சங்க இலக்கியத்தில் சம்ஸ்க்ருத வாத்தியங்கள் (Post No.7970)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7970

Date uploaded in London – 13 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய வாத்தியங்களின் பெயர்கள் சங்க இலக்கியத்திலும் பிற்கால கல்வெட்டுகளிலும் இருக்கும் அதிசயத்தைக் கேளுங்கள்.

பாணினி எழுதியதோ இலக்கண புஸ்தகம். அதிலுள்ள விஷயங்களோ என்சைக்ளோபீடியா அளவுக்கு இருக்கிறது. அதற்கு உரைகாரர்கள் எழுதிய விஷயங்களுக்கு தமிழ் கல்வெட்டுகள் விளக்கம் தருகின்றன. பாணினி எழுதிய இலக்கண நூலின் பெயர் ‘அஷ்டாத்யாயீ’.

முதல் அதிசயம்

பாணினினியின்  காலத்துக்கும் சங்க இலக்கியத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்தது புத்த ஜாதகக் (Jataka Tales) கதைகள் ; அந்த 550 கதைகளில் சொல்லாத விஷயமே இல்லை. அவைகளையும் மஹாபாரதத்தையும் வைத்துக்கொண்டு இந்தியாவின் பல்வேறு துறை வளர்ச்சிகளையும் சொல்லிவிடலாம். இதையெல்லாம் விளக்கும் வண்ணம் அமைந்தவை மத்திய பிரதேசத்தில் பார்ஹுத் (Bharhut) என்னும் இடத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் ஆகும். இதேபோல சாஞ்சி ஸ்தூபியிலும் சிற்பங்கள் உள .

இதற்குப்பின்னர் சங்க இலக்கியம் உருவானது. இந்தப் பூர்வ பீடிகை எதற்காக சொல்கிறேன் என்றால் பாணினி சொல்வதெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கின்றன.

இன்னிசைக் குழுவை நாம் ஆர்க்கெஸ்ட்ரா (Orchestra)  என்று ஆங்கிலத்தில் சொல்லுவோம். இதை பாணினி உரைகாரர்கள் ‘தூர்ய’ (2-4-2)

 என்கிறார்கள். அதை பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்து பாடிய மாங்குடி மருதன் மதுரைக்கு காஞ்சியிலும் காண்கிறோம். சங்க இலக்கியத்தில் உள்ள 18 நூல்களில் மிகவும் நீண்ட நூல் இதுதான்.

அந்தி விழவில் தூரியங் கறங்க – வரி 460

சிவன் கோவிலில் மாலைநேரத்தில் எல்லா வாத்தியங்களும் சேர்ந்து முழங்கியதைப்  பாடுகிறார் .

இந்தக் காட்ச்சி பார்ஹுத் சிற்பங்களில் உள்ளது.

இரண்டாவது அதிசயம்

மிருதங்கம், மட்டுகம் , பணவம் ஆகிய வாத்தியங்களை பாணினி குறிப்பிடுகிறார் . இன்று வரை நாம் மிருதங்கம் , மத்தளம் என்பதை பயன்படுத்துகிறோம். மிருதங்கம்- பணவம் இரண்டையும் சேர்த்தும் பேசுகிறார். பணை என்ற முரசு  வாத்தியத்தை அகநானுறு — பாடல் 84–முதலிய நூல்கள் நமக்கு காட்டுகின்றன. பண் என்பதே ராகம், பாடல் என்ற பொருளிலும் வருகிறது.

மூன்றாவது அதிசயம்

பாணினி அதிகம் குறிப்பிடும் வாத்தியம் வீணை .3-3-65

ஓரிடத்தில் 3-2-146 பரிவாதக என்ற சொல்லை பிரயோகிக்கிறார் . அனால் விளக்கவில்லை . தமிழில் தேவார காலம் வரை யாழ் , பின்னர் வீணை வருகிறது சிலப்பதிகாரத்தில் இளங்கோ மாட்டும் ஓரிடத்தில் நாரதர் வீணை என்கிறார். பாணினி சொல்லும் பரிவாதகமும் வீணை என்று பாஷ்யக்காரர்  பதஞ்சலிமுனிவர் விளக்குகிறார்.

அவீவதத் வீணாம் பரிவாதகேன — மஹா பாஷ்யம் 7-4-1; 3-345

பல்லவ மன்னர்களில் சகல கலாவல்லவன் மஹேந்திர வர்மன்;  1400  ஆண்டுகளுக்கு முன்னர் அப்பர் காலத்தில் ஆடசிபுரிந்தவன் . அவன் சங்கீரணம் என்ற தளத்தைக் கண்டுபிடித்தவன் . அவனுடைய நீண்ட பட்டங்கள் வரிசையில் ஒன்று ‘சங்கீர்ண சாதி’. . குடுமியான் மலையில் இசைக்கல்வெட்டை சமைத்தவன். அவன் பரிவாதினி வீணையில் வல்லவன் ஆக கிமு.7-ம் நூற்றாண்டில் கேட்ட சொல் இங்கே கி.பி 7-ம் நூற்றாண்டில் ஒலித்தது.

நாலாவது அதிசயம்

மகேந்திர பல்லவனை அடுத்து வந்த பல்லவர்களில் இராஜ சிம்மன் ‘வீணா நாரதன்’,  ‘வாத்திய வித்யாதரன்’ என்று புகழப்பட்டான் இவன் ஆதோத்ய வீணை வாசிப்பதில் நிபுணன்.சொல்லப்போனால் இவைகளுக்கெல்லாம் முன்னோடியான  ராவணன் கொடியிலேயே வீணையைப் பொறித்தான். அதில் சாம கானத்தை இசைத்தான் இசைக்கருவி வாத்யத்தை பாணினி ‘வாதித’ என்றார். அது வாத்ய என்று மருவியது அதுவும் நச்சினார்க்கினியர் போன்றவர்கள் உரையில் ‘வாச்சியம்’ என்று மருவியது இன்றுவரை இச்சொற்கள் பிரயோகத்தில் இருப்பது பாணிணிக்குப் புகழ் சேர்க்கும்.

ந்ருத்ய, கீத , வாதித்ர,நாட்ய ஆகியவற்றை பாணினி குறிப்பிட்டார். இதை கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் கீத , வாத்ய, ந்ருத்த , நாட்ய ஆகிய நாலும் இசையின் அங்கம் 2-27  என்கிறது . சொற்களின் ஸ்பெல்லிங் (Spelling)  கொஞ்சம கொஞ்சமாக மாறுவது காலத்தைக் கணக்கிட உதவும்.

ஐந்தாவது அதிசயம்

சம்மத

சம்மத, பிரமத என்பதை மகிழ்ச்சி தரும் விழாக்கள் என்கிறார் 3-3-68.

பர்ஹுத் சிற்பங்களில் வாத்யக்காரர்கள் மீது

சாதகம் சம்மதம் துரம் தேவா னாம் –‘ இறைவன் முன்னிலையில் இன்னிசைக் குழு’ என்று எழுதப்பட்டு இருக்கிறது இதில் நான்கு பெண்களின் நாட்டியம், நாலு வித வாத்யம் வாசிப்போர் ஆகியோர் காணப்படுகின்றனர்.

கையினால் தாளம் போடுவதை ஒரு சூத்திரத்தில் எழுதி உள்ளார் ; கட வாத்யம் பற்றியும் பேசுகிறார் தாளம் போன்ற சொல்லை இன்றும் நாம் உபயோகிக்கிறோம்.

வேதத்தில் ‘சமான’ என்ற மாபெரும் விழா பற்றிய விவரங்கள் உள்ளன. அதுவும் சம்மத, பிரமதவுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அங்கு ஒலிபம்பிக் போட்டி போல விளையாட்டுகளும் ஆடல் பாடல்களும் நடைபெற்றன.

ஆக இவை  எல்லாம் ஒரு இலக்கண புஸ்தகம் தரும் சங்கீத விஷயங்கள்!!!

picture sent by Lalgudi Veda

tags –பாணினி, வாத்திய பெயர்கள்,சம்ஸ்க்ருத வாத்தியங்கள்

–Subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: