ஹிந்தி படப் பாடல்கள் -37- பறவையிடமிருந்து கற்போம்! (Post.7978)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7978

Date uploaded in London – – – 15 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் -37- பறவையிடமிருந்து கற்போம்!

R. Nanjappa

பறவையிடமிருந்து கற்போம்!

பறவைகளைக் கண்டால் நமக்கெல்லாம் ஒரு சந்தோஷம்- இனம் புரியாத மகிழ்ச்சி! நீல வானில் சிறகடித்துப் பறக்கும் பறவைகள் போல நாமும் சுதந்திரமாகத் திரிய மாட்டோமா என்றிருக்கிறது! நமது வேத கால ரிஷிகள் பறவைகளையும் இரண்டு கால் உயிர்கள் என்று மனிதனுடன் சேர்த்து எண்ணினர்-அவற்றுக்காகவும் பிரார்த்தனை செய்தனர் :- “ஸம் நோ அஸ்து த்விபதே”.

காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடினார் மஹாகவி பாரதியார்.  

ஆங்கிலக் கவி ஜான் கீட்ஸ்  நைட்டிங்கேல் பறவைவயைக் கண்டு, அதன் குரலைக் கேட்டு வியந்து பாடினார், வாழ்க்கைத் தத்துவத்தையே :அதற்குள் புதைத்து வைத்தார்:

Thou wast not born for death, immortal Bird!

No hungry generations tread thee down;

The voice I hear this passing night was heard

In ancient days by emperor and clown:

Perhaps the self-same song that found a path

Through the sad heart of Ruth, when, sick for home,

She stood in tears amid the alien corn;

The same that oft-times hath

Charm’d magic casements, opening on the foam

Of perilous seas, in faery lands forlorn. (7)

                                 John Keats: Ode To A Nightingale, 1819

   நம் திரைக் கவிஞர்களும் பறவையை வைத்துப் பாடாமலிருப்பார்களா? இதோ இரண்டு பாடல்கள்.

பஞ்சீ பனூ(ன்) உட்தீ ஃபிரூ(ன்)

पंछी बनूँ उड़ती फिरूँ मस्त गगन में
आज मैं आज़ाद हूँ दुनिया के चमन में
हिल्लोरी

मेरे जीवन में चमका सवेरा
मिटा दिल से वो गम का अन्धेरा
हरे खेतों में गाए कोई लहरा
यहाँ दिल पर किसी का पहरा
रंग बहारों ने भरा मेरे जीवन में
आज मैं आज़ाद


ओ दिल ये चाहे बहारों से खेलूँ
ओ गोरी नदिया की धारों से खेलूँ
ओ चाँद सूरज सितारों से खेलूँ
ओ अपनी बाहों में आकाश ले लूँ
बढ़ती चलूँ गाती चलूँ अपनी लगन में
आज मैं आज़ाद…

ओ मैं तो ओढूँगी बादल का आँचल
ओ मैं तो पहनूँगी बिजली की पायल
ओ छीन लूँगी घटाओं से काजल
ओ मेरा जीवन है नदिया की हलचल
दिल से मेरे लहरें उठे ठंडी पवन में
आज मैं आज़ाद…  

பன்சீ பனூ(ன்உட்தி ஃபிரூ(ன்மஸ்த் ககன் மே

ஆஜ் மை ஆஃஜாத் ஹூ(ன்) துனியா கீ சமன் மே

இந்த அழகிய வானில் நானும் பறவையாகித் திரிவேன்!

உலகமாகிய சோலையில் இன்று நான் சுதந்திரமாகி விட்டேன்!

மேரே ஜீவன் மே சம்கா சவேரா

மிடா தில் ஸே  கம் கா அந்தேரா

ஹரே கேதொ(ன்) மே காயே கோயீ லஹரா

யஹா(ன்) தில் பர் கிஸீ கா பஹரா

ரங்க் பஹாரோ(ன்) நே பரா மேரே  ஜீவன் மே

ஆஜ் மை ஆஃஜாத் ஹூ(ன்)…

என் வாழ்வில் புது ஒளி உதயமாகிவிட்டது!

மனதிலிருந்த கவலை என்னும் இருள் மறைந்துவிட்டது!

இந்த பச்சைப்பசும் வயல்களில் ஏதோ கீதத்தின் அலை எழுகிறது

இங்கே மனதின்மேல் தடை விதிக்க யாரும் இல்லை!

இந்த வஸந்தம் என் வாழ்வை வண்ணமயமாக்கிவிட்டது!

தில் யே சாஹே பஹாரோ(ன்) ஸே கேலூ(ன்)

கோரீ நதியா கீ தாரோ(ன்) ஸே கேலூ(ன்)

சாந்த் சூரஜ் ஸிதாரோ ஸே கேலூ(ன்)

அப்னீ பாஹே(ன்) மே ஆகாஷ் லே லூ(ன்)

பட்தீ சலூ(ன்) காதீ சலூ(ன்) அப்னீ லகன் மே

ஆஜ் மை ஆஃஜாத் ஹூ(ன்)

வஸந்தத்துடன் விளையாடு என மனம் விழைகிறது

நதியின் நீரோட்டத்தோடு விளையாட விழைகிறது

நிலவு, சூரியன், தாரகையோடு விளையாட விழைகிறது

வானத்தையே என் கைகளால் அணைத்துக்கொள்ள விழைகிறது!

மனதிற்கிசைந்தபடி பாடி ஆடிச் செல்வேன்!

மை தோ ஓண்டூங்கி பாதல் கா ஆஞ்சல்

மைதோ பஹனூங்கி பிஜ்லீ கீ பாயல்

சீன் லூங்கீ கடாவோ(ன்) ஸே காஜல்

மேரா ஜீவன் ஹை நதியா கீ ஹல்சல்

தில் ஸே மேரே லஹரே(ன்)  உடே டண்டி பவன் மே

ஆஜ் மை ஆஃஜாத் ஹூ(ன்).

மேகங்களையே ஆடையாக போர்த்திக் கொள்வேன்.

மின்னலையே சலங்கையாக அணிந்து கொள்வேன்

கரிய மேகங்களிலிருந்து கண் மையை எடுத்துக் கொள்வேன்

நதியைப் போன்று அசைந்தாடிச் செல்லும் என் வாழ்க்கை!

இந்த குளிர்ந்த காற்றில் சந்தோஷ அலைகள் என் மனதிலிருந்து எழுகின்றன

நான் வாழ்க்கை என்னும் சோலையில் இன்று சுதந்திரமாகி விட்டேன்..

Song: Panchi banoon udthi firoo  Film: Chori Chori 1956 Lyrics: Hasrat Jaipuri

Music: Shankar Jaikishan   Singer:  Lata Mangeshkar & Manna Dey

எத்தனை இனிய பாட்டு! அதற்கேற்ப கண்களை உறுத்தாத நடனக் காட்சிகள். நடனமாடுபவர்களின் விரசம் இல்லாத அங்க அசைவுகள் எப்படி இசையுடன் இழைகின்றன, பாருங்கள்!

உருதுக் கவிஞர் இனிய, எளிய ஹிந்தியில் அரிய கவிதை படைத்துவிட்டார்!

இனிய மெட்டில் இப்பாட்டை அமைத்திருக்கின்றனர் ஷங்கர் ஜெய்கிஷன்! இதற்கு அடிப்படை ஸ்காட்லாந்து

நாட்டின் “Comin’ Thro’ the Rye” என்ற  நாட்டுப்புறப் பாடலாகும். நம் இசைவாணர்கள் இது பூபாளி ராகத்தில்  भूपाली அமைந்த பாடல்  என்பார்கள்! இரண்டும் கலந்து நம்மை மயக்க வைக்கும் பாடல்!

ஒரு பறவை எப்படிக் கற்பனையைத் தூண்டிவிட்டது!

What we call a ‘feel good” song!

மற்றொரு பாடல்

தில் மேரா ஏக் ஆஸ் கா பஞ்சி

dil meraa ek aas kaa panchhi, udtaa hai unche gagan par
pahunchegaa ek din kabhi to chaand ki ujli jameen par
dil meraa ek aas kaa panchhi, udtaa hai unche gagan par
 

என் மனம்  நம்பிக்கை என்னும்  பறவை

உயர்ந்த வானில் எழுகிறது!

ஒரு நாள் அந்த சந்திரனின் ஒளிமிகுந்த இடத்தை அடைந்துவிடும்!

வானில் பறக்கும் மனப் பறவை….

ye duniyaa hai naujawaanon ki, zamaanaa hai naujawaanon kaa
hawaayen bhi gungunaati hain, taraanaa ham naujawaanon kaa
badlegi ek din ye hasti, chamkegaa ek din muqaddar
aayegaa jhoomtaa saberaa, jeewan mein roshni ko lekar
dil meraa ek aas kaa panchhi, 

இந்த உலகம் புதிய இளைஞர்களுக்குச் சொந்தமானது!

இளைஞர்களின் கீதம்  காற்றில் கூடப் பரவி வருகிறது!

ஒரு நாள் இந்த நிலை மாறிவிடும், விதி ஒளி மிக்கதாகிவிடும்

நம்பிக்கையாகிய பறவை..

 kabhi manzil bhi mil jaayegi, abhi to har aas baaki hai
 ummmeedon par naubahaaren hain, jahaan tak ye saans baaki hai
 poori hogi har tamannaa, chhoo loongaa aasmaan ko badhkar
 chaahe to ruk naa sakegaa, duniyaa ke raaston pe chalkar
 dil meraa ek aas kaa panchhi
,

ஒரு நாள் இலக்கை அடைந்துவிடுவோம் இப்போது நம்பிக்கை மிகுந்து இருக்கிறது!

உயிர் உள்ளவரை நம்பிக்கை என்னும் புது வஸந்தம் இருக்கும்!

எல்லா ஆசைகளும் நிறைவேறும், வானத்தையே எட்டிப் பிடித்து விடுவோம்!

இந்த உலகின் பாதையில் நின்று விடமாட்டோம்!

என் மனம் நம்பிகை என்னும் பறவை! உயர வானில் பறக்கிறது!

Song:  Dil mera ek aas ka panchi   Film: Aas Ka panchi 1961 Lyrics: Hasrat Jaipuri

Music: Shankar Jaikishan Singer: Subir Sen

சுபிர் சென் பாடிய இன்னொரு அழகிய பாட்டு. ஹஸ்ரத் ஜெய்புரியின்  மற்றொரு சிறந்த கவிதை. Feel good song.

இந்த உலகம் புதிய இளைஞர்களுக்குச் சொந்தமானது:- 61ல் எழுதிய இந்த வரி- இன்று உண்மையாகிவிட்டது! இன்று இந்தியாவின் மக்கள் தொகையில்  50% மேல் இருப்பவர்கள் 25 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள்! 35 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் இந்தியாவின் ஜனத்தொகையில் 65% அதிகம்! இன்று ஊர் உலகமெல்லாம் பரபரத்துக் காணப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்! அனால் நமது இளைஞர்களுக்கு இத்தகைய உயர்ந்த கனவோ, கற்பனையோ இருக்கிறதா ?

நம்பிக்கை என்னும் பறவை!

எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை- இதை பறவையாகக் கற்பனை செய்த அமெரிக்க பெண் கவிஞர் எமிலி டிக்கின்ஸன் எழுதிய ஒரு கவிதை:

“Hope” is the thing with feathers-

That perches in the soul-

And sings the tune without words-

And never stops-at all-

And sweetest -in the Gale-is heard-

And sore must be the storm-

That could abash the little Bird

That kept so many warm-

I ‘ve heard it in the chillest land-

And on the strangest Sea-

Yet -never – in Extremity,

It asked a crumb- of me.

Emily Dickinson; published posthumously, 1891

அசல் செல்வம்

ஸ்ரீ சந்திரசேகர் சிறிதுகாலம் பாரதப் பிரதமராக இருந்தார். அவர் பதவியேற்றபின் ஒரு சமயம் ஒரு பேச்சில் ஒரு கவிதை சொன்னார். இங்கு எமிலி டிக்கின்ஸன் எழுதிய சொற்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது!

 mujhe dena gaize mein dhamkiyan

gire lakh bar ye bijiya(n)

mere sultanate ye aashiyaan

mere milkiyat ye char pankh

ஒரு இரவில் இடி, மின்னலுடன் , பலத்த காற்றுடன் கூடிய பெருத்த மழை. ஒரு சிறு பறவையின் கூடு கலைந்து விழுந்துவிடுகிறது. அச்சிறு பறவை மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது. அப்போது அது இடி, மின்னலை நோக்கி இந்தச் சொற்களைச் சொல்கிறது:

நீங்கள் என்னை பயமுறுத்திப் பார்க்கிறீர்களா?

 லட்சம்  இடிமின்னல் தான் விழட்டுமே!

என் வீட்டை, என் ராஜ்யத்தைத் தான் வீழ்த்துங்களேன்!

இதோ என் இறக்கைகள்என்னுடைய அசல் சொத்து!

இது இருக்கும் வரை உங்களால் என்ன செய்துவிட முடியும்?”

This embodies a great truth. So long as we keep our essential strength in tact, no external threat can harm us. If we remember the circumstances in which Chandrashekar  became the Prime Minister, we will realise the true import of these lines.

 நாம் பறவைகளிடமிருந்தும் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்!

****

 tags  —  ஹிந்தி படப் பாடல்கள் -37, பறவையிடமிருந்து கற்போம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: