ஹிந்தி படப் பாடல்கள் – 35, பொற்கால சிற்பி! (Post No.7966)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7966

Date uploaded in London – – – 13 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 35 – பொற்காலத்தின் ஓர் அரிய சிற்பி!

R. Nanjappa

பொற்காலத்தின் ஒர் அரிய சிற்பி!

நமது பொற்கால இசைஞர்கள் அனைவருமே திறமைசாலிகள்-ஒவ்வொருவரும் ஒருவகையில் சிறந்திருந்தவர்கள். பரஸ்பரம் மதிப்பு வைத்திருந்தார்கள். பாம்பறியும் பாம்பின் கால்-அல்லவா?

இவர்களில் மதன் மோஹன் [ 1924-1975] குறிப்பிடத் தக்கவர். இவர் சிறு பையனாக இருக்கும் போதே [பள்ளிப் பருவத்திற்கு முன்பே- எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வதற்கு முன்பே] இவரிடம்  ஒரு அசாதாரண ஆற்றல் இருக்குமாம். ஒரு பாட்டைச் சொன்னால் , உடனே அது இருக்கும் கிராமஃபோன் ரிகார்டை எடுத்துத் தருவாராம்!

அவர் தந்தை ஃபில்மிஸ்தான் ஸ்டுடியோவில் பார்ட்னராக இருந்தார். தன் பையன் திரையிசைத்துறைக்கு வருவதை விரும்பவில்லை. மதன் மோஹனும் பட்டாளத்தில் சேர்ந்தார், இசை ஆர்வம் மிகுந்து திரை இசைக்கே வந்துவிட்டார். இவரை ஊக்குவிக்க இவர் தந்தை எதுவும் செய்யவில்லை.

இவர் தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டார். இவர் இசை

‘கன’மானது- இந்திய பாரம்பரிய இசையில் தோய்ந்திருக்கும். சட்டென்று பதியாது- கேட்கக்கேட்க இதன் சுவை மிகும்- பயில்தொறும் பண்பு புலனாகும். கவிதையின் அழகில், பொருளில் லயிப்பவர்-;கஃஜல் வகை பாடல்களுக்கு உணர்ச்சிபொங்க இசையமைப்பவர். சக இசைஞர்களால் நன்கு மதிக்கப்பட்டவர்.

ஓ.பி. நய்யார் கை ஓங்கிவரும் காலத்தில் எல்லா தயாரிப்பாளர்களும் அவர் பாணி இசையையே எல்லா இசைஞரிடத்திலும் எதிர்பார்த்தனர்..”பாய் பாய்” என்ற படத்தில் இவரையும் அப்படிச் செய்யச்சொன்னார்கள். தானும் சளைத்தவரல்ல என இவரும் ஒரு பாட்டை அதே பாணியில் அமைத்தார்.இதோ அந்தப் பாட்டு:

தில் முஜே பதாதே

दिल मुझे बता दे, तू किस पे गया है
वो कौन है जो आकर, ख्वाबों पे छा गया


मस्ती भरा तराना, क्यों रात गा रही है
आँखों में नींद आकर, क्यों दूर जा रही है
दिल में कोई सितमगर, अरमां जगा गया है
वो कौन है जो आकर

बेताब हो रहा है, ये दिल मचलमचल के
शायद ये रात बीते, करवट बदलबदल के
दिल ज़रा सम्भल जा, शायद वो गया है
वो कौन है जो आकर

भीगी हुई हवाएँ, मौसम भी है गुलाबी
क्या चाँद, क्या सितारे, हर तीर है शराबी
धीरे से एक नग़मा, कोई सुना गया है
वो कौन है जो आकर…  

தில் முஜே பதா தே  தூ கிஸ்பே ஆகயா ஹை

கௌன் ஹை ஜோ ஆகர் காபோ(ன்) பே சாகயா ஹை.

மனமே! உண்மையைச் சொல்! நீ யார் வசம் ஆகிவிட்டாய்!

வந்து உன் கனவில்  நிறைந்தவர் யார்? அதைச் சொல்.

.

மஸ்தீ பரா தரானா, க்யோ(ன்) ராத் கா ரஹீ ஹை

ஆங்கோ(ன்) மே நீந்த் ஆகர் க்யோ(ன்) தூர் ஜா ரஹீ ஹை

தில் மே கோயீ ஸிதம்கர் அர்மான் ஜகா கயா ஹை

வோ கௌன் ஹை ஜோ ஆகர்…..

இரவு ஏன் இத்தகைய போதை தரும் பாடல்களைப் பாடுகிறது?

கண்களில் வந்த தூக்கம் ஏன் இப்படி ஓடிப்போகிறது?

யாரோ போக்கிரி மனதில் ஆசையை எழுப்பிவிட்டார்!

அது யார்

பேதாப் ஹோ ரஹா ஹை, யே தில் மசல் மசல் கர்

ஷாயத் யே ராத் பீதே, கர்வட் பதல் பதல் கே

யே தில் ஜரா ஸம்பல் ஜா,ஷாயத் ஆகயா ஹை

வோ கௌன் ஹை ஜோ ஆகர்

துள்ளி எழும் மனது பொறுமை இழந்து வருகிறது

புரண்டு புரண்டு படுத்துத்தான் இரவு கழியும்போல் இருக்கிறது

மனதே, சற்று நிதானிஅவர் வந்துவிட்டார் போலும்

அது யார்….

..

பீகீ ஹுயீ ஹவாயே(ன்) மௌஸம் பீ ஹை குலாபி

க்யா சாந்த் க்யா சிதாரே, ஹர் தீர் ஹை ஷராபி

தீரேஸே ஏக் நக்மா,கோயீ ஸுனா கயா ஹை

கௌன் ஹை ஜோ ஆகர்..

குளிந்த காற்று வீசுகிறதுபொழுதும் களித்திருக்கிறது!

என்ன நிலவு, என்ன தாரகைகள்ஒவ்வொரு கிரணமும் போதை தருகிறது

மெல்ல மெல்ல யாரோ பாட்டிசைக்கிறார்கள்

அது யார் உன் கனவில் வந்து நிறைந்ததுசொல்!

Song: Aye dil mujhe batade  Film: Bhai Bhai 1956 Lyrics: Rajinder Krishan

Music ; Madan Mohan  Singer: Geeta Dutt

இது தமிழில் வந்த “ரத்த பாசம்” என்ற படத்தின் ஹிந்தி வடிவம். தமிழில் டி.கே. சண்முகம்-பகவதி சகோதரர்கள் நடித்ததுபோல் ஹிந்தியில் அஷோக் குமார்-கிஷோர் குமார் சகோதரர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் இருந்த 11 பாடல்களில் 7 பாட்டுகள் லதா மங்கேஷ்கர் பாடியவை!  [மதன் மோஹன் இசையில் லதா மங்கேஷ்கருக்கு சிறந்த இடம் இருக்கும்.] ஆனால் கீதா தத் பாடிய இந்தப் பாட்டு அனைத்தையும் விழுங்கிவிட்டது, மிகப் பிரபலமானது. இந்தப் பாட்டில் லதா, ஆஷா இருவரையும் மிஞ்சி விட்டார் கீதா! பாவம், அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் இது நாயகி மேல் படமாக்கப்படவில்லை! நாயகியின் இடத்தைப் பறிக்க முயற்சி செய்யும் ஒரு பாத்திரம் பாடுவதாக வரும், Impish பாடல் எனலாம். ஆயினும் நிதானமிழக்காத சொற்கள், பாட்டின் கவிதைத் தரத்தை தக்கவைக்கின்றன. மெட்டு உண்மையிலேயே சொக்கவைக்கிறது!

ஆனால் மதன் மோகனின் இதயம் ‘கனமான’ பாடல்களில் சஞ்சரிக்கும், கஃஜலில் மூழ்கித் திளைக்கும். இதோ அப்படி ஒரு பாடல்.

மை பாகல்

main pagal mera manava pagal pagal meri preet re pagale-pan ki peed vo jaane bichhade jinka meet re mai pagal mera manavaa paagal

நான் ஒரு பைத்தியம் என் மனதின் போக்கும் பைத்தியமே!

என் காதலும் பைத்தியமே

இந்தப் பைத்தியத்தின் நிலை யாருக்குப் புரியும்?

தன் மனவமைதியை (காதலில்) யார் இழந்தார்களோ

அவர்களுக்கே புரியும்!

kahe ye duniya mai deewaana din me dekhoon sapne deewani duniya kya jaane deewani duniya kya jaane ye sapane hai apne ye sapane hai apne ghaayal man ki hansi udaaye ye duniya ki reet re, main paagal  

இவன் பைத்தியம், பகலில் கனவு காண்கிறான்

என இந்த உலகம் பேசுகிறது!

இந்தப்  பைத்தியக்கார உலகிற்கு என் கனவு எப்படிப் புரியும்?

காயம் பட்ட மனதைக் கண்டு கிண்டல் செய்வதுதானே

இந்த உலகத்தின் போக்கு!

நான் பைத்தியம்

chhupi hui meri kaya me raakh kisi paravaane ki ye meraa dukhiyaa jeevan hai rooh kisi diwane ki man ke toote taar bajaakar gaaun apne geet re


இந்த என் உடலில் ஒரு அன்புப் பைத்தியத்தின்

சாம்பல் மறைந்திருக்கிறது!

இந்த என் துக்கம் மிக்க வாழ்க்கையும்

ஒரு அன்புப் பைத்தியத்தின் ஆவியே!

மனதெனும் வீணையின் துண்டிக்கப்பட்ட நரம்புகளை மீட்டி

என் பாட்டைப் பாடுகிறேன்

நான் பைத்தியமே…..

Song: Main pagal mera manwa pagal Film: Aashiana 1952 Lyrics: Rajinder Krishan

Music: Madan Mohan Singer: Talat Mahmood


பொதுவாக, கஃஜல் உருதுவில் இருக்கும். இது எளிய ஹிந்தியில் இருக்கிறது. ராஜேந்த்ர க்ரிஷன் எளிய சொற்களை வைத்து அரிய கவிதை படைத்துவிட்டார்.

தலத் மஹ்மூத் இதைப் பாடிய அழகை என்னவென்று புகழ்வது! இந்த சொற்களை இவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பாடுவது வேறு எவராலும் இயலாதது!

இதற்கு கேதார் ராகத்தில் இசையமைத்திருக்கிறார் மதன் மோஹன்! ராக பாவம், பாட்டின் பாவம், பாடுபவரின் பாவம் மிக்க குரல்- மூன்றும் சேர்ந்து நம்மை வேறு உலகத்திற்கே இட்டுச்செல்கின்றன.

ஆனால் படத்தில் இதை ராஜ் கபூரின் மீது எடுத்து வீணடித்திருக்கிறார்கள். இத்தகைய அழுத்தமான பாடல்களை அவர் screen persona தாங்காது ! அதனால் தான் நாம் பாடல்களை தனியாகக்கேட்டு ரசிக்க முயலவேண்டும். சில பாடல்கள் சிலருக்குப் பொருந்துவதில்லை.

இதே படத்தில் “மேரா கரார் லேஜா” என்ற இன்னொரு அருமையான கஃஜலும் இருக்கிறது!

உண்மையில் மதன் மோஹன்தான் இந்த திரை உலகிற்குப் பொருந்தாத பைத்தியம்.! தன் தரத்தை விட்டுக் கொடுக்காதவர். வரும் புதிய அலைகளுக்குப் பணியாதவர், பல படங்களில் நல்ல இசை இருந்தும் இவருக்கு உரிய அங்கீகாரமோ, கவுரவமோ கிடைக்கவில்லை. 1970ல் பெற்ற தேசீய விருது ஒன்றுதான் இவருக்குக் கிடைத்த பரிசு.

நல்ல இசையிருந்தும், பல படங்கள் வெற்றி பெறவில்லை. இந்த பாய் பாய் படம் இவரைத் தூக்கிவிட்டது. 1964ல் வந்த “வோ கௌன் தீ” என்ற படமும் (இதில் “நைனா பர்ஸே” பாடல் மிகப் பிரசித்தி) 1966ல் வந்த ‘மேரா சாயா” படமும் ( இதில் ‘தூ ஜஹா(ன்) ஜஹா(ன்) சலேகா என்ற பாடல் பெரிய ஹிட்) அரிய இசையுடன் வெற்றியும் கண்டன. 1972ல் வந்த “பாவர்ச்சி” படமும் நல்ல இசையுடன் பெரிய ஹிட் ஆனது. இருந்தும் தனக்குரிய கவுரவம் கிடைக்கவில்லை என்ற குறை இருந்தது, பாட்டிலுக்கு அடிமையாகி 51 வயதிலேயே உயிர் நீத்தார். நூற்றுக்கணக்கான மெட்டுகள் எழுதிவைத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். 2004ல் வந்த “வீர் ஃஜாரா” படத்தில் இவர் மெட்டுக்களைப் பயன்படுத்தினர்.

25 ஆண்டுகளே திரை இசைத்துறையில் இருந்த இவர் மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகும் இவரை நினைக்கிறோம்! அதுவே இசையின் மகத்துவம்! அதுவே நாம் ஒரு அரிய கலைஞனுக்குத் தரும் “சல்யூட்” !

tags — ஹிந்தி படப் பாடல்கள் – 35

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: