வேத மந்திரங்கள் மூலம் தீ மூட்டப்பட்ட உண்மை சம்பவம்! (Post No.7954)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7954

Date uploaded in London – – – 11 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

வேத மந்திரங்கள் மூலம் தீ மூட்டப்பட்ட உண்மை சம்பவம்!

ச.நாகராஜன்

வேத மந்திரங்களுக்குச் சக்தி உண்டா என்று கேட்போருக்கு ஏராளமான அறிவியல் சோதனைகளைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளோம்.

வேத மந்திரங்களை முறைப்படி ஓதி அதன் மூலம் தீ மூட்டப்பட்ட சம்பவத்தை இதை முன் நின்று நிகழ்த்திய டாக்டர் பி.வி. வார்தக் (Dr. P.V.Vartak) பி.டி.ஐக்கு  20-5-1974 அன்று செய்தியாகத் தந்தார்.

புனேயில் பிரபலமான சர்ஜனாகத் திகழ்ந்தவர் வார்தக். அவர் ஒரு சோதனையைச் செய்ய விரும்பினார்.

சுதாகர்த் நகரைச் சேர்ந்த காசிநாத் பந்த் சிடோர் (Kashinath Panth Sidore or Sudhagarth) நவ சண்டியை உபாசிக்கும் ஒரு உபாசகர்.

அவர் முன்னர் டாக்டர்கள், இயற்பியல் விஞ்ஞானிகள், இரசாயன வல்லுநர்கள், உளவியல் நிபுணர்கள், மந்திரவாதிகள் ஆகியோர் குழுமினர்.

சிடோர் ஒரு குண்டத்தில் சில மரத்துண்டுகளை வைத்தார். கம்பீரமாக ‘அக்னிமீளே புரோஹிதம்’ என்ற மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். மந்திரங்களைத் தொடர்ந்தார்.

மூன்றாவது முறையாக அவர் மந்திரங்களை உச்சரிக்கும் போது மரத்துண்டுகளில் ஒரு தீப்பொறி தோன்றியது. சில நிமிடங்கள் அக்னி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து அனைத்து மரத்துண்டுகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன.

இந்த நிகழ்ச்சியை கூர்ந்து, கவனமாக, ஜாக்கிரதையான கண்களுடன் குழுமியிருந்தோர் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

இதை அவர் முதல் தடவையாகச் செய்யவில்லை. மூன்றாவது முறையாக இப்படி மந்திரங்களின் மூலம் அக்னியை வரச் செய்து மரத்துண்டுகளை எரிய விட்டிருக்கிறார்!

இந்த சோதனையை ஆரம்பிக்கும் முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர்களின் குழு ஒன்று அவரை உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் சோதனை செய்தது. ஆகவே விஞ்ஞானிகளுக்கு எந்த விதமான சந்தேகமும் எழவில்லை.

அமிர்தபஜார் பத்ரிகா நாளிதழைச் சேர்ந்த மனீந்த்ர சந்த்ர பால் அதிசயித்துப் போனார்.

அவர் கூறினார் : “ For the welfare of humanity this spiritual side of life should not be sacrificed at the altar of material science, the handling of which is always fraught with danger and destruction.” – “மனித குலத்தின் நலனுக்காக இந்த ஆன்மீக வாழ்க்கையின் ஒரு பக்கமானது உலோகாயத விஞ்ஞானத்தின் முன் வைக்கப்படக்கூடாது; அது எப்போதும் அழிவையும் அபாயத்தையும் உருவாக்கும் ஒன்று”

விஞ்ஞானிகளுக்கு இந்த ரகசியம் தெரிவிக்கப்பட்டால் உலகமே அழிந்தல்லவா போகும்?!

நிகோலஸ் டெஸ்லா தனது சோதனை ஒன்றில் ஒரு கட்டிடத்தையே தரைமட்டமாக்கி விட்டார்.

அந்த சக்தியை எப்படி உருவாக்குவது என்று கேட்ட போது அவர் பதிலே சொல்லவில்லை.

சாகும் வரை அந்த இரகசியத்தை அவர் வெளியிடவே இல்லை.

“இதைச் சொன்னால் மனித குலத்தின் நாசத்திற்கு வழி வகுத்தவன் ஆவேன்” என்று எண்ணினார் அவர். அந்த உயரிய நோக்கத்தில் அபாயகரமான சக்தியை உருவாக்கும் வழியை அவர் சொல்லவேயில்லை!

அணுகுண்டுக்கு வழி வகுத்த ஐன்ஸ்டீன் பின்னால் மிகவும் வருத்தப்பட்டார்.

ஏ.கே. 47 துப்பாக்கியைக் கண்டுபிடித்த ரஷிய விஞ்ஞானி மைக்கேல் கலாஷிகோவ் (Mikhail Kalashnikov) பின்னாளில் மிகவும் மனம் வருந்தி சர்ச்சில் பாவ மன்னிப்பு கேட்டதை ஏற்கனவே எனது கட்டுரையில் விவரித்துள்ளேன்.

அபாயகரமான டைனமைட்டைக் கண்டுபிடித்த ஆல்ஃப்ரெட் நோபலை நாசகார வியாபாரி என்று பத்திரிகைகள் விவரிக்கவே மனமுடைந்து போய் அவர்  மிகவும் வருந்தினார்; நோபல் பரிசை நிறுவினார்; அமைதிக்கான ஒரு பரிசும் அதில் சேர்க்கப்பட்டது!

மந்திரங்களுக்குச் சக்தி உண்டு என்பதை நிரூபிக்க நடத்தப்பட்ட இந்த சம்பவம் நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று!

ஏனெனில் ஹிந்துக்கள் எப்போதுமே சர்வே ஜனா சுகினோ பவந்து என்பதையே தங்களின் ஒரே தாரக மந்திரமாகக் கொண்டவர்கள்.

ஹிந்துக்களால் அனைவரும் வாழ்வார்களே தவிர ஒரு போதும் அழிய மாட்டார்கள்!

வாழ்க ஹிந்து மதம்; வளர்க ஹிந்து மதம்!!

tags — வேத மந்திரங்கள், மூலம், தீ

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: