலும்

நம்பரும் திறலோடு ஒரு பாணினி

ஞால மீதில் இலக்கணம் கண்டதும்

என்று பாடுகிறார்

பாணினி சொன்ன விஷயங்களை  எதிர்காலத்தில் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக பேருரை இயற்றினார் பதஞ்சலி முனிவர். பாணினியின் இலக்கண நூலுக்குப் பெயர் அஷ்டாத்யாயீ – ‘எட்டு அத்தியாயம்’. அதன் மீது பதஞ்சலி எழுதிய பாஷ்யத்துக்கு ‘மஹா பாஷ்யம்’ என்று பெயர்.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன இருந்தது, எப்படி இருந்தது என்று இவர்கள் அபூர்வமான விஷயங்களைச் சொல்கின்றனர் . நாணயங்கள் பற்றி பாணினி சொல்லும் விஷயங்கள் அவரை புத்தர், மஹாவீரர் காலத்துக்கு முந்தையவர் என்று காட்டுகிறது. இது போல நட்சத்திரங்களைப் பெயரில் சூட்டும் விஷயங்களையும் பாணினி பட்டியலிடுகிறார்.

இப்படிப்பட்டவை, பழங்கால உலகில் வேறு எங்குமில்லாததால் நாம் மண்ணின் மைந்தர்கள்; வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இல்லை  என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்ல. இன்று வரை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நட்சத்திரத்தை வைத்து ரோகிணி, விசாகா , அஸ்வினி, கார்த்திகை , உத்ரா, சித்ரா , ரேவதி என்றெல்லாம் பெயர் வைக்கிறோம். இப்படி பல்லாயிரம் ஆண்டுகளாக நட்சத்திரங்களை மதிக்கும் உலக மஹா அதிசயத்தை பாரதத்தில் மட்டுமே காண முடியும்.

அதைவிட அதிசயம் தமிழர்களுக்கு நட்சத்திரம் மீதிருந்த அதிசய நம்பிகையை,  2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கிய நூல்களில் காண்கிறோம். ரோகிணி நட்சத்திரத்தில் கல்யாணம் செய்ததை அக நானுற்றில் படிக்கிறோம் (பாடல் 86, 136). சப்தரிஷி மண்டலத்தை — அதாவது ஏழு நட்சத்திர கூட்டத்தை– மக்கள் வணங்குவது  , அருந்ததி நட்சத்திரத்தைப் போற்றுவது ஆகியவற்றைக் காண்கிறோம். சிலப்பதிகாரத்தில் கார்த்திகை என்ற பெயருள்ள பெண்ணைச் சந்திக்கிறோம். ஆக உலகில் பழமையான ஒரு நாகரீகமுள்ள , வாழும் நாகரீகமுள்ள ஒரே நாடு இந்தியா.

மற்ற இடங்களில் எல்லாம் இஸ்லாமும் கிறிஸ்தவமும் பரவியதால் பழைய நாகரீகம் மியூசியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

xxx

மஹாபாரதத்தில் ரோகிணி, ரேவதி பெயர்களை பார்க்கிறோம்-

பலராமனின் அம்மா பெயர் ரோஹிணி . அதாவது வசுதேவரின் மனைவி. பலராமனின் மனைவி பெயர் ரேவதி. ரைவதனின் மகளாகப் பிறந்ததால் ரேவதி என்று சொல்லுவோருக்கும் அந்தப் பெயர் நட்சத்திரங்களில் ஏற்கனவே இருப்பதைக் காட்டலாம். அர்ஜுனன் மகன் அபிமன்யுவின் மனைவி பெயர் உத்தரா . இது தவிர உத்தர என்ற ஆண்மகனையும் சந்திக்கலாம்.

பாணினி சொல்லும் நட்சத்திரப்  ப ட்டியலைக் காண்போம் :–

பாணினி சூத்திரம் 4-3-34 முதல் 37 வரை ; 8-3-10

ஒருவருடைய இயற்பெயருடன் நட்சத்திரப் பெயரையும் வைத்துக் கொள்ளலாம் என்று கிருஹ்ய சூத்ர  நூல்கள் இயம்பும் . ஆபஸ்தம்பர் நூல் ஒரு அதிசய விஷயத்தைப் பகரும். அதாவது நட்சத்திரப் பெயர் ரகசிய பெயர்! வெளியே சொல்லமாட்டார்கள் .

எகிப்திலும் இப்படி ரகசியப் பெயர், முடி சூட்டும்போது அபிஷேக நாமா , இயற் பெயர் என்று மூன்று பெயர்கள் இருந்தன. அவர்களுக்கும் இந்தியர்களுக்கும் உள்ள தொடர்புகளைக் காட்டும் நூற்றுக்கணக்கான விஷயங்களில் இதுவும் ஒன்று.

கோபில (Ghobila) க்ருஹ்ய சூத்திர நூல், வேறு ஒரு விஷயத்தையும் சேர்க்கிறது . பையனுக்கு ஆசிரியர் நட்சத்திரப் பெயர் சூட்டுவார் என்றும் அவரை மாணவர்கள் ‘அபிவாதயே மந்திரம்’ சொல்லி வணங்கும் போது நட்சத்திரப் பெயரை மாணவன் பயன் படுத்துவான் என்றும் சொல்கிறது . ஏன் என்பது நமக்கே புரியும். ஒரே பெயருடைய பல மாணவர்கள் உள்ள குரு  குலத்தில் ஒரு மாணவனை எளிதில் அடையாளம் காணலாம். இதை சாங்க்யாயன , காடிர , மானவ , ஹிரண்யகேசி க்ருஹ்ய சூத்திர நூல்களும் ஆதரிக்கின்றன. பிற்காலத்தில் இத்துடன் கோத்திரங்களையும் சேர்த்ததை ‘மொக்கலான திஷ்ய’ என்ற பெயரில் பார்க்கிறோம். திஷ்ய என்பது புஷ்ய நட்சத்திரம்.

பாணினியின் காலத்தில் நட்சத்திரங்கள் வணங்கப்பட்டன . அதுமட்டுமல்ல; ஒவ்வொன்றுக்கும் ஒரு அதி தேவதையும் இருந்தது. ரோஹிணி என்பது ரோஹண என்றும் சொல்லப்பட்டது. ச்ரவிஷ்டா / தனிஷ்டா நட்சத்திரப் பெயர்களை ஆண் , பெண் ஆகிய இரு பாலரும் பயன்படுத்தினர்.

பல்குனி , அனுராதா, ஸ்வாதி , திஷ்ய, புனர்வஸு , ஹஸ்த, விசாகா, ஆஷாடா , பஹுல /கிருத்திகா ஆகியன அப்படியே பெயர்களாக பயன்பட்டன. சில பெயர்கள் அபிஜித், ஆபிஜித என்றும் பயன்படுத்தப்பட்டன.

வேத காலத்தில் இவை இருந்ததாகத் தெரியவில்லை. பாணிணிக்குப் பின்னர் வந்த புத்த ஜாதகக் கதைகளில் இவை பாலி மொழிக்கேற்ப கொச்சையாக வழங்கப்பட்டன :-

(உ.ம்.) ரோஹிணி -ரோஹ ; புஷ்ய – பூச, பூசிணி, பூசக நட்சத்திரப்

இன்னும் ஒரு சூத்திரத்தில் – பாணினி  .8-3-100- ‘சேன’ என்பதற்கு முன்னர் ரோஹிணி , பரணி, சதபிஷக் ஆகியவற்றைச் சேர்க்கமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

27 நட்சத்திரங்களில் அஸ்வினியை முதல் நட்சத்திரமாக வைத்து இன்று பஞ்சாங்கம் அச்சிடப்படுகிறது . ஆனால் முன்காலத்தில் கிருத்திகா அல்லது  ச்ரவிஷ்டா/தனிஷ்டா (அவிட்டம்) நட்சத்திரம் முதலில் இருந்ததன . ஏன் இப்படி மூன்று முறைகள் என்பதை இரண்டாவது பகுதியில் காண்போம்.

tags — முதல் நட்சத்திரம், பாணினி, தமிழர்,அஸ்வினி

to be continued…………………………………..

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: