ஹிந்தி படப் பாடல்கள் – 39 – இசைபட வாழ்தல்!(Post No.7990)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7990

Date uploaded in London – – – 17 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 39 – இசைபட வாழ்தல்!

R. Nanjappa

இசைபட வாழ்தல்!

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
வசைஎன்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறா விடின்.  
                         —
திருக்குறள்

இவை, அறத்துப் பாலில், இல்லறவியலில் புகழ் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவ நாயனார் சொல்வது. அது எப்படி புகழோடு “தோன்றுவது”? உயர் குடியில், ‘பெரிய இடத்தில்’ பிறந்தாலும் புகழோடு எவரும் பிறப்பதில்லை. பெரிய இடத்தில் பிறந்தால் publicity கிடைக்கும்- இது புகழல்ல.

புகழ் வாழும் வாழ்க்கையின் தன்மையால், செயலால் வருவது. ஒருவர் உலகை நீத்த பின்னும் நிலைத்திருப்பது.. “இசை என்னும் எச்சம்”.  இந்தப் புகழை எப்படி அடைவது?  நல்லது செய்யவேண்டும். “ஈதல் இசைபட வாழ்தல்” என்பார் வள்ளுவர்.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் பார்ப்போம். புல், பூண்டு, புழு பூச்சி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உலகுக்கு நன்மை செய்தே பிழைக்கின்றன.. நன்மை செய்யவேண்டும் என்ற சங்கல்பத்துடன் கிளம்புவதில்லை- இயற்கையில் அப்படி அமைந்திருக்கிறது. பூத்துக் காய்க்காத, நிழலே தராத மரம் கூட விறகாகவாவது ஆகி பயன்படுகிறது   

மனிதன் மட்டும் இதற்கு விலக்கு! அவன் வாழ்க்கையே பூமிக்கு ஒரு சுமை! உலகில், இயற்கையில் எல்லாவற்றையும் துய்க்கிறான்-பதிலுக்கு அவன் தருவது- “பொல்யூஷன்” (Pollution!). ‘நாகரிகம்’ மிகுந்த, பொருளாதார வளர்ச்சி மிகுந்த இக்காலத்தில் உலகைத் தாங்கும் ஐம்பெரும் பூதங்களும் அவன் செயலால், அவன் வாழ்க்கை முறையால்- தூய்மையிழந்து, பாழ்பட்டு நிற்கின்றன!

நம் பெரியவர்கள் மனிதனுக்கு மட்டும் ஆயிரம் நீதி போதனைகள் செய்தனர்! பல தர்ம சாஸ்திரங்கள் வந்தன. எல்லாவற்றையும் சுருக்கி வள்ளுவர் தந்தார்:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை.

“ஓம்பல்” – வேள்வி என்றார். இதையே தர்ம சாஸ்திரங்களில் ஐம்பெரும்வேள்வி- பஞ்சமஹா யக்ஞம் என்பார்கள். உலகில் எல்லா உயிர்களுக்கும் உரிய முறையில் நன்மை- சேவை செய்யவேண்டும். தர்மத்தின் பரிமாணம் மூன்றுதான்: தன் ஆத்மாவுக்கு உறுதி தேடுவது, மக்கள் சமுதாயத்திற்குச் சேவை, இயற்கையில் பிற உயிர்களுக்கு (புல் பூண்டு உட்பட) சேவை. இதுவே மனித உடல் வாய்த்ததன் பொருள்.

சரீர மாத்யம் கலு தர்ம சாதனம்.

இப்படி வாழ்வாங்கு வாழ்பவன் புகழ் பெறுகிறான்!

‘ஏ மனிதா, நீ வாழ்ந்ததன் அடையாளமாக எதையாவது நல்லதை விட்டுச் செல்’- என்று பெரியவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.

அமெரிக்க கவிஞர் லாங்க்ஃபெலோ Henry Wadsworth Longfellow எழுதுகிறார்:

A Psalm of Life

Tell me not, in mournful numbers,

   Life is but an empty dream!

For the soul is dead that slumbers,

   And things are not what they seem.

Life is real! Life is earnest!

 And the grave is not its goal;

Dust thou art, to dust returnest,

   Was not spoken of the soul.

Not enjoyment, and not sorrow,

   Is our destined end or way;

But to act, that each to-morrow

   Find us farther than to-day.

Art is long, and Time is fleeting,

   And our hearts, though stout and brave,

Still, like muffled drums, are beating

   Funeral marches to the grave.

In the world’s broad field of battle,

   In the bivouac of Life,

Be not like dumb, driven cattle!

   Be a hero in the strife!

Trust no Future, howe’er pleasant!

   Let the dead Past bury its dead!

Act, — act in the living Present!

   Heart within, and God o’erhead!

Lives of great men all remind us

   We can make our lives sublime,

And, departing, leave behind us

   Footprints on the sands of time;

Footprints, that perhaps another,

   Sailing o’er life’s solemn main,

A forlorn and shipwrecked brother,

   Seeing, shall take heart again.

Let us, then, be up and doing,

   With a heart for any fate;

Still achieving, still pursuing,

   Learn to labor and to wait.

                                   (1838)

துய்த்துத் தீர்ப்பதற்காக இந்தப் பிறவி வரவில்லை; எதாவது நல்லது செய்து உன் அடையாளமாக விட்டுச் செல்- பின் வருபவர்களுக்கு அது உதவட்டும்- Leave footprints on the sands of time!

இதை நம் திரைக்கவிஞர் ஷைலேந்த்ரா அருமையாகச் சொல்கிறார்!

தர்தீ கஹே புகார் கே

भाई रे
गंगा और जमुना की  गहरी है धार
आगे या पीछे, सबको जाना है पार

धरती कहे पुकार के, बीज बिछा ले प्यार के
मौसम बीता जाए, मौसम बीता जाए
मौसम बीता जाए

अपनी कहानी छोड़ जा, कुछ तो निशानी छोड़ जा
कौन कहे इत ओर तू फिर आए आए
मौसम बीता जाए

तेरी राह में कलियों ने नैना बिछाए
डालीडाली कोयल काली
तेरे गीत गाए, तेरे गीत गाए
अपनी कहानी छोड़ जा

हो भाई रे

नीला अम्बर मुस्काए, हर साँस तराने गाए
हाय तेरा दिल क्यूँ मुरझाए
मन की बंसी पे तू भी कोई धुन बजा ले भाई
तू भी मुस्कुरा ले
अपनी कहानी छोड़ जा… 

பாயீ ரே..

கங்கா ஔர் ஜமுனா கீ கஹரீ ஹை தார்

ஆகே யா பீசே ஸப்கோ ஜானா ஹை பார்

சகோதரர்களே….

கங்கை, யமுனையின் நீரோட்டம் ஆழமானது,

ஆனாலும் இன்றோ நாளையோ  அதைக் கடந்து போகத்தானே வேண்டும்!

தர்தீ கஹே புகார் கே, பீஜ் பிசா லே ப்யார் கே

மௌஸம் பீதா ஜாயே, மௌஸம் பீதா ஜாயே

மௌஸம் பீதா ஜாயே

பூமி உன்னை அழைத்துச் சொல்கிறது

அன்பெனும் விதையை விதைத்துச் செல்,

காலம் கடந்து போகிறது, காலம் கடந்நு போகிறது!

அப்னீ கஹானீ  சோட் ஜா, குச் தோ நிஷானீ சோட் ஜா

கௌன் கஹே இஸ் ஓர், தூ ஃபிர் ஆயே  ஆயே

மௌஸம் பீதா ஜாயே...

உன் சரித்திரத்தை இங்கு விட்டுச் செல்

உன் அடையாளம் எதையாவது விட்டுச் செல்

நீ மீண்டும் இந்தப் பக்கம் வருவாயோ, மாட்டாயோ

அதை யார் சொல்ல முடியும்?

காலம் கடந்து போகிறது

தேரீ ராஹ மே கலியோனே நைனா பிசாயே

டாலீ டாலீ கோயல் காலீ

தேரே கீத் காயே, தேரே கீத் காயே, ஹர் ஸான்ஸ் தரானே ஆயே

அப்னீ கஹானீ சோட் ஜா, குச் தோ நிஷானீ சோட் ஜா

மௌஸம் பீதா ஜாயே….

நீ போகும் வழியில் மொட்டுக்கள் மலிந்திருக்கின்றன

கிளைகளில் கருங் குயில்கள் உனக்காகவே இசைக்கின்றன

உன் சரித்திரத்தை விட்டுச் செல்,

உன் அடையாளமாக எதையாவது விட்டுச் செல்

காலம் கடந்து போகிறது!

ஹோ பாயீ ரே..

நீலா அம்பர் முஸ்காயே ஹர் ஸான்ஸ்  தரானே காயே

ஹாய் தேரா தில் க்யோ(ன்) முர்ஜாயே

மன் கீ பன்ஸீ பே தூ பீ கோயீ துன் பஜாலே பாயீ

தூ பீ முஸ்குரா லே

அப்னீ கஹானீ சோட் ஜா.

..சகோதரர்களே

நீல வானம் களிப்பில் இருக்கிறது!

காற்று கீதமிசைக்கிறது

பின், உன் உன் மனது மட்டும் ஏன் வாடி இருக்க வேண்டும்?.

சகோதரனே! மனமெனும் குழல் கொண்டு, நீயும் ஒரு கீதம் இசைப்பாயே!

நீயும் மகிழ்ச்சியுடன் முறுவலிப்பாயே !

உன் கதையை விட்டுச் செல், ஏதாவது அடையாளம் விட்டுச் செல்

காலம் கடந்து கொண்டிருக்கிறது!

Song: Dharti kahe pukar ke Film: Do Bigha Zamin 1953 Lyrics: Shailendra

Music: Salil Chowdhury  Singers : Manna Dey & Lata Mangeshkar

மீண்டும்  ஒருமுறை ஆங்கிலக் கவிதையைப் படித்துவிட்டு ஹிந்திப் பாடலைப் படிக்கவும்! லாங்க்ஃபெலோ சொன்ன கருத்துக்கள் அத்தனையும் இங்கு வந்துவிட்டன!

முதலில் சொன்ன கங்கை-யமுனை வெறும் நதிகளை மட்டும் குறிக்கவில்லை! அவை இந்த உலகுக்கே-சம்சாரத்திற்கே உவமையாக நிற்கின்றன. நாம் இதைத் தாண்டிப் போயாகவேண்டும்-however pleasant!

காலம் கடந்து போய்க்கொண்டிருக்கிறது: time is fleeting. நாம் வாளாவிருத்தலாகாது- பீஜ் பிசாலோ ப்யார் கே:  be up and doing! சரித்திரத்தை விட்டுச் செல்-ஏதாவது அடையாளம் விட்டுச் செல்:

leave footprints on the sands of time! 

இங்கு விவசாயப் பின்னணியில் இப்பாட்டு வருகிறது, அதனால் விதை பற்றிய பேச்சு எழுகிறது. ‘மௌஸம்” என்பது விதைக்கவேண்டிய பருவகாலம் “ஆடிப் பட்டம் தேடி விதை” என்று  நாம் சொல்வோம்.. தகுந்த காலத்தில் செய்யவேண்டும் – act in the living present வழியில் மொட்டுக்கள் என்று சொல்கிறார்- மலர் என்று சொல்லவில்லை. காரணம் என்னவாக இருக்கலாம்? மலர் மலர்ந்தபிறகு வாடி உதிர்ந்துவிடும்; மொட்டு – full of promise and potential! 

இப்படி முக்கிய கருத்தை எளிய ஹிந்தியில், சுருக்கமாகச் சொல்லிவிட்டார் ஷைலேந்த்ரா!

இது ஸலீல் சௌத்ரி இசையமைத்த முதல் ஹிந்திப் படம். இந்தப் பாட்டின் மெட்டிற்கு ஆதாரமாக ரஷ்ய மிலிடரியின் இசையிலிருந்து ஒரு வரியை எடுத்து, அதை  பைரவி ராகப் போக்கிற்கு இசையச் செய்துவிட்டார்!

அவர் இசையில் பல பாடல்களில் மேற்கத்திய இசையின் சாயல் இருக்கும்- ஆனால் நமது வண்ணத்தில்!..

இந்தக் கவிதை எழுதிய ஷைலேந்த்ராவும், இசையமைத்த ஸலில் சவுத்ரியும், அவர்களை ஊக்குவித்த பிமல் ராயும் தங்கள் எச்சத்தால் தங்களைத் தக்கார் எனக் காட்டிவிட்டனர்! என்றும் அழியா இசை என்னும் எச்சத்தை விட்டுச் சென்று விட்டனர் – their footprints on the sands of cine music! It will be quite a job to follow them!

tags — ஹிந்தி படப் பாடல்கள் – 39 , Longfellow

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: