ஹிந்தி படப் பாடல்கள் – 44 – கிளப்பும் பாட்டும்! (Post No.8020)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8020

Date uploaded in London – – – 22 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

– commercial blog. Thanks for your great pictures.

 ஹிந்தி படப் பாடல்கள் – 44 – கிளப்பும் பாட்டும்!

                                  R. Nanjappa

கிளப்பும் பாட்டும்!

“கிளப்”- Club இந்த ஆங்கிலச் சொல்லிற்கு பல அர்த்தங்கள். 60 வருஷங்களுக்கு

முன்பெல்லாம் சாதாரண காஃபி ஹோட்டலை “காஃபி கிளப்” என்று சொல்வார்கள்.

அது தவிர லேடீஸ் கிளப், ரோடரி கிளப், லயன்ஸ் கிளப் என்றெல்லாம் இருக்கின்றன.

இந்த கிளப் சமாசாரத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் ஆங்கிலேயர். அவர்கள் ஆளும்

வர்க்கத்தினர்-அதனால் நம்மவருடன் சேரமாட்டார்கள். அவர்கள் சமூகம் சிறியது,

சிதறிக் கிடக்கும். அதனால் தங்களுக்குள் பரஸ்பர சமூகத் தொடர்புகொள்ள இந்த அமைப்பு

உருவானது. அதில் பல அரசு தொடர்பான விஷயங்கள் , ரகசியங்கள் அதிகாரிகளுக்குள்

பேச்சுவார்த்தை மூலமாகவே பரிமாறிக்கொள்ளப்படும், செயல் முடிவுகளும் எடுக்கப்படும். 

அதிகார வர்க்கத்தினரிடம் அணுகுமுறையில் ஒர் ஒற்றுமை இதனால் உருவானது.

நம்மவர்கள் இந்த கிளப் சமாசாரத்தை-அமைப்பை- எடுத்துக்கொண்டார்கள், ஆனால் அதன் 

நடைமுறை வேறாக இருந்தது. ஸர். எம் விஸ்வேஸ்வரய்யா கூட ‘சென்சுரி ‘ கிளப் என்று

ஒன்றை 1917ல் பெங்களூரில் தொடங்கினார்! இது ஆங்கிலேயரின் “பெங்களூர்” கிளப்பிற்குப்

போட்டியாக வந்தது! [நம்மவர்களுக்கு இந்த அடிமையின் மோகம் இன்னமும் முடியவில்லை!

இந்த பெங்களூர் கிளப்பில்சேரத் துடிக்கிறார்கள்! 30 வருஷம் காத்திருக்கவேண்டும்!]

நமது சினிமாவில் வேறுவிதமான கிளப் உதயமாயிற்று! இது “குடிமகன்கள்” கூடும் இடம்!

ஹீரோவுக்கு மனக்கஷ்டம், காதல் தோல்வி என்றால் இங்கு வந்துவிடுவார்! அவரைத் தேடி

வில்லன்களும் வருவார்கள்; அவரை மடக்கிப்போட வில்லிகளும் வருவார்கள்- என்றிப்படிப்

போகும்! 50களில் வந்த ஹிந்திப் படங்கள் பலவற்றில் கிளப் காட்சிகள் இடம் பெறும்!

இவற்றின் சிறப்பு அம்சம், கண்ணுக்கு விருந்தான டான்ஸ் காட்சிகள், காதிற்கினிமையான 

பாடல்கள்! இசைஞர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் விதத்தில் இசையமைத்தார்கள். 

நடனத்தில் விரசமிருக்காது, இசையில் தொய்வு இருக்காது! தற்போது வரும் “அயிட்டம்”

நம்பர் போல் இல்லாது, கதையுடன் தொடர்புடையதாகவே இருக்கும்! கீதா தத்தும் ஆஷா 

போன்ஸ்லேயும் இத்தகைய பாடல்களில் ஜொலித்தார்கள். கீதா தத் பாடிய இரு பாடல்களைப்

பார்க்கலாம்.

தத் பீர் ஸே பிகடீஹுயீ


तदबीर से बिगड़ी हुई, तकदीर बना ले
अपने पे भरोसा है तो एक दाँव लगा ले

डरता है जमाने की निगाहों से भला क्यों
इन्साफ तेरे साथ है, इल्ज़ाम उठा ले
अपने पे भरोसा है

क्या ख़ाक वो जीना है, जो अपने ही लिए हो
खुद मिट के किसी और को मिटने से बचा ले
अपने पे भरोसा है

टूटे हुए पतवार है, कश्ती के तो हम क्या
हारी हुई बाहों को ही पतवार बना दे
अपने पे भरोसा है...  

தத்பீர் ஸே பிக்டீ ஹுயீ தக்தீர் பனா லே, தக்தீர் பனா லே

அப்னே பே பரோஸா ஹை தோ இக் தாவ்(ன்) லகாலே

கெட்டுப் போன உன் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டுமா?

உன் மேலேயே உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அப்பொழுது நீ ஏன் ஒரு பணயம் வைக்கக்கூடாது?

டர்தா ஹை ஃஜமானே கே நிகாஹோ ஸே பலா க்யூ(ன்)

இன்ஸாஃப் தேரே ஸாத் ஹை, இல்ஃஜாம் உடாலே

அப்னே பே பரோஸா ஹை.

எதற்காக வீணில் இந்த உலகத்தைக் கண்டு அஞ்சுகிறாய்?

நியாயம் உன் பக்கம் இருக்கிறது, சாட்டிய குற்றத்தை ஏற்றுக்கொள்

(குற்றம் சாட்டியதற்கு ஏன் பயப்படவேண்டும்?)

உன் மேலேயே உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?

க்யா காக் வோ ஜீனா ஹை, ஜோ அப்னே ஹீ லியே ஹோ

குத் மிட்கே கிஸீ ஔர் கோ  மிட்னே ஸே பசாலே

அப்னே பே பரோஸா ஹை

ஒருவன் தனக்காகவே வாழ்வது ஒரு வாழ்க்கையா?

தன் உயிரே போனாலும் பிறர் உயிரைக் காப்பாற்று!

உன் மேலேயே உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?

டூடே ஹுயே பட்வார் ஹை, ்தீ கே தோ ஹம் க்யா

ஹாரீ ஹுயீ பாஹோ(ன்) கோ ஹீ படவார் பனா தே

அப்னே பே பரோஸா ஹை தோ

படகின் துடுப்பு உடைந்துபோய் விட்டதா? அதனால் என்ன?

நம் கைகளையே துடுப்பாகக் கொள்ளலாமே!.

உன்மேலேயே உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?

Song: Tadbir se bigdi huyi  Film: Baazi 1951 Lyrics: Sahir Ludhianvi

Music: S.D.Burman Singer: Geeta Dutt (then Geeta Roy)

கிளப் பாட்டுதான், ஆனால் கருத்தைப்  பாருங்கள்!

இந்தப் பாட்டை கஃஜல் ghazal  என்ற கவிதை வடிவில் எழுதியிருந்தார் ஸாஹீர் லுதியான்வி.

இரண்டிரண்டு வரிகளாக வரும் இத்தகைய கவிதையில், இயற்கையாகவே ஒரு

rhyme or metre இருக்கும்; குறிப்பிட்ட வடிவம் இருக்கும்; ஒரு குறிப்பிட்ட மன நிலையை

விவரிப்பதாக இருக்கும். பொதுவாக காதல் சம்பந்தப்பட்ட விஷயம்-அதனுடன் சிறிது

மனக் கஷ்டம் என்று இப்படி கஃஜலுக்கென்று இலக்கணம் உண்டு. 

இங்கு பர்மன் இது எதையும் பார்க்கவில்லை- மேலை பாணியில் ஒரு மெட்டு, அதற்கு கிதார்

பின்னணி என்று எல்லாவற்றையும் மாற்றினார்.. ஸாஹிருக்குக் கோபம் வந்து விட்டது!

பர்மன் விட்டுக்கொடுக்கவில்லை. கடைசியில் 8 பாடல்கள் உள்ள இப்படத்தில் இந்தப் பாடலே

மிகப் பெரிய ஹிட் ஆனது!.

“குத் மிட்கே கிஸீ ஔர் கோ மிட்னே ஸே பசா லே”  என்ற இந்தக் கருத்தை ஷைலேந்த்ரா

ஒரு பாட்டில் சொல்லுவார்: “குத் ஹீ மர் மிட்னே கீ, ஏ ஃஜித் ஹை ஹமாரி” என்று

“அனாரி” படத்தில் 1959 வரும்!

முதல் வரியில் வரும் ” தத்பீர்” என்ற சொல்லுக்கு, அதிகம் சிந்தித்தல்-

too much deliberation, planning என்று பொருள். அதனால் எதுவும் நன்மை விளையவில்லை.

தன்னம்பிக்கையுடன் ஏதாவது செய்- என்பது கருத்து. இது வில்லனின் ஆள் (mole) பாடுவதாக

வருகிறது.

கீதா தத் அப்போது கீதா ராய்தான்! இந்தப் படம் குரு தத் இயக்கியது. கீதா பாடியதைக் கேட்டு

அவரைக் காதலித்து மணந்தார், கீதாராய் கீதா தத் ஆனார்]

இப்போது, வேறொரு கிளப் பாட்டு பார்க்கலாம்

பாபூஜீ தீரே சல்னா

बाबूजी धीरे चलना
प्यार में, ज़रा सम्भलना
हाँ बड़े धोखे हैं
बड़े धोखे हैं इस राह में
बाबूजी धीरे चलना

क्यूँ हो खोये हुये सर झुकाये
जैसे जाते हो सब कुछ लुटाये
ये तो बाबूजी पहला कदम है
नज़र आते हैं अपने पराये
हाँ बड़े धोखे हैं

ये मुहब्बत है भोलेभाले
कर दिल को ग़मों के हवाले
काम उलफ़त का नाज़ुक बहुत है
के होंठों पे टूटेंगे प्याले
हाँ बड़े धोखे हैं

हो गयी है किसी से जो अनबन
थाम ले दूसरा कोई दामन
ज़िंदगानी की राहें अजब हैं
हो अकेला है तो लाखों हैं दुश्मन
हाँ बड़े धोखे हैं…  

பாபூஜி தீரே சல்னா,

ப்யார் மே ஃஜரா சம்பல்னா

ஹா(ன்), படே தோகே ஹை

படே தோகே ஹை இஸ் ராஹ் மே

பாபூஜீ தீரே சல்னா

மிஸ்டர், நிதானிக்கவும்!

அன்பெனும் பாதையில் கவனமாகப் போகவும்

இதில் ஏமாற்றுவேலைகள் அதிகம்!

கவனித்துப் போகவும்!

க்யூ(ன்) ஹோ கோயே ஹுயே ஸர் ஜுகாயே

ஜைஸே ஜாதே ஹோ ஸப்குச் லுடாயே

யேதோ பாபூஜி பஹலா கதம் ஹை

நஃஜர் ஆதே ஹை அப்னே பராயே

ஹா(ன்) படே தோகே ஹை

ஏன் இப்படித் தலையைத் தொங்கவிட்டு உட்கார்ந்திருக்கிறாய்?

எல்லவற்றையும் பறிகொடுத்துவிட்டது போல் ஏன் இருக்கிறாய்?

மிஸ்டர், இது தான் நீ வைக்கும் முதல் அடி

இப்போது நம்மைச் சேர்ந்தவர்களே வேறாகத் தெரிவார்கள்

ஆம், இந்தப் பாதையில் ஏமாற்று வேலைகள் அதிகம்!

யே முஹப்பத் ஹை போலேபாலே

கர் தில் கோ கமோ(ன்) கே ஹவாலே

காம் உல்ஃபத் கா  நாஃஜுக் பஹுத் ஹை

ஆகே ஹோடொ(ன்) மே டூடேங்கே ப்யாலே

ஹா(ன்) படே தோகே ஹை

இந்த காதல் விஷயத்தில் வெகுளியாக இருந்து

உன் மனது துக்கமயமாக இடம் தராதே

இந்தக் காதல் விவகாரம் நாசூக்கானது

கிண்ணம் உதடுவரை வந்து உடைந்து போகலாம்!

ஆம், இந்தப் பாதையில் ஏமாற்றுவேலைகள் அதிகம்

ஹோகயீ ஹை கிஸீ ஸே ஜோ அன்பன்

தாம் லே தூஸ்ரா கோயீ தாமன்

ஃஜிந்தகானீ கே ராஹே(ன்) அஜப் ஹை

ஹோ அகேலா  ஹை தோ லாகோ ஹை துஷ்மன்

ஹா(ன்) படே தோகே ஹை

யாருடனாவது உறவு முறிந்து விட்டதா?

வேறொரு துணையைத் தேடிக்கொள்!

வாழ்க்கையின் போக்கு விசித்திரமானது

நீ தனியாக இருந்தால் எதிரிகள் பலர் வருவர்

ஆம், இந்தப் பாதையில் ஏமாற்றுவேலைகள் அதிகம்

Song: Babuji dheere chalna Film: Aar Paar 1954 Lyrics: Majrooh Sultanpuri

Music: O.P.Nayyar  Singer: Geeta Dutt

This song is at a different level, compared to the previous one. There is no altruistic idea here,

only direct personal advice. This is probably to go with the story, where the villain’s mole is

singing. Nevertheless, the lyrics by Majrooh are just fine. .

The previous song was classy, this is more peppy, in typical early Nayyar fashion!

ஓ.பி.நய்யார் திரை இசையில் ஒரு புதிய பாணியை உருவாக்கினார்! இதைப் பிடி,

இல்லையேல் திரையிசைவிட்டு ஓடு என்ற நிலை உருவானது! நௌஷத், பர்மன், மதன்

மோஹன் ஆகிய சிலரே இந்த அலையை எதிர்த்து நின்றார்கள்!  நய்யார் கேட்ட அதிக

தொகையைக் கொடுக்க முடியாத தயாரிப்பாளர்கள், பிறரை அதேபாணியில் இசை அமைக்கத்

தூண்டினார்கள்! நய்யாருக்கே மார்கெட் சரிந்தது!

நய்யார் இசையில் ஒரு கவர்ச்சி இருக்கும், கேட்பவரை தாளம் போட வைக்கும், ஆடத்

தூண்டும்! ஆனால் அவர் இசையில் இனிமை இருக்கும். 

ஹிந்தித் திரைஇசையில் லதா மங்கேஷ்கர் ஒரு பாட்டுகூட நய்யாருக்காகப் பாடியதில்லை!

அப்படி இருந்தும் நய்யார் பிரபலமானார்! முதலில் கீதா தத், ஷம்ஷாத் பேகம் பிறகு ஆஷா

போன்ஸ்லே என்று இவர்களே நய்யாருக்குப் பாடினார்கள்.

This was Guru Dutt’s own film. 

When Guru Dutt married Geeta in 1953, she was already a well established singer. She was

noted for her extraordinary range- she could sing anything from bhajans to peppy club songs!

There was a lilt in her voice which was enchanting, which Lata lacked. Guru  Dutt was a

struggling director. Rumour mills were at work, saying that Guru had married Geeta only for

financial security! This deeply hurt him and he forbade her from singing except in his own

films. This totally wrecked her singing aspirations and career.

We enjoy the songs, but the field is full of blood, sweat, toil and tears

.

கிளப் பாடலாக இருந்தாலும் சொற்களில் அசிங்கம் இல்லை; நடன மணிகளின் உடை

கவுரவமாகவே இருக்கிறது; அசைவுகளில் விரசமில்லை!

குரு தத் உதய் சங்கரிடம் நடனம் முறையாகப் பயின்றவர். அப்போது இவருடன் பயின்றவர் 

இசைஞர் ஸர்தார் மாலிக்.

இது ஒரு மணியான பாடல், நல்ல வரவேற்பு பெற்றது.

Unfortunately, the quality of conversion from film to video is so poor in India: neither the

sound quality is good, nor are the pictures sharp. This song will make a great impact if

played and listened through quality audio system.

கிளப் பாடலாக இருந்தால் என்ன? நல்ல கருத்தும் இசையும் இருக்கலாமே!

tags- ஹிந்தி படப் பாடல்கள் – 44

                                       ***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: