ஹிந்தி படப் பாடல்கள் – 45 – பழையன கழிதலும்..! (Post No.8026)

      ஹிந்தி படப் பாடல்கள் – 45 – பழையன கழிதலும்..! (Post No.8026)       WRITTEN BY R. NANJAPPA               

  Post No. 8026   Date uploaded in London – – – 23 May 2020    Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.   commercial blog. Thanks for your great pictures.  

ஹிந்தி படப் பாடல்கள் – 45 – பழையன கழிதலும்..!                                  R. Nanjappa  கிளப் பாடல்களுக்கு அடுத்த இடத்தைப் பெற்றவை ‘பார்ட்டி” பாடல்கள். இவையும் கதையுடன் தொடர்புடையதாகவே இருக்கும்-இவற்றினால் கதையில் ஒரு திருப்பம் வரும். ஒன்று, ஹீரோ/ ஹீரோயினுக்கு  யாராவது அறிவுரை சொல்வார்கள் அல்லது ஹீரோ/ஹீரோயின் பாடுவார்கள். அப்படி இரு பாடல்களைப் பார்க்கலாம்.  

முட் முட் கே ந தேக்  

मुड़-मुड़ के न देख, मुड़-मुड़ के
ज़िंदगानी के सफ़र में तू अकेला ही नहीं है
हम भी तेरे हमसफ़र हैं

आये गये मंज़िलों के निशाँ
लहरा के झूमा झुका आसमाँ
लेकिन रुकेगा न ये कारवाँ
मुड़-मुड़ के न देख…

नैनों से नैना जो मिला के देखे
मौसम के साथ मुस्कुरा के देखे
दुनिया उसी की है जो आगे देखे
मुड़-मुड़ के न देख…

दुनिया के साथ जो बदलता जाये
जो इसके साँचे में ही ढलता जाये
दुनिया उसी की है जो चलता जाये
मुड़-मुड़ के न देख…  
   

முட் முட் கே ந தேக் முட் முட் கே,  ஃஜிந்தகானீ கே ஸஃபர் மே தூ அகேலா ஹீ நஹீ ஹை  ஹம் பீ தேரே ஹம்ஸஃபர் ஹை    

திரும்பித் திரும்பிப் பார்க்காதே! வாழ்க்கை என்னும் பயணத்தில் நீ மட்டும் தனியாக இல்லை! நாங்களும் உன்னுடன் சக பயணிகள் தான்!  

ஆயே கயே மன்ஃஜிலோ(ன்) கே நிஷான் லேஹரா  கே  ஜூமா ஜுகா ஆஸ்மான் லேகின் ருகேகா ந ஏ கார்வான்.. முட் முட் கே ந தேக்.. .

சென்று அடையவேண்டிய இடத்தின் அடையாளம் வந்து போய்விட்டது!. வானமும் மகிழ்ச்சியில் பொங்கி பூமியைத் தொட்டு நிற்கிறது! ஆனாலும் இந்த பயணிகள் சாரிசாரியாகச் செல்வது நின்று விடாது!

(வாழ்க்கை, உலகம் என்னும் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்) திரும்பித் திரும்பிப் பார்க்காதே!  

நைனோ(ன்) ஸே நைனா ஜோ மிலாகே தேகே மௌஸம் கே ஸாத் முஸ்குரா கே தேகே துனியா உஸீ கீ ஹை ஜோ ஆகே தேகே முட் முட் கே ந தேக்  

வருவதை யார் உடன்பாட்டுடன் ஏற்றுக்கொள்கிறார்களோ, மாறும் காலத்தை யார் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்களோ, யார் எதிர்காலத்தை நோக்கி இருக்கிறார்களோ- இந்த உலகம் அவர்களுக்கே சொந்தம்! திரும்பித் திரும்பிப் பார்க்காதே!  

துனியா கே ஸாத் ஜோ பதல்தா ஜாயே ஜோ இஸ்கே ஸாஞ்சே மே ஹீ டல்தா ஜாயே துனியா உஸீகீ ஹை ஜோ சல்தா ஜாயே முட் முட் கே ந தேக் முட் முட் கே   உலகத்தின் போக்கை ஒட்டி யார் மாறுகிறார்களோ, யார் அதன் வண்ணத்தில் தோய்கிறார்களோ, யார் நிற்காமல் சென்றுகொண்டே இருக்கிறார்களோ- இந்த உலகம் அவர்களுக்கே சொந்தம்! திரும்பித் திரும்பிப் பார்க்காதே!  

Song: Mud mud ke na dekh  Film: Shri 420, 1955 Lyrics: Shailendra Music: Shanker Jaikishan Singers: Asha Bhonsle, Manna Dey & chorus  

பார்ப்பதற்கு ஏதோ விளையாட்டாகச் சொன்னது போலிருக்கும்- ஆனால் ஒரு பெரிய உண்மையை இப்பாடலில் சொல்கிறார் ஷைலேந்த்ரா. கடந்த காலத்தையே, நடந்து போனதையே நினைத்திருக்காதே, எதிர்காலத்தை ஏற்றுக்கொள்ள முயற்சி செய் என்கிறார். Let bygones be bygones, look to the future.

‘ஆத்மீ ஜோ சல்தா ரஹே தோ மில் ஜாயே ஹர் கஃஜானா” என்று இதே கருத்தை வேறு சொற்களில் சொல்வார் மஜ்ரூஹ் ஸுல்தான்புரி- சல்தீ கா நாம் காடி (1958) என்ற படத்தில்! சினிமாவில் இந்தப் பாடல் இத்தகைய ஆழ்ந்த கருத்தில் வரவில்லை! ஹீரோவின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார்கள்- இது முதல் இரண்டு பத்திகளில் வருகிறது. கடைசி இரு பத்திகள் ஹீரோ பாடுவது- அது அவன் மனம் மாறிவிட்டது என்பதைக் காட்டுகிறது! ஆக, இப்பாடல் இப்படத்தில் ஒரு முக்கிய திருப்பத்தைக் காட்டுகிறது. இது ஹிந்தித் திரையுலகில் இதுவரை வந்த படங்களிலேயே மிகச்சிறந்த  பார்ட்டி பாடல் காட்சியாகக் கருதப்படுகிறது. இதில் நடித்த நாதிராவுக்கு நாட்டியம் தெரியாது! இதில் டான்ஸ் என்று எதுவும் பெரிதாக இல்லை! ஆனாலும் அந்த தோற்றத்தை அளித்து விட்டார்கள்! இந்தப் பாட்டிற்கு எத்தனை பெரிய ஆர்கெஸ்ட்ரா! இது அத்தனையும் நேரடியாகப் பதிவானது-

Live recording! இன்றுபோல் அன்று மின்சாதன உத்திகளோ, இசைக் கருவிகளோ இல்லை! அத்தனையும் அசல் வாத்தியங்கள்! இது ஒரு சாதனை தான்! எத்தனை இனிய மெட்டு! அதில் ஆஷா குரலுக்கும் மன்னா டே குரலுக்கும் ஏற்ற நுண்ணிய மாற்றங்கள்! ஷங்கர் ஜெய்கிஷன் அசத்தி இருக்கிறார்கள். இதே கருத்தை வைத்து இன்னொரு பாட்டு.   நைன்டீன் ஃபிஃப்டி சிக்ஸ்!


Nineteen fifty six nineteen fifty seven
Nineteen fifty eight nineteen fifty nine
Duniya ka dhaancha badla
Kismat ka saanchaa badla
Aankhen to kholo zaraa
Lala ho kahaan
Lalalalarala lalallalaliralala
Lalalalarala lalallalaliralala 
Ho ho he he  

உலகின் அமைப்பு மாறிவிட்டது! விதியின் நிறம் மாறிவிட்டது! சற்று கண்ணைத் தான் திறந்து பார்! எங்கே அந்தப் பழைய ஆள்?  

Taj niraale raaz niraale
Jeewan ke saare saaz niraale
Mehfil mehfil ghoom
Dharti se jaaye ambar pe chaaye
Phaila ke baahen chanda bulaaye
Aa taaron ko choom
 

இன்று தலையில் கிரீடம் வேறு மாதிரி, ரகசியம் அலாதி! வாழ்க்கை முழுவதின் நாதம் மாறிவிட்டது! ஜன சமூகம் சப்தம் எழுப்பவில்லை! பூமியை விட்டுக் கிளம்புவோம்! வானைத் தொடுவோம்! சந்திரனைக் கையால் அணைப்போம்! தாரகைகளுக்கு முத்தம் தருவோம்!  

Nineteen fifty nine
Nineteen fifty nine
Nineteen fifty nine
Nineteen fifty six nineteen fifty seven
Nineteen fifty eight nineteen fifty nine Hello o my Kal ki kahaani ho gayi puraani
Duniya pe phir se aayi jawaani
Bahki bahki chaal
Saadi se choli holi se boli
Milke machaa do rangon ki holi
Ye fashion ka saal
 

நேற்றைய கதை பழசாகி விட்டது! அதை விடு! உலகில் மீண்டும் இளமை திரும்பி விட்டது! இதன் நடை- சற்று ஏமாற்றும்! குட்டையான சோலி, கேலியான பேச்சு, எல்லோரும் கலந்து வண்ண ஹோலி கொண்டாடுவோம்! இது புது ஃபேஷனுக்கான ஆண்டு!  

Nineteen fifty nine
Nineteen fifty nine
Nineteen fifty nine
Nineteen fifty six………
Ho ho he he
Fashion badhenge
Kapde ghatengen
Maalik hi jaane kitne rahenge
Mausam kaa ye khel
Zulfen chantaao naakhoon badhaao
Chehre pe naqli chehra chadaao  Duniya saabun tel

  ஃபேஷன் முன்னேறும்! ஆடையின் அளவு குறையும்! எந்த அளவில் நிற்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! இது காலத்தின் விளையாட்டு! தலைமுடியைக் குறைத்துவிடு! நகத்தை நீட்டிக்கொள்! பொய் முகத்தை அணிந்து அசல் முகத்தை மறைத்துக்கொள்!


Nineteen fifty nine
Nineteen fifty nine
Nineteen fifty nine
Nineteen fifty six……
Ho ho he he.
 

Song: nineteen fifty six  Film: Anari 1959 Lyrics: Shailendra Music: Shanker Jaikishan  Singers: Lata, Manna Dey & chorus
 

முட்முட் கே பாட்டு கொடுத்த அதே டீம்! இங்கு லதா பாடுகிறார்- குரல் சில இடத்தில் கிரிச் சென்று போகிறது! இந்த மாதிரி பாட்டைப் பாட லதா, ஆஷாவோ கீதா தத்தோ இல்லை! மன்னா டே மாஸ்டர்! எதையும் அனாயாஸமாகப் பாடுவார்! அருமையான ஆர்ச்செஸ்ட்ரேஷன், இனிய மெட்டு, ஷங்கர் ஜெய்கிஷனுக்கு மீண்டுமொரு ஷொட்டு! இங்கு டான்ஸ் ஆடுவது ஹெலன்! டான்ஸுக்கென்றே பிறந்தவர்! ரிஷிகேஷ் முகர்ஜி டைரக்டர்- விரசமில்லாத ஆட்டம்! இங்கும் முதல் இரண்டு பத்திகளைப் பிறர் பாட, ஹீரோ கடைசி பத்தியைப் பாடுகிறார்! ஆடையின் அளவு குறைகிறது, எங்குபோய் நிற்குமோ என்று பாடுகிறார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னமும் குறைந்துகொண்டே வருகிறது! இந்தப் பாட்டு 1959 புது வருடத்தைக் கொண்டாடும் விதமாக வந்தது-இந்தப் படம் ஜனவரி 59ல் ரிலீசானது..

[கடைசி வரியில் “துனியா ஸாபுன் தேல்”என்பதன் பொருள் விளங்கவில்லை! சாபுன் என்றால் சோப்பு, தேல் என்றால் எண்ணெய்- இங்கு என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை. இந்தப் பாட்டின் அசல் ஹிந்தி வடிவம் கிடைக்கவில்லை]  

The geniuses of the golden age converted every situation into an occasion for beautiful songs. Solo, duet or chorus song, melody reigned. The lyrics were meaningful, and rose above the filmy situation – the reason why we still love to listen to them.   The relationship between the make-up man and the film actor is that of accomplices in crime. —  Marlen Dietrich, 1901-1992, German-American actress                               

***
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: