ஹிந்தி படப் பாடல்கள் – 29 – ஆண்கள் உலகம்! (Post No7933)

ஹிந்தி படப் பாடல்கள் – 29 – ஆண்கள் உலகம்! (Post No7933)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7933

Date uploaded in London – – – 7 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 29 – ஆண்கள் உலகம்!

R.Nanjappa

ஆண்கள் உலகம்?

பெண்கள் இல்லாமல் சினிமா இல்லை! ஆனாலும் சினிமா உலகில் பெண்கள் ஒரு கவர்ச்சிப் பொருளாகவே

பெரும்பாலும் சித்தரிக்கப்படுகின்றனர். அல்லது அழுகை வர வைக்க அம்மா வேடம்! கதை, வசனம், படப்பிடிப்பு. இயக்கம், இசை-என்று இப்படி எல்லாத் துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கமே அதிகம்! 1953ல் ஒரு பானுமதி ‘சண்டிராணி’ படத்தைத் தயாரித்து, நடித்து, இயக்கி, பாட்டும் பாடி சாதனை படைத்தார். அது அசாதாரணம்.

mardo ka fir bhi gulam hai zamana  மருதோ(ன்) கா ஃபிர் பீ  குலாம் ஹை ஃஜமானா” [ என்ன இருந்தாலும் இந்த உலகம் ஆண்களின் அடிமைதான்] என்று மிஸ்மேரி படத்தில் ராஜேந்த்ர க்ரிஷன் (தமாஷாக) எழுதிய பாடல் வரி நினைவுக்கு வருகிறது! 

 பாட்டு எழுதும் கவிகள் அனேகமாக ஆண்களே! பெண்களின் பாத்திரத்திற்காக பெண்களின் எண்ணங்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்களையும் ஆண்கள் தான் எழுதுகிறார்கள்! உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம்- இது உரன் கடோலா படத்தில் வரும்

ஹமாரே தில் ஸே ஜானா

हमारे दिल से जाना, धोका खाना, दुनिया बड़ी बेइमान
पिया दुनिया बड़ी बेइमान  

ஹமாரே தில் சே ஜானா தோகா கானா

துனியா படீ பேயீமான்

பியா துனியா படீ பேயீமான்!

அன்பரே! என் நெஞ்சை விட்டு அகலாதீர்கள்!

உலகில் சென்று ஏமாறாதீர்கள்!

இந்த உலகம் கவுரவமில்லாத இடம்

அன்பரே! உலகம் மோசமான இடம்!


(मैं हूं जी प्यार की पहली निशानी)-
(आँखों से आज कहूं दिल की कहानी)-
ओऽऊऽ सुन लो जी पैंया पड़ूँ होऽऊऽ
(देखो जी विनती करूं)-
होऽऊऽ, उमार भर लाज निभाना
दिल दुखाना
बलमा कहा मेरा मान
ऊऽ पिया दुनिया बड़ी बेइमान
हमारे  

மை ஹூ ஜீ ப்யார் கீ பஹலீ நிஷானீ

ஆன்கோ ஸே ஆஜ் கஹூ(ன்) தில் கீ கஹானீ

; ஸுன் லோ ஜீ பையா படூ(ன்) ..ஹோஓ

தேகோஜீ வினதி கரூ(ன்)

ஹோஉமார் பர் லாஜ் நிபானா

தில் துகானா

பல்மா கஹா மேரா மான்

பியா துனியா படீ பேயீமான்

அன்பரே! உங்கள் அன்புக்கு முதலில் பாத்திரமானது நான் தான்.

தில் உள்ளதை இன்று கண்களால் சொல்லுவேன்!!

, தயவு செய்து கேளுங்கள்காலில் விழுகிறேன்

பாருங்கள்கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்,

ஆயுள் முழுவதும் என் கவுரவத்தைக் காப்பாற்றுங்கள்

மனதிற்கு துன்பம் தராதீர்கள்

அன்பரேஉலகம் கௌரவமில்லாத இடம்அங்கு போய் ஏமாறாதீர்கள்

என் நெஞ்சிலேயே இருங்கள்!

(मीठे दो बोल यहां, मुशकिल है बोलना)-
(दुनिया से भेद कभी, मन के खोलना)-
ओऽऊऽ झूठी है प्रीत यहां,होऽऊऽ
(कोई मीत यहां)-
होऽऊऽ, बुरा है आज ज़माना
टूटे जिया ना
उलझन में है मेरी जान
ऊऽ पिया दुनिया बड़ी बेइमां
हमारे  

மீடே தோ போல் யஹா(ன்) முஷ்கில் ஹை போல்னா

துனியா ஸே பேத் கபீ, மன் கே கோல்னா

..ஜூடி ஹை ப்ரீத் யஹா(ன்)   …ஹோஓ

கோயீ மீத் யஹா(ன்)

.. புரா ஹை ஆஜ் ஃஜமானா

டூடே ஜியா நா

உல்ஃஜன்  மே ஹை மேரீ ஜான்

பியா துனியா படீ பேயிமான்

இங்கு இரண்டு  இனிமையான வார்த்தை பேசுவது கடினம்!

உலகத்திலிருக்கும் பிடிக்காத விஷயத்தை மனதை விட்டுச் சொல்லவேண்டாம்!

இங்கு அன்பு என்ற பெயரில் நிலவுவதெல்லாம் போலியே!

இங்கு உண்மையான அன்பர்கள் கிடையாது!

.. இன்று உலகம் கெட்டுக் கிடக்கிறது

மனது உடைந்து போய்விடப்போகிறது– 

இதை நினைத்து என் மனம் சங்கடப்படுகிறது!

அன்பரேஉலகம் கவுரவமில்லாத பொல்லாத இடம்

அங்கு போய் ஏமாறாதீர்கள்

என் நெஞ்சை விட்டு அகலாதீர்கள்!

Song: Hamare dil se na jana Film: Uran Khatola 1955  lyrics: Shakeel Badayuni

Music: Naushad    Singer: Lata  Raga: Bihag

மிக அருமையான கவிதை- இதற்கு “பிஹாக்ராகத்தில் மிக இனிமையாக மெட்டமைத்திருக்கிறார் நௌஷத்.

பாட்டின் கருத்தை மனதைத் தொடும் விதத்தில் வெளிப்படுத்துகிறது.

கவி ஷகீல் பதாயுனி உண்மையான அன்பரின் மன நிலையை வெளிப்படுத்தி இருக்கிறார். இது பெண் பாத்திரத்திற்காக எழுதியது. உலகை அதன் கண்ணோட்டத்தில் காட்டுவது. பெண்கள் இப்படிப் பேசுவார்களா?

உலகைப் பற்றிப் பேசலாம்-மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்வார்களா? 

[இந்தப் பாட்டை இதன் தமிழ் டப்பிங்க் “வான ரதம்” படத்திற்காக கம்பதாசன் தமிழில் எழுதினார்.’என் உள்ளம் விட்டு ஓடாதே’ என்று தொடங்கும்.]

ஆண்களின் மன நிலையை பெண்கள் வருணித்தால் எப்படி இருக்கும்? பெண்களில் அதிகம் பாடலாசிரியர்கள் இல்லை. நடிகை நர்கிசின் தாயார் ஜட்டன்பாய் ஒரு பாட்டு எழுதினார். நடிகை நிருபாராய் ஒரு பாட்டு எழுதினார். இசைஞர் ஓ.பி. நய்யாரின் மனைவி ஸரோஜ் மோஹினி “ப்ரீதம் ஆன் மிலோ” என்ற தனிப்பாடலை  எழுதி இது சி.ஹெச். ஆத்மா என்ற பாடகரின் குரலில் பிரபலமானது. இதையே கீதா தத் குரலில் Mr&Mrs.55 என்ற படத்தில்  நய்யார் பாடவைத்தார். பிறகு மாயா கோவிந்த் என்ற பெண் பாடலாசிரியர் வந்தார். ஆனால் ஆண்களின் மன நிலையை விளக்குவதாக நமது பொற்காலத்தில் ஒரு பெண் கவி எழுதியிருக்கிறார். பர்வேஃஜ் ஷம்ஸி Parwaiz Shamsi  என்ற இவர் “நௌஷேர்வான்-ஏ-ஆதில்” என்ற 1957 படத்திற்குப் பாட்டெழுதினார் அதில் ஒரு அருமையான Ghazal. 

யே ஹஸ்ரத் தீ

यह हसरत थी के इस दुनिया में बस दो काम कर जाते तुम्हारी याद में जीते, तुम्हारे ग़म में मर जाते  यह दुनिया डूबती तूफ़ान आता इस क़यामत का अगर दम भर को आँखों में मेरी आँसू ठहर जाते  तुम्हारी याद आकर मेरे नश्तर चुभोती है मगर दिल के सारे ज़ख़्म इतने दिन में भर जाते  कहाँ तक दुख उठाएं तेरी फ़ुर्क़त और जुदाई के अगर मरना ही था एक दिन, क्यूँ फिर आज मर जाते

யே ஹஸ்ரத் தீ கே இஸ் துனியாமே பஸ் தோ காம் கர் ஜாதே(ன்)

தும்ஹாரீ யாத் மே ஜீதே(ன்), தும்ஹாரீ கம் மே மர் ஜாதே(ன்)

இந்த உலகில் எனக்கு இரண்டே ஆசைகள் தான் இருந்தன

உன் நினைவில் வாழவேண்டும், உன் (நீ இல்லாத) வருத்தத்தில் உயிரை விடவேண்டும்!

யஹ் துனியா டூப்தீ தூஃபான் ஆதா இஸ் கயாமத் கா

அகர் தம் பர் கோ ஆங்கோ மே மேரீ (ன்)ஸூ டஹர் ஜாதே

பிரளயம் வந்து இந்த உலகமே மூழ்கிப்போய் விட்டால் தான் என்ன?

காலம் முழுவதும் என் கண்களில் கண்ணீர் நின்றுவிட்டுப் போகட்டுமே!

தும் ஹாரீ யாத் ஆகர் மேரே ்தர் சுபோதீ ஹை

மகர் தில் கே ஸாரே ஃஜக்ம் இத்னே தின் மே பர் ஜாதே

உன் நினைவு வந்து வந்து கத்தி போல் மனதைத் துளைக்கிறது

அனாலும் இத்தனை நாட்களையும்  இந்த காயம் இன்னும் முழுதும் நிரப்பவில்லையோ

கஹா(ன்) தக் துக் உடாயே(ன்) தேரீ ஃபுர்கத் ஔர் ஜுதாயீ கே

அகர் மர் நா ஹீ தா ஏக் தின், க்யூ(ன்) ஃபிர் ஆஜ் மர் ஜாதே

நீ பிரிந்து போனதால் உண்டான துக்கத்தை எத்தனை நாள் தாங்குவது?

ஒரு நாள் உயிர் பிர்ந்துதான் போகுமென்றால்

இன்றே ஏன் உயிரை விட்டுவிடக்கூடாது?

Song: Ye hasrat thi Film: Naushervan-E-Adil  1957

Lyrics: Parwaiz Shamsi

Music: C.Ramchandra  Singer: Mohammad Rafi

மிக அருமையான கஃஜல். இதை மொழிபெயர்ப்பதில் அதன் விசேஷ அர்த்தங்கள் வெளிவருவதில்லை. பெர்ஷியன்-உருது சொற்களும் அவற்றின் பின்னணியும் தெரிந்துகொள்ளவேணும்.

இதற்கு அபாரமாக இசையமைத்திருக்கிறார் சி.ராம்சந்த்ரா.

பாடியவர் முஹம்மது ரஃபி. இதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. ரஃபி ராம்சந்த்ராவின் அபிமானப் பாடகர் அல்ல! ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பளர் ஸோஹ்ராப் மோடி ரஃபிதான் பாடவேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். பாட்டும் நன்றாகவே வந்தது. 

ஆனாலும் இந்த வகைப் பாடல்களைப் பாட ரஃபி அவ்வளவு தகுந்த ஆளில்லை என்பது என் கருத்து. இதற்குத் தகுந்தவர் தலத் முஹம்மதுதான். ரஃபி பஞ்சாபிலிருந்து வருபவர். அவரது உருது உச்சரிப்பு ஒருவகை. தலத் அசல் உ.பியிலிருந்து வருபவர்- உருது மொழி, இலக்கியம் கவிதையில் தோய்ந்தவர். அவர் உச்சரிப்பு வேறுவிதம். கஃஜல் பாடுவதில் அவரை மிஞ்ச ஆளில்லை.

ரஃபி சிறந்த பாடகர் இல்லை எனச் சொல்லவில்லை; இதைச் சரியாகப் பாடவில்லை என்றும் சொல்லவரவில்லை.

This version does not do full justice to the magnificence of the lyrics of this ghazal- that is my opinion. The words do not flow from the depths of his heart-this is what I have felt.

But this is a beautiful song, no doubt about it.

இங்கு நாம் பார்ப்பது, மன உணர்ச்சிகளை, எண்ணங்களை கவிதையில் வடிப்பதில் பெண் கவிகளுக்கும் ஆண் கவிகளுக்குமிடையே ஏதாவது பெரிய அளவில் வித்தியாசமிருக்கிறதா என்பதே. ஆண் கவி எழுதிய பெண்ணின் மன நிலையாகட்டும், பெண்பால் கவி வருணித்த ஆணின் மன நிலையாகட்டும்- உணர்ச்சிச் சுழலில்  ஒன்றேயாகி நிற்கிறது. இரண்டும் பிரிவைத் தாங்க இயலாத நிலை! வெளிப்பாடுதான் வேறுவிதம்- இது சினிமாவின் சூழ்நிலை! இந்த இரண்டுமே அருமையான கவிதைகள்.

ஆக, காதலை வருணிப்பதில் இரு  பாலரும் ஒரே விதம் எனச் சொல்லலாமா?

Note: Those interested may listen to these ghazals of Talat Mahmood

 and see for themselves.

1. Aye dil mujhe aisi jagah le chal film: Aarzoo  music: Anil Biswas

2. Ek main hun ek meri                   film: Tarana- Anil Biswas

3. Mohabbat hi na jo samjhe           film: Parchhain -C.Ramchandra

4. Zindagi denewale sun                 film: Dil-e,nadan- Ghulam Mohammad

5. Dekhli teri khudayi                       film: Kinare Kinare – Jaidev

6. Sham e gham ki kasam                 film: Footpath-Khayyam

7. Main pagal                                     film: Aashiana – Madan Mohan

8. Main dil hun                                    film: Anhonee- Roshan

[ please listen on a good music system, with original sound tracks, not the electronically disfigured stuff]

*****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: