ரஷிய சூத்திரங்கள்! (Post No.8013)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8013

Date uploaded in London – – – 21 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மர்பி ‘லா பற்றிய மூன்று கட்டுரைகளைப் பார்த்தோம். ரஷிய பழமொழிகள் பல ஒவ்வொன்றும் ஒரு ‘லாபோல அமைந்துள்ளதைக் கீழே பார்க்கலாம். மர்பி ‘லா தொடர்பான கட்டுரைகளில் இது கடைசிக் கட்டுரையாக அமைகிறது!

ரஷிய சூத்திரங்கள்!

ச.நாகராஜன்

மர்பி விதிகளையும் அதையொட்டிய இதர விதிகளையும் நமது ஔவையார் ‘லா’க்களையும் பார்த்தோம். இதே போல ரஷிய ‘லா’க்கள் – சூத்திரங்கள் அல்லது அனுபவ மொழிகளை – பழ மொழிகளை ஜேம்ஸ் ரெஸ்டன் என்பவர் நியூ யார்க் டைம்ஸ் இதழில் 1985, பிப்ரவரி 17ஆம் தேதியிட்ட இதழில் வெளியிட்டார்.

படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் உகந்த மொழிகள் அவை.

அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம் :

(தமிழாக்கம் என்னால் செய்யப்பட்டது)

  • Wag your tongue as much as you please, but don’t wave your gun.

(நாக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நீளட்டும், துப்பாக்கியை மட்டும் நீட்டி விடாதே)

– Fear has big eyes. (பயத்திற்குப் பெரிய கண்கள் உண்டு)

– Before a fight, two men are boasters; afterwards, only one.        சண்டைக்கு முன்னால் இரண்டு தற்பெருமைக்காரர்கள் இருப்பார்கள். சண்டைக்குப் பின்னால் ஒரே ஒருவர் தான் இருப்பார்.

  • The future is his who knows how to wait.
  • (காத்திருப்பவனுக்கே எதிர்காலம்.)
  •  
  • Better turn back than lose your way.
  • (இழப்பதைக் காட்டிலும் திரும்பி விடுவது நல்லது)

– Don’t drive your horse with a whip – use the oat bag. (சாட்டையைக் காட்டி குதிரையை ஓட்டாதே, கொள்ளுப் பையைக் காட்டி ஓட்டு)

– All that trembles doesn’t fall. (ஆடுவதெல்லாம் விழுந்து விடுவதில்லை)

– We are related: the same sun dries our rags. (நாம் உறவினர் தாம்; ஒரே சூரியன் தான் அனைவருக்குமே)

– The slower you drive, the farther you get. (மெதுவாக ஓட்டினால் தொலைதூரம் போகலாம்)

– A bad compromise is better than a good battle. (மோசமான சமாதானமாக இருந்தாலும் கூட அது நல்ல யுத்தத்தை விடச் சிறந்தது)

– Be friends with the wolf, but keep one hand on your ax. (ஓநாயுடன் இருப்பவரை நண்பர்களாகக் கொள்ளலாம்; எதற்கும் ஒரு கோடாலியை கையில் வைத்திரு)

– In this world, not everyone with a long knife is a cook. (இந்த உலகில் கையில் நீளமான கத்தியை வைத்திருப்பவன் எல்லாம் சமையல்காரனில்லை)

– Even the doorstep of the rich finds itself embarrassed by the poor. (பெரிய பணக்காரர்களது வீட்டு வாசல் கூட ஏழைகளால் குழம்பிப் போகிறது)

– The cow may be black, but the milk comes out white. (பசு கறுப்பாக இருந்தாலும் பால் வெள்ளை தான்!)

– All the brave men are in prison. (எல்லா வீரர்களும் சிறைச்சாலையில் இருக்கிறார்கள்)

– Once a word is out of your mouth you can’t swallow it again. (வார்த்தையை விட்டு விட்டால் அதை மீண்டும் விழுங்க முடியாது)

– You can’t drive straight on a twisting lane. (கோணலான சாலையில் நீ நேராக ஓட்டிக் கொண்டு போக முடியாது)

– The Russian has three principles: perhaps, somehow, and never mind. (ரஷியர்களுக்கு மூன்றே மூன்று கொள்கைகள் தாம் உண்டு : ஒருவேளை, எப்படியாவது, எக்கேடும் கெட்டுப் போகட்டும்)

– Make yourself into a sheep, and you’ll meet a wolf nearby. (ஆடாக மாறு; நீ ஒரு ஓநாயைச் சந்திப்பாய்)

– The Russian is clever, but it comes slowly – all the way from the back of his head. ( ரஷியன் புத்திசாலி தான், ஆனால் அது மெதுவாகத் தான் தெரியும் – பின் பக்க மண்டையிலிருந்து முன்னால் வர வேண்டும்)

– In Moscow they ring the bells often but not for dinner. (மாஸ்கோவில் அடிக்கடி மணி அடிக்கப்படும்; டின்னருக்காக அல்ல)

– Learn good things – the bad will teach you by themselves. (நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள் – கெட்டவை தாமாகவே உனக்குக் கற்றுகொடுத்துவிடும்)

– He has been sent to Siberia to count the birches. (பிர்ச் மரங்களை எண்ணுவதற்காக அவன் சைபீரியாவிற்கு அனுப்பப்பட்டான்)

– Life is unbearable, but death is not so pleasant either. (வாழ்க்கை சகிக்க முடியாதது, ஆனால் சாவும் ஒன்றும் சந்தோஷமான விஷயமல்ல)

– What good is honor on an empty stomach? (வயிறு பசிக்கும் போது கௌரவம் ஒரு கேடா?)

– If you’re a rooster, crow; if you’re a hen, shut up and lay eggs. (நீ சேவலா, கூவு, கோழி என்றால் முட்டை போடு)

– Noblemen make promises, and peasants have to keep them. (பிரபுக்கள் வாக்குறுதிகள் அளிக்கின்றனர்; விவசாயிகள் அதைக் காக்கின்றனர்)

– In this country you can’t even pick a mushroom without bowing. (இந்த தேசத்தில் புல்லைக் கூட வணங்காமல் நீ பிடுங்க முடியாது)

– If you tickle yourself, you can laugh when you please. (உனக்கு நீயே கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டால், நீ நினைத்த போது சிரிக்கலாம்)

– The little one is too small; the big one is too big; the medium one is just right – but I can’t get it. (இந்தச் சின்னது ரொம்ப சின்னதாயிருக்கிறது. இந்தப் பெரிசு ரொம்ப பெரிதாய் இருக்கிறது. நடுத்தரமாயிருப்பது சரியாக இருக்கிறது. அது தான் எனக்குக் கிடைக்க மாட்டேன் என்கிறது)

– Wash a pig as much as you like, it goes right back to the mud. (பன்றியை எவ்வளவு குளிப்பாடினாலும் அது சகதிக்குத் தான் போகும்)

– Russians do not fear the cross, but they fear the club. (ரஷியர்கள் சிலுவைக்குப் பயப்படமாட்டார்கள், ஆனால் கிளப் என்றால் அவர்களுக்குப் பயம்)

– When you live close to the graveyard, you can’t weep for everybody. (கல்லறைக்குப் பக்கத்தில் நீ வசித்தால் ஒவ்வொருவருக்கும் நீ அழ முடியாது)

– Live a hundred years, learn a hundred years – still you die a fool. (நூறு வயது வரை வாழ்; நூறு வயது வரை கற்றுக் கொள் – இன்னும் நீ ஒரு  முட்டாள் தான்)

– Honor is on top of his tongue and a knife is under it. (வாயில் வெண்ணெய்; அதன் அடியில் கத்தி)

– Great is Holy Russia, but the sun shines elsewhere, too. ( ரஷியா புனிதமானது தான்; ஆனால் சூரியன் மற்ற இடங்களிலும் கூடப் பிரகாசிக்கிறான்!)

– The church is near but the road is all ice; the tavern is far but I’ll walk very carefully. (சர்ச் அருகில் தான் இருக்கிறது, ஆனால் அது செல்லும் சாலையோ ஐஸ்கட்டி நிரம்பி இருக்கிறது; ஆனால் மதுபானக் கடை தூரத்தில் இருக்கிறது, என்றாலும் நான் தான் ஜாக்கிரதையாக நடப்பேனே!)

– If we knew beforehand where we were going to fall, we could lay down a carpet. (விழப்போவது எந்த இடத்தில் என்று முன்னமேயே தெரிந்தால் அங்கு ஒரு கம்பளத்தை விரித்து வைக்கலாமே)

– The shortage will be divided among the peasants. (பற்றாக்குறை விவசாயிகளிடம் சமமாகப் பிரிக்கப்படும்)

– Fools shoot and God directs the bullet. (முட்டாள்கள் சுடுகின்றனர்; கடவுள் புல்லட்டை வழி நடத்துகிறார்)

– You’ll never get a hangover from other people’s vodka. (மற்றவர்கள் தரும் வோட்காவினால் ஒரு போதும் மறுநாள் வரை போதை நீடிப்பதில்லை)

– Live and scratch – when you’re dead the itching will stop. (வாழ்; அரிக்கும் – இறந்தால் அரிப்பது நிற்கும்)

– Marriage is like sneezing: even when you feel it coming on, you can’t stop. (திருமணம் தும்மலைப் போல, வருவது போல நீ உணர்ந்தாலும் உன்னால் அதை நிறுத்த முடியாது)

– If you’re tired of a friend, lend him money. (ஒரு நண்பன் ரொம்ப போர் அடித்தால் அவனுக்குப் பணத்தைக் கடனாகக் கொடு)

– Better the first quarrel than the last. (கடைசிச் சண்டையை விட முதல் சண்டையே மேல்)

– The bullet is no respecter of uniforms. (யூனிபாரங்களுக்கு புல்லட் என்றுமே மதிப்புத் தராது)

– Pray to God but keep rowing to the shore. (கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்; ஆனால் கரை நோக்கி படகைச் செலுத்திக் கொண்டே இரு)

– When the sheath is broken, you cannot hide the sword. (உறை கிழியும் போது, வாளை உன்னால் ஒளிக்க முடியாது)

tags – ரஷிய பழமொழிகள்

****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: