தமிழில் ரிக் வேதக் கவிதைகள் -2 (Post No.8003)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8003

Date uploaded in London – 19 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சென்னை, திருவிதாங்கூர்  பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பதவி வகித்த எஸ். வையாபுரிப் பிள்ளை , ‘இலக்கிய உதயம்’ என்னும் அவருடைய புஸ்தகத்தில் வேத மந்திரங்களின் அழகை எடுத்துக் காட்ட சில கவிதைகளை செய்யுள் வடிவில் தந்துள்ளார். முதல் பகுதியை நேற்று முன்தினம் கொடுத்தேன். இன்று இரண்டாம் பகுதியை வழங்குகிறேன் –

ரிக் வேதத்தில்  தமிழர் விஷயங்கள்

உலகிலேயே பழமையான புஸ்தகம் ரிக்வேதம்; உலகிலேயே மிகப்பெரிய பழங்கால புஸ்தகம் ரிக்வேதம் . சங்க இலக்கியத்தின் 18 நூல்கள் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரியது ரிக்  வேதம் . இரண்டிலும் 450 புலவர்களுக்கு மேல், பெயர்கள் உள்ளன.சங்க இலக்கியத்தின் 18 புஸ்தகங்களிலும் சுமார் 30,000 வரிகள் உள்ளன. ரிக்வேதத்தில் 10, 580 மந்திரங்கள் உள்ளன. இவை 2 அல்லது அதற்கு மேலான வரிகளைக் கொண்டவை. 10, 580 மந்திரங்களையும் 1028 சூக்தங்களுக்குள் அடக்கலாம். ஒவ்வொரு சூக்தமும் ஒரு பாடல். ரிக் வேதத்தில் 1,53, 826 சொற்கள் உள .நிற்க.

***

வேதத்தில் உலகத் தோற்றம்

எங்கிருந்  துலகு தோன்றிற்று?

இயற்றியதாமோ ? அன்றோ?

மங்கலில் தேவரெல்லாம்

படைப்பினின் வந்தாரன்றோ ?

துங்க வானிருந்து நோக்கும்

தொல்பெருந் தெய்வந் தானும்

இங்குறு தோற்றந் தன்னை

அறியுமோ ?  இயம்புவீரே

–ரிக் வேதம் 10-129-6

Whence this creation has arisen
– perhaps it formed itself, or perhaps it did not –
the One who looks down on it,
in the highest heaven, only He knows
or perhaps even He does not know.

RV. 10-129-6

को अ॒द्धा वे॑द॒ क इ॒ह प्र वो॑च॒त्कुत॒ आजा॑ता॒ कुत॑ इ॒यं विसृ॑ष्टिः ।

अ॒र्वाग्दे॒वा अ॒स्य वि॒सर्ज॑ने॒नाथा॒ को वे॑द॒ यत॑ आब॒भूव॑ ॥ १०.१२९.०६

इ॒यं विसृ॑ष्टि॒र्यत॑ आब॒भूव॒ यदि॑ वा द॒धे यदि॑ वा॒ न ।

यो अ॒स्याध्य॑क्षः पर॒मे व्यो॑म॒न्सो अ॒ङ्ग वे॑द॒ यदि॑ वा॒ न वेद॑ ॥ १०.१२९.

****

கல்யாண மந்திரத்தில் 47 செய்யுள்கள் உள . இதோ ஒரு செய்யுள்

மணமக்கள் வாழ்க

பிரியாதீர் , ஈண்டொருங்கே உறைவீர் , மக்கள்

பேசுகின்ற ஆயுளெல்லாம் குறையாதே வாழ்வீர்

தெரியாதீர் துன்பென்றும் ; அரும்புதல்வர் பேரச்

செல்வரொடு  மகிழ்ந்து விளையாடி யின்பஞ்  செழிப்பீர்

10-85-45

HUSBAND IS 11TH SON OF WIFE!

45. O Bounteous Indra, make this bride blest in her sons and fortunate.

     Vouchsafe to her ten sons, and make her husband the eleventh man.

46. Over thy husband’s father and thy husband’s mother bear full sway.

     Over the sister of tHy lord, over his brothers rule supreme.

47. So may the Universal Gods, so may the Waters join our hearts.

     May Matarisvan, Dhatar, and Destri together bind us close.

RV 10-85

इ॒मां त्वमि॑न्द्र मीढ्वः सुपु॒त्रां सु॒भगां॑ कृणु ।

दशा॑स्यां पु॒त्राना धे॑हि॒ पति॑मेकाद॒शं कृ॑धि ॥ १०.०८५.४

***

புதிர்க் கவிதைகள்

ரிக் வேதத்தில் நிறைய புதிர்க் கவிதைகள் இருக்கின்றன  . இதை தொல்காப்பியர் ‘பிசி’ என்பார் ; ஆங்கிலத்தில் PUZZLE ‘பசில்’ என்பர் இதோ ஓர் உதாரணம் —

எழுவர் கூடி ஓராழி

யிரதத்  தில்வார் பூட்டிடுவர்,

எழுநற் பெயர்கள் கொண்டிடும் ஓர்

இவுளி அதனை ஈர்ந்திடுமே ;

அழிவிலாழி யொருநாளும்

அடங்கி நிற்பதன்று ; அதனைத்

தழுவியேற்றே அனைத்துயிரும்

தாங்கும் அச்சு மரமூ ன்றே

ரிக் 1-146-2


2 Seven to the one-wheeled chariot yoke the Courser; bearing seven names the single Courser draws it.
Three-naved the wheel is, sound and undecaying, whereon are resting all these worlds of being.

RV 1-146-2

***

குடும்ப ஒற்றுமை ஓங்குக FAMILY CONCORD

அதர்வண வேத மந்திரம்

ஒன்றாய் உள்ளம்; கருத்தொன்றாய்

உறவே படைத்தேன் ; பகை யொழித்தேன் ;

கன்றும் பசுவும் போல் நீங்கள்

கலந்து களித்து வாழ்ந்திடுக !

தந்தை சொல்லே மந்திர மாய்த்

தாயின் கருத்தே தன்  கருத்தாய்

மைந்தன் வாழ்க ! மனைவியரும்

மதுர மொழிகள் வழங்கிடுக !

அண்ணன் , தம்பி பகை தவிர்க !

அக்காள் தங்கை அங்ஙனமே !

எண்ணும் நோக்கும் ஒன்றாக

இனிய மொழிகள் வழங்கிடுக !

–அதர்வண வேதம் 3-30

LOVE ONE ANOTHER

Freedom from hate I bring to you, concord and unanimity. Love one another as the cow loves the calf that she has borne –AV 3-30-1

LOYALTY

One minded with his mother, let the son be loyal to his father. Let the wife, calm and gentle, speak words sweet as honey to her lord – AV 3-30-2

HATRED

No brother hates his brother, no sister to sister be unkind; Unanimous with one content, you speak in friendliness.

–AV 3-30-3

****

அக நானுறு பாடல் 122 எதிரொலி

சங்கத் தமிழ் – அதர்வ வேதம் பற்றி வையாபுரி சொல்லுவதை தனி கட்டுரையாக  முன்னரே தந்து விட்டேன்

அன்னை துஞ்சுக; தந்தை துஞ்சுக; நாய் துஞ்சுக;

வீட்டிலுள்ள முதியோர்கள்  துஞ்சுக;

அவளது சுற்றம் துஞ்சுக ;

அவற்றைச் சுற்றியுள்ள மக்கள் அனைவரும் துஞ்சுக

–அதர்வண வேதம் 4-5

KANDAM 4, SUKTAM 107 , MANTRA 6

Sleep mother, let the father sleep, sleep dog, and master of the home

Let all her kinsmen sleep, sleep all the people who are round about

SOURCE—

ILAKKIYA UTHAYAM, S VAIYAPURI PILLAI, THAMIL PUTHAKALAYAM, CHENNAI, 1952

ATHARVA VEDA , RALPH T.H.GRIFFITH TRANSLATION, ALAIKAL VELIYEETAKAM, CHENNAI;  2006

tags — ரிக் வேதக் கவிதைகள் -2,
குடும்ப ஒற்றுமை, அதர்வண வேதம்,

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: