ஹிந்தி படப் பாடல்கள் – 36 – இரு புதிய குரல்கள்! (Post No.7972)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7972

Date uploaded in London – – – 14 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 36 – இரு புதிய குரல்கள்!

R. Nanjappa

இரு புதிய குரல்கள்

சில துறைகளில் “சீனியர்களை” எளிதில் புறக்கணிக்கவோ, மிஞ்சவோ முடியாது. மருத்துவம், சட்டம். அக்கவுன்டன்சி ஆகிய துறைகளில் அவர்களுக்கு மவுசு கூடிக்கொண்டே தான் வரும். சீனியர் வக்கீல் ஒரு வழக்கை எடுத்தால், நீதிபதிகளும் அதிக  கவனம் செலுத்துவர். ..சீனியர் ஆசிரியர்களுக்கும் மதிப்பு கூடும்- ஓய்வு பெற்ற பின்பும் அவர்களுக்கு வரவேற்பு இருக்கும்.

சாஸ்திரீய இசையில் பெரியவர்கள் இருந்தாலும், புதிய வித்வான்களும் வந்த வண்ணமிருப்பர். ஒரு நிலைக்குப் பிறகு சீனியர்களின் குரல் எடுபடாது. இளைஞர்களின் குரல் ஓங்கும்!

நமது சினிமா இசையில் ஆறு பாடகர்கள் முக்கிய இடம் பெற்றனர்: முஹம்மது ரஃபி, தலத் மஹ்மூத், முகேஷ், மன்னா டே, கிஷோர்குமார், ஹேமந்த் குமார். இவர்கள்  (தலத் தவிர ) சுமார் 30 வருஷம் உச்சத்தில் இருந்தனர். புதிய பாடகர்கள் ஒரு பெரிய ஹீரோ நடிகருக்குப் பாடுவது சாத்தியமில்லை. பெண்களில் லதா-ஆஷா சகோதரிகளை நெருங்க விடவில்லை.

1956-57. மர்ஃபி ரேடியோவும் மெட்ரோ கம்பெனியும் இணைந்து புதிய பாடகர்களை நாடு முழுதும் தேடியது. நௌஷத், அனில் பிஸ்வாஸ், சி.ராம்சந்த்ரா, வஸந்த் தேஸாய், மதன் மோஹன் ஆகிய ஸீனியர் இசைஞர்கள் நடுவர்களாக இருந்தனர். ஆண்களில் மஹேந்த்ர கபூரை தேர்வு செய்தனர். பெண்களில் எவருமில்லை. மஹேந்த்ர கபூர் ஓரளவு கால் ஊன்றினார்.

ஆனால் நமது இசைஞர்கள் அவ்வப்போது புதிய குரல்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தனர். சுபீர் சென் பற்றிப் பார்த்தோம். இன்று வேறு இருவரைப் பார்க்கலாம்.

ஷ்யாமல் மித்ர

இவரை ஸலில் சவுத்ரி முதலில் ” நௌக்ரி”  (1954) என்ற படத்தில் அறிமுகப் படுத்தினார், ‘முஸாபிர்”  (1957) என்ற படத்தில் இவருக்குத் தனிப்பாட்டு கிடைத்தது. அருமையான பாடலாகவும் அமைந்தது,

एक आए, एक जाए मुसाफ़िर, दुनिया एक सराए रे
एक आए, एक जाए मुसाफ़िर

अलबेले अरमानों के तूफ़ान लेकर आए
नादन सौ बरस के सामान लेकर आए
और धूल उड़ाता चला जाए
एक आएएक जाए मुसाफ़िरदुनिया एक सराए रे
एक आएएक जाए मुसाफ़िर दिल की ज़ुबाँ अपनी हैदिल की नज़र भी अपनी
पलभर में अनजाने से पहचान भी हो जाए
पहचान दो घड़ी कीबन प्यार मुस्कुराए
दो दिन की ज़िंदगी रंग लाए
एक आएएक जाए मुसाफ़िरदुनिया एक सराए रे
एक आएएक जाए मुसाफ़िर आनेवाली ख़ुशियों ने बीते का दर्द भुलाया
आख़िर को मिट जाता है कल के ग़मों का साया
हर सुबह रात को भूल जाए
एक आएएक जाए मुसाफ़िरदुनिया एक सराए रे
एक आएएक जाए मुसाफ़िर

ஏக் ஆயே, ஏக் ஜாயே முஸாஃபிர், துனியா ஏக் சராயே ரே 

ஏக் ஆயே, ஏக் ஜாயே முஸாஃபிர்

ஒருவர் வருகிறார், ஒருவர் போகிறார்! அனைவரும் வழிப்போக்கர்கள்!

அப்பனே! இந்த உலகம் ஒரு வழிப்போக்கன் விடுதி போன்றது!

அல்பேலே அர்மானோ(ன்) கே தூஃபான் லேகர் ஆயே

நாதான் ஸௌ பரஸ் கே ஸாமான் லேகர் ஆயே

ஔர் தூல் உடாதா சலா ஜாயே

ஏக் ஆயே, ஏக் ஜாயெ முஸாஃபிர்.

வினோதமான ஆசைகள் என்னும் புயலைக் கொண்டு வருகிறார்கள்..

நூறு வருஷங்களுக்கென வேண்டாத சாமான்களைக் கொண்டுவருகிறார்கள்

போகும்போது வெறும் தூசிதான் கிளம்புகிறது!

வழிப்போக்கர்கள்! ஒருவர் வருகிறார், ஒருவர் போகிறார்!

தில் கீ ஃஜுபான் அப்னீ ஹை, தில் கீ நஃஜர் பீ அப்னீ

பல்பர் மே அஞ்சானே ஸே பஹசான் பீ ஹோ ஜாயே

பஹசான் தோ கடீ கி பன் ப்யார் முஸ்கு ராயே

தோ தின் கீ ஃஜிந்தகீ ரங்க் லாயே

ஏக் ஆயே ஏக் ஜாயே முஸாஃபிர்

.

நல்ல மனதுடன் பேசி, அன்பான பார்வையும் இருந்தால்

ஒரு  நொடியில் புதியவர்களுடன் அறிமுகமாகி விடுகிறது!

சிறிது காலத்திலேயே அது அன்பாகவும் மலரலாம்!

குறுகிய   வாழ்க்கையும் மகிழ்ச்சி மிக்கதாக இருக்கலாம்!

வழிப்போக்கர்கள்ஒருவர் வருகிறார், ஒருவர் போகிறார்!

ஆனேவாலீ  குஷியோ(ன்) நே பீதே கா தர்த் புலாயா

ஆகிர் கோ மிட் ஜாதா ஹை கல் கே கமோ(ன்) கா ஸாயா

ஹர் ஸுபஹ் ராத் கோ பூல் ஜாயே

ஏக் ஆயே ஏக் ஜாயெ முஸாஃபிர்..

சந்தோஷம் என்று வந்தால், பழைய துன்பங்களும் நினைவுக்கு வருகின்றன!

ஆனால் கடைசியில் பழைய துன்பங்களின் சாயல் ஒருவாறு குறைந்து போகிறது!

ஒவ்வொரு சூரிய உதயமும் இரவை மறந்து விடுகிறது!

வழிப்போக்கர்கள்ஒருவர் வருகிறார், ஒருவர் போகிறார்

இந்த உலகம் ஒரு வழிப்போக்கர் தங்கும் விடுதி!

Song: Ek aaye ek jaaye  Film: Musafir 1957 Lyrics: Shailendra

Music: Salil Chowdhury  Singer: Shyamal Mitra

இது ரிஷிகேஷ் முகர்ஜி டைரக்ட் செய்த முதல் படம். சாதாரண மக்கள் அன்றாடம் படும் பாட்டை விவரிக்கிறது.

எவ்வளவு பொருள் பொதிந்த பாட்டு! இந்த consumer society யின் ஆதிக்கத்தில் நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு சாமான்களை வாங்கிச் சேர்த்துக்கொள்கிறோம்! கடைசியில் அவ்வளவும் குப்பைக்குப் போகின்றன! பழைய கால பெரிய வீடுகள் போய் சிறிய அடுக்குமாடி தீப்பெட்டி போன்ற இடம் வந்தும் , சாமான் வாங்கும் ஆசை விடவில்லை!  வொர்ட்ஸ்வொர்த் Wordsworth சொன்னமாதிரி:

The world is too much with us; late and soon,

Getting and spending we lay waste our powers.

ஷ்யாமல் மித்ராவின் குரல் தனிப்பட்டது. நம் அறுவரின் குரலோடு நெருங்கி வராது. இந்தப் பாடல் எந்த ஹீரோ நடிகரின் மீதோ, வேறு பெரிய நடிகரின் மீதோ படமாக்கப் படவில்லை! ஒரு டீக்கடைப் பையனாக வரும் மோஹன் சோடீ என்ற அன்றைய சில்லறை நடிகன் மீது படமாக்கப்பட்டது. படத்தில் மூன்று பத்திகளும் ஒன்றாக வராது- மூன்று  இடங்களில் வரும்! இதனாலெல்லாம் இந்தப் பாட்டை மக்கள் அதிகம் கண்டு கொள்ளவில்லை. சிறிய பாத்திரம்-புதிய  குரல் – பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால் 60 ஆண்டுகளுக்குப் பிறகும் இதன் கருத்தாழமும், எளிய மெட்டும் நம்மைக் கவர்கின்றன! ஷைலேந்த்ராவின் பேனா அப்படிப்பட்டது.

This is one of the best movies of Indian cinema. Don’t go by awards or rewards. Rishikesh Mukherjee spreads the spirit of humanism, simple human goodness and  homely virtues. India that still lived 60 years ago, from which we all hail.

த்விஜேன் முகர்ஜீ

 இவரையும் ஸலீல் சவுத்ரி அறிமுகப்படுத்தினார். 1961ல் வந்த ‘மாயா” என்ற படத்தில் ஹீரோ தேவ் ஆனந்திற்காகப் பாடிய சோலோ பாட்டு இது.

ai dil kahaan teri manzil naa koyi deepak hai naa koyi taaraa hai gum hai zameen door aasmaan ai dil kahaan teri manzil

மனமே! உன் இலக்கு எங்கிருக்கிறது?

இங்கு ஒரு விளக்கும் இல்லை, ஒரு தாரகையும் இல்லை!

பூமி மறைந்துவிட்டது, வானம் எங்கோ தூரத்தில்

மனமே, நீ அடைய வேண்டிய இடம் தான் என்ன?

kis liye mil mil ke dil tootate hain kis liye ban ban mahal tootate hain kis liye dil tootate hain patthar se poochhaa sheeshe se poochhaa Khaamosh hai ye sab ki zabaan 

ai dil kahaan teri manzil

எதற்காக இப்படி மனம் உறவாடி பின் உடைந்து போகிறது?

இந்த மாளிகை ஏன் இப்படி கட்டி உடைந்து போகிறது?

ஏன் இப்படி மனது உடைந்து போகிறது?

கல்லிடம் கேட்டேன், கண்ணாடியில் கேட்டேன்

மவுனமே அவற்றின் குரல்!

மனமே, நீ அடைய வேண்டிய இடம் தான் என்ன?

dhal gaye naadaan wo aanchal ke saaye rah gaye raste mein apne paraaye rah gaye apne paraaye aanchal bhi chhoota saathi bhi chootaa na hamsafar na caarwaan  

அந்த உறவின் நிழல் வீணில் போய்விட்டது

வழியில் என்னுடையது பிரிந்து போய்விட்டது

என்னுடையது பிரிந்துவிட்டது

நெருக்கமும் நீங்கியது,, துணையும் விட்டது

துணையும் இல்லை, கூட வருபவர்களும் இல்லை

ai dil kahaan teri manzil

naa koyi deepak hai naa koyi taaraa hai 

gum hai zameen door aasmaan 

மனமே, நீ எங்குதான் சென்றடையவேண்டும்?

ஒரு விளக்கும் இல்லை, ஒரு தாரகையும் இல்லை

பூமி காணவில்லை, வானமும் வெகு தூரத்தில்!

Song: Ae dil kahan teri manzil  Film: Maya 1961  Lyrics: Majrooh Sultanpuri

Music: Salil Chowdhury  Singer: Dwijen Mukherjee

 இது சோகப் பாடல். படத்தின் போக்குடன் சேர்ந்தது. மஜ்ரூஹ்வின்  கவிதை பல உள்ளார்ந்த பொருள் தரும் சொற்களைக் கொண்டது.

Many words here go beyond the literal meaning. Mahal means not just a mansion, but the hopes and expectations of the future. Paththar and sheesha obviously mean more than stone and glass: what answer can you expect from them? They obviously mean types of people , or everywhere in the natural and man-made world.. Aanchal ke saaye- literally means the shadow of a piece of worn saree! Here it is taken as standing for female companion. Humsafar, caravan are  idiomatic expressions in Urdu. Thus this is great poetry, with lots of involved imagery.

Salil Chowdhury’s tune is enchanting. 

த்விஜேன் முகர்ஜி அருமையாகப் பாடியிருக்கிறார். இது ஒரு வங்காளியப் பாட்டின் ஹிந்தி வடிவம் தான்-அவர் முதலில் பாடத் தயங்கினார். இது ஹீரோ தேவ் ஆனந்த்  விரும்பிய படியே அவர்மீது படமாக்கப்பட்டது. மிகுந்த வரவேற்பு பெற்றது.  ஆனாலும் அவருக்கு ஹிந்தியில் பாட வாய்ப்புகள் வரவில்லை. 

இதே பாடலை  லதாவும் பாடியிருக்கிறார். எடுபடவில்லை. 

த்விஜேன் முகர்ஜீ  குரல் ஹேமந்த் குமார் குரல் போல் இருக்கிறது என்றார்கள். இது சரியல்ல, யாரோ போகிற போக்கில் சொல்கிற பேச்சு. இருவர் குரலுக்கும் நல்ல வித்தியாச மிருக்கிறது.

ஷ்யாமல் மித்ர, த்விஜேன் முகர்ஜீ இருவருமே வங்காளி சங்கீத உலகில் மிகப் புகழ் பெற்றவர்கள். ஹிந்தியில் பாட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இந்த இரு பாடல்களுமே சிறந்த பாடல்களாக அமைந்து விட்டன. மித்ர சில ஹிந்திப் படங்களுக்கு இசையமைத்தார்.

ஆயிரக் கணக்கில் பாடல்கள் வந்தும் இத்தகைய குரல்களை ஹிந்தித் திரை இசை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

tag – ஹிந்தி படப் பாடல்கள் – 36

xxx

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: