ஹிந்தி படப் பாடல்கள் – 24 – இரு பாட்டுகள் ஒரு சாயல் ! (2) (Post No.7912)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7912

Date uploaded in London – – – 2 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 24 – இரு பாட்டுகள் ஒரு சாயல் ! (2)

R.Nanjappa

இரு பாட்டுகள் -ஒரு சாயல்!-2

இந்திய சங்கீதத்தின் எல்லாப் பிரிவிற்கும் அடிப்படையாக இருப்பது ஏழு ஸ்வரங்களே. “ஸோபில்லு ஸப்த ஸ்வர” – ஏழு தேவதைகள் என்பார் ஸ்ரீ த்யாகராஜர். எல்லா இசைக்கும் இவையே அடிப்படை.

ஸ்வரத்தை அடிப்படையாக வைத்து எழுவது ராகம் என்னும் மாளிகை! -ஸ்வரங்களை ஒரு குறிப்பிட்ட முறையில் ஏற்ற-இறக்கங்களுடன் அடுக்குவது..  மேலையிசையில் ராகம் என்று இல்லை, ஆனாலும் அவர்கள் இசையும் ஸ்வரக் கூட்டங்களின்  மீது எழுவதே. ராபர்ட் ப்ரௌனிங்க் எழுதுகிறார் :

Would that the structure brave, the manifold music I build,

Bidding my organ obey, calling its keys to their work,

Claiming each slave of the sound, at a touch, as when Solomon willed

Armies of angels that soar, legions of demons that lurk,

Man, brute, reptile, fly,—alien of end and of aim,

Adverse, each from the other heaven-high, hell-deep removed, —

Should rush into sight at once as he named the ineffable Name,

And pile him a palace straight, to pleasure the princess he loved!

 – Robert Browning: Abt Vogler 1864

ராகமும் பாவமும்

 இப்படி ஸ்வரங்கள் சேரும்போது ஒரு பாவம் மனதில் தோன்றும். ஒவ்வொரு பாவமும் ஒர் உணர்ச்சியை தோற்றுவிக்கும்-அனுபவிக்கச் செய்யும். சில இசைகளைக் கேட்கும் போது நமக்கு ஆடத் தோன்றுகிறதல்லவா!. மிலிடரியில் நடையின்போது பாண்ட் வாசிப்பார்கள்.-நடையில் மிடுக்கேறும்!

இப்படி பாவங்களைக் கருத்தில் கொண்டு தோற்றுவிக்கப்படுவதே ராகம். ஒவ்வொரு ராகமும் ஒரு அல்லது சில பாவங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. நவரசங்களையும் நம் மனதில் தோற்றுவிக்கக் கூடியவை. .ஸ்ரீ ரங்க ராமானுஜ ஐயங்கார் “க்ருதி மணி மாலை” என்ற புத்தகத்தில் ஒவ்வொரு ராகத்தின்  இலக்கணத்தைச் சொல்லி அவை எந்தெந்த பாவங்களை வெளிப்படுத்தும் என்பதையும் சொல்லியிருக்கிறார்.

சினிமாவில் ஒவ்வொரு பாட்டும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்த/ தூண்ட  உருவாக்கப்படுகிறது. இதில்  நடிக நடிகையரின்  அங்க அசைவுகள், முக பாவத்துடன், பாடலின் சொற்களும் இசைக்கு  இயைந்து போகும்போது ரசிகர்கள் மனதில் எதிர்பார்த்த உணர்வு தோன்றும். பாட்டு மனதில் நிற்கும்.

இரண்டு படங்களில் ஒரேவித சூழ்நிலை என்று வந்தால், இரு இசைஞர்கள் ஒரே ராகத்தில் அமைந்த மெட்டுக்களை அமைக்கக் கூடும்!  இது தற்செயலாக நிகழ்வதே தவிர, ஒருவரைப் பார்த்து மற்றவர் செய்தார் எனச் சொல்வதற்கில்லை!

 இப்படி நமது சினிமாவில் நடந்தது! அப்படி வந்த இரு பாடல்களைப் பார்ப்போம். [இந்த ராகத்தில் பல பாடல்கள் இருக்கின்றன. ஆனால் இவ்விரு பாடல்களும் மிகவும் ஒத்துப்போகின்றன-ஒரே நிலையில் பாடப்பட்டவை.]

ரஸிக் பல்மா

रसिक बलमा, हाय दिल क्यों लगाया
तोसे दिल क्यों लगाया, जैसे रोग लगाया
ரசிக் பல்மா, ஹாய் தில் க்யோ(ன்) லகாயா

தோஸே தில் க்யோ(ன்) லகாயா, ஜைஸே ரோக் லகாயா

மயக்கும் அன்பனே, உன்னிடம் நான் ஏன் மனதை வைத்தேன்?

உன்னிடம் நான் ஏன் மனதை வைத்தேன்?

அது நோய் போன்று என்னை வருத்துகிறதே


जब याद आये तिहारी, सूरत वो प्यारी प्यारी
नेहा लगा के हारीतङपूं मैं गम की मारी
रसिक बलमा

ஜப் யாத் ஆயே திஹாரி, ஸூரத் ப்யாரீ ப்யாரீ

நேஹா லகா கே ஹாரீ, தட்பூ(ன்) மை கம் கீ மாரீ

ரஸிக் பல்மா…..

உன் நினைவு வந்து, உன்  அழகிய முகத்தை நினைக்கும்  பொழுது

காதலில் தோற்றது தெரிகிறது,

வருத்தத்தில் உழல்கிறேன் அன்பனே !

ढूंढे हैं पागल नैना, पाए ना इक पल चैना
डसती है उजली रैना, कासे कहूँ मैं बैना
रसिक बलमा…  

டூண்டே ஹை பாகல் நைனா, பாயே நா இக் பல் சைனா

டஸதீ ஹை உஜ்லீ ரைனா, காஸே கஹூ(ன்) மை பைனா

ரஸிக் பல்மா….

இந்தக் கண்கள் உன்னைத் தேடி பைத்தியமாகி விட்டன

ஒரு கணம் கூட நிம்மதி இல்லை!

ஒளி மிக்க இந்தப் பகல் பாம்புக்கடி போல் துன்பம் தருகிறது

எவருடன் இதை நான் பகிர்ந்துகொள்வேன்?

அன்பனே

Song: Rasik balma  Film: Chori Chori 1956  Lyricist: Hasrat Jaipuri

Music: Shankar-Jaikishan   Singer: Lata

சாந்த் ஃபிர் நிக்லா

चाँद फिर निकला, मगर तुम आये
जला फिर मेरा दिल, करुँ क्या मैं हाय
चाँद फिर निकला


சாந்த் ஃபிர் நிக்லா, மகர் தும் ஆயே

ஜலா ஃபிர் மேரா தில், கரூ(ன்) க்யா மை ஹாய்

சாந்த் ஃபிர் நிக்லா…..

நிலவு மீண்டும் எழுந்துவிட்டது, ஆனால் நீ வரவில்லை

மனது துன்பத்தில் எரிகிறது, என்ன செய்வேன்

நிலவு மீண்டும் எழுந்துவிட்டது……

ये रात कहती है वो दिन गये तेरे
ये जानता है दिल के तुम नहीं मेरे
खड़ी मैं हूँ फिर भी निगाहें बिछाये
मैं क्या करूँ हाय के तुम याद आये
चाँद फिर निकला

யே ராத் கஹதீ ஹை வோ தின் கயே தேரே

யே ஜான்தா  ஹை தில் கே தும் நஹீ மேரே

கடீ மை ஹூ(ன்) ஃபிர் பீ நிகாஹை பிசாயே

மை க்யா கரூ(ன்) ஹாய் தும் யாத் ஆயே

சாந்த் ஃபிர் நிக்லா……

என்னுடைய நல்ல நாட்கள் கழிந்துவிட்டன என்று இந்த இரவு சொல்கிறது

நீ எனக்கில்லை என்பதை நான் அறிவேன்

இருந்தும் உன் வழியைப் பார்த்தவாறே நான் நின்றுகொண்டிருக்கிறேன்

நான் என்ன செய்வேன், உன் நினைவு வருகிறதே!

நிலவு மீண்டும் எழுந்துவிட்டது………


सुलगते सीने से धुंआ सा उठता है
लो अब चले आओ के दम घुटता हैं
जला गये तन को बहारों के साये
मैं क्या करुँ हाय के तुम याद आये
चाँद फिर निकला…  

ஸுலக்தே ஸீனே ஸே துவாஸா உட்தா ஹை

லோ அப் சலே ஆவோ கே தம் குட்தா ஹை

ஜலாகயே தன் கோ  பஹாரோ(ன்) கே ஸாயே

மை க்யா கரூ(ன்) ஹாய் கே தும் யாத் ஆயே

சாந்த் ஃபிர் நிக்லா…….

என் எரியும் நெஞ்சிலிருந்து புகைபோல் கிளம்புகிறது,

மூச்சு முட்டுகிறதுநீ திரும்பி வந்துவிடு

இந்த வஸந்த காலத்தின் நிழலும் என் உடலை தகிக்கிறது

நான் என்ன செய்வேன், உன் நினைவு வந்துவிட்டதே !

நிலவு மீண்டும் எழுந்துவிட்டது……

Song: Chand phir nikla Film: Paying Guest 1957 Lyricist: Majrooh Sultanpuri

Music: S.D.Burman  Singer: Lata

இரு பாடல்களும் சுத்த கல்யாண் ராகத்திலேயே அமைந்தவை! இந்த ராகம் மாலை 6 மணிமுதல் 9 வரை பாடத்தகுந்தது.  பக்தி, சோகம் melancholy -அதைச் சார்ந்த  ரஸங்களைப் பிரதிபலிப்பது. இதில் பாடகரின் குரலும், சாஹித்யத்தின் தன்மையும் முக்கியமானவை.

 இந்த ராகத்தில் பூப் Bhoop, தேஷ்கர் Deshkar ஆகிய ராகங்களின் சில சாயல் வரும் – கார் காலத்தில் நிலவை லேசாக மறைத்து ஓடும்  மேகம் போல.- touch and go ! [பூப் சாயலால் சோக ரசம் மிகும்].

 சரியாகக் கையாளாவிட்டால் ராகத்தின் தன்மை மாறிவிடும். அதனால் இதை தேர்ந்த பாடகர்கள் விஷயம் தெரிந்த ரசிகர்களிடத்தில் தான் பாடுவார்கள்..

 இந்த இரண்டு பாடல்களும் ஒரே நிலையை-பிரிவை- விவரிப்பவை. முதல் பாடல் மிக எளியது. இரண்டாம் பாடல் ஒரு Classic என்று சொல்லலாம். நிலவு, வசந்தம்- இரண்டும் பிரிவு நிலையில் துன்பம் தருபவை. இதை நாம் நம் இலக்கியத்தில் பார்க்கிறோம். இப்படி இந்தப் பாடல் ஒரு அருமையான கவிதையாக மலர்ந்திருக்கிறது.

சினிமா பாடகியான லதா மங்கேஷ்கர் இவ்வளவு நன்றாக இதைப் பாடியது இசைஞர்களின் திறமைக்குச் சான்று சொல்கிறது.

Yet, one can notice differences in the musical arrangement and interludes.

The music is good, but the lyrics add sufficient depth to make listening not only a pleasure but an experience.

60 ஆண்டுகள் ஆகியும் விரும்பிக் கேட்கப்படும் பாடல்கள்! Power of melody and lyrics!

 இப்பாடல்களை இரவில் அமைதியான சூழ்நிலையில் கேட்கவேண்டும்..

[ இதே ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்கள்:

– ஜஹா டால் டால் பர்-  சிகந்தர்-ஏ ஆஜம்  1965

-மேரீ முஹப்பத்  ஜவான் ரஹேகீ-  ஜான்வர் 1965

-ஏ ஷாம் கீ தன்ஹாயியா (ன்)  -ஆஹ்  (1953)

( தமிழில்: ஏகாந்தமாம் இம்மாலையில்- அவன்)

[See how many emotions this raag expresses! ]

” When you are happy, you enjoy the music.
 But when you are sad, you understand the lyrics”.

           -Frank Ocean , American singer and songwriter.

[Note: I do not aim at providing a poetic rendering here of the lyrics. That is for poets! I am simply attempting to convey the main sense of the poems, often without the embellishments.]

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 24 –

***

.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: