|
WRITTEN BY R. NANJAPPA Post No.7984 Date uploaded in London – – – 16 May 2020 Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 38 – கவிதையைக் கொண்டாடுவோம்! R. Nanjappa
சமூக நிகழ்ச்சிகள் நடக்கும் சில இடங்களில் ‘காலணிகளை வெளியே விடவும்’ என எழுதிவைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். கவிதையை வெளியே விட்டு வாருங்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோமா? உண்மையில் இப்படியும் நடந்தது!. அயர்லாந்து நாட்டில் அந்த நாட்டு மக்கள் (ethnic Irish) வருடந்தோறும் ஒரு விழா நடத்துகிறார்கள். Tralee என்ற ஊரில் நடக்கும் இந்த விழாவுக்கு “Rose of Tralee” என்று பெயர். 4-5 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கவிதையும் படிப்பார்கள். 2016ல் திடீரென்று இதை நிறுத்தினார்கள், 2017லும் இது தொடர்ந்தது. கவிதை வாசித்தால் நிகழ்ச்சிகளின் விருவிருப்பு குறைகிறது என்றார்கள். இதைப் பற்றி ஒரு அரைகுறை கவிதையும் எழுதினார்கள்:
There once was a time in the Dome When Roses would recite the odd poem Then times, they did change Other things, now the rage So we’ve asked them to leave poems at home.
ஆம், கவிதையை வீட்டிலேயே வைத்துவிட்டு வாருங்கள் என்றார்கள்! இங்கிலாந்து நாட்டுக் கவிஞர் டென்னிஸன் பற்றி ஒரு நிகழ்ச்சி. அவர் புகழ் ஓங்கி, அவரை, அவர் வீட்டைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாம். அவரால் சமாளிக்க முடியவில்லை. 1869ல் வீட்டையே மாற்றிவிட்டார்! இப்போது இப்படி நடக்குமா?
கவிதைக்குக் குறையும் மதிப்பு கவிதைக்கு மதிப்பு குறைந்து வருகிறது.. ஏப்ரல் 2015. அமெரிக்க “வாஷிங்க்டன் போஸ்டு” பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்தது. Christopher Ingraham எழுதிய இக்கட்டுரையின் தலைப்பு: “Poetry is going extinct”. அமெரிக்க அரசின் கணிப்புப்படி, 1992ல் 17% மக்கள் வருடத்தில் ஒருமுறையாவது ஏதோ கவிதை படித்தார்கள்; 2012ல் (20 ஆண்டுகள் கழித்து) இத்தொகை 6.7% ஆகக் குறைந்தது! நம்மிடம் புள்ளி விவரம் இல்லையென்றாலும் நம் நாட்டின் நிலவரம் தெரிந்தது தான்! மரபுக் கவிதை எழுதுவோர் இன்று அதிகம் இல்லை. இருக்கும் கவிதையையே படிக்கத் தெரியவில்லை. சொல்லுக்குச் சொல் பிரித்து எழுதினால் தான் படிக்கமுடியும். இதற்கும் திரை இசைக்கும் என்ன சம்பந்தம்? திரையிசைக்கு ஒரு வடிவம் கொடுப்பது சாஹித்யம், அது கவிதை நடையில் இருப்பது சிறப்பு. சொல்லுடன் சேர்ந்தால் தான் இசை மனதில் பதியும்.
அச்சொல் கவிதை நடையில் இருந்தால் இன்னும் விசேஷம், நினைவில் கொள்வதும் சுலபம். நம் பழைய இலக்கியங்கள் அனைத்தும்- எந்தப் பொருள் பற்றியதானாலும் – கவிதை நடையிலேயே அமைந்திருக்கின்றன. அவற்றை எளிதில் மனப்பாடம் செய்யலாம். நம் திரைஉலகிலும் 60-70கள் வரை இப்படித்தானிருந்தது. பழைய பாடல்கள் எல்லாம்- காமெடியன் பாடும் பாடல்கள் கூட-இப்படிதானிருக்கும். இப்போது கவிதை எழுதுவதில்லை. எதை எழுதினாலும் புதுக்கவிதை என்பார்கள். ஹிந்தித் திரை இசையிலும் இந்த நிலைதான் நிலவுகிறது. 50-60 களில் இருந்த கவிகள் போல இன்று இல்லை. அன்று நாசூக்காகச் சொன்னதை இன்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள். சொல்லத் தயங்கியதையும் துணிந்து சொல்கிறார்கள். சென்சார் போர்டிலுள்ள பொறுப்புள்ள மனிதர்கள் தூங்குகிறார்கள்! எல்லாவற்றிற்கும் அடிப்படை, இன்று வாழ்க்கையே வியாபார மயமாகிவிட்டது தான். வேறு பரபரப்பு, கிளுகிளூப்பு அம்சங்கள் பெருகிவிட்டன.
கவிதையைப் படித்து, கேட்டு ரசிக்கும் திறமையை பள்ளிக்கல்வி தருவதில்லை. அதற்கேற்ற பொறுமையும், மன நிலையும் இல்லை. இதையெல்லம் 250 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தார் ஆங்கிலக் கவி ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith). நவீன நாகரிகத்தின் பிடியில் கவிதைக்கு மதிப்பில்லாமல் போகும் என்று எழுதினார்.

And thou, sweet Poetry, thou loveliest maid, Still first to fly where sensual joys invade; Unfit in these degenerate times of shame, To catch the heart, or strike for honest fame; Dear charming nymph, neglected and decried, My shame in crowds, my solitary pride; Thou source of all my bliss, and all my woe, That found’st me poor at first, and keep’st me so; Thou guide by which the nobler arts excell, Thou nurse of every virtue, fare thee well!
பொற்காலத் திரைக் கவிதைகள் நல்ல வேளை ! பொற்காலத் திரையிசைப் பாடல்கள் இருக்கின்றன. இவை முக்காலும் இலக்கியத்தரம் வாய்ந்த கவிதைகள். பாடல்களைக் கேட்டு மகிழலாம், கவிதைகளைப் படித்து ரசிக்கலாம். வாருங்கள், இரு கவிதைகளைப் பார்ப்போம்.
 कभी तो मिलेगी, कहीं तो मिलेगी बहारों की मंज़िल राही बहारों की मंज़िल राही लंबी सही दर्द की राहें दिल की लॅगन से काम ले आँखो के इस तूफान को पी जा आहों के बादल थाम ले दूर तो है पर, दूर नही है नज़ारों की मंज़िल राही बहारों की मंज़िल राही माना की है गहरा अंधेरा गुम है डगर की चाँदनी मैली ना हो धुंधली पड़े ना देख नज़र की चाँदनी डाले हुए है, रात की चादर सितारों की मंज़िल राही बहारों की मंज़िल राही
கபீ தோ மிலேகீ, கஹீ(ன்) தோ மிலேகீ பஹாரோ(ன்) கீ மன்ஃஜில், ராஹீ பஹாரோ(ன்) கீ மன்ஃஜில், ராஹீ பயணி! நீ விரும்பும் அந்த அழகிய இடம்- எப்போதாவது கிடைத்துவிடும், எங்கேயாவது கிடைத்துவிடும்! நீ விரும்பும் அந்த இடம் கிடைத்துவிடும்! லம்பீ ஸஹீ தர்த் கீ ராஹே(ன்) தில் கீ லகன் ஸே காம் லோ ஆங்கோ கே இஸ் தூஃபான் கோ பீஜா ஆஹோ(ன்) கே பாதல் தாம் லோ தூர் தோ ஹை, பர் தூர் நஹீ ஹை நஃஜாரோ(ன்) கீ மன்ஃஜில் ராஹீ பஹாரோ(ன்) கீ மன்ஃஜில் ராஹீ துன்பம் நிறைந்த இந்தப் பாதைகள் நீண்டவை தான்- ஆனால் மனதில் தைரியத்துடன் செயல்படு கண்ணில் ஒளிரும் (அவநம்பிக்கை) என்ற புயலை அடக்கு பெருமூச்சு என்னும் மேகத்தைத் தடுத்து நிறுத்து
நீ விரும்பும் அந்த அழகிய இடம்- தூரத்தில் தான் இருக்கிறது- ஆனால் அவ்வளவு தூரமில்லை! அந்த அழகிய காட்சிகள் அதிக தூரத்தில் இல்லை! ஒரு நாள் அவற்றை அடைவாய், எங்காவது அடைவாய்
மானா கீ ஹை கஹ்ரா அந்தேரா கும் ஹை டகர் கீ சாந்த்னீ மைலீ நா ஹோ துந்த்லீ படே நா தேக் நஃஜர் கீ சாந்த்னீ டாலேஹுயே ஹை ராத் கீ சாதர் ஸிதாரோ(ன்) கீ மன்ஃஜில் ராஹீ பஹாரோ(ன்) கீ மன்ஃஜில், ராஹீ இருள் அடர்ந்து கவ்விக்கொண்டிருக்கிறது- நான் அறிவேன் வழியில் நிலவொளியும் இல்லை! இருந்தாலும், அழுக்கு சேரக்கூடாது, பாதை நழுவக் கூடாது- ஆம், கண்ணின் ஒளி என்னும் நிலவின் வெளிச்சம் இருக்கிறதல்லவா! இரவு என்னும் சால்வை எங்கும் போர்த்தி இருக்கிறது அந்த தாரகை மின்னும் இடம்- நீ விரும்பும் அந்த அழகிய இடம்- என்றாவது ஒரு நாள் கிடைத்தே தீரும் எங்காவது கிடைத்தே தீரும்!
Song: Kabhie to milegi Film: Aarti 1962 Lyrics : Majrooh Sultanpuri Music: Roshan Singer: Lata

What a lovely inspirational poem this is, tuned into a lovely melody! The character to whom this is sung is himself a poet, so the song is full of the poetic essence : many expressions go beyond their literal meanings. The ‘Baharon ki manzil , the nazaron ki manzil the sitaron ki manzil he is seeking is not a physical place at all, or entirely! It is partly his wish, partly dream or imagination, poetic fancy!. We all have or did have such dreams, after all! Not that everything was realised, but the practical way to deal with it is to treat the difficulties as guideposts, and not to lose heart.
(dil ki lagan se kaam lo) The darkness of the night stands for more than physical darkness daalen huve hai raath ki chadar; so we should not get dirty, or lose the way! (maili na ho, dundli pade na) This is possible by a clear mental sight (dekh nazar ki chandni). Aankhon ke is toofan-
what meaning can you give? This song is full of such profound suggestions and makes it a grand poem, though small. The deeper the meaning we get, the more closely we study! On the whole, the message is one of hope! The lyricist, music director and the singer match wits here! What a nice offering! This poem can be enjoyed as a stand alone. Roshan was a sensitive composer, he knew the mood and spirit of the poem!
கிஸீகி முஸ்குராஹடோ(ன்) மே ஹோ நிஸார் किसी की मुस्कुराहटों पे हो निसार किसी का दर्द मिल सके तो ले उधार किसी के वासते हो तेरे दिल में प्यार जीना इसी का नाम है
माना अपनी जेब से फ़कीर हैं फिर भी यारों दिल के हम अमीर हैं मिटे जो प्यार के लिए वो ज़िन्दगी जले बहार के लिए वो ज़िन्दगी किसी को हो ना हो हमें तो ऐतबार जीना इसी का नाम है…
रिश्ता दिल से दिल के ऐतबार का ज़िन्दा है हमीं से नाम प्यार का के मर के भी किसी को याद आयेंगे किसी के आँसुओं में मुस्कुराएँगे कहेगा फूल हर कली से बार-बार जीना इसी का नाम है…
கிஸீ கி முஸ்குராஹடோ(ன்) பே ஹோ நிஸார் கிஸீ கா தர்த் மில் ஸகே தோ லே உதார் கிஸீ கே வாஸ்தே தேரே தில் மே ப்யார் ஜீனா இஸீ கா நாம் ஹை
பிறர் மகிழ்ச்சியைக் கண்டு நாமும் மகிழ்ச்சியடைதல், பிறருக்குக் கஷ்டம் வந்தபோது அதைக் குறைத்தல், பிறருக்காக மனதில் அன்பு பாராட்டுதல்- இப்படி வாழ்வது தான் வாழ்க்கை! மானா அப்னீ ஜேப் ஸே ஃபகீர் ஹை ஃபிர் பீ யாரோ தில் கே ஹம் அமீர் ஹை மிடே ஜோ ப்யர் கே லியே ஓ ஃஜிந்தகீ ஜலே பஹார் கே லியே ஓ ஃஜிந்தகீ கிஸீ கோ ஹோ நா ஹோ ஹமே தோ ஐத்பார் ஜீனா இஸீ கா
நாம் ஹை கையில் பொருள் இல்லை -அதனால் என்ன? மனதை நல்லதாக வைத்துக்கொள்ளலாமே! அன்புக்காக யார் வாழ்கிறார்களோ, வாழ்க்கையை மேம்படுத்த யார் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாரோ- அப்படி வாழ்வது தான் வாழ்க்கை! வேறு யாருக்கு இருக்கிறதோ இல்லையோ, இதுதான் என் நம்பிக்கை- இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை!
ரிஸ்தா தில் ஸே தில் கே ஐத்பார் கா ஃஜிந்தா ஹை ஹமீ ஸே நாம் ப்யார் கா கே மர்கே பீ கிஸீ கோ யாத் ஆயேகீ கிஸீகே ஆன்ஸுவோ மே முஸ்குராயேங்கே கஹேகா ஃபூல் ஹர் கலீ ஸே பார் பார் ஜீனா இஸீ கா
நாம் ஹை மனதோடு மனது பொருந்தி எழும் உறவு- அதைத்தான் அன்பு என்று சொல்லுவேன்! அதுவே வாழவைக்கிறது! இறந்த பின்பும் அவரை எவராவது நினைத்துக் கொள்வார்கள்! அவர் நினைவு அழுகையினிடையிலும் சிலரை முறுவலிக்கச் செய்யும்! மலர் ஒவ்வொரு மொட்டிடமும் சொல்லும்: இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை!
Song: Kisi ki muskurahaton Film: Anari 1959 Lyrics: Shailendra Music: Shankar Jaikishan Singer: Mukesh
 எளிய ஹிந்திச் சொற்கள் தான்- எத்தனை பெரிய விஷயத்தைச் சொல்லிவிட்டார்! இது கவி ஷைலேந்த்ராவுக்குக் கை வந்த கலை! இந்த கொள்கைகளை Humanism என்பார்கள். சமய அடிப்படையிலும் இவை முக்கியமே! இந்த உடல் பிறருக்கு நன்மை செய்யவே கொடுக்கபட்டிருக்கிறது: பரோபகாரார்த்தம் இதம் சரீரம்!
பொருளில்லாதவர்கள் மனதால், உடலால் நன்மை செய்யலாமே! மிடே பஹார் கே லியே ஓ ஃஜிந்தகீ, ஜலே பஹார் கே லியே ஓ ஃஜிந்தகீ, – அருமையான வரிகள். “அன்புடையார் என்பும் உரியர் பிறற்கு ” என்ற குறளை நினைவு படுத்தும் ரிஸ்தா தில் ஸே தில் கே ஐத்பார்கா: இந்த வரி “நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு” என்ற குறளை நினவுபடுத்தும்! கஹேகா ஃபூல் ஹர் கலீ ஸே- மொட்டு தன் லட்சியத்தை இன்னும் எட்டவில்லை! மலர்ந்து, மணம் பரப்பி பிறரை மகிழச்செய்வதுதான் மொட்டின் இலக்கு! அந்த இலக்கைத் தொட்ட மலர், மொட்டுக்கு அதன் இலக்கை நினைவுபடுத்துகிறது! உலகில் பெரியோர்கள் செய்வதும் இதுதானே! ‘
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே” என்பார் புறநானூற்றில்! இப்படி ஒரு எளிய கவிதையில் அரிய விஷயங்களைச் சொல்லிவிட்டார் கவிஞர் ஷைலேந்த்ரா! அருமையான இசையில் இக்கவிதையை தோய்த்திருக்கிறார்கள் ஷங்கர்-ஜெய்கிஷன்! மறக்க இயலாத வகையில் பாடியிருக்கிறா முகேஷ்! இந்த இரண்டு கவிதைகளும் நற்செய்தியுடன் நம்பிக்கையை வளர்ப்பதாக இருக்கின்றன! கவிதையைக் கொண்டாடுவோம்! ***
tags — ஹிந்தி படப் பாடல்கள் – 38 , கவிதை
| |