
மநு நீதி நூல் – பகுதி 51
Post No.7945
Date uploaded in London – 9 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மானவ தர்ம சாஸ்திரம் என்றும், மனு ஸ்மிருதி என்றும் அழைக்கப்படும் மநு நீதி நூலின் கடைசி அத்தியாயத்துக்கு – 12 ஆவது அத்தியாயத்துக்கு– வந்துவிட்டோம். மொத்தமுள்ள 2685 ஸ்லோகங்களில் இன்னும் 126 பாடல்களே மீ தி உள்ளன. அவற்றில் 72 ஸ்லோகங்களை இன்று காண்போம். கடைசி இரண்டு மூன்று அத்தியாயங்கள் பிரமாணர்களுக்கானது. ஆயினும் சில விஷயங்கள் பொதுவானவை. முதலில் Bullet Points புல்லட் பாயிண்டுகளில் சில சுவையான விஷயங்கள்.

இதில் மனு பயன்படுத்தும் சில சொற்களுக்கு எவருக்குமே அர்த்தம் தெரியவில்லை.12-63, 12-64ல் பல பிராணிகளின் பெயர்களைச் சொல்கிறார். ‘அதில் தைல பாக’ என்ற உயிர் ஜீவனை ஒருவர் கரப்பான் பூச்சி என்பார். இன்னொருவர் பறவையோ பறக்கும் பிராணியோ என்பார் . அப்படியே மொழி பெயர்த்தால் எண்ணெய்க் குடியன் (oil drinker) என்று பொருள் வரும். இதை வைத்து சில வியாக்கியனக்காரர்கள், பாஷ்யக்காரர்கள் இதை ‘எண்ணெய் சாப்பிடும் பிராணி’ என்பர். மனுவின் நூல் எவ்வளவு பழமையானது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பாபிலோனிய ஹமுராபிக்கும் முன்னர், உலகின் முதல் சட்டப்புத்தகம் எழுதிய வித்தகன் மனு என்று நான் இதுவரை 11 அத்தியாயங்களில் பல உதாரணங்களைக் கொடுத்துளேன்.
பத்து வகை பாவங்களை முதல் பத்து ஸ்லோககங்களில் பட்டியல் இடுகிறார் . உலகில் இந்துக்கள் மட்டுமே மூன்று வகை பாவங்களை தரம் பிரித்துள்ளனர்.. மனத்தினால், சொற்களினால், உடம்பால் செய்யக்கூடிய பாவங்களை மனோ, வாக், காயம் என்று பாகுபாடு செய்தனர். இந்த அற்புதமான பிரிவினையை வேறு எங்கும் காண முடியாது. மனு தர்ம சாஸ்திரத்தைக் கரைத்துக் குடித்த திருவள்ளுவன், திருக்குறள் எனப்படும் தமிழ் வேதத்தில் ‘பாவம்’, ‘பாவி’ என்னும் சம்ஸ்கிருத சொற்களை அப்படியே கையாளுகிறார்.
முக்கோல் அந்தணர் என்று முனிவர்களை சங்க இலக்கியங்கள் போற்றும். . அந்த முக்கோலின் சம்ஸ்கிருத வடிவம் ‘த்ரிதண்டி’ . எல்லா சன்யாசிகளும் இதை வைத்திருந்தாலும் வைஷ்ணவர்கள் இதை ஜீயர் என்பதுடன் சேர்த்து பயன்படுத்துவர். மனோ, வாக், காய மூன்றிலும் பாவம் செய்ய மாட்டோம் என்பதை இது காட்டுகிறது என்று விளக்குகிறார்; 12-10 ஸ்லோகம் இதை இயம்பும். 9-26 ஸ்லோகத்திலும் இது வரும் .
நம்மில் பெரும்பாலோர் சொற்களினாலும், மனத்தினாலும் பாவம் செய்கிறோம். யார் ஒருவருக்கு ‘திரிகரண சுத்தி’ இருக்கிறதோ அவர்களுக்கு அற்புத சக்திகள் மிக எளிதில் கிடைக்கும். மிருகங்களும் அவர்களுக்கு வசப்படும்.
மூன்று குணங்கள் முதலியன பற்றியும் க்ஷேத்ர ., க்ஷேத்ரக்ஞன் ஆகியன பற்றியும் மனு பேசுவதெல்லாம் பகவத் கீதையிலும் உளது.
****

எலியாக, நாயாக, கழுதையாக, பன்றியாக பிறப்பவன் யார்?
இந்த அத்தியாயத்தில் மநு முக்கியமாக கதைப்பது எந்த வகை பாவங்கள் செய்வோர் என்ன வகை பூச்சிகளாக , பிராணிகளாகப் பிறப்பர் என்னும் நீண்ட பட்டியலாகும் . மனிதர்கள் பிராணிகளாகவும், பிராணிகள் மனிதர்களாகவும் பிறக்க முடியும்; பேய்களாகத் திரிய முடியும் என்பார் மனு. இதை நாம் பல புராணக் கதைகளிலும் காண்கிறோம்.
என் கருத்து –
இதில் புரியாத பல சம்ஸ்கிருத சொற்களை மநு பயன்படுத்துவது நகைச்சுவைப் (humour)பகுதி என்றே நான் கருதுகிறேன். ‘பின்பக்க ஆசன வாயில் கண் இருக்கும் பேய்’ என்பதெல்லாம் JOKE ‘ஜோக்’ என்றே சொல்ல வேண்டும். தங்க நகைத் திருடன் பொற்கொல்லனாகப் பிறப்பான் என்று சொல்கிறார். அப்படியானால் பொற்கொல்லர் ஜாதியே பிராணிகளுக்கு நிகராக வந்துவிடும். இதையெல்லாம் அப்படியே பொருள் கொள்ளாது அதன் பின்னுள்ள அர்த்ததை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொற்கொல்லன் கோவலனுக்கு அநியாயமாக மரணதண்டனை வாங்கிக் கொடுத்ததற்க்காக ஆயிரம் பொற்கொல்லர்களை பாண்டியன் தீயில் எரித்துக் கொன்றான் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் சொல்கிறார். இதை அப்படியே பொருள் கொள்ளாது அவர்களைத் தண்டித்தார் என்று பொருள் கொள்வதே சாலப்பொருத்தம். அதே கொள் கையை மனுவிலும் பின்பற்றுக.
****

பகவத் கீதை முதலிய நூல்களில் குண கர்ம விபாக யோகத்தில் விளக்கப்படாத ஒரு அரிய விஷயத்தை மநு விளம்புகிறார். ஒவ்வொரு குணத்திலும் கூட மூன்று பிரிவுகள் —தலை, இடை , கடை—– என மூன்று பிரிவுகளாகப் பிரித்து அவர்கள் மறு பிறப்பில் என்ன ஆவார்கள் என்கிறார் .
12-41 முதல் 43 வரை — மூன்று தமோ குணப் பிரிவுகள்
12-45 முதல் 47 வரை — மூன்று ரஜோ குணப் பிரிவுகள்
12-48 முதல் 50 வரை — மூன்று ஸத்வ குணப் பிரிவுகள்
12-5 முதல் 12-9 வரை பத்து வகை பாவங்கள்
12-10 திரி தண்டி — முக்கோல் – என்றால் என்ன?
12-54 முதல் பாவாத்மாக்கள் எந்தப் பிராணியாக பிறப்பர் என்னும் பட்டிய ல்
12-61 பொற்கொல்லரும் பிராணிகள் பட்டியலில்! சிலர் இதை தட்டாரப் பூச்சி என்பர்
12-59, 12-60, 12-71 , 12-72 பேய் வகைகள்
***
இதோ ஒரிஜினல் மொழி பெயர்ப்பு 12-72 வரை ………………………….



















tags — மநு நீதி நூல் – பகுதி 51, யார் பிறப்பர் ?, நாய், கழுதை, பாம்பு, பல்லி, பன்றி
—subham—