கதா சரித் சாகரத்தின் அமிர்த மொழிகள் (Post No.7977)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7977

Date uploaded in London – – – 15 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ப்ருஹத் கதா, கதா சரித் சாகரம் பற்றிய இரு கட்டுரைகளைத் தொடர்ந்து மூன்றாவது கட்டுரையாக இது அமைகிறது.

கதா சரித் சாகரத்தின் அமிர்த மொழிகள், அறிவுரைகள்!

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத அறிஞரான எல். ஸ்டெர்ன்பாக் (L.Sternbach) அவர்களுக்கு அவரது இரு நண்பர்களிடமிருந்து கடிதங்கள் ஒரு முறை வந்தன. ஏறத்தாழ இரண்டு கடிதங்களின் சாராம்சமும் கிட்டத்தட்ட ஒன்று தான்!

“நீங்கள் கிட்டத்தட்ட 25 புத்தகங்களை எழுதி இருக்கிறீர்கள். ஆனால் அதில் ஒன்று கூட படிக்கும்படியாக இல்லை! அதில் உள்ள விஷயங்களை விட கீழே அடிக்குறிப்புகள் தாம் அதிகமாக இருக்கின்றன! ஏன், ஒரே ஒரு முறையாவது எல்லோரும் படித்து அனுபவிக்கும் ஒரு புத்தகத்தையாவது நீங்கள் எழுதக் கூடாது?”

‘கேள்வி நல்ல கேள்வி தான்’ என்று ஒப்புக் கொண்ட ஸ்டெர்ன்பாக் , ‘Aphorisms and Proverbs in the  Katha-Sarit-Sagara’ என்ற தனது நூலில் இந்தக் குறையை நிவர்த்திக்கப் போவதாக முன்னுரையில் தெரிவித்தார்.

ஆனால் பழக்க தோஷம் விடாதில்லையா, புத்தகத்தின் அறிமுக உரையில் மட்டும் அடிக்குறிப்புகளை வழக்கம் போலத் தந்து மகிழ்ந்தார்.

கதா சரித் சாகரத்தில் 21500 அறிவுரை அல்லது நீதிமொழி அல்லது சுபாஷிதம் போன்ற ஸ்லோகங்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்!

அதைச் சாதித்தார் அவர்.

சுமார் 50 அத்தியாயங்களில் 50 தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் சுமார் 900 பொன்மொழிகளைத் தொகுத்தார்; அவற்றிலும் சிலவற்றை நீக்கி விட்டு 733ஐ மட்டும் ஆங்கிலத்தில் தந்தார். இரண்டு பாகங்களாக இவற்றைத் தர நினைத்த ஸ்டெர்ன்பாக் முதல் பாகத்தில் ஆங்கில சுபாஷித மொழிகளையும் அவற்றின் மூல ஸ்லோகங்களை சம்ஸ்கிருதத்தில் இரண்டாம் பாகமாகவும் வெளியிடத் திட்மிட்டார்..

(முதல் பாகம் – 1980 வெளியீடு;  அகில பாரதீய சான்ஸ்கிரிட் பரிஷத், லக்னௌ).

இரண்டாம் பாகம் பற்றிச் சரியாகத் தெரியவில்லை.

முதல் பாகத்தில் உள்ளவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம் – தமிழாக்கம் என்னுடையது : (புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட இவை உதவும் )

 1. Gods : Even the gods are not successful without honouring Ganesa.

கடவுளர் : கணேசரைத் தொழாமல் கடவுளர் கூட வெற்றியடைவதில்லை.

 • Reincarnation : Everything depends upon the power of actions in a former life.

புனர்ஜென்மம் : முந்தைய ஜென்மத்தில் செய்த செயல்களின் சக்தியைப் பொறுத்தே அனைத்தும் இருக்கிறது.

3.Deeds : A person attains similarity to that which he thinks of.

செயல்கள் : ஒருவன் எதை நினைக்கிறானோ அதற்கு இயைந்தபடியே அமைகிறான்.

 • Fate : When Fate is turned against a man, everything in this world turns also.

விதி : விதி ஒருவனுக்கு எதிராகத் திரும்பி விட்டால் இந்த உலகில் அனைத்துமே அவனுக்கு எதிராகி விடும்.

 • Fate : It Is impossible to discern the mysterious way of destiny.

விதி : விதியின் மர்மமான வழியை நுணுகி அறிவதென்பது முடியாத காரியம்.

 • Fortune : (Fortune,) the fickle goddess, if she places her feet at the same time upon two exalted persons, cannot keep her footing long; she will certainly abandon one of the two.

அதிர்ஷ்டம் : (அதிர்ஷ்டம் என்னும்) நிலையற்ற தேவதையானவள், ஒரே சமயத்தில் புகழ் வாய்ந்த இருவரிடம் தன் காலைப் பதித்தாள் எனில், நெடு நேரம் அவள் தன் காலை அவர்கள் மீது வைத்திருக்க முடியாது; ஒருவரை அவர் விட்டு விடுவாள்.

 • Dharma : The righteousness does not sink.

தர்மம் : தர்மம் முழுகாது.

 • Wealth : Wealth, like an unreasonable cloud, suddenly comes and goes.

செல்வம் : செல்வம், ஒரு அறிவுக்கு கட்டுப்படாத மேகக் கூட்டம் போல திடீரென்று வரும், திடீரென்று போகும்.

 •  Poverty : Poverty makes one steal.

ஏழ்மை : ஏழ்மை ஒருவனைத் திருடச் செய்கிறது.

 1. The World : In this transient world nothing is permanent.

உலகம் : இந்த மாறுகின்ற உலகில் எதுவும் நிலையல்ல!

 1. Death : Death is better than dishonor.

மரணம் : அகௌரவத்தை விட மரணமே மேல்.

 1. Love : Love is more charming than one’s native home.

காதல் : ஒருவனின் சொந்த வீட்டை விட அதிக கவர்ச்சியானது காதல்!

 1. Love : What is the lotus-bed without the swan, and what is the swan without the lotus-bed?

காதல் : தாமரை இல்லாத அன்னம் என்ன ஒரு அன்னம், அன்னம் இல்லாத தாமரை என்ன ஒரு தாமரை?

 1. Women : There are some women born in good families, that, having heart virtuous and of transparent purity, become the pearls of ornaments of the earth.

பெண் : நல்ல குடும்பங்களில் பிறந்த சில பெண்மணிகள் இருக்கின்றனர். அவர்களது புண்ணியத்தாலும் பளிங்கு போன்ற தூய்மையாலும்  பூமியின் ஆபரணமாக முத்தென அவர்கள் திகழ்கின்றனர்.

 1. Women : Fickle is the mind of women!

பெண் : பெண்களின் மனம் நிலையற்றது!

 1. Family : The meeting of relations in a foreign land is like a fountain of nectar in the desert.

குடும்பம் : அயல்நாட்டில் உறவினரைப் பார்ப்பதென்பது பாலைவனத்தில் அமிர்த ஊற்றைக் கண்டதற்கு நிகராகும்.

 1. Man : What Is the use of profitless body that is dead even when alive.

மனிதன் : பயனற்ற உடல் இருந்து என்ன பயன், உயிரோடிருக்கும் போது இறந்ததற்குச் சமம் அது.

 1. Great Man : Great men attain the title of great by struggling through great difficulties by the aid of resolution and accomplishing great things.

பெரியோர் : பெரியோர் பெரும் இன்னல்களைக் கடந்து தங்கள் உறுதியாலும், பெரிய விஷயங்களை அடைந்த்தும் பெரிய நிலையை அடைகின்றனர்

 1. Goodness : Good and evil done by a man is made to return upon himself.

நல்ல தன்மை : ஒருவன் செய்த நல்லதும் கெட்டதும் அவன் மீதே திரும்பும்.

 • Goof Fortune : Good fortune is the result of virtue.

நல்லதிர்ஷ்டம் : நல்லதிர்ஷ்டம் புண்ணியத்தின் பயனே.

 • Association with the great : Association with the great produces benefit.

பெரியோர் கேண்மை : பெரியோர் தொடர்பு பெரும் நலன்களை உருவாக்கும்.

 • Firmness : Everything is accomplised by resolution.

உறுதி : அனைத்தும் உறுதியின் மூலம்  அடையப்படுகிறது.

 • Perseverance : Even gods are pleased with perseverance.

விடாமுயற்சி : கடவுளர் கூட விடாமுயற்சியால் சந்தோஷம் அடைகின்றனர்.

 • Wisdom : A Wise man should not serve fools; he should serve wise men.

அறிவு : ஒரு புத்திசாலி முட்டாள்களிடம் பணி புரியக் கூடாது, அவன் புத்திசாலிகளிடமே பணி புரிய வேண்டும்.

 • Courage : Success depends upon courage.

தைரியம் : வெற்றி தைரியத்தைப் பொறுத்தே அமைகிறது.

 • Rumours : A general rumour, though false, injures even great men in this world.

வதந்தி : ஒரு சின்ன வதந்தி, அது தவறானதாக இருந்தாலும் கூட, பெரிய மனிதர்களை இந்த உலகில் பெரிதும் பாதிக்கிறது.

 • Hospitality  Hospitality will not bear its fruit in the next world,  its fruit is in this.

விருந்தோம்பல் : விருந்தோம்புவது அதன் பயனை மேல் உலகத்தில் தருவதில்லை; இந்த உலகத்திலேயே தருகிறது.

 •  Patriotism : Love of dwelling in one’s mother country naturally draws everyman.

தேசபக்தி : தாய்நாட்டில் வசிப்பதென்பது ஒவ்வொரு மனிதனையும் கவர்ந்திழுக்கிறது.

tags –  எல். ஸ்டெர்ன்பாக், கதா சரித் சாகர,  அமிர்த மொழிகள்

***

Leave a comment

2 Comments

 1. Venkatagiri R

   /  May 16, 2020

  Excellent sir.thanks for all mails not only this.

 2. Santhanam Nagarajan

   /  May 16, 2020

  thanks a lot sir. we will continue with your support!
  s nagarajan

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: