கொரானா போன்ற கொலைவெறி! – கிம் ஜாங் உன்!! (Post No.7911)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7911

Date uploaded in London – – – 2 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொரானா போன்ற கொலைவெறி! – கிம் ஜாங் உன்!!

ச.நாகராஜன்

வட கொரியா ஒரு மர்மமான நாடாக கடந்த 70 ஆண்டுகளாக விளங்குகிறது.

கொரானா வைரஸ் போலவே தான் இந்த நாட்டின் அதிபர்களும் மர்ம நபர்கள். ஆட்கொல்லிகள்! மர்மமாக இருக்கும் இவர்கள் பயம், காழ்ப்புணர்ச்சி, கொலைவெறி உள்ளிட்ட ஏராளமான நெகடிவ் குணங்களின் தாயகம்!

கிம் என்பது இவர்களின் குடும்பப் பெயர்

முதலில் 1994 முடிய கிம் இல் சுங் படு கோர தாண்டவம் ஆடி வட கொரியாவை ஒரு வழி செய்தார்! வட கொரிய தொழிலாளர் கட்சியின் தலைவர் இவர்.

இங்கு யாரும் எதையும் சுதந்திரமாகப் பேச முடியாது. எந்தச் செய்தியையாவது வெளி உலகிற்கு யாரேனும் சொன்னால் அவருக்கு மரணதண்டனை தான்!

கிம் இல் சுங்கிற்குப் பிறகு அவர் மகன் கிம் ஜாங் இல் தனது கோர தாண்டவத்தை ஆரம்பித்தார். (பிறப்பு 16-2-1941 மரணம் 17-12-2011)

அவர் இறப்பதற்கு முன் தனது மூன்றாவது மகனான கிம் ஜாங் உன்னைத் தனது வழியிலேயே தயார் செய்தார்.

தாத்தா- மகன் – பேரன் மூன்று பேருமே கொடூர வில்லன்கள்!

இப்போது தினசரி ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கும் கொடூர வில்லன் கிம் ஜாங் உன் ‘கிறுக்குத் தடியன்’, ‘கிறுக்கு வில்லன்’ என்று தமிழக ஊடகங்களில் செல்லமாக அழைக்கப்படுபவர். வமிச பாரம்பரிய ராட்சஸ குணத்தைத் தப்பாமல் தக்க வைத்திருக்கும் ஒரு தடியர் என்று இவரைப் பற்றிய விமரிசனங்கள் வருகின்றன!

37 வயதே ஆன இவருக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்ததாகவும், அவர் இறந்து விட்டதாகவும் அல்லது கவலைக்கிடமாக இருப்பதாகவும் 21, ஏப்ரல் 2020 முதல் செய்தி பரவலாக வருகிறது.

ஆனால் இப்படிப்பட்ட வதந்திகளை இவர்களே பரப்பி விடுவது வழக்கமாதலால் இது உண்மையா பொய்யா என்று யாருக்கும் தெரியவில்லை.

Kim is alive according to May 1, 2020 news in Noth Korean Mass media.

இப்போதிருக்கும் ‘வில்லன்’ உலகையே நான் அழித்து விடுவேன்; என்னிடம் ஹைட்ரஜன் குண்டு இருக்கிறது என்று மிரட்டுவது வழக்கம்!

நாம் பயப்பட்டுத் தானே ஆக வேண்டும்; ‘கிறுக்கன்’ எங்காவது திடீரென்று போட்டு விட்டால்….?

கொரானா போல அல்லவா ஆகி விடும்?!

மலை மீது சொகுசு வாசஸ்தலத்தில் அறுவை சிகிச்சை என்று சொன்னார்கள்.

ஆடம்பரப் பிரியர் இவர்.

2009ல் கிம் ஜாங் உன்னின் தந்தை மெர்சிடிஸ் பென்ஸ் புல்மே கார்டு லிமோசின் கார்கள் இரண்டை வாங்கினார். குண்டு துளைக்காத 21 அடி நீளமுள்ள சொகுசு கார்கள் இவை!

அதைத் தான் ‘கிறுக்கு’ வில்லன் இப்போது தன் கைவசம் உபயோகத்திற்கு வைத்திருக்கிறார்.

கண்டம் விட்டு கண்டம் தாவும் நாசகார ஆயுதங்களையும் ராக்கெட்டுகளையும் தயாரிக்கும் விஞ்ஞானிகளுக்கு இந்த வில்லன் தரும் பரிசு பென்ஸ் கார்கள் தாம்!

ஒரு முறை 160 பென்ஸ் கார்களை தனது அதிகாரிகளுக்கும் வேண்டியவர்களுக்கும் இவர் பரிசாக அளித்தாராம்!

கிம் ஜாங் உன் இறந்து விட்டால்…

உலகத்திற்கு க்ஷேமம் என்று சொல்கிறீர்களா, அதிருக்கட்டும், அடுத்த ஆள் யார் என்பதைப் பற்றிப் பேச வருகிறேன்.

அவரது தங்கை கிம்யோ ஜாங் பொறுப்பேற்கலாம். ஏனெனில் இந்த மங்கை தான் அண்ணனுடன் அடிக்கடி பொது இடங்களில் தோன்றுகிறார். இவர் ஆளும் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

அண்ணன்மார் பற்றி விவரங்கள் எதுவும் வெளி உலகிற்குத் தெரியாது.

அது சரி, கிறுக்கு வில்லன் என்கிறீர்களே, ஏதாவது ஒரு விஷயத்தையாவது சொல்லக் கூடாதா என்கிறீர்களா?

சொல்லலாம், மனதைத் திடப்படுத்திக் கொண்டு படிக்க வேண்டும்.

கிம் ஜாங் உன்னின் சொந்த மாமன் மீது அவருக்கு கோபம் வந்தது. என்ன நடந்தது தெரியுமா?

உயிரோடு வெறிநாய்களிடம் தள்ளி அவைகளை விட்டுக் கடிக்க விட்டார்!

ஹாங்காங்கின் வென் வெய்போ பேப்பர் தரும் தகவல் இது.

4-1-2014 அன்று வந்த செய்தி இது!

ஜாங் சாங் தக் – மாமாவின் பெயர் இது.

அவரை அடிக்கடி கடுமையாக விமரிப்பது வட கொரியாவின் வழக்கம். அவரையும் அவரது ஐந்து பாதுகாவலர்களையும் பிடித்தார் கிம் ஜாங் உன்!முதலில் மாமாவின் உடைகளையும் ஐந்து பாதுகாவலர்களின் உடைகளையும் அவிழ்த்து அவர்களை நிர்வாணமாக்கினார்.

மூன்று நாட்கள் 120 வெறி நாய்களைப் பட்டினி போட்ட கிம் ஜாங் உன், அவைகளை கட்டவிழ்த்து விட்டு அந்த ஆறு பேர்களின் மீது ஏவினார்.

வெறி நாய்கள் கடித்துக் குதறி விட்டன சொந்த மாமனை!

ஒரு மணி நேரம் இந்த கோர சம்பவம் நடந்தது; எல்லாம் முடிந்து விட்டது. இதை நூற்றுக்கணக்கான அதிகாரிகள் வேடிக்கை வேறு பார்த்தனர்.இது இவர் வாழ்வின் ஒரு சம்பவம். ஏனையவை  பற்றி நினைத்தாலே குலை பதறும்!

செய்தியின் ஆங்கில மூலம் இதோ:

04-1-2014

Kim Fed his Uncle alive to 120 Dogs!

Kim Jong Un’s uncle was killed after being sripped naked and fed to a pack of hungry dogs, according to reports in a Chinese state backed newspaper.

North Korea has already described Jang Song-thaek as “despicable human scum, worse than a dog”, but these reports appearing in Hong Kong’s Wen Wi Po newspaper, suggest he may have met his end in the jaws of dogs.

The account describe how Jang Song-thaek and five of his aides were stripped naked and fed to 120 hungry hounds, who had been starved for three days. The whole process lasted an hour, and as they were being eaten, hundreds of officials watched.

*

அது சரி, இந்த ‘கிறுக்கு வில்லனைப்’ பற்றி இப்போது எதற்காக எழுத வேண்டும் என்று கேட்கிறீர்களா?

நியாயமான கேள்வி தான்!

இந்த வட கொரியாவிற்கு இருக்கும் ஒரே நண்பன் சீனா தான்!

சீனா உலக வில்லனாக அமெரிக்க டிரம்ப் முதலாக பல்லோராலும் சித்தரிக்கப்படும் இந்த கொரானா காலத்தில் சீனாவின் நண்பர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்வது நல்லதில்லையா?!

***

tags – கிம் ஜாங் உன், வட கொரியா

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: