ஹிந்தி படப் பாட்டுக்கள் – 40 – குழந்தைகளுக்குப் பாடுங்கள்! (Post No.7996)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7996

Date uploaded in London – – – 18 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

 ஹிந்தி படப் பாட்டுக்கள் – 40 – குழந்தைகளுக்குப் பாடுங்கள்!                                   
R. Nanjappa  குழந்தைகளுக்குப் பாடுங்கள்!   மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு  —குறள்   Love is fulfilled in marriage, and marriage finds perfection in children!   குழந்தைகளை வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. பூட் பாலிஷ், அப் தில்லி தூர் நஹீ, ஹம் பஞ்சீ ஏக் டால் கே, ஜாக்ருதி போன்றவை குழந்தைகள் படமாகவே அறிமுகப்படுத்தப் பட்டன-ஆனல் வயது வந்தவர்களே அதிகம் பார்த்தார்கள்! குழந்தைப் பருவத்தில் தாலாட்டு நம் நாட்டில் மிகவும் சகஜமாக இருந்தது.

சாதாரணமாகவே பெண்கள் குழந்தைகளைப் பாடித்தூங்க வைப்பார்கள். பெரிதாக ராகம் என்று இருக்காது, ஏதோ சாதாரணப் பாட்டுதான்-இருந்தாலும் பாட்டில் ஒரு rhythm  இருக்கும். அது தூளியின் அசைவுடன் சேரும்! குழந்தைகளைத் தூங்க வைக்க அது போதும்! இதுவே பழக்கமாகிவிடும்! இப்படி வளரும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே இசையில் ஒரு பிடிப்பு வந்துவிடும்! இன்று பெண்கள் ‘அதிகம்’ படித்து வேலைக்கும் போகிறார்கள். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வீட்டில் ஆயா, பிறகு க்ரேஷே, என்று இப்படிக் கதை போகிறது! இன்றைய குழந்தைகள் பாவம், தாலாட்டை அறியார்கள்! குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாட்டுகள்  (லோரி ) நமது படங்களில் நிறையவே இருக்கின்றன. சில படங்களில் மிக நன்கு அமைந்தன. சிலவற்றை இங்கு பார்க்கலாம்,      


டிம் டிம் கர்தே தாரே  

टिम-टिम करते तारे ये कहते हैं सारे
सो जा तोहे स् प्नो मे    निंदिया पुकारे
टिम-टिम करते   
  सपनों के देश चन्दा मामा राजा
बुला रहा है बजाकर सुरों का बाजा
चोरी-चोरी खिड़की से करता है इशारे
टिम-टिम करते …
रंग-बिरंगी परियाँ तुझे झूला झुलाएँगी
बिल्ली-तोता-मैना की कहानी भी सुनाएँगी
अच्छे-अच्छे तुझे खिलौने देंगी प्यारे-प्यारे
टिम-टिम करते …
बादलों की पालकी पे तुझको बिठा के
चन्दा मामा सारा जग लाएगा घुमा के
लौट के आए शान से राजा द्वारे
टिम-टिम करते …


  டிம் டிம் கர்தே தாரே யே கஹதே ஹை ஸாரே ஸோஜா தோஹே  ஸப்னோ(ன்) மே நிந்தியா  புகாரே டிம் டிம் கர்தே தாரே   தாரகைகள் கண்சிமிட்டுகின்றன- கனவில் தூக்கம்  அழைக்கிறது, உறங்கு என்று சொல்கின்றன தாரகைகள் கண்சிமிட்டுகின்றன!  

சப்னோ(ன்) கே தேஷ் சந்தாமாமா ராஜா புலா ரஹாஹை பஜாகர் ஸுரோ(ன்) கா பாஜா சோரி சோரி கிட்கீ ஸே கர்தா ஹை இஷாரே டிம் டிம் கர்தே தாரே..   கனவு தேசத்தில் சந்தமாமா தான் ராஜா! சுரங்களை வாசித்து உன்னைக் கூப்பிடுகிறார் திருட்டுத் தனமாக ஜன்னலில் வந்து சைகை காட்டுகிறார்! தாரகைகள் கண்சிமிட்டுகின்றன……  


#ரங்க் பிரங்கி பரியா துஜே ஜூலா ஜுலாயேங்கி பில்லி தோதா மைனா கா கஹானீ பீ ஸுனாயேங்கீ அச்சே அச்சே துஜே கிலோனா தேகீ ப்யாரே ப்யாரே டிம் டிம் கர்தே தாரே.…  

அழகான தேவதைகள் உன்னை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார்கள்! பூனை, கிளி, மைனா கதையெல்லாம் சொல்வார்கள்! நல்ல நல்ல பொம்மைகளெல்லாம் செல்லக்குட்டிக்குத் தருவார்கள்! தாரகைகள் கண்சிமிட்டுகின்றன….  


பாதலோ(ன்) கீ பால்கீ பர் துஜ் கோ பிடா கே சந்தா மாமா ஸாரா ஜக் லாயேகா குமா கே லௌட் கே ஆயே ஷான் ஸே ராஜா துவாரே டிம் டிம் கர்தே தாரே….   சந்தமாமா உன்னை மேக தொட்டிலில் உட்காரவைப்பார் உலகம் முழுதும் சுற்றிக் காட்டுவார் நல்ல ஒளியுடன் திரும்பி  அழைத்து வருவார் தாரகைகள் கண்சிமிட்டுகின்றன…  

Song: Tim Tim karte taare Film: Chirag Kahan Roshni Kahan 1959 Lyrics & Music: Ravi  Singer: Lata Mangeshkar.  


இது இசைஞர் ரவியே எழுதிய பாடல். இதில் குழந்தையாக வந்தது டெய்சி இரானி- அவ்வளவு சின்னக் குழந்தையல்ல! இந்தப் பாட்டு மிகப் பிரபலமானது. பின்னணி வாத்ய இசை அவ்வளவு பொருத்தமில்லை என்பது என் கருத்து. இதில் ஒரு வருத்தம். நடித்த மீனா குமாரிக்குக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.(அது ஒரு சோகக் கதை). பாடிய லதா மங்கேஷ்கருக்கும் குழந்தை இல்லை!    இன்னொரு தாலாட்டுப் பாட்டு-அதே ஆண்டில் வந்தது.  

நன்ஹி கலி ஸோனே சலீ   हवा धीरे आना
नींद भरे पंख लिये झूला झूला जाना
नन्ही कली सोने चली हवा धीरे आना
नींद भरे पंख लिये झूला झूला जाना
नन्ही कली सोने चली
चाँद किरन सी गुड़िया नाजों की है पली
आज अगर चाँदनिया आना मेरी गली
गुन गुन गुन गीत कोई हौले हौले गाना
नींद भरे पंख लिये झूला झूला जाना
रेशम की डोर अगर पैरों को उलझाए
घुंघरू का दाना कोई शोर मचा जाए
दाने मेरे जागे तो फिर निंदिया तू बहलाना
नींद भरे पंख लिये झूला झूला जाना
नन्ही कली सोने चली हवा धीरे आना 


ஹவா தீரே ஆனா… நீந்த் பரே பங்க் லியே ஜூலா ஜூலா ஜானா நன்ஹீ கலி ஸோனே சலீ ஹவா தீரே ஆனா நீந்த் பரே பங்க் லியே ஜூலா ஜூலா ஜானா நன் ஹீ கலீ ஸோனே சலீ…… .

காற்றே, மெல்ல வீசு! என் குட்டி மலர் உறங்கச் செல்கிறது காற்றே, நீ மெதுவாக வீசு!  உன் இறக்கைகளில் உறக்கத்தை தாங்கிவா! அதை தொட்டில் போல ஆட்டித் தூங்க வை! என் குட்டி மலர் உறங்கச் செல்கிறது! காற்றே நீ மெதுவாக வீசு!  


சாந்த் கிரன் ஸீ குடியா நாஃஜோ(ன்)கீ ஹை பலி ஆஜ் அகர்  சாந்த்னீயா ஆனா மேரீ கலீ குன் குன் குன் கீத் கோயீ ஹோலே ஹோலே கானா நீந்த் பரே பங்க் லியே ஜூலா ஜூலா ஜானா  

இந்த குழந்தை நிலவொளி போன்ற பொம்மை! மிக நாசூக்காக வளர்ந்தது! அன்பு நிலவொளியே! இன்று நீ என் இடத்திற்கு வந்தால் மெல்ல மெல்ல குழந்தைக்குப் பாடு! உறக்கம் நிறைந்த உன் இறக்கைகளில் குழந்தையை தொட்டில் போல ஆட்டு!  

ரேஷம் கீ டோர் அகர் பைரோ(ன்) கோ உல்ஜாயே குங்க்ரூ கா தானா கோயீ ஷோர் மசா ஜாயே தானே மேரே ஜாகே தோ ஃபிர் நிந்தியா தூ பஹ்லானா நீந்த் பரே பங்க் லியே ஜூலா ஜூலா ஜானா  

மெல்லிய பட்டு நூல் அவள் கால்களில் மாட்டிக்கொண்டால்- அவள் காலில் உள்ள சதங்கையின் மணி சப்தம் செய்தால்- அதனால் என் ராணி விழித்துக்கொண்டால்- உறக்கமே, நீ அவளுக்கு விளையாட்டு காட்டு! காற்றே மெல்ல வீசு- உறக்கம் தங்கும் உன் இறக்கைகளில் அவளை தொட்டில் போல ஆட்டு!  

Song:  Nanhi kali sone chali  Film: Sujata 1959 Lyrics: Majrooh Sultanpuri Music :S.D.Burman  Singer: Geeta Dutt.  

இந்தப் பாடலைப் பாருங்கள்- அசல் கவியின் முத்திரை பதிந்திருக்கிறது! குழந்தைக்கு அர்த்தம் தெரியவேண்டியது அவசியமில்லை யல்லவா! குழந்தைக்கு சங்கீதம், நமக்குத்தான் சாஹித்யம்! மஜ்ரூஹ் சுல்தான்புரி என்றால் சும்மாவா! கீதா தத் இதைப் பாடியதைப் பற்றி நாம் என்ன சொல்வது! எவ்வளவு உணர்ச்சிச் சித்திரமாகத் தீட்டியிருக்கிறார்! இதைப் பாடிய போது அவருக்கு மூன்று சிறு குழந்தைகள்! பின்னாட்களில் மிகவும் சிரமப்பட்டார்.


42 வயதிலேயே காலமானார். இந்தப் பாடலையும் முதலில் பார்த்த பாடலையும்  ஒப்பு நோக்குங்கள்! லதா மாதிரி கீதா பாடமுடியாது என்று பலர் சொல்கிறார்கள். இந்த கீதா மாதிரி ஆயிரம் லதாக்கள் பாடமுடியுமா? ஒவ்வொரு குரலில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. இதைச் சரியாக பயன்படுத்துவது இசைஞரின் திறமை! இந்தப் பாட்டில் மிளிர்வது குரல் வளம் தான்- பக்க வாத்யங்கள் மிகவும் குறைவே!  இந்தப் படம் வந்த சமயத்தில் பர்மனுக்கும் லதாவுக்கும் பேச்சு வார்த்தையில்லை. அதனால் தான் கீதாவுக்கு  வாய்ப்பு கிடைத்தது! இந்தப் பாட்டை வேறு எவரும் இப்படிப் பாடியிருக்க முடியாது! இதுவும் மிகவும் விரும்பப் பட்ட பாடல்! இப்பாடல்களைப் பாடி பல பேர் குழந்தைகளைத் தூங்கவைத்திருக்கிறார்கள் என்பது உண்மை அனுபவம்! இப்பாடல்களைப் பாடித் தங்களைத் தூங்க வைத்த அனுபவத்தையும் பலர் இன்று பகிர்ந்து கொள்கிறார்கள்! மெத்தப் படித்த நம் இன்றைய அம்மாமார்களும் இந்த செல்வத்தைக் குழந்தைகளுக்கு தாராளமாக வழங்கவேண்டும்!  குழந்தைகளைப் பாடித் தூங்க வைக்கும் வழக்கம் மீண்டும் வளரவேண்டும்! தாலாட்டு என்று தனிப்பாடல் அவசியமில்லை- எந்தப் பாட்டும் பாடலாம்! குழந்தைகளுப் பாடுவது lullaby உலகெங்கும் உள்ள பழக்கம். ஒர் ஆங்கிலப் பாடலைப் பார்ப்போம்.


EVENING
Hush, hush, little baby,
The sun’s in the west;
The lamb in the meadow
Has lain down to rest.
  The bough rocks the bird now,
The flower rocks the bee,
The wave rocks the lily,
The wind rocks the tree;
  And I rock the baby,
So softly to sleep…
It must not awaken
Till daisy-buds peep.  
                                     
……Annymous.                                                  

   
tag – ஹிந்தி படப் பாட்டுக்கள் – 40, குழந்தை
                                       
             ***
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: