ஹிந்தி படப் பாடல்கள் – 47 – முன்னோடிகளுக்கு நன்றி! (Post No. 8038)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8038

Date uploaded in London – – – 25 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8039

Date uploaded in London – 25 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

                                   R. Nanjappa

முன்னோடிகளுக்கு நன்றி!

எந்தத் துறையிலும் சரி-  நமக்கு முன்வந்தவர்களுக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம்.

இது அனேகமாக நமக்கே தெரிவதில்லை. அவர்களை நாம் பார்த்தும் இருக்க மாட்டோம்,

கேள்விப்பட்டும் இருக்கமாட்டோம்; ஆனால் அவர்கள் வாழ்க்கையும் எண்ணங்களும்

நமக்கு வழிகாட்டிகளாக இருக்கும். அவர்கள் வழியை நாம் பின்பற்றாவிட்டாலும், அது

உதவியாகவே இருக்கும். இதை உணர்ந்து அவர்களை நினைவு கூர்வது, அவர்களுக்கு

நன்றி சொல்வது நல்ல பண்பு. இது அனைவருக்கும் வருவதில்லை.

“If I have seen further than others, it is by standing 

upon the shoulders of giants”  – Isaac Newton

அனில் பிஸ்வாஸ்பிதாமஹர்

திரை இசை உலகில் இப்பண்பு மிகவும் குறைவு எனலாம். திரையிசை வளர்ச்சிக்கு

வித்திட்டவர்களில் அனில் பிஸ்வாஸ் ( 1914-2003) முக்கியமானவர். இன்று அவரை 

எவரும் நினைப்பதில்லை.

1935 முதல் 1965 வரை படங்களுக்கு இசையமைத்தார். பல விஷயங்களில் முன்னோடியாக

இருந்தார். பாட்டினிடையே வசனங்களைப் பேசுவது, வசனங்களை ராகத்துடன் பேசுவது,

ராகமாலிகைப் பாடல்கள் என பல உத்திகளைப் புகுத்தினார். இந்திய இசையில் 

பிடிப்பிருந்தாலும் புதிய சங்கதிகளை வரவேற்றார். முதன் முதலில் 12 வாத்தியங்கள்

கொண்ட இசைக்குழுவை (Orchestra) மேலைப் பாணியில் அறிமுகப்படுத்தினார்

Counter melody, overlap, interlude போன்ற மேலை நாட்டு சங்கீத உத்திகளை

அறிமுகப்படுத்தினார். இன்று இவை பிரம்மாண்டமாக. வளர்ந்து விட்டன; ஆனால்

அனில் பிஸ்வாஸை நினைப்பதில்லை!

இவர் பல பாடகர்களுக்கு வழிகாட்டி ஊக்குவித்தார்.. முகேஷ், கே.எல். சைகலைப் போல்

பாடமுயன்றபோது, அவரைத் தனிவழியைப் பின்பற்றச் சொன்னார். தலத் முஹம்மத்

குரலில் இருந்த தனித்தன்மையை மற்றவர்கள். குறை சொல்லிக் களைய முயன்றபோது,

அது குறையல்ல, அது ஒரு சிறப்பு அம்சம் (Vibrato) அதை விடக்கூடாது என்று அறிவுறுத்தி

அவருக்கு வழிகாட்டினார். பிறர் பாடியதை அனேகமாக பலர் பாடலாம்-ஆனல் தலத் 

முஹம்மத் பாடியவற்றை வேறு எவரும் பாடமுடியாது!

லதா மங்கேஷ்கரின் தொடக்க காலத்தில் அவருக்கு குரல் பயிற்சியும், மைக்கில் பாடுவதற்கு 

மூச்சுக் கட்டுப்பாடும் சொல்லித் தந்தார். விஷயம் தெரிந்த நௌஷத்,

சி.ராம்சந்த்ரா, ஓ.பி. நய்யார் போன்றவர்கள் இவரிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.

திரை இசையின் பீஷ்ம பிதாமஹர் என்று அழைக்கப்பட்டாலும் இவருக்கு எந்தக் கவுரமோ

பரிசோ வழங்கப் படவில்லை! 1986ல் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. 

இவர் விளம்பரத்தை விரும்பாமலிருந்தார், திரை இசையின் போக்கு பிடிக்காமல்

1965ல் திரையிசையிலிருந்து விலகினார்..இவர் இசையமைத்த மூன்று பாடல்களைப்

பார்க்கலாம்.

ஏக் மை ஹூ(ன்)

जली जो शाखचमन, साथ बाग़बाँ भी जला
जला के मेरे नशेमन को आस्मां भी जला

एक मैं हूँ एक मेरी बेक़सी की शाम है
अब तो तुझ बिन ज़िंदगी भी मुझ पे इक इल्ज़ाम है

दिल पे क्या गुज़री तेरे जाने से कोई क्या कहे
साँस जो आती है वो भी दर्द का पैग़ाम है

आँसूओं मुझ पर हँसो मेरे मुक़द्दर पर हँसो
अब कहाँ वो ज़िंदगी जिस का मुहब्बत नाम है

ஜலீ ஜோ ஷாக்சமன், ஸாத் பாக்பா(ன்) பீ ஜலா

ஜலா கே மேரே நஷேமன் கோ, ஆஸ்மான் பீ ஜலா

இந்த அழகிய சோலை எரிந்து விட்டது, தோட்டக்காரனும் எரிந்து விட்டான்

என் கூடும் எரிந்து விட்டது, வானமே எரிந்து விட்டது

ஏக் மை ஹூன் ஏக் மேரீ பேகஸீ கீ ஷாம் ஹை 

அப் தோ துஜ்பின் ஃஜிந்தகீ பீ முஜ் பே எக் இல்ஃஜாம் ஹை

நான் ஒருவன் இருக்கிறேன், இந்தத் தனிமையான மாலை இருக்கிறது

இப்பொழுது நீ இல்லாமல் வாழ்க்கையே என் மீது சுமத்திய குற்றமாக இருக்கிறது!

தில் பே க்யா குஜ்ரீ தேரே ஜானே ஸே கோயீ க்யா கஹே

ஸான்ஸ் ஜோ ஆதீ ஹை பீ தர்த் கா பைகாம் ஹை

உன் மனதில் என்ன எண்ணங்கள் ஓடின?

இது தெரிந்தால் என்ன சொல்வார்கள்?

விடும் மூச்சுக்காற்றும் துன்பத்தின் செய்தியாக இருக்கிறது

(ன்)ஸுவோ முஜ் பர் (ன்)ஸோ, மேரே முகத்தர் பர் (ன்)ஸோ

அப் கஹா ஃஜிந்தகீ ஜிஸ் கா முஹப்பத் நாம் ஹை

கண்ணீர்நீயும் என்னைப் பார்த்துச் சிரி, என் விதியைப் பார்த்துச் சிரி!

இங்கே காதல் என்று சொல்கிறார்களேஅந்த வாழ்க்கை எங்கே இருக்கிறது?

Song: Ek main hun ek meri Film: Tarana, 1951 Lyrics: Kaif Irfani

Music; Anil Biswas Singer: Talat Mahmood

This song can be heard on YouTube: 

ஒரு பெரிய நடிகருக்கும் பாட்டிற்கும் உள்ள தொடர்பு விசித்திரமானது. ஒவ்வொரு பாடகரும்

தன் பாட்டு ஒரு பெரிய  நடிகரின் மீது இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அப்போதுதான்

அது பிரபலமாக வாய்ப்பு அதிகம். ஆனால் சில பாட்டுக்கள் ஒரு நடிகரைப்

பிரபலமாக்குவதில் பெரும் பங்கு பெறுகின்றன.

இந்த வீடியோவைப் பாருங்கள். திலீப் குமார் என்ன நடித்துக் கிழித்து விட்டார்? வெறுமே

பாட்டைப் பாடுகிறார்! இது போல் இரண்டு  படங்களில் [ஆர்ஃஜூ, தரானா-1950, 51] அவருக்கு

தலத் பாடிய நல்ல பாட்டுக்கள் அமைந்தன- அவருக்கு Tragedy King என்று முத்திரை

குத்தப்பட்டது! இந்த இரண்டு படத்திற்கும் இசை அமைத்தது அனில் பிஸ்வாஸ்! தொடர்ந்து

திலீப் குமாருக்கு அதே மாதிரி பாடல்கள், அதே போன்ற ரோல்கள்! அதே சமயம், ஆர்ஃஜூ

படத்தில் திலீப் குமாருக்காகப் பாடிய “ தில் முஜே ஐஸீ ஜகா லே சல்” என்ற பாட்டு தான்

தலத்தின் முதல் ஹிட் பாடலாயிற்று!

இந்தப் பாட்டு கஃஜல் வகை- அருமையான உருதுக் கவி! மொழிபெயர்ப்பில் அதன் அழகு

மறைந்து விடுகிறது.

This song depicts the depth of dejection, and Talat’s voice suits the mood and brings out

the beauty of the lyrics. No one else in the Hindi music world could express Urdu words with 

such  felicity or charge them with such emotional fervour. Talat sings in his natural voice,

no gimmicks.

குச் ஔர் ஃஜமானா கஹதா ஹை

कुछ और ज़माना कहता है, कुछ और है ज़िद मेरे दिल की
मैं बात ज़माने की मानूँ, या बात सुनूँ अपने दिल की
कुछ और ज़माना कहता है

குச் ஔர் ஃஜமானா கஹ்தா ஹை, குச் ஔர் ஹை ஃஜித் மேரே தில் கீ

மை பாத் ஃஜமானே கீ மானூ(ன்), யா பாத் ஸுனூ(ன்) அப்னே தில் கீ

குச் ஔர் ஃஜமானா கஹ் தா ஹை

மனதின் நம்பிக்கை ஒருவிதமாக இருக்கிறது

ஆனால் உலகம் வேறு ஒன்றைச் சொல்கிறது!

நான் உலகம் சொல்வதை மதிப்பதா, என் மனது சொல்வதைக் கேட்பதா

உலகம் வேறு ஒன்றைச் சொல்கிறது!

दुनिया ने हमें बेरहमी से ठुकरा जो दिया, अच्छा ही कियानादाँ हम समझे बैठे थे,

निभती है यहाँ दिल से दिल कीकुछ और ज़माना कहता है

इन्साफ़ मोहब्बत सच्चाई, वो रहमकरम के दिखलावेकुछ कहते ज़ुबाँ शर्माती है,

पूछो ना जलन मेरे दिल कीकुछ और ज़माना कहता है

गो बस्ती है इन्सानों की, इन्सान मगर ढूँढ़े ना मिलापत्थर के बुतों से क्या कीजे,

फ़रियाद भला टूटे दिल कीकुछ और ज़माना कहता है

துனியா நே ஹமே பேரஹமீஸே டுக்ரா ஜோ தியா, அச்சா ஹீ கியா

நாதான் ஹம் ஸமஜ் பைடே தே, நிபதீ ஹை யஹா(ன்) தில் ஸே தில் கீ

குச் ஔர் ஃஜமானா கஹ்தா ஹை

உலகம் இரக்கமில்லாது என்னைக் சூராக்கிவிட்டதுஅதுவும் நன்மைக்கே!

இங்கு மனம் ஒப்பிப் பழகுவது வீணே என்று நினைத்து வாளாவிருந்து விட்டேன்

இன்ஸாஃப், முஹப்பத், ஸச்சாயீ, வோ ரஹம்கரம் கே திக்லாவே

குச் கஹதே ஃஜுபா(ன்) ஷர்மாதீ ஹை, பூசோ ஜலன் மேரே தில் கீ

குச் ஔர் ஃஜமானா கஹதா ஹை

நீதி, அன்பு, சத்தியம்இதெல்லாம் ஏதோ பெயருக்குக் காட்டுவதே!

வாய்விட்டுச் சொல்ல கூச்சமாகிறது, என் மனம் படும்பாட்டைக் கேட்காதீர்கள்!

உலகம் வேறொன்றைச் சொல்கிறது….

கோ பஸ்தீஹை இன்ஸானோ(ன்) கீ, இன்ஸான் மகர் டூண்டே  நா மிலா

பத்தர் கே புதோ(ன்) ஸே க்யா கீஜே, ஃபர்யாத் பலா டூடே தில் கீ

குச் ஔர் ஃஜமானா கஹ்தா ஹை

மக்கள் வசிக்கும் இடங்கள் இருக்கின்றனஆனால் தேடினாலும் மனிதனைக் காணவில்லை!

உடைந்து போன மனதிலிருக்கும் குறைகளை கல் சிலைகளுக்குச் சொல்லி என்ன பயன்?

உலகம் வேறு எதையோ சொல்கிறது…..

Song: Kuch aur zamana kehta hai Film: Choti Choti Baatein 1965 Lyrics: Shailendra

Music: Anil Biswas Singer: Meena Kapoor

link to YouTube: https://www.youtube.com/watch?v=KAQQl-v1s0U

மிக அருமையான பாடல், இனிமையான பாடல். மனதைத் தொடும்படியாகப் பாடியிருக்கிறார்

மீனா கபூர். இதுவும் மனமுடைந்த நிலையில் ஒருவர் பாடுவது, ஆனால் அதீத

சோகமில்லை. ஒரளவு உலகுடன் சரி செய்து கொண்டு விட்டார் போல் தோன்றுகிறது. 

Reconciled to the world, as it is..

ஃஜிந்தகீ க்வாப் ஹை, தா ஹமே பீ பதா

ज़िंदगी ख़्वाब है था हमें भी पतापर हमें ज़िंदगी से बहुत प्यार था

सुख भी थे, दुख भी थे दिल को घेरे हुएचाहे जैसा था रंगीन संसार था

गई थी शिकायत लबों तक मगरकिससे कहते तो क्या, कहना बेकार था

चल पड़े दर्द पीकर तो चलते रहेहारकर बैठ जाने से इनकार था

चंद दिन था बसेरा हमारा यहाँहम भी मेहमान थे, घर तो उस पार थाहमसफ़र एक दिन तो बिछड़ना ही था

अलविदा अलविदा अलविदा अलविदा

zindagi kwab hai thaa hame bhii pathaa

ஃஜிந்தகீ க்வாப் ஹை தா ஹமே பீ பதா

பர் ஹமே ஃஜிந்தகீ ஸே பஹுத் ப்யார் தா

வாழ்க்கை ஒரு கனவுஇது எனக்கும் தெரிந்துதான் இருந்தது

இருந்தும் இந்த உலகத்தில் மிகுந்த  அன்புடன் இருந்தேன்

ஸுக் பீதே, துக் பீ தே, தில் கோ கேரே ஹுயே

சாஹே ஜைஸா தா ரங்கீன் ஸன்ஸார் தா

மனதை சுகமும் துக்கமும் சுற்றி வளைத்தன

எப்படிப் பார்த்தேனோ, உலகும் அப்படியே தெரிந்தது!

ஆகயீ தீ ஷிகாயத் லபோ(ன்தக் மகர்

கிஸ்ஸே கஹதே தோ க்யா, கஹனா பேகார் தா

உலகைப் பற்றிக் குறை சொல்லவேண்டுமென்று வாய் வரை வந்துவிட்டது

ஆனால் யாரிடம் சொன்னால்தான் என்ன,

சொல்வதில் பயனில்லை என்று உணர்ந்தேன்

சல் படே தர்த் பீகர் தோ சல்தே ரஹே

ஹார்கர் பைட் ஜானே ஸே இன்கார் தா

துன்பத்தைச் சகித்துக்கொண்டு என் வழியில் நடந்தேன்

தோல்வி மனப்பாமையுடன் உட்காருவதை தடைசெய்தேன்

சந்த் தின் தா பஸேரா ஹமாரா யஹா(ன்)

ஹம் பீ மேஹ்மான் தே, கர் தோ உஸ் பார் தா

ஹம்ஸஃபர் ஏக் தின் தோ பிசட்னா ஹீ தா

அல்விதா அல்விதா அல்விதா அல்விதா

இங்கு  நாம் இருப்பது நான்கு நாட்கள் தான்

இங்கு நாம் விருந்தாளிகள் தான், நமது சொந்த வீடு அந்தக் கரையில்!

இந்தப் பயணத்தை ஒரு நாள் விட்டுத்தான் ஆகவேண்டும் என்பது தெரியும்

விடைபெறுகிறேன்விடை பெறுகிறேன்..

Song: Zindagi kwab hai, tha hamein bhi pata Film: Choti Choti Baatein 1965

Lyrics: Shailendra, Music: Anil Biswas Singer: Mukesh

link to Youtube: https://www.youtube.com/watch?v=Wg2wgsi0wQU

இதுவும் அதே மன நிலையில் பாடிய பாடல்தான். ஆனால் இன்னும் முன்னேற்றம்

காணப்படுகிறது. இந்த உலகம் நமது சாஸ்வதமான இடமல்ல என்ற உண்மையை மனதில்

பதியவைக்கிறது.கடினமான பாடல்,

மிக உருக்கமாகப் பாடியிருக்கிறார் முகேஷ்.

இதில் பல வரலாறுகள் அடங்கியிருக்கின்றன. இதைத் தயாரித்து, நடித்து இயக்கியவர்

பழம்பெரும் நடிகர் மோதிலால்- இக்கதை பல வருஷங்களாக அவர் மனதில் இருந்தது.

படம் வெளியாகுமுன் காலமானார். படத்திற்கு அரசின் மெரிட் சர்டிஃபிகேட் கிடைத்தது,

ஆனால் தியேட்டரில் தோல்வி கண்டது. இதுவே  அனில் பிஸ்வாஸ் இசையமைத்த

கடைசிப் படமாக அமைந்தது. இதைப் பாடிய முகேஷ், மோதிலாலின் உறவினர்- முகேஷ்

அவர் சகோதரியின் திருமணத்தில் பாடுவதைக் கேட்டு அவரை பம்பாய்க்கு அழைத்து வந்து

பாடகராக்கினார் மோதிலால்.. அவருக்கு இறுதியாகப் பாடியது முகேஷ்! முகேஷ் “ஜாக்தே

ரஹோ” படத்திலும் “ஜிந்தகீ க்வாப் ஹை” என்று ஒரு பாட்டு மோதிலால் மீது

பாடியிருக்கிறார்!

சிலர் உலகத்தில் உள்ள குறைகளை (மட்டும்) கண்டு, அதை வசைபாடுவர். ‘நான் என்ன

செய்வது, எனக்கு உலகத்தில் எது கிடைத்ததோ அதைத்தானே திருப்பித் தர முடியும்’ என்ற

கருத்தில் ஸாஹிர் லுதியான்வியின் வசன கவிதை “ப்யாசா” படத்தில் வரும்.

[“தேங்கே வொஹீ ஜோ பாயேங்கே இஸ் ஃஜிந்தகீ ஸே ஹம்”] இங்கு ஷைலேந்த்ரா அந்த

மாதிரி எழுதவில்லை! இந்த இடம் இப்படித்தான்; இது நமது சாஸ்வத இடமில்லை என்ற

அடிப்படை உண்மையைச் சொல்கிறார். மூத்தோர் சொல்லும் முதி நெல்லியும் முன்னே

கசக்கும் பின்னே இனிக்கும்!

இப்பாடல்களுக்கு அமைந்த இசையின் தன்மையைப் பாருங்கள்! ஆரவாரமில்லை,

கூச்சலில்லை, அதிக வாத்யங்களின் ஆக்ரமிப்பு இல்லை! 1965 வாக்கில் திரை இசை

திசை மாறத்தொடங்கியது!  

Left no scope for soft, sober music. The likes of Anil Biswas became out of date, and hence

went out of reckoning! But they would never leave the music lovers’ heart.

….

Attachments

Preview YouTube video Ek main hoon ek meri bekasi ki shaam hai from Tarana (1951)

https://i.ytimg.com/vi/Q4VvXR7lTzo/hqdefault.jpg

https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png

Ek main hoon ek meri bekasi ki shaam hai from Tarana (1951)

YouTube video KUCHH AUR ZAMAANA KEHTA HAI – MEENA KAPOOR -SHAILENDRA -ANIL BISWAS

https://i.ytimg.com/vi/KAQQl-v1s0U/hqdefault.jpg

https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png

KUCHH AUR ZAMAANA KEHTA HAI – MEENA KAPOOR -SHAILENDRA -ANIL BISWAS

Preview YouTube video ZINDAGI KHWAB HAI THAA HAMEIN BHI PATA- MUKESH- FILM- CHHOTI CHHOTI BAATEIN(1965)

https://i.ytimg.com/vi/Wg2wgsi0wQU/hqdefault.jpg

https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png

ZINDAGI KHWAB HAI THAA HAMEIN BHI PATA- MUKESH- FILM- CHHOTI CHHOTI BAATEIN(1965)

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 47

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: