மந்திரம் ஆகாத அக்ஷரம் இல்லை! மூலிகை ஆகாத வேர் இல்லை!! (Post No.8031)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8031

Date uploaded in London – – – 24 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

 மந்திரம் ஆகாத அக்ஷரம் இல்லை! மூலிகை ஆகாத வேர் இல்லை!!

ச.நாகராஜன்

அற்புதமான சுபாஷிதங்கள் பல்லாயிரக்கணக்கில் சம்ஸ்கிருத பாஷையில் உள்ளன. அவற்றில் சில :

அமந்த்ரமக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலமனௌஷதம் |

அயோக்ய: புருஷோ நாஸ்தி யோஜகஸ்ததத்ர துர்லப: ||

மந்திரத்தின் பயன் தராத எந்த ஒரு அக்ஷரமும் இல்லை; மூலிகையின் பயன் தராத எந்த ஒரு செடியின் வேரும் இல்லை; மனிதர்களில் பயன்படுத்த முடியாதவன் என்று யாரும் இல்லை. ஆனால் இவற்றில் தகுதியையும் பயனையும் அறிந்து அவற்றைத் தகுந்த  முறையில் பயன்படுத்தும் ஒருவனைக் கண்டுபிடிப்பது தான் கஷ்டமான காரியம்!

There is no letter that cannot be used as a mantra; there is no root without some medicinal value, and there is no person who is absolutely useless. A yojaka i.e. a person who can identify their utility and put them to proper use is, however, always rare. (Translation by Hindu Swayamsevak Sangha – edited by Dr Shrinivas Tilak)

There is no letter (spoken around) that does not work like a charm, no root that does not work like a medicine, and no undeserving person. But it is difficult to find a person who can realize the potentialities in the above way and associate them with action. (Translation by Dr. T.S. Gourypathy Sastry)

*

அல்பானாமபி வஸ்தூனாம் சஹதி: கார்யசாதிகா |

த்ருணைர்குணத்வமாபன்னைர்பத்யந்தே மத்ததந்தின: ||

மிக அற்பமான வஸ்துக்கள் கூட ஒன்றாகத் திரளும் போது கார்யத்தை சாதிக்கின்றன. வலிமையான யானைகள் கூட புல்கட்டுகள் ஒன்று திரண்டு கயிறாக்கப்படும் போது கட்டப்பட்டு விடுகின்றன.

The group of even trivial things (united) accomplishes the action. The rutty elephants are tied by means of a rope formed of blades of grass. (Translation by Dr. T.S. Gourypathy Sastry)

*

க்ஷமா பலமஸக்தானாம் ஸக்தானாம் பூஷணம் க்ஷமா |

க்ஷமா வஸீக்ருதிலோகீகே க்ஷமயா கிம் ந சாத்யதே ||

பொறுமை பலவீனர்களின் பலமாகும். சக்தி படைத்தவர்களிடம் ஆபரணமாகும். பொறுமையே அனைத்தையும் ஒருவனின் வசமாக்குகிறது. பொறுமையினால் எது தான் அடைய முடியாது!

Forbearance is the strength of the weak and an ornamental of the strong. It is forbearance that brings objects under one’s control. What is not achieved by forbearance? (Translation by Dr. T.S. Gourypathy Sastry)

*

ப்ரியவாக்யப்ரதானேன ஸர்வே துஷ்யந்தி ஜந்தவ: |

அதஸ்ததேவ வக்தவ்யம் வசனே கா தாரித்ரதா ||

இனிய வார்த்தைகளால் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே சாதாரணமான இனிய வார்த்தைகள் பேசுவதில் ஏன் தரித்திரம் இருக்க வேண்டும்?!

All feel delighted by pleasant talk. Hence one should talk pleasantly. Why should there be poverty for a mere (plesant) talk? (Translation by Dr. T.S. Gourypathy Sastry)

*

பூர்வஜன்ம க்ருதம் கர்மே தத்தைவமிதி கத்யதே |

தஸ்மாத் புருஷகாரேண வினா தைவம் ந சித்யதி ||

சென்ற ஜன்மத்தில் செய்த வினைகளே (அதிர்ஷ்டம் அல்லது) தெய்வம் ஆகும். ஆகவே முயற்சியின்றி (அதிர்ஷ்டம் அல்லது) தெய்வம் வெற்றி பெற முடியாது.

The endeavour made in the last birth is what is known as (luck or) God. Hence no God (or luck) can succeed without endeavour. (Translation by Dr. T.S. Gourypathy Sastry)

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: